Jun 11, 2005

நானும் கலந்துக்கிறேன் இந்த விளையாட்டுலே!

என்னை யாரும் கூப்பிடலேதான் - அதுக்காக அமைதியா இருந்துடறதா?

நாமும் போஸ்ட் போட்டு பல மாசம் ஆச்சு.

அருமையான கருத்துக்களம்- புத்தகம் பற்றி..

புடிச்சுக்கோங்கோ என் லிஸ்ட்-ஐ!

புத்தகப்பிரியர்கள் பலரின் பாதை ஒரே மாதிரியாக இருப்பதைப்பார்த்து வியக்கிறேன், நானும் பலரைப்போலே:

1. விகடன் ஜோக்ஸில் ஆர்ம்பித்து

2, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக் என்று காமிக்ஸில் தொடர்ந்து,

3. தமிழ்வாணன் சங்கர்லால் எனத் தடம் புரண்டு,

4. சிவசங்கரி, அனுராதா ரமணன் என உணர்ச்சிப்பிழம்பாகி,

5. சுஜாதா என்ற மெயின் டெர்மினஸுக்கு வந்து, அவர் காட்டிய சிற்றிதழ், பேரிதழ், ஆங்கில எழுத்துக்கள் என கலந்து கட்டிய வாசிப்பு.

19 - 25 வயதில், ராஞ்சி (பிகார்) தனிமையில், 100 ருபாய்க்கு 5 கிலோ புத்தகங்கள் கிடைக்கும் செகண்ட்ஹான்ட் கடைகளுக்கு மத்தியில் வாழ்ந்தேன், புத்தகம் தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாததால், இந்த மாதிரி என்றில்லாமல் எல்லா வகையான புத்தகங்களையும் படித்து, வெறுத்து, மகிழ்ந்ததில், எனக்கென உள்ள டேஸ்ட்டை புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்குப்பிடித்த புத்தகங்கள் - எதைப்பற்றியது என்பதோ, யார் எழுத்தாளன் என்பதோ முக்கியமில்லை, சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் - அவ்வளவுதான்.

எனவேதான், என்னால் சீரியஸ் இலக்கியவாதியாகவோ, எழுத்தாளன் ஆகவோ முடியவில்லை (no regrets!)

ஏறத்தாழ ஒரு 400 ஆங்கிலபுத்தகங்களும், 300 தமிழ்ப்புத்தகங்களும் வாங்கிப் படித்திருந்தாலும் இப்போது ஒரு 50 - 100 புத்தகங்களே கையில் உள்ளன. (எல்லவற்றையும் எடை காரணமாக எடுத்து வர முடியவில்லை - வெட் கிரைண்டரும், மிக்ஸியும் வாழ்க்கைக்கு அதிக அத்தியாவசியமாக இருப்பதால்!)

இப்போது லிஸ்ட்:

பிடித்த 5 தமிழ் புத்தகங்கள்:

1. பொன்னியின் செல்வன் - கல்கி - காரணம் தேவை இல்லை - படித்த பெரும்பாலோரின் பிடித்த 5க்குள் அடங்கும் ஒரே புத்தகம்.

2. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - முக்கியமாக அரிசி, தனிமை கொண்டு ...

3. வஸந்தகாலக்குற்றங்கள் - சுஜாதா - நான்கைந்து கேஸ்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளூம் கமிஷனர் - இந்தக்கதையின் காட்சி அமைப்பு மிகவும் பிடிக்கும் - ஒரு நல்ல திரைக்கதை போல.

4. பட்டாம்பூச்சி - ஃபெலிக்ஸ் மிலானி - தமிழில் - ரா.கி.ரங்கராஜன் - மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ரா.கி.ர வின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடவே முடியாது.

5. வால்காவிலிருந்து கங்கை வரை - ராஹுல சாங்கிருத்தியாயன் - பல விஷயங்களைத் தெரிய வைத்த புத்தகம் - இப்போது அந்தக் கருக்துக்களோடு முழு உடன்பாடு இல்லாமல் போனாலும் கூட.

பிடித்த 5 ஆங்கிலப்புத்தகங்கள்:

1. Gone with the Wind - Margaret Mitchell - காதலும் போரும் இந்த அளவுக்கு அழகாக சொல்லப்பட்டதை வேறெங்கும் பார்த்ததில்லை.

2. Future Shock - Alvin Toffler - பயம், பிரமிப்பு, அட, எல்லா உணர்ச்சிகளையும் தூண்டிய non-fiction!

3. A Brief History of Time - Stephen Hawking - இந்தப் புத்தகத்தின் நடை எனக்கு இயல்பியல் பிடித்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

4. To kill a Mocking Bird - Lee Harper - குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட பெரியவர்களின் கதை

5. The Negotiator - Frederick Forsyth - சாகசக் காட்சிகள் நிறைந்த ஒரு மஸாலாக்கதை!

சமீபத்தில் படித்த புத்தகங்கள்:

1.-ச்ரீரங்கத்துக் கதைகள் - பாகம் 2 - சுஜாதா - மொழிப்போர், மாஞ்சு மனதைக் கவர்ந்தன.

2. The Sky is falling - Sydney Sheldon - டப்பாக் கதை - நேரம் வேஸ்ட்!

3. Detective - Arthur Hailey - திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் கதை!

4. மறுபடியும் - ஞாநி - அன்றாடப் பரபரப்பில் படிக்கும் செய்திகளையும் கருத்துக்களையும் கொஞ்ச நாள் கழித்துப் படித்தால் தமாஷாகக்கூட இருக்கிறது!

5. Third Wave - Alvin Toffler - சாதாரணமாக நாம் பார்க்கும் மாற்றங்களை அட்டகாசமாக Analyse செய்திருக்கிறார்.

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்:

1. துப்பறியும் சாம்பு - தேவன்

2. ஜெயகாந்தனின் சிறுகதைகள்

3. ஒரு கிராமத்துப்பெண்ணின் தலைப்பிரசவம் - இரா. முருகன்

4. The Lost World - Michael Crichton

5. ஜேஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

படித்த பிறகு கருத்து சொல்கிறேன்.

Bye-bye!

7 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...

/////4. பட்டாம்பூச்சி - ஃபெலிக்ஸ் மிலானி - தமிழில் - ரா.கி.ரங்கராஜன் - மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ரா.கி.ர வின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடவே முடியாது. ////

பட்டாம்பூச்சியின் மூலம் "பாப்பிலோன்" எழுதியவர் ஹென்றி ஷாரியர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... நீங்கள் பெலிக்ஸ் மிலானி என்கிறீர்கள்... எது சரி?

பினாத்தல் சுரேஷ் said...

இரண்டு முறை பட்டாம்பூச்சி என்ற தலைப்பை உபயோகப்படுத்தி இருந்தார்கள் - ஒருமுறை இன்னும் ஒரு பட்டாம்பூச்சி என்று. எனக்கு சரியாக நினைவில்லை - பெலிக்ஸ் மிலானி எழுதியதை என்ன பெயர் வைத்திருந்தார்கள் என்று - ஆனால் பட்டாம்பூச்சி இருந்தது!

Unknown said...

Hi,
Before u read Michel Cricton's "The Lost World", u read his another book "Jurrasic Park".. Its wonderful!!! The booking u r reading might be a continuation of Jurrasic Park... I love his narration and the way of telling the story...Enjoy!!!

அருண்சங்கர் said...

"பட்டாம்பூச்சி" புத்தகம் ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாபிலோன் (பிரெஞ்சு மொழியில் பட்டாம்பூச்சி என்று அர்த்தம்) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களால் சிறப்பாக மொழி பெயர்க்கபட்டு "பட்டாம்பூச்சி" என்ற பெயரில் 1970 - களில் தொடராக குமுதத்தில் வெளிவந்தது. இந்த புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. பட்டாம்பூச்சியின் சுதந்திர வேட்கையும், சகாசங்களும், நண்பர்களிடத்தில் செல்வாக்கும், அவன் கடல் பிரயாணங்களும் மெய் சிலிர்க்கவைக்கும். நான் இந்த புத்தகத்தை சிறுவயதில் இருந்து இது வரை 100 தடவைக்கு மேல் படித்திருப்பேன். இந்த புத்தகம் இப்பொழுது எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

"பட்டாம்பூச்சி" புத்தகம் "Franklin J. Schaffner" இயக்கி ஸ்டீவ் மக்வீன் (ஹென்றி ஷாரியர்) & Dustinn Hoffmann (தேகா) நடித்து "Papillon" என்ற பெயரில் 1973 வெளிவந்தது.

இணையத்தின் மூலமாகவும் இப்புத்தகத்தை (www.udumalai.com) வாங்கலாம். மேலும் ஹென்றி ஷாரியர் எழுதிய "Banco" என்ற புத்தகமும் அவனது பிற்கால வாழ்க்கையை பற்றி தெரிவிக்கிறது.

பெலிக்ஸ் மிலானி எழுதி "The Convict" என்ற பெயரில் வந்த இன்னொரு புத்தகம்தான் தமிழில் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களால் மொழி பெயர்க்கபட்டு " இன்னொரு பட்டாம்பூச்சி" என்ற பெயரில் 1980 - களில் தொடராக குமுதத்தில் வெளிவந்தது. இது பட்டாம்பூச்சி போன்று பெரிய புத்தகம் அல்ல.

ArunSankar said...

Good. Keep it up.

ArunSankar said...

பட்டாம்பூச்சியை பற்றி இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

http://arunsankartruth.blogspot.com/2009/10/blog-post.html

blogger templates | Make Money Online