Jan 9, 2006

உள் நோக்கம் இல்லாத வசனங்கள் 09Jan06

பினாத்தலார் தன் பங்குக்கு சில உள்நோக்கம் இல்லாத வசனங்களை அளிக்கிறார். இந்த வசனங்கள் அவர் வீட்டு அரபி வாட்ச்மேன் எழுதியது, எனவே, உள்நோக்கம் சற்றும் இல்லாதது என உறுதியும் அளிக்கிறார்.

1. டேய் எங்கேடா போயி சுத்திட்டு வரே? அந்த கருணா கூட சேராதேன்னா கேட்கறயா? இதுலே விஞ்ஞான முறைப்படி பொய் வேற சொல்லறே.

2. உன் பிரெண்டு ஜெயா பணக்காரிடீ, அவளுக்கு ஒரு ரூபா சம்பளம் கட்டுபடியாகும்.. நமக்கு ஆகுமா?

3. சொன்ன பேச்சை கேக்கறயாடா நீ? சீனிவாசன் உன் நண்பன் தானே? என்னிக்காவது அவன் அன்னையோட பேச்சை தட்டி இருக்கானாடா?

4. யாரு முருகதாஸா பிளாட் செகரட்டரி? அவர்தான் தன் குடும்பமே பதவிக்கு வராதுன்னு சொன்னாரே?

5. பெரியண்ணன் தான் நாட்டாமையா வரனுமுன்னு பஞ்சாயத்துலே "ஓ"ன்னு அழுதாரே கோபால் - அவர் வீடு இங்கே எங்கே இருக்குங்க?

6. அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு அண்ணன் கூட தகறாரு பண்ணாதே.. திருபுவனம் ராமமூர்த்தி மாதிரி.

7. தங்கச்சி மேல பாசமே கிடையாதா அண்ணா உனக்கு? பக்கத்துத் தெரு திருமாவைப்பாரு.. அவன் தங்கச்சி தமிழரசிய எப்படி பாதுகாக்கிறான்னு!

8. ஆபீஸர் மோகன் ரொம்ப நல்லவருங்க.. என்ன, அவங்க உறவுக்கார அம்மா - அதான் ஒல்லியா அவங்க வீட்டுலே இருப்பாங்களே - அவங்க சொல்லறதை மட்டும்தான் கேப்பாரு ..

9. ஆமாம்.. அம்மாவுக்கு கோயிலுக்குப்போக கஷ்டமா இருக்குன்னு பக்கத்து வீட்டையே இடிச்சு கோயில் கட்டிட்டுதாம் தம்பி அஷோக்கு!

10. வகுப்புக்குள்ளே அமைதியா இல்லாம எல்லாரும் கூச்சல் போட்டுகிட்டே இருந்தா வாத்தியார் சோம நாதன் என்னதான் பண்ணுவாரு பாவம்!

பி கு: குஷ்பூ மேட்டர் ஓய்ந்துவிட்டு, அரசியல் ரகளைகளுக்கு இன்னும் கொஞ்சம் காத்துக்கொண்டிருக்க வேண்டிய வேளையிலே நமக்கும் பொழுது போக வேண்டாமா?

6 பின்னூட்டங்கள்:

நிலா said...

nalla karpanai!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Nilaa

டிபிஆர்.ஜோசப் said...

சுரேஷ்,

அந்த ஜெயான்னு சொன்னீங்களே அது யாருங்க.. அப்புறம் அதே மாதிரி திருமா... இதெல்லாம் கற்பனை கதாபாத்திரங்கள்தானே..:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜோஸப்; எங்கள் வீடு அரஃபி வாட்ச்மேன் எழுதியதுன்னு சொல்லிட்டேனே.. அவருக்கு கற்பனையிலே வந்த பேரை எழுதியிருக்கார்!

நன்றி ஆர்த்தி - ஒரு தனிமடல் போட முடியுமா? (sudamini at gmail dot com)

பினாத்தல் சுரேஷ் said...

Thanks malar - it doesnt take too much time! office-le vaththi vechudaatheenga!

தெருத்தொண்டன் said...

தொடரட்டும் உங்கள் உள்நோக்கம் இல்லாத வசன சேவை!:-))

 

blogger templates | Make Money Online