Mar 1, 2006

தேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)

ப ம க பொதுக்குழு நேற்று இரவு சற்றேறக்குறைய இரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியிருந்த நேரத்தில் கூடியது. நாட்டு நிலவரம் பற்றியும், வரவிருக்கும் தேர்தலில் எதுபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு ஆட்சியைக்கைப்பற்றுவது போன்ற பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

இ து பொ செ: தலைவரே, நம்ம கட்சி இந்தத் தேர்தல்லே போட்டியிடப்போகுதா இல்லியா? நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட இரண்டில் ஒரு கூட்டணியிலே ஐக்கியம் ஆயிடுச்சி. ஆனா நம்ம நிலைமைய பாருங்க.. வலை மக்களுக்கே நம்ம கொ ப செ யாருன்னு தெரியாத அளவுக்கு கட்சியை மறக்கடிச்சுட்டோம்..

நிறுவனர் - தலைவர்: அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, நாம லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்..

இ து பொ செ: (முணுமுணுப்பாக) ஆமா.. இந்த ரஜினியத்தான் சொல்லணும்.. இப்படி ஒரு டயலாக்க பிரபலப்படுத்தி, சோம்பேறிங்களை வளர்த்து விட்டுட்டாரு. (சத்தமாக) சரி நாம எந்தக்கூட்டணியிலே சேரப்போறோம்?

த: நமக்கு இதுவரை எந்தக்கூட்டணியிலிருந்தும் அழைப்பே வரவில்லையே. "கதவுகள் திறந்துதான் இருக்கின்றன"ன்னு அறிக்கை கூட விட்டுப்பாத்துட்டோம்..

இ து பொ செ: நாம இந்த மாதிரி பெரிய கட்சி ரேஞ்சிலயெல்லாம் பேசலாமுங்களா? நம்ம பலத்தை பத்தி நமக்கே தெரிய வேணாம்?  ஒரு தொகுதியிலயாவது டெபாஸிட்டை வாங்க முடியுமா நம்மாலே?

த: நம்ம கட்சியைப்பற்றி இவ்வாறு பேசினால் கட்டம் கட்டிவைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.

இ து பொ செ: அட நமக்குள்ளேதானே தலைவரே.. அவன் அவன் பத்துத் தொகுதி என் பாக்கெட்டுலே,  அஞ்சு தொகுதி என் லாக்கெட்டுலேன்னு ராக்கெட்டுலே பறந்துகிட்டிருக்கான்.. நாம என்ன சொல்றது..

த: நாம நிச்சயமா ஜெயிக்கக்கூடிய தொகுதின்னு இல்லாட்டியும், 234 தொகுதியிலயும் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் பண்ணப்போறது நாமதானே..

இ து பொ செ: அதெப்படிங்க?

த: எல்லாத்தொகுதியிலயும் பரவலா நமக்கு ஒரு நாலு - அஞ்சு ஓட்டு இருக்குதுன்னு வச்சுக்குவோம். தேர்தல் முடிவுலே 4 - 5 ஓட்டு வித்தியாசம் வந்தா அந்த முடிவை நிர்ணயம் பண்ணது நாமதானே.. இப்பவே பாருங்க, இந்த வார வலைத் தேர்தல்லே நம்ம வாய்ஸ் கொடுத்ததால்தானே ரோஜா அணிக்கு அமோக வெற்றி..

இ து பொ செ: அதை அவங்க ஒத்துக்கணுமே.. எங்களை ஆதரித்த மு மு க, க ச க, ய ப க, ப ம க, ஜ ஜ க மற்றும் கோ கு கவுக்கு நன்றின்னு கலைஞர் ரேஞ்சிலே அறிக்கை விட்டாங்கன்னா?

த: சரி அதை அப்ப பாத்துக்கலாம். புதிய ப ம க நம்ம கூட்டணியிலேதானே இருக்கு..

இ து பொ செ: அவ்ரு கட்சி ஆரம்பிச்சதே உங்களை எதிர்த்துத்தானே.. அவர் எப்போ வேணும்னாலும் வெளிய போயிடுவாரு.

த: நீங்க என்ன நெகடிவ்வா பேசறதுதான் நேர்மைன்னு நெனச்சுகிட்டிருக்கீங்களா? அதெல்லாம் அவர் போக மாட்டார், நான் சென்டிமெண்டலா பேசி கரெக்ட் செய்துடறேன்.

இ து பொ செ:  நீங்க சென்டியா பேசுங்க, அவர் நம்மள மெண்டலாக்கிட்டு போயிடுவாரு. அவரை நிறுத்தி வைக்கணும்னா ஒரே வழி, சின்ன முகமூடிய கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க.

த: நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கேன், உங்களுக்கு தைரியம் அதிகமாகிகிட்டே வருது. கூட்டணிக்கட்சிக்காரங்க தியாகம் பண்ணாட்டாலே எனக்குக் கோபம் வரும்.. நீங்க நம்ம கட்சியிலே இருந்துகிட்டே இப்படிப்பண்றீங்கன்ன உங்களுக்கு என் இதயத்துலே இடம் குடுக்கறதைத் தவிர வேற எதுவும் பண்ண முடியாது.

இ து பொ செ: அப்புறம் நீங்க புத்தம் புதிய ப ம கவையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். சரி சரி நமக்குள்ளே எதுக்கு பிரச்சினை. நம்ம அணுகுமுறையை சொல்லுங்க.

த: அப்படிக்கேளுங்க, நம்ம திட்டங்களை சொல்றேன். முதல் திட்டம், மகாபாரதக்கட்சின்னு ஒன்னு இருக்காமே, அது கூடக் கூட்டணி வைக்கணும். அப்புறம், ராமயணக்கட்சி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கட்சி, தென்கச்சி சுவாமிநாதன் கட்சி இதையெல்லாம் நம்ம கூட்டணியிலே வளைச்சிப் போடணும்.

இ து பொ செ: எதுக்கு?

த: தெரியலையா, அதுனாலதான் நான் தலைவன்! எலக்ஷன் நேரத்துலே எல்லாப் பேச்சாளர்களும் குட்டிக்கதை சொல்லுவாங்க இல்லையா?

இ து பொ செ: ஆமாம்,

த: எதிலே இருந்து சொல்லுவாங்க? ராமயணம், மகாபாரதம், பரமஹம்ஸர் விட்டா தென்கச்சி - இங்கே இருந்துதான அவங்க கதைய சொல்ல முடியும்?

இ து பொ செ: அதனாலே?

த: நம்ம கூட்டணியிலே இந்தக்கட்சியெல்லாம் இருக்கரதாலே, நாம எலக்ஷன் கமிஷன்கிட்டே சொல்லி வேற யாரையும் குட்டிக்கதை சொல்ல முடியாம தடுத்தடலாம் இல்லயா? அவங்களோட பிரசார உத்தியை தவிடுபொடி ஆக்கிடலாமே!

இ து பொ செ: அது சரிதான். மத்த பிரசார உத்தியெல்லாம்?

(மற்றப் பிரசார உத்திகளை பொதுக்குழுவில் இருந்த மற்ற தோழர்கள், தலைவர் ஆகியோர் தொடர்வார்கள்)

7 பின்னூட்டங்கள்:

ஏஜண்ட் NJ said...

இது ஆவுறதில்ல

பினாத்தல் சுரேஷ் said...

ஞான்ஸ், ஏன் ஆவுறதில்லை?

வேற யாரும் பாக்கலையா?

rv said...

கொ.ப.செ,
நம் கட்சியின் பலத்தை ரோஜா வின் அமோக வெற்றியின் மூலம் நிருபிச்சாச்சு. இதுலேர்ந்து பாடம் கத்துக்க வேண்டியது மத்தவங்க தான். நாம இல்ல. மேலும் நீங்க சொன்ன மாதிரி பேச்சாளர்கள் அவசியம். ஆன்மிக செம்மல் குமரன் அவர்களை நம் வெற்றிக் கூட்டணியில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொல்லுகிறேன். அவரோட பிரச்சாரத் திறன் நமக்கு பயன்படும்.

தொகுதிப் பங்கீடு, சீட் ஒதுக்குதல் லாம் முடிஞ்சாச்சா? அதப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே? வழக்கம் போல ஐரோப்பாவின் எம்.எல்.ஏ நான் தானே?

பினாத்தல் சுரேஷ் said...

என்ன நீங்க, என் கிட்டே போயி பர்மிஷன் கேட்டுகிட்டு... ஐரோப்பாவின் கொ ப செவா உங்களை நியமிச்சதே இப்படி ஆள் பிடிச்சிக் கொடுப்பீங்கன்னுதானே.

நீங்களும்தானே பொதுக்குழுவிலே இருந்தீங்க.. அடுத்த கட்டத்தை நீங்களே எழுதிடுங்க!

பினாத்தல் சுரேஷ் said...

இப்பதான் கவனிக்கிறேன்.. அது என்ன கொல்லுகிறேன்? டைப்போவா, காரணப்பிழையா?

Geetha Sambasivam said...

let other parties also to ask for them, we will decide afterwards about the thokuthui pankeedu.No hurry.

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Geetha for the visit & comment.

 

blogger templates | Make Money Online