Sep 3, 2005

விகடனின் சமூக அக்கறை 03 Sep 05

இந்த வார ஜுனியர் விகடனில் "கவர்ச்சிக் கோடு - எல்லை தெரியாமல் தடுமாறும் தமிழ் சினிமா" என்ற விசேஷக் கட்டுரை வெளியாகி உள்ளது.. இங்கே.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், சென்சார் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் பேட்டி கண்டு, ஆய்வுக்கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட கட்டுரை.

கட்டுரைக்குக் காரணமான சமூக அக்கறை வியக்க வைக்கிறது. விடலைகளும் அறியாதவர்களும் மன்ம் அலைக்கழிக்கப் பட்டுவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது. அதை எல்லாம் விட, ஆபாசம் என்பது என்ன என எல்லோரும் தெரிந்துகொண்டு அதை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் "மனம் நொந்த வண்ணம்" கொடுத்திருக்கும் புகைப்படங்கள், தெளிவாக "ஆபாசத்தை"வரையறுத்திருக்கின்றன.

இக்கட்டுரையைப் பற்றிய என் விமர்சனம் - 'சீ"

(நன்றி: பாய்ஸ் படத்துக்கு எழுதப்பட்ட விகடன் விமர்சனம் )

9 பின்னூட்டங்கள்:

enRenRum-anbudan.BALA said...

//இக்கட்டுரையைப் பற்றிய என் விமர்சனம் - 'சீ"
//
விகடனின் சமூக அக்கறை --- We all know about that !!!!

You really hit the BULL's EYE here (and again!) :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாலா..

வேற யாரும் படிக்கலையா அல்லது பிடிக்கலையான்னே தெரியலையே!

Ramya Nageswaran said...

சுரேஷ், நாங்கள் விகடனுக்கு சந்தா கட்டி ஒரு காலத்தில் படித்துக் கொண்டிருந்தோம்..முதலில் 70% சினிமா, சின்ன திரை அல்லது ஏதாவது 'இளமை செய்தி' என்று ஆனது. பிறகு நிருபர்களின் descriptions மற்றும் கேள்விகள், செய்திக் குறிப்புகள், துணுக்குகள் எல்லாம் ஒரு மஞ்சள் பத்திரிக்கையின் ரேஞ்சுக்கு போனது. கதைகளைப் பற்றி the lesser said the better. 'ஒரு நல்ல கட்டுரைக்காக எதற்கு முழு புத்தகத்தை சகித்து கொள்ளணும்' என்று
இப்பொழுது சந்தா கட்டுவதை நிறுத்தி ஒரு வருடமாகிவிட்டது.

G.Ragavan said...

உண்மையிலேயே அந்தப் பக்கதிற்குப் போகச் சகிக்கவில்லை. வியாபாரச் சந்தையில் விகடனும் வெறும் வியாபாரப் பொருளாகிப் போனது வேதனையே.

துளசி கோபால் said...

அட்டையைப் பிச்சிட்டு அதுகூட ஏன்? அட்டையிலே இருக்கற பத்திரிக்கையின் தலைப்பை மறைச்சுட்டுப் பார்த்தா ஆ.வி, குமுதம், இன்னபிற மண்ணாங்கட்டி எல்லாம் ஒரேமாதிரிதான். 95% சினிமா. 5% போனாப் போகுதுன்னு சின்னதா ஒரு கட்டுரை/கதை.

ச்சீன்னு போச்சுப்பா.

Unknown said...

hey.. thanks. i am from vellore. working in bangalore. my contact number is there in my blog. please do come to my marriage.

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிக்கவும் ஐயப்பன், ப்ளூ தியேட்டர் அருகாமை, விருபாக்ஷிபுரம், கல்யாண மண்டபம் பெயர் போன்றவை பல நினைவுகளைக் கிளறி வரும் ஆசையை விதைத்தாலும், வர இயலாமைக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ரம்யா - நானும் ஏன்டா சந்தா கட்டினோம்னு நெனைக்கற மாதிரிதான் இருக்கேன்.

நன்றி ராகவன், உண்மை.

நன்றி கரை வேட்டி - நீங்க மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தையா சொல்லறீங்க? உங்க லிஸ்ட்லே இதையும் சேத்துக்கங்க - 'நாம் ஒரு நல்லது செய்த திருப்தியுடன் நகர்ந்தோம்!"

நன்றி துளசி - தமிழ்லே இப்போ ஒரே வாரப் பத்திரிக்கைதான் இருக்கு - குமுதம். ஒரே வாரமிருமுறைதான் - நக்கீரன். மத்தவங்க எல்லாம் பேர் மட்டும்தான் மாற்றம்!

கூத்தாடி said...

எனக்கும் அப்படித்தான் தோன்றியது..விகடன் கொஞ்சம் குமுதம் பாதையில் போனாலும் ,ஓ பக்கங்கள் , கதா விலாசம் போன்ற தரமான எழுத்துக்கும் இடம் அளிப்பதையும் பதிவு சொல்ல வேண்டும்.

 

blogger templates | Make Money Online