Jul 25, 2005

நம்பிக்கை - கவிதை

Image hosted by TinyPic.com

கவிதை எழுதுவது என் கெட்ட வழக்கங்களில் ஒன்றல்ல. இருந்தாலும், அருண் மற்றும் பாஸிடிவ் ராமாவின் இன்றைய நம்பிக்கைக் கவிதைகளால் உந்தப்பட்டு நானும் புணைந்தேன் ஒரு கவிதை - நாராயணன் வெங்கிட்டுவின் போட்டிக்காக.

நம்பிக்கை

ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

43 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali said...

அருமை

Vijayakumar said...

வாவ்..........

Ramya Nageswaran said...

Good one, Suresh

தகடூர் கோபி(Gopi) said...

அருமை! மனதைத் தொடும் கவிதை

NambikkaiRAMA said...

நெஞ்ச தொட்டுட்டீங்க! பரிசை தட்டி செல்ல வாழ்த்துக்கள். (எனக்கும் அதுல பங்கு தரணுமாக்கும்) ஹி..ஹி..ஹீ

வெங்கி / Venki said...

உங்கள் கவிதையைப் படித்தவுடன் தோன்றிய ஏக்கம் "அடடா இவ்வளவு அழகாக நம்மால் ஒரு கவிதைக் கூட எழுத முடியவில்லையே ஏன்?". அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.

பத்மா அர்விந்த் said...

சிந்திக்க வைத்தது.வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பல : குழலி, விஜய், ரம்யா நாகேஸ்வரன், கோபி மற்றும் தேன் துளி அவர்களே.

பாசிடிவ் ராமா - பரிசு கிடைக்கும்னா சொல்லறீங்க? காம்பெடிஷன் டஃப்பா இருக்கும் போலிருக்கே!

வெங்கி - உங்க பின்னூட்டத்தை பார்த்து எனக்கு ஹார்ட் அட்டாக் வராததௌ எப்படின்னு எனக்கே ஆச்சர்யமாய் இருக்கு - கவிதைகளில் எனக்கு முதல் ஆதர்சம் - உங்கள் தந்தைதான்.. அவர் குடும்பத்தில் இருந்து வந்த பாராட்டை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.

Arun Vaidyanathan said...

Hey..Good one!

Narayanan Venkitu said...

Superb Suresh, First time here. Very touchy indeed.

True - Life has to go on with Faith.!!

Good Luck with the competition.!!

Sabash - Seriyana pohtti.!

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

மிக அருமை! சிறப்பாக இருக்கிறது.
மனதைத் தாக்கும் கவிதை.
பரிசை தட்டி செல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அன்புடன், ஜெயந்தி சங்கர்.

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Arun, Narayanan and Jayanthi.

monu said...

wow!
so encouraging and so wonderful!
i came here from Mr.Narayanan's blog......
lovely poem
:)

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Monu and Thendral.

Thendral, some times, a gambler's luck, I too write something decipherable. but mostly, they are penathals only:-)

வீ. எம் said...

சுரேஷ்,
நச்சுனு இருக்கு.. நிறைய கவிதை எழுதுங்கள்.. !
வாழ்த்துக்கள்!
வீ எம்

enRenRum-anbudan.BALA said...

Suresh,
You are GROWING in leaps and bounds:)

arumaiyAna kavithai !!!

One small mistake :-(
//பிரட்டி
//
அல்ல! "புரட்டி"

துளசி கோபால் said...

சுரேஷ்,

இப்பத்தான் பார்த்தேன். அருமையா இருக்கு கவிதை.
எனக்கே (!) புரியுதுன்னா பாருங்களேன்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

Chandravathanaa said...

அருமை!

மதுமிதா said...

வாழ்த்துக்கள் சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வீ.எம், பாலா, துளசி கோபால், சந்திரவதனா மற்றும் மதுமிதா - என்னடா நம்ம ரெகுலர் விஸிட்டர்களையே காணோமே, ஒரு மெயில் தட்டி உடலாமான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் பாலா, நல்ல வேளை, நீங்களே போட்டுட்டீங்க!

ioiio said...

Nannaaa dhaaan Penathareeenga Suresh..

Keep Penaathing :))

Adaengappa !! said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Arun Vaidyanathan said...

Suresh,
Congrats!

மதுமிதா said...

முதன்மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ்
அப்போதே கணித்தேன்

அன்புடன்
மதுமிதா

Ramya Nageswaran said...

Suresh congrats on a well-deserved prize!!

முகமூடி said...

பரிசு குறித்து இப்பொழுதுதான் அறிந்தேன்... மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

(இந்த கவிதை போட்டி நடந்து கொண்டிருந்த போது அரசியல் களம் சூடாக இருந்ததால் - அட தமாஷ் இல்லீங்க... இந்த செக்கூலரிஸ அறிக்கை எல்லாம் உட்டேனே அப்போ - உங்கள் கவிதையை அப்பொழுதே படிக்கவில்லை. கவிதை முதல் பரிசுக்குறிய கவிதை என்பதில் சந்தேகம் இல்லை)

Mey said...

Congrats

-L-L-D-a-s-u said...

கவிதை கலக்கல் .. வாழ்த்துகள் ..

தங்ஸ் said...

Wow! Romba Arumai!!

rajkumar said...

சுரெஸ்,

மேலும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராஜ்குமார்

பினாத்தல் சுரேஷ் said...

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!

NS said...

congrats on winning the kavidhai potti:)

கலை said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

aruna said...

Vow! Arputhama kavithai...romba naal kalichu nalla kavithai padicha thripthi...nandri!!

Thendral said...

inspiring one..

பெண் said...

னல்ல வண்திரிக்கு கவிதை னிறைய பினத்துங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நித்யா ஸ்வாமிநாதன், கலை, அருணா, தென்றல் மற்றும் அம்பை.

Anonymous said...

மிகுந்த திருப்தி அளித்த ஒரு கவிதை. நிகழ்வுகள் அதன் பாங்கிலேயே போய்கொண்டிருக்கும் என்பதை நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். பினாத்தல் என்ற பெயர் கொஞ்சம் அபஸ்வரமாக இடிக்கிறது. Write more.

மெலட்டூர் இரா நடராஜன்

இலவசக்கொத்தனார் said...

2005 கவுஜக்கு எல்லாம் இப்போ உயிர் குடுக்கறது உமக்கே ஓவராத் தெரியலை? அடங்குடா மவனே!!! அப்படின்னு ஒரு சத்தம் கேட்டு இருக்குமே!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மெ நடராஜன்.

இலவசம்.. பீட்டா செய்த மாயம்:-)

Unknown said...

பரவாயில்லையே!!! தங்களுக்கு இப்படி கூட எழுதத் தெரியுமோ?!!!

Nice one!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானிமஸ்.. என்னேரமும் ஆணீயம் எழுதற ஆளுன்னு நெனச்சுட்டீங்களா:-) அங்கே இருந்துதானே இங்கே வரீங்க? எல்லாம் தெரியும் :-))

சிவாஜி said...

நல்லா இருக்குங்க கவிதை...

 

blogger templates | Make Money Online