Dec 25, 2005

திறமைக்கு பல முகம் (26 Dec)

நல்ல ஸ்பீடு போடறே - நம்மகிட்டே மீட்டர் இல்லை - எப்படியும் 90 மைலுக்கு குறையாது"

"நாளைக்கு பிராக்டிஸ் போது பழைய பால்லே ரிவர்ஸ் ஸ்விங் பிராக்டிஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்."

"சார் நாளைக்கும் மேட்லேதான் பிராக்டிஸா? மேட்லேயிருந்து பிட்ச்க்கு மாறும்போது லெங்த் சரியா வர மாட்டேங்குது!"

"அது சரி! ச்ரீனாத்தும் பாலாஜியும் எந்நேரமும் ஸ்டேடியத்துலேதான் பிராக்டிஸ் பண்ணாங்களா என்ன? எதுக்கும் தயாரா இருக்கறவனுக்குத்தான் சான்ஸு!"

'திங்கக்கிழமை காலையிலேயே எனக்கு சான்ஸ் கிடச்சா நல்ல இருக்கும் சார்"

"அது நம்ம கையிலேயா இருக்கு? நாளைக்கு ஃபுல் டே நீ நல்லா பிராக்டிஸ் பண்ணு. ஆஃப் அன்ட் மிடில்லேயே கன்ஸிச்டண்டா போடு.. கன்ட்ரோல் யுவர் நெர்வ்ஸ். நீ நிச்சயமா செலக்ட் ஆயிடுவே. நாளன்னிக்கு செலக்ஷ்ன் மேட்ச் நிச்சயமா உன் வாழ்க்கையிலே மறக்க மாட்டே பாரு!"

" சரி சார் நாளைக்கு காலையிலே கரெக்டா எட்டு மணிக்கு வந்துடறேன். வண்டிய எங்கே பார்க் பண்ணட்டும்?"

"கண்ணகி சிலை எதிருலே பண்ணிடு. என் வண்டி இல்லைன்னா ஒரு மிஸ்டு கால் கொடு"
____________________________________________________________
"எதுக்காக கூப்பிட்டு அனுப்பிச்சாராம்?"

"நானே மறந்து போன விஷயம். ஆபரேஷன் லிட்டில் ட்ராப்னு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சேனே ஞாபகம் இருக்கா?"

"வாட்டர் மேனேஜ்மென்ட் பத்தித்தானே?"

"ஆமாம். அப்பவே செக்ரடரிக்கு ரொம்ப பிடிச்சிருந்துது. இவ்வளோ சிம்பிளான சொல்யூஷனா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார். நான் சொன்னேன், சிம்பிளா இருக்கற பிளான் தான் சார் ஃபீஸிபிளா இருக்கும்னு சிரிச்சார்"

"ஆமாம் - அது நடந்து ஆச்சு அஞ்சு வருஷம்"

"எங்கே இருக்கே நீ? நான் ரிட்டயர் ஆயே ஆறு வருஷம் ஆச்சு! சரி -இப்போ அதுக்கு மறுபடியும் உயிர் வந்திருக்கு!"

"நாளைக்கு வாக்கிங் போய் திரும்பி வந்த வுடனே அந்த பேப்பரையெல்லாம் எடுத்து தூசி தட்டணும்"

"ஒம்பதரைக்குள்ளே வந்துருவேளோல்லியோ?"
_________________________________________________________________
"என்னடா சூசை - மறுபடியும் வலை அறுந்தா போச்சு?"

"அதை ஏன் கேக்குறே.. எனக்கு நேரமே சரியில்லை.. தொடர்ந்து மூணு முறை மகசூல் ஒன்னும் சரியில்லேன்னு இன்னும் கொஞ்சம் கடலுக்கு உள்ளாற போயி வலை அடிச்சோம்.. ரெண்டு நாள் கழிச்சுப்பாத்தா வலையிலே ஓட்டை.. சுறா ஏரியா பக்கம் அடிக்கடி போனதில்லையா.. வகையா மாட்டிகிட்டோம்."

"கிட்டானுக்கு நேத்து சரியான அறுவடையாமே.."

"அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு துரை. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை கூட அவனுக்கு வலை அறுந்ததே இல்லை."

"அது மச்சம் இல்லடா மாக்கான் -- அவன் கடல்ல இறங்கறதுக்கு முன்னாடி ஆபீஸரைப்பாத்து பேசாம போறதில்லே. எங்கே என்ன மீன் கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டு வலை வீசுறான், குத்து மதிப்பா வீசுற உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லையா?"

"நீ சொல்றதும் சரிதான். அடுத்த முறை நானும் அவனைக்கேட்டுகிட்டே நானும் போறேன். எங்க இருப்பான் இப்போ?"

"இப்போ தெரியாது.. நாளைக்கு காலையிலே படகுத்துறை பக்கமாத்தான் இருப்பான்."
________________________________________________________________
"வீரமணி நம்ம சுதந்திர தினம் என்ன கிழமைடா?"

"வெள்ளிக்கிழமை சார்"

"சரி 2010 ஆம் வருஷம் சுதந்திர தினம் என்ன கிழமையிலே வரும்டா?"

"ஞாயித்துக்கிழமை சார்"

"சரி பொலிவியா நாட்டுத் தலைனகரம் என்ன சொல்லு பாக்கலாம்?"

"லா பாஸ் சார்"

"வீட்டுலே கம்ப்யூட்டர் இருக்காடா?"

"இல்ல சார் இவன் மண்டையிலேதான் இருக்கு"

"சும்மா இருங்கடா..வீரமணி, உங்க அப்பாவை நாளைக்குஎன் வீட்டுக்கு வரச்சொல்லு"

"எனக்கு அப்பா இல்லை சார்"

"அடடா! சரி நாளைக்கு காலையிலே என் வீட்டுக்கு வறயா? நான் புது கம்ப்யூட்டர் வாங்கப்போறேன். பழைசு சும்மாத்தான் கிடக்கும், நீ எடுத்து உபயோகப்படுத்து."

"காலையிலே அம்மா கூட மீன் இறக்கப் போவோணும் சார். பத்து பத்தரைக்கு மேலே வரட்டா?"
_______________________________________________________________

அலைகள் அறிந்திருக்குமா அன்று இன்னும் எத்தனை திறமைகள் கடற்கரைக்கு வந்திருக்குமென?

10 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

TEST!!!!

News from Prasanna said...

Good one. Till the end i couldn't guess. But the Punch line was great. Good Tsunami Memorial Post

ramachandranusha(உஷா) said...

குமுதம். ஆ.விக்கு அனுப்பியிருக்கலாம் :-)

Muthu said...

good

dondu(#11168674346665545885) said...

சுரேஷ் அவர்களே,

இதைப் பார்த்ததும் எனக்கு வந்த ஐடியாதான் எனது தற்போதையப் பதிவு. அதற்கு இப்போதுதான் நீங்களும் பின்னூட்டமிட்டுள்ளீர்கள். இப்பின்னூட்டத்தை என்னுடைய அந்தப் பதிவிலும் போடுவேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குளத்தோழர்களே - பன்ச் வரியை மாற்றவைத்ததே நீங்கள்தானே.

நன்றி பிரசன்னா செய்திகள், முத்து, உஷா.

ஆ விக்கும் குமுதத்துக்கும் அனுப்பி காத்திருக்கும் பொறுமையும் இல்லை, மேலும் இதே போல ஒரு சுஜாதா சிறுகதை (காப்பி அல்ல - இன்ஸ்பிரெஷன் -- அப்படித்தான் சொல்லிக்கணுமாம்) இருப்பதாலும் எடிட்டர் தொந்தரவே இல்லாத நம் வலைப்பூவிலேயே போட்டுவிட்டேன்.

நன்றி டோண்டு.

மணியன் said...

நினைவலைகளை மீள்பதிவு செய்ததற்கு நன்றி.
அலைகள் கொண்டுசென்றோருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Unknown said...

இதுக்கு உங்க ஊருல்ல பேரு பினாத்தலா?

பினாத்தல் சுரேஷ் said...

thanks for the visit and your comments Manian and Dev

சென்ஷி said...

போணி நம்பர் 1 :))

 

blogger templates | Make Money Online