Jan 5, 2006

சிவாஜி திரை முன்னோட்டம் 04 Jan 06

சந்திரமுகியின் அபார வெற்றி, அன்னியனின் அப்பார வெற்றி இரண்டுக்கும் காரணமானவர்கள் இணைந்து கொடுக்கும் படம் என்பதால் ஆர்வம் அதிகரித்துவிட்டாலும், பயமும் அதிகமாகிவிட்டது.

நிஜமா பொய்யா எனத்தெரியாத ஒரு கேள்விப்பட்ட கதை. பிஷன் சிங் பேடி தன் மகனுக்கு கவாஸ்பேடி எனப் பெயர் வைக்க முனைந்தாராம். ஏன் எனக்கேட்டதற்கு அப்போதுதான் அவன் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேனாகவும் பேடி போன்ற பௌலராகவும் வருவான் என்றாராம். நடந்தது என்ன? மகன் வளர்ந்தான், பேடி போன்ற பேட்ஸ்மேனாகவும் கவாஸ்கர் போன்ற பவுலராகவும்!

இதில் படத்தைப் பற்றி வெளிவரும் தகவல்கள் இன்னுமே பயமுறுத்துகின்றன. பல பழைய படங்களின் பிரபல கெட்-அப்களில் ரஜினி தோன்றுவாராம். கெட்-அப் மட்டும்தானா, கதையுமா என்று தெரியவில்லை!

எனவே, ரஜினியின் பழைய பட ஃபார்முலாவையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டுக்குலுக்கியதில், இந்தக்கதை(?!) கிடைத்தது!

ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக!

சற்றுப் பெரிய கோப்பாக அமைந்துவிட்டதால் இரண்டு பாகங்களாகக் கொடுக்கிறேன். அதற்கும் மன்னிக்கவும்.

இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு கருத்து சொல்லாம போயிடக்கூடாது! ஆமாம்.






இரண்டாம் பாகம் இங்கே துவங்குகிறது:





அனைவரின் வசதிக்காக மொத்த வசனங்களும் இங்கே:

காட்சி 1 - பாடல்:

இந்தியா என்னாலே எழுந்து நிக்கும் பாருடா
இமயத்துக்கு என்னைப்பார்த்தா வேர்த்திருக்கும் பாருடா
ஆந்திரா என் முன்னாலே அடங்கி நிக்கும் பாருடா
ஒரிஸ்ஸா என் சொல்லாலே ஒடுங்கி நிக்கும் பாருடா!

காட்சி 2 - ஜோதிட நிலையம்:

னதியா: ஜோசியர் ஐயா, இது என் மகன் சிவாஜியோட ஜாதகம்.. கொஞ்சம் பாத்து சொல்லறீங்களா?

ஜோசியர்: ஆஹா இதுதாம்மா ஜாதாகம்..

ஆயிரம் கோடி அதிசயம், அமைந்தது சிவாஜி ஜாதகம்!

இந்தக் குழந்தை எப்படியும் இன்னும் 20 வருஷத்துல பெரியவனா மாறிடுவான்

ஆனா எவ்வளவு பெரியவனா ஆவான்னு என்னாலே உறுதியா சொல்ல முடியலே

ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு துறையிலே பெரிய ஆளா வருவான்..

காட்சி 3: கல்லூரி

பிரகாஷ்: ஹாய் செல்லம்.. சீனியர மதிக்காம கிளாஸுக்குல்லே எல்லாம் போகக்கூடாது.. நில்லு நில்லு நில்லு

ரஜினி: தோ பார் கண்ணா.. என் வழி தனி வழி.. மோதப்பார்த்தே காணாமப்போயிடுவே..

பிரகாஷ்: அதெல்லாம் நீ எப்படி சொல்லலாம்? தப்பு தப்பு தப்பு.. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது..

இப்போ நீதான் சைன் தீட்டா, எதிர்லே வராளே.. அவதான் காஸ் தீட்டா.. ரெண்டு பேரும் செர்ந்து டேன் தீட்டா பண்ணுங்க பாக்கலாம்..

ரஜினி: டேய் டேய் டேய் டேய்.. ஆண்டவன் கெட்டவங்களுக்கு பிட் பிட்டா அள்ளிக்கொடுப்பான்.. ஆனா பரீட்சையிலே பெயில் பண்ணி வுட்டுடுவான்.
நல்லவங்களுக்கு.. பிட்டே கொடுக்க மாட்டான்.. ஆனா கொஸ்டின் பேப்பரையே அவுட் ஆக்கிடுவான்டா..

இந்தா வாங்கிக்கா..

காட்சி 4 :
ஷ்ரேயா: என்னங்க இந்தட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?
ரஜினி: தோ பாரும்ம.. பொம்பளை பொம்பளையா இருக்கனும்.. ஆம்பளை ஆம்பளையா இருக்கனும்..

கடனை வாங்காதவன் ஆம்பளையும் இல்லே,
புடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே..

ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும்
பொம்பளைன்ன பொறுப்பா இருக்கணூம்..

ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..

பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!

காட்சி 5:

புஷ் அலுவலகத்துள் நுழையும் ரஜினி: இதோ பார் பிரச்சினை எனக்கும் உனக்கும் நடுவுலே.. அனாவசியமா பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது..ஈராக்லே இருந்து உன்படையெல்லாம் வாபஸ் வாங்கு.. அரிசிய இடிச்சா மாவு.. இந்த சிவாஜி அடிச்சா.. சாவு!! சிவாஜி கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. ஒன் டூ த்ரீ..

காட்சி 6:

னாசா தலைவர்:

ரஜினி: இப்போ என்ன ஸ்டேடஸ் சார்..

னா த: செவ்வாய் கிரகத்துலே இருந்து கிளம்பிய எரிகல் எப்போ வெணும்னாலும் உலகத்தை தாக்கலாம்.. அது மட்டும் நடந்தா.. வெல்.. தட் வில் பீ த என்ட் ஒஃப் அவர் வேர்ல்ட்..

ரஜினி: இப்ப என்ன பண்ணறது சார்?

னா த: நீங்கதான் எதாவது பண்ணனும் சிவாஜி

ரஜினி: ஒரே ஒரு வழிதான் சார் இருக்கு.. இங்கே பக்கத்துலே லைட் ஹவுஸ் எங்கே இருக்கு?

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்!

18 பின்னூட்டங்கள்:

Boston Bala said...

---முழுசா... மாறியிருக்கிற---
:-)))))

சூப்பர் குரலோனே, ரிப்பீட்டு!!!

-L-L-D-a-s-u said...

kalakkal

சீமாச்சு.. said...

Dear Suresh
idhu thaan original kadhaiye-aam. Sujatha sir ippa thaan phone panninaanga. Rajini Madras Light-house mela yeri ungalai Dubai-la thedikkittirukkaaram.
Endrendrum Anbudan
Seemachu

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Bo Ba, -l-l-d-a-s-u- and seemachu..

Anonymous said...

kudos for the fantastic production. hats off. graphics அசத்தீட்டீங்க, போங்க!

தருமி said...

Kudos for the fantastic production. graphics அசத்தீட்டீங்க..!!

பினாத்தல் சுரேஷ் said...

பாஸ்டன் பாலா, நீங்கள் கேட்டதை சரியாக முதலில் புரிந்து கொள்ளவில்லை. அந்த சீனின் டயலாக் இதோ:

ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..

பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!

Vijayakumar said...

Suresh, I could not see flash content from my workplace since it is blocked. Let me try to see from home. writing itself is good. keep it up

மணியன் said...

//கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்! //
பலகுரலில் நடித்ததும் பாடியதும் கூட நீங்கள் தானே. அருமையான கருத்தும் ஆக்கமும். வாழ்த்துக்கள்!!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Manian and Swathy

துளசி கோபால் said...

தூள்

கொன்னுட்டீங்க போங்க:-)))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ரிப்பீட்டு...

நவீன் ப்ரகாஷ் said...

கலக்கீட்டீங்க தலைவா !!!

வாய்ஸ் மட்டும் கொஞம் தெளிவா கேக்கறமாதிரி பண்ணுங்களேன் ப்ளீஸ் !

பினாத்தல் சுரேஷ் said...

துளசி கோபால், நிலவு நண்பன், Naveen Prakash --நன்றி & பொங்கல் வாழ்த்துகள்

பினாத்தல் சுரேஷ் said...

துளசி கோபால், நிலவு நண்பன், Naveen Prakash --நன்றி & பொங்கல் வாழ்த்துகள்

கதிர் said...

Kathir from karama

Sir unga penathala pakkumbothu neenga aasiruyar velai part time than pakkaringa pola irukku. Neenga mattum tamil cinema ku poitingana Dosai thiruppara mathiri tamil cinemayavaye thiruppidalam sir. karpanai kazhuka irkingale, Parthen Rasithen

Gunalan G said...

great...

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கதிர் (கராமா), குணாளன் ஜேம்ஸ், அரவிந்தன்!

 

blogger templates | Make Money Online