Jun 13, 2006

தமிழோவியத்தில் பினாத்தல்கள்

பினாத்தல்களில் மட்டுமே பினாத்தி வந்த உங்கள் அன்புப் பினாத்தலார், தேன்கூடு - தமிழோவியம் போட்டி வெற்றியைத் தொடர்ந்து தன் வேலையை (பினாத்தலைத் தாங்க!) தமிழோவியத்திலும் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
 
கீழே உள்ள உரல்களைத் தொடர்ந்து, படித்து, பாக்கியம் அடையுங்கள்:-) கருத்தை அங்கேயோ, இங்கேயோ எங்கும் சொல்லலாம். (இதுதாண்டா கருத்துச் சுதந்திரம்:-)) - ஆனால் சொல்லியே தீர வேண்டும்!
 
  1. தமிழோவியத்தில் பினாத்தல்
  2. அந்தக்காலம்
  3. தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல நகைச்சுவை எங்கு கிடைக்கும்?
  4. டா வின்ஸி கோட் - ஜெயித்தது என்ன?
  5. அமீரகத்தின் குரல் - ஒரு கேள்வி, நான்கு பதில்கள்
  6. தேர்தல் 2060 - சிறுகதை
எச்சரிக்கை: வலைவாழ்வில் முதல்முறையாக பினாத்தலார் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகள் ஜாக்கிரதையுடன் பார்க்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

23 பின்னூட்டங்கள்:

Muthu said...

வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து, படிச்சிட்டு கமெண்டு விடலாமே..

Muthu said...

கத படிச்சாச்சு.அலசியாச்சு.

மூன்று பதிவர்கள் கருத்து படிச்சாச்சு. நோ கமெண்ட்ஸ்.எல்லாம் பெரிய ஆட்கள்.

போட்டோ பார்த்தாச்சு.அருமை.

மத்தத பார்க்கணும்.வருகிறேன் மெல்ல.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மீண்டும் முத்து..

அது நாலு வலைப்பதிவர் கருத்து ஆச்சே? யாரை விட்டீங்க;-)

Prabu Raja said...

சுரேஷ்.. நெஜமாவே சொல்றேன். நீங்க இன்னும் சின்னப் பையனா இருப்பீங்கன்னு நெனச்சேன்.

Prabu Raja said...

உங்க எழுத்துக்களை வைத்துதான்

பினாத்தல் சுரேஷ் said...

//உங்க எழுத்துக்களை வைத்துதான் நீங்க இன்னும் சின்னப் பையனா இருப்பீங்கன்னு நெனச்சேன்//

இப்ப என்ன வயாசாயிடிச்சுன்னு சொல்றீங்க?

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலாரே,

போட்டோ பாத்தாச்சு, எனக்கு கண்ணாடி பாத்த மாதிரி ஒரு ஃபீலிங். (நீங்க நல்லா இருக்கறீங்கன்னா நானும் அப்படியே. நான் நல்லா இல்லைன்னா நீங்களும் அப்படியே. :D )

ரெண்டு காமெண்ட்.

1) அதான் nostalgiaவுக்கு கொசுவத்தின்னு பேரு இருக்கே. அப்புறம் என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க.

2) அந்த நகைச்சுவை வகைகளில் முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே. (அட, என் பேர் இல்லாததை சொல்லலைங்க. அப்பாட அதையும் சொல்லியாச்சு!) தான் சீரியஸா எழுதறதா நினைச்சுகிட்டு எழுதுவாங்க. அதை படிச்சிட்டு நாம எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போமே. அந்த வகையாறாங்களைத்தான் சொல்லறேன்.

Unknown said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே.உங்களின் அறிமுக பதிவையும்,டாவின்சி கோடும்,நகைச்சுவை எங்கே கிடைக்கும் பதிவையும் படித்தேன்.நன்றாக இருந்தது.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு சுரேஷ், ஆசீப் கலக்கி இருக்காரு..

அந்த லூவர் மியூசியத்துக்குப் பக்கத்துல இருக்கிறது உங்க தம்பி தானே?

Unknown said...

வழக்கம் போல, நீங்கள் இப்பதிவை போடுவதற்கு முன்பே, தமிழோவியத்தினைப் படித்து அங்கே எனது பின்னூட்டத்தையும் இட்டுவிட்டேன்!

வாழ்த்துக்கள் (மறுபடியும்)!

துளசி கோபால் said...

பினாத்தலாரே,

வெளியீடுகள் பலே ஜோர். அருமையா இருக்காங்க.

ஆமாம், ஈஃபிள்னு சொல்லக்கூடாதாக்கும்:-)

வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார், உங்களைத் திட்ட முடியாதபடி பண்ணிட்டீங்களே!

நன்றி $elvan.

நன்றி பொன்ஸ். தம்பியா? அவ்ளோ இளமையாவா இருக்கேன்? பிரபு வேற என்னவோ சொல்றாரே!

நன்றி துபாய்வாசி, உங்க ராசிதான் எனக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுதே..

அக்கா, நன்றி. குழந்தைகளை நீங்க ஏற்கனவே பாத்துடீங்க (கொலு பதிவில்). 3ஆவது ஜந்து பத்தி ஒரு கமெண்டும் இல்லையா?

Geetha Sambasivam said...

நான் இன்னும் படம் பார்க்கலை சுரேஷ், அதனாலே நான் குழந்தைதான் இல்லியா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கீதா..

நீங்க என்ன சொல்றீங்கன்னுதான் (வழக்கம் போல) புரியல!

enRenRum-anbudan.BALA said...

Suresh,
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

You are going places and I am not surprised :)

Keep it up !

பினாத்தல் சுரேஷ் said...

பாலா,

நன்றி என ஒரு வார்த்தையில் முடித்துவிடமுடியுமா? உங்கள் வார்த்தைகளில் "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்"மனோபாவம் தெரிகிறது. அது நிச்சயமாக சரிதான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

நாமக்கல் சிபி said...

//தான் சீரியஸா எழுதறதா நினைச்சுகிட்டு எழுதுவாங்க. அதை படிச்சிட்டு நாம எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போமே. //

கொத்ஸ்,
நம்ம இலவசக் கொத்தனாரைத்தானே சொல்றீங்க?

குமரன் (Kumaran) said...

படத்தைப் பாத்தாச்சு. இனிமே தான் படிக்கணும். படிச்சுட்டு வர்றேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சிபி, கொத்தனார் என்னிக்கும் தான் சீரியஸ்னு சொன்னதில்லையே? சிலர் இருக்காங்க, நாட்டைத் திருத்த வந்த நற்செய்தியாளர்கள்:-)

படிச்சிட்டு சொல்லுங்க குமரன்.

VSK said...

குடும்பத்துடனான படம் நிறைவா இருந்தது.

உங்க எழுத்துல எப்பவுமே இருக்கிற நளினமும், நகைச்சுவையும், இதுலயும் குறைவில்லாம இருக்கு.

வாழ்த்துகள்!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் சுரேஷ்...

வாழ்க பினாத்தலார்...வளர்க பினாத்தல்கள்!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி SK.

நன்றி கப்பி பய

 

blogger templates | Make Money Online