Jul 15, 2006

சூடு தணிக்க (15 Jul 06)

பாலச்சந்தர் கணேசன் சொன்னது போல, தமிழ் வலைப்பதிவுகள் சூடாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அவர் யோசனையான சில பதிவுகள் அவற்றை ஆற்றிவிட முடியாது. காரணங்களாக நான் கருதுவது:
 
1. என் கருத்துதான் சரி, எதிரில் இருப்பவன் கருத்து கேட்கக்கூட லாயக்கற்றது. ஏனெனில் அவன் மேற்படி இனத்தான், மொழியான், கி முவில் ஒரு குறிப்பிட்ட செயல் செய்தான் என்ற எண்ணம் பெரும்பாலோனோர்க்கு இருக்கிறது.
 
2. இணையம், சுதந்திரம் தருகிறது, அதே நேரத்தில் அவசரத்தையும் தருகிறது. பதிவிட்ட அடுத்த நொடி பின்னூட்டம், பின்னூட்டமிட்ட அடுத்த நொடி பதில் எதிர்பார்த்தல், பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படல் ஒரு பெரிய குற்றமாக எண்ணுதல்..
 
3.வாய்ச்சொல் வீரத்தை சில நேரம் நிஜ வீரமாக, மற்றவர்கள் அல்ல, சம்மந்தப்பட்டவர்களே நினைத்துக் கொள்ளுதல்.
 
4. அவன் சொன்னது எனக்கு வலித்தது, நான் சொல்லப்போவது அவனைப் புரட்டிப்போட்டால்தான் ஆத்திரம் தீரும்.
 
5. Everything is fair in love and war - இதைச் சொன்னவனையே தேடிக்கொண்டிருக்கிறேன், இடைவேளையில் இந்தச்சித்தாந்தத்தை பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் வேறு யாரோ நீட்டிவிட்டார்கள்!
 
6. எழுத்தாளன் (இலக்கியவாதி?) எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட் நிலையில், தன் நிலையைக் கேள்வி கேட்பவரை எதிர்த்து கோபப்பட்ட நிலையில் மட்டுமே இருக்கவேண்டும் என்று யார் சொன்னது?
 
மேற்படி வியாதிகளை அண்ட விடாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சூடு தானாகவே தணிந்துவிடும். இதுவும் கடந்து போம்!
 
அதற்கான தடுப்பூசியாக, நான் ரசித்த சில நகைச்சுவை வசனங்கள்:
 
1. ஓ நிக்ஸன் துரையே, ஒரு கரடியே காரி உமிழ்ந்த எங்கள் மன்னன் உன்மீது காரி உமிழ்ந்ததால் உன் நிலை இன்னும் கேவலமாகிவிட்டது (இம்சை அரசன் 23ம் புலிகேசி)
 
2. யாராச்சும் மீன் பிடிக்கிற கரண்டி வச்சுருக்கேளா?
 மெதுவாப் பேசுடா, சம்மந்தியாத்துகாரா காதுல விழுந்திடப்போகுது..
 சாம்பார்லேயே விழுந்துடுத்து, காதுல விழுந்தா என்ன? (மைக்கேல் மதன காம ராஜன்)
 
3. டேய், என் பையன் ஒரு டாக்டரா, எஞ்சினியரா, வக்கீலா வருவான்னு எதிர்பாத்தேன் டா
ஆனாலும் உனக்கு பேராசை, அதெப்படி ஒரே மகன் டாக்டர், எஞ்சினியர் வக்கீல் எல்லாமா வர முடியும்? (ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி)
 
4. செத்தவனக்கொன்னது அம்பு.. அம்பு எங்கிருந்து வரும்? வில்லு, லாரியில பின்னாலேயிருந்து பாடினது பாட்டு. வில்லு - பாட்டு - வில்லுப்பாட்டு,  பாடினவன் யாரு - ராஜா! பிடிச்சுட்டேன் - எல்லாத்தையும் பிடிச்சுட்டேன்!
சார் - நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார் (அபூர்வ சகோதரர்கள்)
 
5. அடே கோமுட்டித் தலையா, கோழி குருடா செவிடான்றதாடா முக்கியம்? குழம்பு ருசியா இருக்குதான்னு பாருடா! (வைதேகி காத்திருந்தாள்)
 
6. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித் தானடா உடம்பு ரணகளமா இருக்கு (வின்னர்)
 
7. மல்லாக்க படுத்தா பசுமாடு, மவுண்ட் ரோட்லே மழை பெஞ்சா சுடுகாடு ன்னு அன்னிக்கே காக்கைச் சித்தர் சொன்னதத்தான் நான் சொல்றேன் (பாளையத்தம்மன்)
 
சீனை நல்லா யோசிச்சுப்பாத்து சிரிங்க!
 
 

13 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

:-D

சிரிச்சுவைக்கிறேன். 23-ம் புலிகேசி பார்க்காதபோதும்...

நன்மனம் said...

=))

அதாங்க விழுந்து விழுந்து சிரிக்கறது.

இன்றைய நாள் நன்றாக அமைய தந்தமைக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இலவசக்கொத்தனார், நன்மனம்..

இதுக்கு நான் பேசாம, இலவசக்கொத்தனார் மற்றூம் நன்மனம் பார்வைக்குன்னே போட்டிருக்கலாம் போல:-((

கீதா சாம்பசிவம் said...

ஒரு நாளைக்குப் பின்னூட்டம் கம்மியா வந்தா இப்படியா? நாங்க எல்லாம் எங்கே போய் முட்டிக்கிறது?

கப்பி பய said...

'அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்'னு அடுத்த வாரம் திரும்ப யாராவது சூட்டக் கிளப்பாம இருந்தா சரி :D..

பினாத்தல் சுரேஷ் said...

கீதா! மன்னிக்க! (வேணும்னா உங்க பார்வைக்கும் சேத்திருக்கலாமோ?)

நன்றி கப்பி பய! சூடு தணியறதாவது!

குமரன் (Kumaran) said...

என்னப்பூ. உங்கப் பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் வேணுமா? எங்கப் பதிவுக்கெல்லாம் வரமாட்டியளா? :-(((

நானும் சூடு தணியறா மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கேன். வந்து பாரும்.

தம்பி said...

நல்லா சிரிச்சேன்

enRenRum-anbudan.BALA said...

அன்பின் சுரேஷ்,

உங்கள் கருத்துக்களும் அருமை ! சுட்டிய நகைச்சுவைக் காட்சிகளும் அற்புதம் ! மகிழ்ச்சி தந்த ஒரு பதிவு ! நன்றி ஐயா :)

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா குமரன்! யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க! பாத்தவுடன் முதல் க்ளிக் வுடற என்னைப்பார்த்தா?? பின்னூட்டம் இல்லைன்னா பாக்கறதில்லைன்னு எப்படி அர்த்தம் எடுப்பீங்க?

வாங்க தம்பி! சிரிச்சதற்கு நன்றி.

பாலா, இன்னொரு Long time no see! சிரிச்சதற்கு நன்றி. கருத்தைப்பத்திச் சொன்ன கருத்துக்கும்!

enRenRum-anbudan.BALA said...

Dear Suresh,
//பாலா, இன்னொரு Long time no see!
//
I have been actively posting for the past 10 days, atleast !!! Are you not visiting my blog these days ??? :-((

பினாத்தல் சுரேஷ் said...

என்ன பாலா இப்படிச்சொல்லிட்டீங்க..

கொஞ்ச நாளாவே எனக்கு, பின்னூட்டம் போடறதிலே பிரச்சினைகள் இருக்கு. இன்னிக்கு கூட ட்ரை பண்ணினேன். டயலப்லே கனெக்ட் ஆவதிலும் தொந்தரவு. குறிப்பா உங்கள் தமிழாக்கத்துக்கு கமெண்ட் போட ரொம்பவே ஆர்வமா இருந்தேன்:-((

enRenRum-anbudan.BALA said...

Dear Suresh,
//என்ன பாலா இப்படிச்சொல்லிட்டீங்க..
//
Take it easy, I do know about you :)

Don't mistake me !!!

 

blogger templates | Make Money Online