Jun 20, 2006

டா கில்லி கோட் - பாகம் 8

 
அத்தியாயம் 21
 
"இப்போ என்னன்னு தேடுவே? எப்படித்தான் கண்டுபிடிப்பே இன்னும் ரெண்டு லைனையும்? முதல்ல மூணு வரியே டுபாக்கூரோன்னு ஒரு டவுட்டு எனக்கு" என்றாள் கருப்பாயி.
 
"இல்லை - அதிலெல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை. சரி வா சூடா ஒரு மொளகா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே யோசிக்கலாம்"
 
"ரெண்டு மொளகா பஜ்ஜி கொடும்மா" என்றான் பஜ்ஜி விற்பவளைப்பார்த்து.
 
"இரு சார், தண்ணி கொணார்றதுக்கு போயிருக்கான், வந்தவுன்னே சூடா போட்டுத்தாரேன்"
 
ஐந்து நிமிடங்கள் கழித்துத்தான் தண்ணீர் கொண்டுவரப்போனவன் வந்தான்.
 
"ஏண்டா சாவுகிராக்கி, கஸ்மாலம் - கஸ்டமருங்க வெயிட் பண்ணிகினு இருக்காங்க, ஏண்டா லேட்டு? உன் தம்பி அண்ணாதுரை மட்டும் இருந்தா இன்னேரம் கில்லி மாரி பாஸ்டா வந்துருப்பான்"
 
"அதை ஏன் கங்கம்மா கேக்கறே? தண்ணி கொண்டுவரப்போன டின்லே ஓட்டை."
 
"பாத்து வைடா, எண்ணையிலே கொட்டிடப்போறே!"
 
ராமசாமிக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
 
"உங்க பேரு கங்கம்மாவா?"
 
"ஆமா, அது என்னாத்துக்கு இப்ப?"
 
கருப்பாயியை அர்த்தபுஷ்டியாகப்பார்த்தான் ராமசாமி.
 
"எண்ணெயில்லாம வெளக்கு எரியுமா.. கண்ணே கங்கம்மா! - லாலாக்கு டோல் டப்பி மாவோட அடுத்த வரி!
அண்ணாதுரை எப்படி வந்திருப்பான்? கில்லி மாதிரி.. எல்லா வரிக்கும் அர்த்தம் தெரிஞ்சுபோச்சு கருப்பாயி, இங்கேதான் ரகசியம் இருக்குது!"
 
"யோவ்" பல்லைக்கடித்தாள் கருப்பாயி.
 
"ஏன்மா உன் பேரு கருப்பாயியா?" என்றாள் கங்கம்மா.
 
"எதுக்கு கேக்கறே?"
 
"உங்க தாத்தா கூடத்தானே இருக்கறே? அவர் பேர நான் சொல்ல முடியாதே"
 
"ஏன் சொல்ல முடியாது? வாய் கோணிக்குமா?"
 
"என் புருசன் தான் அந்த ரங்கன்றத என் வாயால எப்படிம்மா சொல்வேன்?"
 
"இப்போ சொன்னியே அதே மாதிரிதான்"
 
"நான் உனக்கு பாட்டிம்மா, நீயும் இதோ வரானே அண்ணாதுரை, ரெண்டுபேரும் கிள்ளிவளவன் வம்சம். இது யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் உன்னையும் உன் தம்பியையும் தனித்தனியா வளத்தோம்"
 
"மொளகா பஜ்ஜியிலே வந்து முடிஞ்சுது பார் கதை!"
 
"எங்கயாச்சும் முடிச்சுதானே ஆகணும்? ஏற்கனவே பினாத்தல் கஷ்டப்படறான்"
 
"சரி எங்க அந்த புனித கில்லி?" ராமசாமி மறக்காமல் கேட்டான்.
 
"அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கு. கில்லி சங்கத்தை கலைச்சுட்டு, ரங்கன் அதை சேர வேண்டிய இடத்துல சேர்த்துட்டுதான் செத்துபோனாரு"
 
"அப்ப இவ்ளோ கஷ்டப்பட்டு தேடின எனக்கு ஆப்பா?"
 
"தோடா.. வந்துட்டாருடா சீமத்துர.. கிரிக்கெட்ட ஒழிக்கறதுக்கு - போ போ போய் கில்லி ஆடு"
 
"அப்போ கருப்பாயிக்கும் எனக்கும் கல்யாணம்?"
 
"உனக்கே இது நியாயமா யோசிச்சுப்பாரு.. நீ அவ தாத்தா வயசு. ஏன் இப்படி வக்கிரம் பிடிச்சு அலையறே?"
 
சோகமாகத் திரும்பினான் ராமசாமி.
 
முற்றும்.
 
பின்னுரை (Epilogueங்க!)
 
சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஒருநாள் போட்டி. ஆஸ்திரேலியா முதலில் ஆடி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன் இருக்கையில் மழை கொட்டத்துவங்கியது.
 
"மேட்ச் அவ்ளோதானா?"
 
"இருப்பா, மழை விட்டுரும்"
 
"ராமசாமி - மழை விட்டுடுச்சி பாரு. நீ பசங்களை கூட்டிகிட்டு போயி கிரவுண்ட துடைச்சிட்டு வா."
 
ராமசாமி தன் மாணவர்களுடன் கிரவுண்டுக்குள் நுழைந்தான். கில்லி டீமைக் கலைத்துவிட்டு கிரிக்கெட் கோச்சிங் ஆரம்பித்து விட்டிருந்தான்.
 
"டேய் அவுட்பீல்டெல்லாம் சரியா துடைங்கடா.. அந்த டப்பவா எடுத்து அதுலே தண்ணி பிழிஞ்சுவிடு.."
 
"இங்கே எவ்வளோ துடைச்சாலும் தண்ணி போகலே சார் - ஊத்து இருக்கு போல இருக்கு கொஞ்சம் மண்ணைக்கொட்டிடலாம்"
 
ராமசாமியின் அடிமனதில் ஒருகுரல் - "தொட்டனைத்தூறும் மணற்கேணி"
 
"டேய் அந்த டப்பாவைத் தூக்கிபோடுடா - சரியான டோல்டப்பியா இருக்கு"
 
ராமசாமிக்கு மறுபடியும் குரல் - "லாலாக்கு டோல்டப்பி மா"
 
"சரி நீங்க பிட்சுல வாலாஜா ரோட் சைடைத் தொடைங்க - நாங்க அண்ணா பெவிலியன் சைடைத் தொடைக்கிறோம்"
 
"அண்ணா நாமம் வாழ்க"
 
"டேய் அந்த மார்க்கிங்க எடுக்காதடா, அது நம்ம ஸ்டார் பவுலரோட ஸ்டார்ட்-அப் மார்க்"
 
"ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார்"
 
"ஆமாம், சூப்பரா போட்டாரில்ல? கில்கிறிஸ்டுக்கு கில்லி எகிறிடுச்சி"
 
"சீறி அடிச்சா கில்லி பறக்கும்"
 
மெதுவாக பிட்சின் மையத்தை நோக்கி நகர்ந்தான் ராமசாமி. ஸ்டம்புகள் மத்தியில் இருந்த பெயில்ஸை எடுத்துப் பார்த்தான். ஓரமாகக் கண்ணுக்குத் தெரியாமல் கிறுக்கியிருந்தது -
 
"கில்லி ராஜாவுக்கு அடிமை மந்திரியின் சமர்ப்பணம்"
 
நிஜமாவே முற்றும்.
 
ஆராய்ச்சியில் உறுதுணை:
 
சின்னான், மோகன்ராஜ், ரமேஷ், காட்டான், சகாதேவன், சாரதி - என் கில்லித் தோழர்கள்
ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்ளே, ஜெஃப் பாய்காட் - கிரிக்கெட் வர்ணனையாளர்கள்
 
ஆதாரங்கள்:
 
தரணி, பார்த்திபன், அசுதோஷ் கோவாரிகர் - எடுத்த திரைப்படங்கள்
விஸ்டன் கிரிக்கின்போ.காம்
 
தயாரிப்பில் உறுதுணை
 
தமிழ் வலைப்பதிவு வாசகர்கள்
 
இது ஒரு பெனாத்தல் சுரேஷ் தயாரிப்பு
 
 
 

20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

super பெனாத்தல் பெனாத்தலாரே.. நடத்துங்க

krish

Anonymous said...

Annathe,
Superu...eppadi ipadiyellam yosika mudiyuthu.......

-sorry for typing in english. :)

Badri Seshadri said...

Fantastic!

You could have avoided several self references. It is a neat story:) The ending could have been tighter.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி க்ரிஷ்.

நன்றி அனானி.

நன்றி பத்ரி. பெனாத்தலையெல்லாம் எடுத்துடலாமா?

துளசி கோபால் said...

சூப்பர்:-))

நல்லவேளை இப்பவாவது 'ஹோலி கில்லி' இருக்கற இடம் தெரிஞ்சதே!

நிம்மதியா இருக்கு.

நானும் ஒரு காலத்துலே கில்லி எக்ஸ்பெர்ட்டா இருந்தவளாக்கும்:-))))

பினாத்தல் சுரேஷ் said...

தாங்க்ள் துளசி அக்கா.

எனக்குத் தெரியும் நீங்க கில்லி எக்ல்ஸ்பர்ட்டா இருந்திடுப்பீங்கன்னு. எப்படின்னா கேக்கறீங்க?

"சீறி அடிச்சா கில்லி பறக்கும்"னு யார வச்சு பாடியிருக்க முடியும்?;-)

இலவசக்கொத்தனார் said...

குடும்ப பாட்டு இல்லாமலையே அவங்களை சேர்த்து வெச்சுட்டியே. நல்லாவா இருக்கு?

கதையை விட பின்னுரை நல்லா வந்திருக்குப் போல இருக்கே.

சரி.எதுக்கு எவ்வளவு ஆபர் வந்திருக்கு சினிமாவா எடுக்க?

குமரன் (Kumaran) said...

பெனாத்தலாரே.... நீங்க பெனாத்திக்கிட்டே இருங்க. நான் இப்பத் தான் தமிழக அரசுக்கு ஒரு ஃபாக்ஸ் அனுப்பிட்டு வர்றேன். உங்கள் 'டா கில்லி கோட்' புதினத்தால தமிழகத்துல சட்ட ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படும்ன்னு ஐயம் இருக்கிறதால தடையுத்தரவு போட வேண்டும் என்று. விரைவில் மைலாப்பூர் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் இருந்து நிர்வாகிகள் வந்து உங்கள் புதினத்தைப் படித்துத் தங்கள் கருத்துகளைச் சொல்லப்போகிறார்கள். பின்னர் தடையுத்தரவு பாய்ந்து வரப்போகிறது. தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும் பாசமிகு வாசகன் என்ற முறையில் பாராட்டிவிட்டு... சீச்சீ... எச்சரித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

Prabu Raja said...

இவ்ளோ பெரிய்ய கதையா?
(இன்னும் படிக்கல.)

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,
படமா எடுக்கும்போது 5 பாட்டுக்கு ஸ்லாட் தயாரா இருக்கு. (இண்ட்ரோ, டூயட், ஃப்ளாஷ்பேக், குடும்பப்பாட்டு - 2 முறை).

ஆபரா? எவ்வளவு கேக்கலாம்னு சொல்லுங்க!

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்,

கிளம்பிட்டீங்களா? கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்லேயே தடை செய்யப்படாத கதைய தமிழ்நாட்டுல மட்டும் ஏன் தடை செய்யணும்?

பினாத்தல் சுரேஷ் said...

பிரபு ராஜா, அவ்ளோ பெரிய கதையெல்லாம் இல்லை. 14 பக்கம்தான் வருது:-)

ramachandranusha(உஷா) said...

பினாத்தலாரே! பூடான் லாட்டரி டிக்டெக் க்ளூ சூப்பர். அது சரி, சென்னை போலீசுக்கு ஹெலிகாப்டர் இருக்கா என்ன?ஆலிவுட் ரேஞ்சுக்கு கற்பனை பறக்குது :-), ஆனா, மூலம் - ஒரிஜினல் , படிச்சாத்தான் இதை நல்லா ரசிக்க முடியும் என்று தோணுது.

தகடூர் கோபி(Gopi) said...

//கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்லேயே தடை செய்யப்படாத கதைய தமிழ்நாட்டுல மட்டும் ஏன் தடை செய்யணும்?//

ஆந்திராவுல கூட டா கில்லி கோட தடை பண்ணீட்டாங்களாமே! :-(

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி உஷா அக்கா. கதைக்குள்ளேயே தெளிவா சொல்லிட்டேனே - அனுபவிக்கணும், ஆராயக்கூடாதுன்னு:-)

ஆனா, கதை படிச்சுட்டு படிச்சா இன்னும் நல்லா இருக்கும்ன்றத ஒத்துக்கறேன்.

கோபி, தடை வாங்கிக்கொடுக்காம ஓய மாட்டீங்க போல இருக்கு! மஹாராஷ்ட்ரா, லட்சத்தீவுல எல்லாம் தடை இல்லையே?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரேசன்.

நன்றி நாகையன் - முடிக்க சற்று அவசரம். மேலும் ஒரிஜினலும் ஏறத்தாழ அப்படித்தான்:-)

குமரன் (Kumaran) said...

//மேலும் ஒரிஜினலும் ஏறத்தாழ அப்படித்தான்:-)//

இது என்னவோ உண்மை தான். கடைசி அத்தியாயங்கள் எல்லாம் படிக்காமலேயே விட்டுவிடலாமா என்று தோன்றியது. சில பேர் சஸ்பென்ஸ் தாங்க முடியாம நாவலோட கடைசி அத்தியாயம் படிப்பாங்களாமே. ஒரு வேளை அவங்களுக்கு ஆப்பு வைக்கிறதுக்காக டான் ப்ரௌன் அப்படி பண்ணியிருக்காரோ தெரியலை. இப்ப 'தேவர்களும் அசுரர்களும்' (அதாங்க ஏஞ்சல்ஸ் & டெமன்ஸ்) படிச்சுக்கிட்டு இருக்கேன். பெனாத்தலாரே. நீங்க படிச்சிருக்கீங்களா? உங்க கிட்ட இருந்து 'தேவர்களும் அசுரர்களும்'ன்னு ஒரு புதினம் வருமா? :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன் மீண்டும்.

அது என்ன தேவர்களும் அசுரர்களும்?

நான் போட்டேன்னா இட்லியும் தேங்கய்ச்சடினியும்னு மாத்திப்போட்டுடுவேன்:-))

பொன்ஸ்~~Poorna said...

//கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்லேயே தடை செய்யப்படாத கதைய தமிழ்நாட்டுல மட்டும் ஏன் தடை செய்யணும்?//

என்ன தான் இருந்தாலும், தமிழ் நாட்டில் கிரிக்கெட்டே கடவுள்னு நினைச்சி வாழ்பவர்களின் நம்பிக்கையை இந்தக் கதை தகர்க்கிறது. இதுக்குத் தடை கொண்டுவந்தே ஆகணும்!!! :)))
வ.வா.சங்கத்தலையை வேறு இழுத்திருப்பதால், எங்க சங்க மெம்பர்ஸ் மனசு வேற வருத்தப் படுகிறது.. இதுக்குத் தடை கொண்டுவர வ.வாசங்கம் ஏக மனதாக பரிந்துரைக்கிறது :)))

குமரன், ஏஞ்சல்ஸ் அன்ட் டெமான்ஸ் இதே மாதிரி தாங்க இருக்கும்.. டாவின்சி மாதிரி.. அது அவ்வளவா ருசிக்கலை எனக்கு.. சரி, உங்களுக்கு எப்படி கதை படிக்க எல்லாம் நேரம் இருக்கு? தினம் ஒரு பதிவு வேற போடறீங்க?!! என்னவோ போங்க!!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பொன்ஸ்.

வரு வா ச வினாலே ஆக்கபூர்வமான வேலை எதுவும் முடியாட்டாலும், இந்த மாதிரி வேலை எல்லாம் கரெக்டா முடிஞ்சிடும்.

அப்புறம் ஒரு அனுபவக்குறிப்பு: படிக்கறதுக்கு நேரம் இல்லைன்னு ஒரு வாசகன் சொல்லவே மாட்டான். கிடைக்கற நேரத்திலே படிச்சுடுவான்.

 

blogger templates | Make Money Online