Feb 1, 2006

ரங் தே பஸந்தி 01 Feb 06

ஆதியும் பரமசிவனும், நேற்று முளைத்த சரவணாவும் வானிலிருந்து குதித்த நாயகர்களாக பன்ச் டயலாக் என்ன, பாவப்பட்ட துணை நடிகர்களை 100 மீட்டர் தள்ளி விழவைக்கும் (மூன்று அந்தர் பல்டி உள்பட) குத்து என்ன என்று ஹீரோயிஸம் காட்டும் படங்கள் மத்தியில், ஐந்து இளைஞர்களில் ஒருவராக, தன்னை மட்டுமே முன்னிலைபடுத்திக் கொள்ளாத ஆமிர் கான் முதல் ஆச்சரியம்.

டாகுமெண்டரிப்படம் எடுக்க வரும் வெளிநாட்டுப்பெண், அவளுக்கு உதவும் இந்தியப்பெண் என்று இரண்டே பெண் பாத்திரங்கள் (கிரேஸி மோகன் நாடகம் போல), ஒரு டூயட்டோ, குத்துப்பாட்டோ, திணிக்கப்பட்ட கிளுகிளுக்காட்சிகளோ இல்லை என்பது இரண்டாவது ஆச்சரியம்.

விடுதலைப்போரில் பங்கேற்ற இளைஞர்களுக்கும், பொறுப்பற்றுத் திரியும் இன்றைய இளைஞர்களுக்கும் காண்ட்ராஸ்ட் காட்டுவதே கதையின் போக்கு என்பதால் பொதுமைப்படுத்திவிடும் அபாயம் இருந்தும் தவிர்த்திருப்பது மூன்றாவது ஆச்சரியம்.

ஆய்த எழுத்துக்குப்பின் அட்ரஸ் இல்லாமல் போன சித்தார்த்தின் நடிப்பு - நண்பர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்றாலும் கண்களில் தெரியும் நிரந்தர சோகம், வெறுமை, பகத்சிங்காக வரும்போது காட்டும் முகபாவ வேறுபாடுகள்! இன்னொரு ஆச்சரியம்.

நடிப்பில் இவர் மட்டும் இல்லை, மற்ற இளைஞர்கள் (பெயர்கள் தெரியவில்லை), அதுல் குல்கர்னி, சோனியாவாக வரும் நடிகை, வெளிநாட்டு சூ, சிறப்புத் தோற்றம் என்றாலும் பின்பாதிக்கதைக்கு அச்சாணியாக வரும் மாதவன், இரண்டே காட்சிகள் வந்து போகும் ஓம் பூரி, அனுபம் கெர், கிரண் கெர் அனைவரும் பிரமாதப்படுத்தி இருக்கின்றனர்.

கதை ஒன்றும் புதியதில்லை. பக்த்சிங்கைத் தூக்கிலிட்ட தாத்தாவின் டைரி உந்த, டகுமெண்டரி எடுக்க வரும் வெளிநாட்டுப்பெண், இந்தியாவில் சந்திக்கும் கல்லூரி இளைஞர்களை நடிக்க வைக்க, அந்த இளைஞர்களின் நண்பன் MIG விமான விபத்தில் இறக்க, அந்த விபத்து அரசியலாக்கப்பட, கோபம் கொண்டு பாதுகாப்பு மந்திரியைக் கொல்கிறார்கள்; கொல்லப்பட்டவரை தேசப்பிதா ஆக்கும் முயர்சியைத் தடுக்க வானொலி நிலையத்தைக் கைப்பற்றி "நாங்கள் தீவிரவாதிகள் இல்லை" என்று அறிக்கை விடுத்தும், கமாண்டோப்படையால் கொல்லப்படுகிறார்கள்.. இந்தியன் ரமணா என்று நாம் பார்த்த பல கதைகள் போலத்தான்.

ஆனால் கதை சொல்லப்பட்ட விதம், பழைய கதையானாலும் புதிய பார்வை. அவ்வப்போது பகத்சிங்கையும் பிஸ்மில், ஆஸாத், அஸ்லம் என்று அவன் குழாத்தையும் கருப்பு வெள்ளையில் தொட்டுச்சென்றாலும், முக்கியமான கவனம் விழித்தெழும் பொறுப்பற்ற இளைஞர்களைச் சுற்றியே என்பதால் பீரியட் படம் என்ற எண்ணம் எழவில்லை.

ஒளிப்பதிவு பிரமாதம் - விமானம் நம் மேலேயே ஏறுகிறது, ஆமிர்கான் வேகமாக பைக் ஓட்டும்போது நமக்கு அடிவயிற்றில் பயம் வருகிறது! எடிட்டிங்கும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.பெரும்பாலும் ஊகிக்க முடியாத நேரங்களிலேயே சுதந்திரப்போர்க் காட்சிகள் தடக்கென மாறுகிறது.. காட்சி மாறிய கொஞ்ச நேரம் கழித்துத்தான் உரைக்கிறது!

குறைகள் இல்லாமல் இல்லை. இன்னும் சற்று பழைய காட்சிகள் அமித்திருக்கலாம்.என்னதான் இருந்தாலும் ஆமிர்கானின் முகம் கல்லூரி மாணவனாக?? ம்ஹூம்!(காலேஜ் முடித்து ஐந்து வருடம் ஆகியும் அங்கேயே சுற்றுகின்றாராம் - சப்பைக்கட்டு வேறு.) இந்த இளைஞர்கள் தவிர நடிப்பதற்கு வேறு ஆட்களே இல்லையா, ஏன்
அவர்கள் இறுதிக்காட்சியில் கொல்லப்பட வேண்டும், க்ளைமாக்ஸை அவ்வளவு இழுத்திருக்க வேண்டுமா எனப்பல கேள்விகள் இருந்தாலும்,


பார்த்து ரசிக்க வேண்டிய படம் - அதில் சந்தேகமில்லை.

9 பின்னூட்டங்கள்:

நிலா said...

நல்ல விமர்சனம், சுரேஷ்

நந்தன் | Nandhan said...

எனக்கும் இதே கேள்விகள் எழுந்தது. இங்கே பாருங்க என்னோட விமர்சனம் வந்துட்டு போனவர் ஒரு கேள்வி கேட்டார், உங்களுக்கு பதில் தெரியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

Thanks nila, nandhan.

எங்க ஊர்லேயும் அந்த மாதிரி எந்த டைட்டில் கார்டையும் பாக்கலையே.. நான் லேட்டும் இல்லையே.. என்ன போட்டிருந்தாங்கன்னு சொல்ல முடியுமா?

Sud Gopal said...

"ஆய்த எழுத்துக்குப்பின் அட்ரஸ் இல்லாமல் போன சித்தார்த்தின் நடிப்பு"

அவர் தமிழில தான் நடிக்கலை.ஆனா பிரபுதேவாவின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாய் சக்கை போடு போட்ட "நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டானா"(நீ வருவென்னா நான் வேணாம்னா சொல்லப் போறேன்)படத்தில இவரு தான் ஹீரோ.
இப்பக்கூட "சுக்கள்ளோ சந்தமாமா" அப்படின்னு ஒரு படம் ஆகிட் கொடுத்திருக்காரு.

மற்ற இளைஞர்கள் (பெயர்கள் தெரியவில்லை)
குனால் கபூர்,சம் ஜோஷி.சோனியா:- டாட்டர் ஆஃப் ஷர்மிளா தாகூர் -> சோஹா அலி கான்.

விமர்சனத்தை நல்லாவே எழுதியிருக்கீங்க.அப்படியே படத்தோட எசயப் பத்தியும்,மீஜிக் போட்ட நம்ம ஊர்த்தம்பியைப் பத்தியும் எழுதியிருக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Sudharsan.gopal

I forgot to add தமிழில.
thanks for the other info too.

music, didnt impress me, thats why no mention.

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் அய்யா.

Hope I have a prosperous future. :)

பினாத்தல் சுரேஷ் said...

இலவசக்கொத்தனார்,,

you are blessed:-)

enRenRum-anbudan.BALA said...

Dear Suresh,

Nice Review. I think I will try to see the movie after reading this.

பினாத்தல் சுரேஷ் said...

thanks bala.

 

blogger templates | Make Money Online