Jun 10, 2006

Fanaa - behind the scenes - கற்பனை.

ஆமீர் கான் தன் அறையில் அமர்ந்திருக்கிறார், குணால் கோஹ்லியும், யஷ் சோப்ராவும் உள்ளே வருகின்றார்கள்.
 
ஆமிர் கான்: வாங்க வாங்க.. நானே ரொம்ப கஷ்டத்துலே இருக்கேன், ஒரு படம் எடுக்கலாம்னு உங்களைக்கூப்பிட்டேன்.
 
யஷ்: என்ன கஷ்டம் ஆமிர்?
 
ஆமிர்: என்ன, வழக்கம் போலத்தான். உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப்போனா காத்தடிக்குது.
 
யஷ்: என்ன ஆமிர், ரங் தே பஸந்தி நல்லாத்தானே ஓடிச்சு..
 
ஆமிர்: வருஷக்கணக்கா கஷ்டப்பட்டு மங்கள் பாண்டே பண்ணா, பாக்ஸ் ஆபீஸ் மங்களம் பாடிடுச்சி! ரங் தே பஸந்திலே ரெண்டு சின்னப்பசங்கள உள்ளே விட்டேன் - அவனுங்களே எல்லாப்பேரும் தட்டிட்டுப் போயிட்டானுங்க! இதுலே வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம, மேத பட்கர்க்கு ஆதரவா பேசப்போயி, குஜராத்லே உள்ளே விடமாட்டேன்னு அடம் புடிக்கறானுங்க!
 
யஷ்: உங்களுக்கு அந்தஸ்டைல் படம் எல்லாம் இப்ப லாயக்குப் படாது. என் ஸ்டைலுக்கு வாங்க!
 
ஆமிர்: என்ன பெரிய ஸ்டைல்? ரெண்டு ஹீரோ ஒரு ஹீரோயினா இல்ல ஒரு ஹீரோ ரெண்டு ஹீரோயினா? இத மட்டும்தானே நீங்க படத்துக்குப் படம் மாத்துவீங்க?
 
யஷ்: இப்போ ஒரு புது மெத்தட்லே கதை சொல்லப்போறேன். ஒரே ஹீரோ, ஒரே ஹீரோயின்!
 
ஆமிர்: என்ன சார் ஆச்சு உங்களுக்கு? இவ்வ்ளோ வித்தியாசமா சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க?
 
குணால் கோஹ்லி:  அவரை மாத்தறதுக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!
 
ஆமிர்: சரி என்ன கதை?
 
குணால் கோஹ்லி: இன்னும் அந்த அளவுக்கு அவரை மாத்த முடியலே. இப்பவும் வழக்கம் போலத்தான் படம் எடுப்பேன்னு ஒரே அடம்!
 
ஆமிர்: சரி உங்களத் திருத்த முடியாது! என்ன ஐடியா சார்?
 
யஷ்: இப்போ உங்களுக்கு இந்துத்துவா விரோதிங்க குஜராத்லே இருக்காங்க இல்லையா? அதனாலே முஸ்லீம் கேரக்டராப் போட்டா, எப்படியும் தடை அது இதுன்னு கொஞ்ச நாளாச்சும் ஓட்ட முடியாதா?
 
ஆமிர்: சரி, முஸ்லீம் கேரக்டருங்க, ஓக்கே, அப்புறம்?
 
யஷ்: நம்ம பழைய கால சக்ஸஸ் பார்முலாவே எடுத்துக்குவோம்! ஊர் சுத்திப்பாக்க வர பொண்ணு, கைடு பையன்.. எப்படி?
 
குணால்: சூப்பர் சார்! ரொம்ப யுனிக்கா இருக்கு!
 
ஆமிர்: (குணாலை முறைக்கிறார்) அப்புறம்? ட்விஸ்ட் எங்க வருது?
 
யஷ்: ஹீரோவ நெகடிவ் கேரக்டரா ஆக்கிடலாம். அவன் ஒரு தீவிரவாதி! பார்லிமெண்டுக்கு குண்டு வைக்க வந்தவன், ஆனா கவித பேசியே ஹீரோயினக் கவுத்துடறான்! இவங்க கவித பேசறதையே வச்சி இண்டர்வல் வரைக்கும் ஓட்டிடலாம். அப்பால கடமை ஞாபகம் வந்து குண்டு வைக்கிறான்.
 
ஆமிர்: பாகிஸ்தான் தீவிரவாதியா?
 
யஷ்: பொழப்பக் கெடுத்துடுவீங்க போல இருக்கே! வேர்ல்டுவைட் ரிலீஸ் பண்ணனும் இல்ல? பாகிஸ்தான்னு சொல்லிட்டு பாதி மார்க்கெட்ட டவுன் பண்ணிடுவீங்க போல இருக்கே!
 
குணால்: ஒரு ஐடியா சார். இந்த தீவிரவாதி இந்தியா - பாகிஸ்தான் ரெண்டு பேருக்கும் கஷ்டம் கொடுக்கற ஒரு நியூட்ரல் தீவிரவாதியா காட்டலாமா?
 
ஆமிர்: தீவிரவாதி - நியூட்ரலா? எங்கய்யா பாடம் படிச்சே நீ?
 
குணால்: அப்படி இல்ல சார்.. இவன் சுதந்திர காஷ்மீர் கேக்கற பார்ட்டி. பாகிஸ்தான்லேயும் குண்டு வைப்பான், இந்தியாவிலேயும் குண்டு வைப்பான்.
 
ஆமிர்: தியேட்டர்லே குண்டுன்னு ஒரு பய வரப்போறதில்ல!, சரி, இது அவன் காதலிக்குத் தெரியுமா?
 
யஷ்: தெரியாது, அப்படி இருந்தாத்தான் தேசபக்தியா நாலஞ்சு டயலாக் வுட முடியும்.கடைசியிலே அந்த நாள் படம் ரேஞ்சுக்கு ஹீரொவை நாட்டுக்காக சுட முடியும்.
 
ஆமிர்: அப்புறம் இண்டர்வல்லுக்கு மேலே ஹீரோயின் கிடையாதா?
 
குணால்: அது எப்படி? சார் பட்ஜெட் ரொம்பக்கம்மியாதான் கொடுத்திருக்கார். ஹீரோ, ஹீரோயின் தவிர வேற யாருமே படத்துலே கூடாதுன்னு சொன்னார், நான் பேரம் பேசி, ரிட்டயர்டு ரிஷி கபூரைச் சல்லிசா பேசி சேர்த்திருக்கேன்.
 
ஆமிர்: ஹீரோயினுக்கு ஹீரோ தீவிரவாதின்னு தெரிஞ்சுட்டா உடலே சுட்டுட மாட்டாளா?
 
யஷ்: அதுக்குதான் ஒரு ஐடியா பண்ணப்போறேன். ஹீரோயினுக்கு கண்ணு தெரியாது.
 
ஆமிர்: அப்புறம் எப்படி ஹீரோவை சுடுவாங்க?
 
யஷ்: காதல் படமே பாத்ததில்லயா நீங்க? காதலின் மகத்துவம் தெரியாம பேசறீங்க! காதலன் உண்மையா ஆசப்பட்டா கண்ணு வந்திராதா?
 
ஆமிர்: சரிதான்.. அப்போ ப்ளாக் மாதிரியெல்லாம் கிடையாதா?
 
குணால்: எங்க வந்து என்ன கேக்கறீங்க சார்?
 
ஆமிர்: கதை எப்படி மூவ் ஆவும்?
 
யஷ்: எங்க மூவ் ஆவும்? அதே இடத்துலே நிக்கும்! பஸ்ட் ஹாப் புல்லா கவிதை பாடியே கழுத்தறுப்போம். செகண்ட் ஹாப்லே கொஞ்ச நேரம் காஷ்மீர், பனிப்புயல்னு சுத்திட்டு, மறுபடியும் கவிதையிலே வந்து செட்டில் ஆயிடுவோம்.
 
ஆமிர்: சரி, யாரு ஹீரோயின்?
 
யஷ்: உங்க பேரச் சொன்னாலே இளவட்ட ஹீரோயினுங்க எல்லாம் பதுங்கிடறாங்க. அதனால, இன்னொரு ரிட்டய்ர்டு பார்ட்டிய பேசி முடிச்சுட்டேன். கஜோல்!
 
ஆமிர்: ஆமாம், எனக்கும் ஒரு திருஷ்டிப்பரிகாரம் தேவைதான்! ஆனா கஜோல் நல்ல நடிகையாச்சே!
 
குணால்: அதை என்கிட்டே உடுங்க! எப்படியாச்சும் கஷ்டபட்டு அவங்கள சாதாரண நடிகையாக்கிடறேன்!
 
ஆமிர்: யார் சார் படம் பாப்பாங்க?
 
யஷ்: அதுக்கு இருக்கானுங்க.. கோடிக்கணக்கில இளிச்சவாயனுங்க.. பினாத்தல் சுரேஷ் மாதிரி!
 

7 பின்னூட்டங்கள்:

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள். உங்களை நீங்களே கண்டு பிடிச்சதுக்கு.(இ.வா) னு கண்டு பிடிச்சீங்களே அதுக்குத் தான்.

பினாத்தல் சுரேஷ் said...

இதுலே கூச்சம் என்ன வேண்டியிருக்கு கீதா? டிக்கட் வாங்கினபோதே உறுதி ஆயிடுச்சே!

வஜ்ரா said...

இப்பல்லாம் இந்திபட ஹீரோவிற்கான ஆஸ்தான அந்தஸ்து தீவிரவாதிகளுக்குத்தான்..அதுவும் முக்கியமா இஸ்லாமியத்தீவிரவாதிகள்...(ஒரு காலத்துல, ஏழை தொழிலாளர் சங்க தலைவர் அல்லது அவரது மகன், இல்லென்னா ரவுடி, பிக் பாக்கெட், தெருப் பொறுக்கி)

இது தான் இப்போ ட்ரெண்டு...

//
இந்த தீவிரவாதி இந்தியா - பாகிஸ்தான் ரெண்டு பேருக்கும் கஷ்டம் கொடுக்கற ஒரு நியூட்ரல் தீவிரவாதியா காட்டலாமா?
//

திம்மித்துவத்தின் உச்ச கட்ட வெளிப்பாடு...

பினாத்தல் சுரேஷ் அவர்களே...உங்கள் கருத்து ஒன்றும் பினாத்தலில்லை...படம் சரியான பினாத்தல் போல் தெரிகிறது....

திருட்டு டவுன்லோடில் படம் பார்க்கக் கூடாதுன்னு ஒரு முடிவோட இருந்தேன்...கதை கேட்டதுக்கப்புறம் இந்தப் படத்தெல்லாம் டிக்கட் வாங்கி என் காசுலெ பாலிவுட் அண்டர்வொர்ல்ட் AK 47 வாங்கி இந்துக்களைக் கொல்வதற்கு நானே காரணமா இருக்க மாட்டேன் டா சாமின்னு தோணுது..

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வஜ்ரா ஷங்கர்.

நமக்கு இந்திப்பட ட்ரெண்டு எல்லாம் தெரியாது.. எப்பவாச்சும் ஷாருக், ஆமிர், அமிதாப் படங்கள், பேசப்பட்டா பாக்கறதோட சரி. அந்தக்காலத்துலே காஸிப் சொல்ற அளவுக்கு டச்சுலே இருந்தேன்:-(

Boston Bala said...

kalakkal!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாண்டன் பாலா.

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிக்கவும்! பாஸ்டன் பாலா!

 

blogger templates | Make Money Online