Jan 15, 2006

நவீன கவிதை 15 Jan 2006

நவீன கவிதை எழுதும் ஆசை என்றுமே பினாத்தலாருக்கு உண்டு. நவீன கவிதைக்கான இலக்கணங்கள்(நன்றி: ஆஸீப் மீரான்) கவிதையைவிட, கவிஞனைப்பற்றியே அதிகம் இருக்கிறது. கவிதை செய்யப்படக்கூடாது, அது தன்னைத்தானே எழுதிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து, கவிதைக்கு அர்த்தம் சொல்லக்கூடாது, யார் என்ன கவிதை எழுதலாம் என்று ஆயிரத்தெட்டு விதிகள்.

என்றாலும், இன்றைய விதிமீறல்கள்தான் நாளைய விதிகளை உருவாக்கும் என்பதால், தமிழுக்கு மேலும் ஒரு கவி அலங்காரத்தை சமர்ப்பிக்கிறார் பினாத்தலார்!


கவிதையும் காப்பியும் ஒன்றுதான்

அதிகாலை பொடி அழுத்தி
கறந்தபாலுக்காய்க் காத்திருந்து
இலக்கணம் மாறாமல் அசை பிரித்து சீர் பிடித்து
அம்மாவின் கை மரபுக்காப்பி

அவசரம் ஆட்டுவிக்க
பாலின் மேல் பொடி தூவி
இலக்கணங்களைக் கட்டுடைக்கும்
புதுக்காப்பி

சிக்கனம் கருதி சிக்கரி போட்டு
ஜனத்தை மயக்க மணத்தை சேர்த்து
சினிமாப்பாடல் போல ஓட்டல் காப்பி..

இருந்தாலும்..
தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதையைப்போல
காபி தன்னைத்தானே போட்டுக்கொண்டதில்லை எந்நாளும்..

8 பின்னூட்டங்கள்:

தருமி said...

இவை போன்ற கவித்துவம் மிக்க பதிவுகளுக்கு கவிதையாலேயே பதில் தருவதே/ பின்னூட்டமிடுவதே சரியாக இருக்கும். ஆனாலோ எனக்கும் கவிதைகளுக்கும் தூரம் அதிகமென்பதால் நான் இப்பதிவுக்குப் பின்னூட்டமிடவில்லை. :-(

ramachandranusha(உஷா) said...

கவிதைக்கு பதில் கவிதை
படைத்தல் என்றாலும் கவிக்கு
எனக்கும் இருக்கும் தூரம்
என்னை அறிவுருத்த
பதில் அளிக்கவில்லை நான்

- தருமி

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்? இவ்வளவுதாங்க கவிதை. இனி எளுதி குவிச்சிடுங்க தருமி சார்.

சுரேஷ், நேற்று நான் போட்டதற்கு இன்னைக்கு பழி வாங்கிட்டீங்கன்னு சொல்ல மாட்டேன் :-)
கடைசி வரிகளை படித்ததும் என் கண்கள் குளமாகிவிட்டன. வாழ்க்கை தத்துவத்தை என்னமாய் இரண்டே வரிகளில்
சொல்லிவிட்டீர்கள்? ஐயா, இனி ஒரு பிறவி கவிஞன்... இன்னும் எழுதினா, வீட்டுக்கு ஆட்டோ வந்துவிடும் :-)

Anonymous said...

ஐயா சுரேஷ்,

கவி மடத்தலைவன் என்ற முறையில் வாழ்த்துகள்!!

நல்ல கவிதை காபி மாதிரிதான்.
சர்க்கரை இல்லாம குடிச்சா கசக்கும். சர்க்கரை போட்டா இனிக்கும்.எவ்வளவு சர்க்கரை போடலாம்க்றது அவங்கவங்க சவுகரியம் பொறுத்தது. இதையே கவிதையோட உட்பொருளா ஒளிச்சு வைச்சு கவிபுனைஞ்சிருக்குற உங்க்ளை நெனைச்சா மெய் சிலிர்க்குது. ஆனாலும் நீங்க பொறவிக் கவிஞன்னு உஷாஜி சொன்னதை நான் ஒருக்காலும் ஒப்புகொள்ள மாட்டேன். அதுக்கு நீங்க இன்னமும் உங்களை நிரூபிக்க வேண்டியிருக்கு.

கவிதை பற்றி இன்னொரு விளக்கக் கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன். அதப்படிச்சுப் பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க

சாத்தான்குளத்தான்

தருமி said...

தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதையைப்போல"//
- சுரேஷ், உஷா,
கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும்..சரி..அதே மாதிரி,
'தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் பின்னூட்டம் ' இருக்குங்களா..?

பினாத்தல் சுரேஷ் said...

தருமி, நீங்கள் எழுதியதை கொஞ்சம் பாரா பிரிக்காமல், வரிகளாய் அடுக்கினால் உங்களுக்குள் இருக்கும் நெம்புகோல் கவிஞன் உங்கள் கண்களுக்குத் தென்படுவான். மேல் விவரங்களுக்கு சுய விலாசமிட்ட அஞ்சல் உறையுடன், 5000$க்கு DD இணைத்து என் மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

உஷா, நீங்கள் எழுதியதற்கு பதிலா? போட்டி என நினைக்காதீர்கள் - போட்டியில் யார் ஜெயித்தாக்லும் தோற்பது என்னவோ கவிதைதான்!

ஆஹா கவி குருவே! சரணம்! கீழ்க்கண்டதையாவது பிறவிக்கவிஞன் கவிதை என ஒப்புக்கொள்ளுவீர்களா?

என் அலுவலறையை யாரோ பார்த்திருக்கிறார்கள்..
மினுக்கென வெட்டும் குழல் ஒளியை நோக்கி
கண் கெட்டாலும் சம்மதமே..
தொலை அழைப்புக்காய்த் தீட்டிய காதுகள்
ரத்தம் கசிந்தால்தான் என்ன?
கவிபாடிச்செல்லும் என்
பயணத்துக்குள்ளே அலுவலறைக்கு இடமில்லை!

ramachandranusha(உஷா) said...

//போட்டியில் யார் ஜெயித்தாக்லும் தோற்பது என்னவோ கவிதைதான்!//

சுரேஷ், அது "உண்மையான கவிதை" யாய் இருந்தால் தோற்காது :-)

பினாத்தல் சுரேஷ் said...

vaanga saar! vellaikkaran comment illama namma blog kalai izanthu poyituchi!

நளாயினி said...

அட..அட.. அட கவிதைக்காப்பி பேஸ் பேஸ். நன்னா இருக்கு.

 

blogger templates | Make Money Online