Sep 15, 2005

எச்சரிக்கை - படித்தால் உங்கள் மனநலனுக்கு நல்லது 15 Sep 05

ஒரு பணக்காரப் பெண்ணின் குணாதிசயங்கள் என்ன?

மாடலிங் செய்வாள்
டிஸ்கோ சென்று ஆடுவாள்
தனக்குப் பிடித்தது பிடித்தவனைக் காதலிப்பாள்
மத்திய வர்க்கக் குடும்ப உறுப்பினர்களை வெறுப்பாள்

ஒரு மத்திய வர்க்க ஆணின் குணாதிசயங்கள் என்ன?

அழகான பெண்ணைக் காதலிப்பான்
அவளை அடைவதற்காக அவளிடம் பொய் சொல்வான்
அவளை ஏற்கவைக்க குடும்பத்தினரிடம் பொய் சொல்வான்
கல்யாணம் ஆனதும் பெண் குடும்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்.

ஒரு பணக்காரப் பெண்ணின் அம்மாவின் குணாதிசயங்கள் என்ன?

சிகரெட் பிடிப்பாள்
சிறு வாலிபர்களுடன் டிஸ்கோ ஆடுவாள்
எந்நேரமும் குடித்துக் கொண்டு சீட்டு ஆடிக்கொண்டு இருப்பாள்.
மகளை அபார்ஷன் செய்ய வற்புறுத்துவாள்
மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்யத் துடிப்பாள் (பாவம் அமெரிக்க வாழ் எலிஜிபிள் மாப்பிள்ளைகள்!)

ஒரு பணக்காரப் பெண்ணின் அப்பாவின் குணாதிசயங்கள் என்ன?

மனைவிக்கு அடங்கி நடப்பார்
குடும்ப மதிப்பீடுகள் அனைத்தும் தெரிந்தவர் - ஆனால் அடங்காப்பிடாரியிடம் மாட்டியதால் தவிப்பார்
கடைசிக் காட்சியில் மனைவியை அடிப்பார்.

விவாகரத்து வழங்கும் நீதிபதியின் குணாதிசயங்கள் என்ன?

கணவன் மனைவி உறவைப் பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்துவார்.
ஒரு வருடம் கழித்துத் தான் விவாகரத்து வழங்குவார்.
குழந்தையை பெற்றுக் கொடுக்கச் சொல்லி மனைவிக்கு உத்தரவு(?) இடுவார்.
தன் உத்தரவை நிறைவேற்ற போலீஸ் மற்றும் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்வார்.

இப்படியே எழுதிக்கொண்டே போகலாம் - பிரியசகி படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்கள் பற்றியும்!

நானும் பல டுபாக்கூர் படங்கள் பார்த்திருக்கிறேன் - இதைப்போல இல்லைடா சாமி!

7 பின்னூட்டங்கள்:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஆக, பார்க்காதீங்க என்று சொல்றீங்களா?

NambikkaiRAMA said...

நானும் என்ன்வோன்னு தலைப்பை பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சேன். அட இதெல்லாம் சினிமாவுல காட்டுற விசயமாச்சே என்ரு நினைக்கவும் "பிரிய சகி" என்று போட்டு குட்டையை உடைத்து விட்டீர்கள். வித்தியாசமான விமர்சனம்.:)

துளசி கோபால் said...

'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை'ன்னானாம்.
என் சந்தேகம் என்னன்னா, பணக்காரப் பொண்ணு துபாய் ஷாப்பிங் மால்லே பையை
வச்சுட்டு டோக்கன் # 6 வாங்கிக்கிறா இல்லையா? மிடில்கிளாஸ் 'மாதவனு'க்கும்
தன்னோட பையை வச்சப்ப #9 கிடைச்சது.
அப்புறம் மி.மா. பையைத் திரும்ப வாங்கறப்ப # 6 (ப.பொ)தவறுதலாக் கிடைச்சு,அதுலே இருந்த
'ரகசியங்களை'த் தெரிஞ்சுக்கிட்டு ப.பொ.வை மடக்கிக் கல்யாணம் ஆகுறவரைக்கும் சரி.

இப்ப மி.மாவோட பை ப.பொ. கிட்டே போனதா இல்லையா? இந்த உயிர்போகிற
காட்சியிலே கோட்டை விட்டது உங்க யாரோட கண்ணுலேயும் படலையா?

விவாகரத்துக்கு ஒரு காரணம் மி.மா, ப.பொ.வோட ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டது!

மி.மா= மிடில்கிளாஸ் கதாநாயகனான மாதவன்

ப.பொ.= பணக்காரப் பொண்ணான கதா நாயகி.

ஐய்யோ தலை சுத்துதே:-)))

பினாத்தல் சுரேஷ் said...

ஷ்ரேயா - பாக்கவா போறீங்க? உங்க விதியை என்னால மாத்த முடியாது! எச்சரிக்கத் தான் முடியும்:-)

நன்றி பாஸிடிவ் ராமா

என்ன மாலதி, திடீர்னு வாங்க போங்க எல்லாம்? சும்மா வாடா போடான்னே கூப்பிடு - பரவாயில்லை:-)

துளசி மேடம் - பாத்துட்டீங்களா? ஏன் விமர்சனம் எழுதலை? நான் தப்பிச்சிருப்பேன் இல்லையா? ம்ஹூம் - ஒன்னும் சரியில்லை!

துளசி கோபால் said...

நான் எப்பவோ பார்த்துட்டேன்.
ஆனா இதுக்கெல்லாம் விமரிசனம் எழுத இங்கே நீங்க நிறையபேர் இருக்கறதாலே,

துள்ளூம் காலம், வைரவன் போன்ற உங்க கண்ணுக்குக் கிட்டாத & எட்டாத படங்களுக்கு மட்டுமே விமரிசனம் போடுவேன்:-))))))


ஆமாம், மி.மா. வோட பை என்னாச்சு?

( ஆமா இது ரொம்ப முக்கியம்?)

பினாத்தல் சுரேஷ் said...

மி மா தான் ஏழை, அவர் காத்திருந்து டோக்கன் கொடுத்து பொருளை வாங்கிப் போவார்.. ப பொ இந்த மாதிரி சில்லி மேட்டருக்கெல்லாம் டைம் செலவழிப்பதில்லை!

ஆஹா டைரெக்டருக்கே தெரியாத லாஜிக் சுரேஷ் மூளையில் உதித்தது என்ன அதிசயம்?

வீ. எம் said...

ஒரு பொறுப்பான வலைப்பதிவர் எப்படி இருப்பார்.. ?
ஒரு படம் பார்ப்பார்
அதன் கதாபாத்திரங்களை கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்வார்
மறக்காமல் அதை வலைப்பூவில் பதிவாக போடுவார்.

+ வாங்குவார், அனைவரின் பாராட்டையும் பெறுவார்.. பி. சுரேஷ் போல..

சூப்பர் சாரே , நல்ல பதிவு !

 

blogger templates | Make Money Online