Jun 18, 2006

டா கில்லி கோட் - பாகம் 3

 
அத்தியாயம் 6
 
துபாயில் விமான நிலையத்தில் ஐ சி சி தலைவரும் அவர் உதவியாளரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
"அந்த ராமசாமி போலீஸ் கிட்டே இருந்து தப்பிச்சுட்டானாமே"
 
"வுடுங்க சார். அவன் எப்படியும் மாட்டிக்குவான்"
 
"விஷயம் புரியாம உளராதே. அவன் என்னதான் இருந்தாலும் இந்தக்கதைக்கு ஹீரோ. அவன் தோக்க மாட்டான். நாம வில்லன் கோஷ்டிதான். பை டீபால்ட், நாம தோத்துத்தான் ஆகணும்."
 
"அப்புறம் ஏன் கவலைப்படறீங்க? எப்படியும் ஆப்பு நிச்சயம்"
 
"அந்தப் புனித கில்லி மட்டும் அவன் கையிலே கிடைச்சுடுச்சுன்னா! கிரிக்கெட் விளையாடற அத்தனை பேரும் கில்லிக்கு மாறிடுவாங்க. யோசிச்சுப் பாரு. லாரா கில்லீஸ் அடிக்கற மாதிரியும் சச்சின் தூதாண்டிக்கோல் சொல்ற மாதிரியும்தான் ராத்திரியெல்லாம் கனவு வருது!"
 
"அப்படி என்ன ரகசியம் சார் அது?"
 
"சொல்றேன்"
 
அத்தியாயம் 7
 
"இதுலெ என்னா எழுதியிருக்கு?"
 
"MCCன்னு இங்கிலீஷ்லே எழுதியிருக்கு"
 
"இதுலெ என்னா புரிஞ்சுது உனக்கு?"
 
"உங்க தாத்தா இங்கிலிஷ் காரன் மேலே பழியப்போடறாரு"
 
"அடங்க மாட்டே நீ? யார் என்ன கிறுக்கி இருந்தாலும் அதுக்கு நாலு அர்த்தம் போட்டு, உனக்குப் பிடிச்ச அர்த்தம் எடுத்துக்குவே போல இருக்கு!"
 
"சும்மா பேசாதே. MCCனா மாதவரம் கில்லி கிளப்னு அர்த்தம்."
 
"யோவ், நானும் அஞ்சு கிளாஸ் படிச்சவதான். கில்லிக்கு G தானே வடும், C எப்படி வரும்?"
 
"12ஆம் நூற்றாண்டுலே, கில்லி Cilliன்னுதான் எழுதினாங்க. அப்புறம், 13 ஆம் நூற்றாண்டுலேதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வந்து Gilliன்னு மாத்தினான். ரோட்லே போகும்போது ஒரு கில்லி வந்து அவன் கண்ணுல அடிச்சது. இவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கே, இதை ஏன் C போட்டு சொல்றாங்க, அழுத்தி G போட்டு சொல்லட்டும்னு ஒரு சட்டம் போட்டான். அப்படிப்பாத்தா இது 12 ஆம் நூற்றாண்டு கில்லி"
 
"அப்புறம் ஏதோ புனித கில்லின்னு சொன்னியே?"
 
"அது இது இல்லை. வா போலீஸ் துரத்துது. கிரிக்கெட் விளையாடுவாரே சீனிவாசன், அவர் வீட்டுக்குப் போயி ஒழிஞ்சுக்கலாம்"
 
அத்தியாயம் 8
 
"ஹலோ ஐ சி சி தலைவரா?"
 
"ஆமாம், நீங்க யாரு?"
 
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியும். அனாவசியமா என்னை சொல்ல வச்சு சஸ்பென்ஸை உடைக்காதீங்க!"
 
"ஓ, சூப்பர் வில்லனா? சொல்லுங்க, ராமசாமி என்ன பண்ராரு?"
 
"போலீஸ்கிட்டே இருந்து தப்பி ஓடிட்டான். நீங்க கவலைப்படாதீங்க. நான் எப்படியும் அவனைப்பிடிச்சு புனித கில்லிய வாங்கி உங்ககிட்டே ஒப்படைக்கிறேன்"
 
"அப்புறம்"
 
"அப்புறம் என்ன வழக்கம் போல கதைய முடிச்சுடவேண்டியதுதான்"
 
"அவனைக்கொல்லப்போறீங்களா?"
 
"யோவ் - நீ வேற.. நான் இந்தக்கதைய முடிக்கறதைப்பத்திச் சொன்னேன்யா! உட்டா சீரியல் கில்லர் ஆக்கிடுவே போல இருக்கே!"
 
தொடரும்..
 
என்ன ஆச்சுன்னே தெரியலே. இன்னிக்கு கலப்பைய பிடிச்சா கதை அதுவா கொட்டுது.. ஒரே நாள்லே மூணு பதிவு இன்னிக்குதான் முதல் முறை!
 

14 பின்னூட்டங்கள்:

Suresh said...

கலக்குங்க சுரேஷ்.... கலக்குங்க....

:-)

Badri Seshadri said...

சூப்பர்! நல்லா இருக்கு. இதை தமிழ் வார இதழ் எதிலாவது மறுபதிப்பு செய்யலாம். கேட்டுப் பார்க்கிறேன். சீக்கிரமா முடிச்சுடுங்க.

Pot"tea" kadai said...

தமாசு... தமாசு...
ஆனா விறுவிறுப்பே இல்லாம "ப்லான்ட்"ஆ இருக்கு! :-(

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுரேஷ் பாபு.. ரொம்ப நாளுக்கப்புறம்!!

பத்ரி, நன்றி. நாளை இன்னும் இரண்டு பாகங்களுக்குள் முடித்துவிடுவேன். உங்கள் முயற்சிக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

பொட்டிக்கடை, நன்றி. என்ன பண்ரது சார், இதோட ஒரிஜினலை விறுவிறுப்பா இருக்குன்றாங்க, நான் எழுதினா ப்ளான்க்கா இருக்குன்றீங்க, இது ஓரவஞ்சனைதானே?:-)

தருமி said...

பொட்டீக்ஸ் கிடக்குறாரு..விடுங்க அவரை...ரொம்ப நல்லா இருக்கு...you go ahead, penathal..உங்கள புரிஞ்சுக்க ஆளே இல்லை.

துளசி கோபால் said...

விறுவிறுப்பு இவ்வளொதான் இருக்கும் சினிமாவா எடுத்தபிறகு பாருங்க. பிச்சுக்கிட்டுப் போகும்:-)))

கதிர் said...

உள்ளே வெளியே - லோக்கல் மாட்ச்

கில்லி - ஸ்டேட் மாட்ச்

லகான் - நேஷனல் மாட்ச்

டா கில்லி கோட் - இன்டர்நேஷனல் மாட்ச்

மொத்தத்தில உலக லெவலுக்கு கில்லிய கொண்டு போய்ட்டிங்க

தரணி பார்த்திபனுக்கெல்லாம் அல்வா கொடுத்திட்டிங்க போங்க

தம்பி

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தருமி..
//உங்கள புரிஞ்சுக்க ஆளே இல்லை.// - நீங்கதான் சார் சரியாப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க!

அக்கா.. சைக்கிள் கேப்புல விறுவிறுப்பு இல்லன்னுட்டீங்க இல்லே:-(

தம்பி, அப்படிப்போடுங்க! நன்றி.

தகடூர் கோபி(Gopi) said...

:-)))) என்னாது இன்னும் 2 பாகம் தானா?

கில்லி முத்துப்பாண்டி(ப்ரகாஷ்ராஜ்): தப்பு தப்பு தப்பு... அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. அதெல்லாம் நீ ஏன் சொல்ற... ..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றீ கோபி.,. எவ்வளோ இழுக்கும்னு தெரியலையே. எப்படியும் ஏழோ எட்டோ ஓடிடும்னுதான் நினைக்கிறேன்:-))

இலவசக்கொத்தனார் said...

என்னங்க சீரியல் எழுதறீங்க? ஒரு மாமியார் கொடுமை இல்லை, ஒரு ஆளுக்குக் கூட ரெண்டு பொண்டாட்டி இல்லை, ஒரு அழுகை சீன் இல்லை. எப்படி இதை தொலைக்காட்சி சீரியலா எடுக்கறது? கொஞ்சம் கூட ரோசனையே இல்லையே.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

அடுத்தது டீ மாமியா கோட்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமா? நீங்க சொல்ற எல்லா அம்சமும் போட்டு?

பொன்ஸ்~~Poorna said...

//அவன் என்னதான் இருந்தாலும் இந்தக்கதைக்கு ஹீரோ. அவன் தோக்க மாட்டான். நாம வில்லன் கோஷ்டிதான். பை டீபால்ட், நாம தோத்துத்தான் ஆகணும்//

எப்டிங்க இப்படி எல்லாம்?!!! :))))

//யோவ், நானும் அஞ்சு கிளாஸ் படிச்சவதான். கில்லிக்கு G தானே வடும், C எப்படி வரும்?" "12ஆம் நூற்றாண்டுலே, கில்லி Cilliன்னுதான் எழுதினாங்க. அப்புறம், 13 ஆம் நூற்றாண்டுலேதான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வந்து Gilliன்னு //

சந்தடி சாக்குல எங்க தலைய வேற இழுத்துட்டீங்க !!! :)))))

//யோவ் - நீ வேற.. நான் இந்தக்கதைய முடிக்கறதைப்பத்திச் சொன்னேன்யா! உட்டா சீரியல் கில்லர் ஆக்கிடுவே போல இருக்கே!" //

இது மாதிரி தமிழ் சீரியல் எடுக்கிறவங்க நினைக்க மாட்டேங்கிறாங்களே!!:)))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸ், ஏன் கோவம்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே?

உங்க தலைய இழுத்தாலும், வில்லனாத்தானே இழுத்திருக்கேன்:-))

 

blogger templates | Make Money Online