Dec 21, 2004

அதிசயம் ஆக்குவீர் என் வீட்டை!

என் வீடு தமிழ்நாட்டிலே ஒரு சிற்றூரில் ஆயிரம் சதுர அடிப் பரப்பளவிலே கொத்தனாரைக் கொண்டு மிக அழகாகக் கட்டப்பட்ட வீடு.

பெரும் பொருட்செலவிலே கட்டப்பட்ட இந்த வீட்டில், தமிழ் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு திண்ணையும் இருக்கிறது.

பக்தி வளர்க்க ஒரு பூஜை அறை உள்ளது. இந்த அரைக்குள்ளே ஆண்டவன் ப்ரத்யட்சமாக இருக்கிறான் என்பது கோடிக்கணக்கான என் விருந்தினர்களின் திண்ணமான எண்ணம்.

நாங்களும் விருந்தினர்களும் உறங்குவதற்கென்றே கட்டப்பட்ட இரு படுக்கை அறைகளும் தூக்கதை உடனடியாக வரவழைக்கும் விதத்தில் அமைந்துள்ளது ஒரு அதிசயமே.

இந்த இல்லத்தில் ஹால் எனப்படும் அரை மிக விசாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 2000த்துக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த அதிசயம், இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்கும் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை.

கூடிய விரைவில், இந்த அதிசயத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாஸன், ஜோதிகா, சிம்ரன், வடிவேலு, ஷகீலா ஆகியோர் ஆதரிக்க உள்ளனர்.

எனவே நீங்களும் உடனடியாக இதை ஆதரிக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது : www.sevenblunders.com என்ற இணைய தளத்தில் நுழைந்து உங்கள் கடன் அட்டை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளிட்டு "allow unlimited access " என்னும் பொத்தானை அமுக்க வெண்டும் - அவ்வளவுதான்

1 பின்னூட்டங்கள்:

தகடூர் கோபி(Gopi) said...

www.sevenblunders.comக்கு பதில் ஒரு உண்மையான வளைதளத்தை அமைத்து அதன் சுட்டியை தந்திருந்தால் சில கடன் அட்டைகளின் எண்கள் கிடைத்திருக்கும்!

:-)

 

blogger templates | Make Money Online