Apr 26, 2006

கொள்கை tracker 1.0

வேகமாக ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் காலம் இது.

கொள்கை விளக்கங்கள் கடைமட்டத் தொண்டன் வரை விரைவாகப் போய்ச் செர வேண்டிய கட்டாயத்தில் தலைமை இருக்கிறது. ஏற்கனவே தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாததால், வைகோ தன் பேச்சின் நடுவில் துண்டுச்சீட்டைப் பார்த்து நிலைப்பாட்டை மாற்றுகிறார், டிவி வரிப்பணத்திலா இல்லையா என்று கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவினரும் குழம்பி இருக்கிறார்கள் (பின் வேறெங்கிருந்து வரும் என்று கூடவா தோழர்களுக்குத் தெரியவில்லை?), மத்திய அரசின் பலத்தை சோனியா சொன்ன பிறகு காங்கிரஸார் உணர்ந்து கொள்கின்றனர், தெருவின் நடுவில் ஜெயலலிதாவின் தாயுள்ளம் விழித்துக் கொள்கிறது.. இப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் கடைமட்டத் தொண்டன் வரை போய்ச் செர வேண்டாமா?

கிரிக்கெட் ஸ்கோர் கூட உடனடியாகத் தெரிந்துகொள்ள xml, rss feed போன்ற பல தொழில்நுட்ப உதவிகள் இருக்கும்போது, அரசியல் மட்டும் என்ன பாவம் செய்தது?

எனவே, பினாத்தலார் இந்த சீரிய முயற்சியில் இறங்கினார்.

கொள்கை tracker1.0 வின் தன்மைகள்:

இந்த மென்பொருள் வலையில் உள்ளதால் ஆன்லைனில் கட்சியினர் அனைவரும் தொடர்புகொள்ள முடியும்.

கட்சி உறுப்பினர் தகுதிக்குத் தகுந்தவாறு, பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்யமுடியும் (இந்த பீடா வெர்ஷனில் செயல்படுத்தப்படவில்லை.

தலைமையகம், தொடர்ச்சியாக புதுப்புதுக் கொள்கைகளை சுலபமாக வலையேற்றுவதன் மூலம், கடைநிலைத்தொண்டனுக்கும் உடனடியாக அறிவிக்க முடியும்.

பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் முறை:

படி 1: எந்த விவகாரம் தொடர்பான கொள்கை தேவை என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:

1. இலவச அரிசி
2. கலர் டிவி
3. வெள்ள நிவாரணம்
4. மத்திய அமைச்சர்கள் செயல்பாடு
5. மக்கள் நலம் மேம்பாட்டுக்கான திட்டங்கள்

படி 2: எப்படிப்பட்ட பேச்சுவகை வேண்டும் என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும் - தற்போது உள்ள தெரிவுகள்:

1. தலைவர்
2. உப தலைவர் - இரண்டாம் கட்டத் தலைவர்கள் அல்லது கூட்டணித்தலைவர்கள்
3. மேடைப்பேச்சாளன் - ஜனரஞ்சகமான பேச்சாளர்கள்

படி 3: கட்சி / அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:

1. தி மு க அணி
2. அ தி மு க அணி

அவ்வளவுதான் - உங்களுக்குத் தேவையான கொள்கை முழக்கம் உங்கள் கணித் திரையில்! 1 - 2 -3 போலச் சுலபமான முறை!

தற்போது உள்ள தெரிவுகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூட முடியும்!

பார்த்து, கருத்து சொல்லுங்கள் - வினியோகஸ்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

TSCu Paranar எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.

25 பின்னூட்டங்கள்:

தருமி said...

fantastic work of art and great originality.
அந்தக் கடைசி option தாங்க டாப்!!

பொன்ஸ்~~Poorna said...

தலீவா, என்ன பீடா, பான்பராக்னு ஒண்ணியும் பிரியலை..

அதுக்கு மேல, உன் ட்ராக்கர் வேற.. என்ன மொழியில பேசுதுன்னே புரியலை.. கொஞ்சம் யூனிகோடுல போடு ராசா.... :)

துளசி கோபால் said...

எப்படிப்பா இப்படியெல்லாம்? :-)))
இந்த தேர்தல் வந்தாலும் வந்துச்சு, இப்படிக் கொட்டம் அடிக்கிறங்களேப்பா. ஹூம்...
எனக்குதான் ஓட்டுப் போட முடியாது.

லக்கிலுக் said...

கலர் டிவி Optionக்கு தலைவர் உரை போட்டாலும்.... இலவச அரிசிக்கான உரையே எனக்கு வருகிறது....

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.... சுரேஷ்.. உங்க Tஸ்C பரனரைப் போட்டப்புறம் பீட்டா என்ன, காமா வெர்ஷன் பாத்தா மாதிரியே இருந்துது..

அதிலயும் அந்த மக்கள் நல மேம்பாடு ஓகோ.. அப்படியே விஜயகாந்த் கட்சிக்கு ஒரு பாட்ச் போடறது...

Anonymous said...

Can not see the letters inside flash movie

Anonymous said...

Can not see the letters inside flash movie

Anonymous said...

Kolgai tracker 1.0 is in which tamil font? Unable to read the text and menu bar options.

வானம்பாடி said...

கலக்கல்!

Muthu said...

penathal,

super yaa...

ariviyal thozhilnutpa ani enru pottu ungalai thalaivaraaga poda kazhagangal muyarchi seiginranaa

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தருமி.

பொன்ஸக்கா, பிரச்சினை தீர்ந்ததா?

நன்றி துளசி அக்கா!

லக்கிலுக், சில வேளைகளில் அப்படி ஆயிடுது. மறுபடியும் முழுசா தெரிவை மறுபடி தெரிவியுங்கள், சரியாப் போயிடும்.

அனானிமஸ், வெங்கட் - எழுத்துரு TSCu Paranar - பதிவில் லிங்க் கொடுத்திருக்கேன்.

நன்றி சுதர்சன், முத்து.

மாயவரத்தான் said...

கை குடுங்க தலைவா. எப்படி தான் இப்படியெல்லாம் தோணுதோ? ம்.. காபிரைட் வெச்சிருக்கீங்க தானே?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மாய்வரத்தான்.. ரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம பதிவுக்கெல்லாம் வந்திருக்கீங்க.. நலம்தானே?

இலவசக்கொத்தனார் said...

தலைவர்கள் பேச்சுக்கும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சிற்கும் தர வித்தியாசம் இருப்பதாக புதிதாகக் கதை சொல்லும் பெனாத்தலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்றபடி சூப்பர்!!!!

மாயவரத்தான் said...

மிக்க நலம். நடுவிலே ஊருக்கு போயிட்டு வந்தேன். இப்போ ஊருக்கு வந்தவங்களுக்கு ஓசியிலே சாப்பாடு எல்லாம் போட்டு அனுப்பியிருக்காங்க. நம்மள ஒருத்தரும் கண்டுக்கலப்பா. மாயவரத்தான் ரொம்ப வருத்தத்திலே இருக்கான்.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் - நல்லா கவனிச்சு பாருங்க - மேட்டர்ல ஒரு வித்தியாசமும் இல்லை. லேங்குவேஜ்லே மட்டும்தான் வித்தியாசம்!

மாயவரம்: ஒருத்தர் கூடவா சோறு போடல? தளம் ஸ்ட்ராங்கா இல்லை போல:-)

நன்றி லார்டு லபக்குதாஸ் - நீங்க னம்ம பழைய ப்ரெண்டு LL Dasu தானே? அல்லது வேறவா?

பத்மா அர்விந்த் said...

அருமை. குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டீர்கள்.

dondu(#11168674346665545885) said...

எனக்கென்னவோ சோ அவர்கள் ஒருமுறை எட்டு வயது பெரிய இடத்து பெண்குழந்தையி நடன அரங்கேற்றத்தைக் கிண்டலடித்து எழுதியக் கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது.

வியப்பு, கோபம், சிருங்காரம், அறுவறுப்பு, வீரம், பயம் போன்ற நவரசங்களுக்கும் அந்தக் குழந்தை கொடுத்த பரதநாட்டிய அபிநயத்தைப் படமாகப் போட்டிருப்பார். எல்லாமே ஒரே படம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தகடூர் கோபி(Gopi) said...

சூப்பர் கலக்கல்...

பினாத்தலாரே.., உமது நிரலில் பிழை இருக்கிறது.

(சே! மாங்கு மாங்குன்னு நிரல் எழுதி பேர் வாங்கலாம்னு பாத்தா அதுல தப்பு கண்டுபிடிச்சே பேர் வாங்கறதுக்கு சில பேரு அலையராங்கய்யா)

1)முதலில் ஒரு சுற்று முடித்துவிட்டு
2)இரண்டாம் முறை முதல் படியில் வேறு ஒன்றை தேர்வு செய்து
3) இரண்டாம் படியில் பழைய தேர்வையே விட்டுவிட்டு
4) மூன்றாம் படிக்கு சென்றால் பழைய முழக்கங்களையே காண்பிக்கிறது.

சுருக்கமாய் சொன்னால் Some problem with Even Handling

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தேன்துளி. யார் அந்த குரு?

நன்றி லார்டு லபக்குதாஸ். இங்கே ஒருத்தர் LLDasuன்னு இருந்தார். கொஞ்ச நாளாக்காணலை.

டோண்டு.. நான் எல்லாவற்றிர்க்கும் ஒரே ஆப்ஷன் கொடுக்கவில்லையே உங்கள் :-) சோ மாதிரி?

கோபி, லக்கிலுக் சொன்ன உடனே பார்த்தேன், என்னால் எங்கே பிழை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. நீங்கள் கரெக்டாப்பிடிச்சிட்டீங்க. event handling தான். இரண்டாவது ஸ்டெப்பில்தான் ஆப்ஷன் செலெக்ட் ஆகிறது. அங்கே பழைய ஆப்ஷனை விட்டால், பழையதையே காண்பிக்கிறது. இப்போது சரிசெய்துவிட்டேன், in version 2.0!

இலவசக்கொத்தனார் said...

பினாத்தலாரே,

நான் சொல்ல வந்ததை லார்டு கரக்டா பிடிச்சுக்கிட்டாரு. லாங்குவேஜ்தான் எல்லாருக்கும் ஒண்ணா ஆயிடுச்சே.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், நீங்க சொன்னதும், லார்டு சொன்னதும் எனக்குப் புரியலேன்னா பாக்கறீங்க? லேங்குவேஜாவது வித்தியாசமா இருக்கட்டுமேன்ற என் ஆசையத்தான் வெளிப்படுத்தியிருக்கேன் - னு வச்சுக்குங்களேன்.

dondu(#11168674346665545885) said...

"டோண்டு.. நான் எல்லாவற்றிர்க்கும் ஒரே ஆப்ஷன் கொடுக்கவில்லையே உங்கள் :-) சோ மாதிரி?"

நானும் ஒரே ஆப்ஷனைக் கொடுத்ததாகச் சொல்லவில்லையே. பல ஆப்ஷன்களுக்கு ஒரே பதிலைக் கொடுத்தீர்கள் என்றுதான் சொன்னேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

//நானும் ஒரே ஆப்ஷனைக் கொடுத்ததாகச் சொல்லவில்லையே. பல ஆப்ஷன்களுக்கு ஒரே பதிலைக் கொடுத்தீர்கள் என்றுதான் சொன்னேன்.//

டோண்டு, ஒரே பதில் என்றாலும் வெவ்வேறு பாவங்கள்தானே? எனவே அந்தக்கட்டுரையுடன் (ஒரே படம் -வெவ்வேறு Captions) ஒப்பிடுதல் சரியாகப்படவில்லை:-)

ஜெயஸ்ரீ said...

கலக்கல் பெனாத்தலாரே.

 

blogger templates | Make Money Online