Jul 4, 2006

அவியல் - ஒரு கூட்டுத் தகவலுடன்

1. இணையத்தில் இருந்து முதல் முறையாக முழுத் திரைப்படத்தையும் இறக்கிப்பார்த்தேன் - படம் மீண்டும் கோகிலா. நீண்ட இடைவேளைக்குப்பிறகு பார்த்தாலும் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பின் அருமையையும், இயல்பான அளவான வசனங்களையும், தெளிவான திரைக்கதையையும் பொருத்தமான பின்னணி இசையையும் பொதுவாகத் தெரிந்த ஒரு நாடகபாணியை மீறி ரசிக்க முடிந்தது. மிகவும் பிடித்தது க்ளைமாக்ஸ் வசனங்கள். சபல புத்திக் கணவனை வைத்துக்கொண்டே சினிமா நடிகையை "அடிக்கடி ஆத்துக்கு வந்து போங்கோ" என்று "அவ மேல இருக்க நம்பிக்கை"யால் சொல்வது வசனங்களால் நிரப்பப்பட்ட அப்போதைய படங்களிடையே நிச்சயம் புதுமை. இப்படம் வெற்றி பெற்றதா?

2. ஷா ருக் கானின் ரசிகனாக கொஞ்ச நாள் இருந்திருக்கிறேன், இருந்தாலும் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தே பஹேலி பார்த்தேன். டுபாக்கூர். ராஜஸ்தானி கிராமத்துக் கர்ணபரம்பரைக் கதையை படமாக்கும்போது உடைகளுக்கும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தே ஆகவேண்டிய ரிச் லுக்குக்கும் செலவழித்ததில் கொஞ்சமாவது திரைக்கதை அமைப்பதில் காட்டியிருக்கலாம். ஷா ருக் ஏற்ற ஆவி கதாபாத்திரத்தால் எப்படிப்பட்ட மாயாஜாலங்கள் முடியும், எது முடியாது என்பதையே தெளிவாகச் சொல்லாமல் மூன்று மணிநேர இழுவை. இந்திப்படம் பார்க்கும் முன் ரொம்ப யோசிக்க வேண்டும். பனா வெற்றியாமே? என்னதான் இருக்கிறது வெற்றிக்கு?

3. என்ன ஆச்சு சன் டிவிக்கு? திருந்திவிட்டதா? ராடானின் தங்கவேட்டை புதுப்பொலிவுடன், செல்வி முடியும் கதையாகக் காணோம், போதாக்குறைக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் போட்டாலும், ஹீரோ விக்ரமைவிட கெஸ்ட் ரோல் சரத்குமாருக்கு விளம்பரத்தில் அதிக நேரம், அதே நேரத்தில் மற்ற விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறது - துள்ளித்திரிந்த காலம் விளம்ப்ரத்தில் நாயகி குஷ்பூவிற்கு கெஸ்ட் ரோல் ரோஷ்ணிக்கு அடுத்த இடம்தான்.. என்னமோ குக்கிங்.

4. கால்பந்தில் பிரேசில் தோற்றதற்கு ஒரே காரணம் - எனக்கு கால்பந்தில் ஆர்வம் இல்லை என்பதால்தானோ?

5. தமிழில் வரும் விளம்பரங்களின் தர வளர்ச்சி அதிசயமாக இருக்கிறது. லேட்டஸ்ட் பேவரைட் - ப்ரூ காபியில் சின்னக்கப்பில் காபி கொடுத்து தகவல் சொல்லும் இளம் மனைவி - ஒளிப்பதிவு, கான்சப்ட், ஆக்கம் - எல்லாம் அபாரம்.

6. நிறைய பேர் இப்படி அவியல் போடுகிறார்களே என்று பினாத்தலும் போட்டுவிட்டான். மேட்டர் ஒண்ணும் பெரிசா சிக்கலை. யாரும் மறந்துரக்கூடாது பாருங்க!


7. சொல்ல மறந்த கதை: அமெரிக்க சுதந்திர தினத்துக்கு அதே தினத்தில் அடிமையானவனின் வாழ்த்துக்கள். (அடிமைக்காலம்: 7 வருடம்)

14 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...

1. பாலுமகேந்திரா இயக்கிய இந்தப்படம் வெற்றி பெற்றது என்று என் மாமா சொன்னார்.... படத்தில் பாடல்கள் சூப்பர்... அதப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே....

2. பனாவின் வெற்றிக்கு காரணம் "காதல்" - இந்தக் கருமத்தாலே தான் டைட்டானிக்குலே இருந்து லேட்டஸ்ட் பாரிஜாதம் வரைக்கும் ஹிட் ஆகிட்டு இருக்கு....

3. சன் டிவி எப்போ கெட்டுப் போய் இருந்தது? புதுசா திருந்தறதுக்கு....

4. எனக்கு கால்பந்தில் ஆர்வம் இருந்ததாலும் கூட பிரேசில் தோற்றுப் போய் இருக்கலாம்.... ரெண்டு நாளா மனசே சரியில்லை....

5. காலரைத் தூக்கி விட்டுக்கறேன்.... நானும் விளம்பரக் கம்பெனியில தான் ஒர்க் பண்ணுறேன்....

6. உங்களை மறந்திருந்தா ஓடிவந்து பின்னூட்டம் போடுவமா?

7. ஹி....ஹி.... வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்!!!

ilavanji said...

மொதல்ல அவியல்... அப்பறம் கூட்டு...

எப்பங்க சாதம்போட்டு கொழம்பு ஊத்துவீங்க? :)

அடிமைக்கால வாழ்வு பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்! :)))

Sud Gopal said...

பேஷ்..பேஷ்.ரொம்ப நன்னா இருக்கு.

பெனாத்தலாருக்குத் திருமண தின வாழ்த்துகள்.

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் சுரேஷ். நிரந்தர அடிமையாவதற்கும் சேர்த்து

மணியன் said...

உமது அடிமைக் காலம் வெள்ளி,தங்க விழாக்களைக் காண வாழ்த்துக்கள் !!
அவியல் boiled vegetables ஆக சப்பென்று இருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

adimaikkaalam?
marriage anniversary?
HAPPY ANNIVERSARY AND MANY MORE HAPPY RETURNS.

சீமாச்சு.. said...

//சொல்ல மறந்த கதை: அமெரிக்க சுதந்திர தினத்துக்கு அதே தினத்தில் அடிமையானவனின் வாழ்த்துக்கள். (அடிமைக்காலம்: 7 வருடம்)//

Dear Suresh,
Happy Wedding Anniversary..

Seemachu...

Boston Bala said...

7. வாழ்த்துக்கள்!!!!

1. மீண்டும் கோகிலா - சூப்பர் ஹிட்

2. பஹேலி - எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. (விமர்சனம் எழுதினேனா என்று தெரியலை. ஆனால், கணவ்வன் மன்னைவியைப் பிரிந்து சம்பாதிக்க செல்வது; உண்மையான காதல்/மணவாழ்க்கை என்றால் என்ன? சிக்-ஃப்ளிக் ரசிகர்களுக்கு நல்ல விருந்து)

3. சன் டிவி காபி/பேஸ்ட் சென்சார் செய்திகள்; தங்க வேட்டை கேள்விகளின் தரம்; அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுமுதல் புதுப்பேட்டை வரை இருட்டடிப்பு; மூன்றரை மணித்துளிகளுக்கு ஒரு தபா மாறன் அருளாசி; இருபது நிமிடத்துக்கு ஒருக்கா தினகரன் சூப்பர்மா தல்லைவலி...

தலைவலியும் மாறவில்லை; பார்வையாளர்களும் கைவிடுவதாகத் தெரியவில்லை :-)

5. அந்த ப்ரூ விளம்பரம்... ரொம்ப பேஷ் பேஷ்!

பினாத்தல் சுரேஷ் said...

லக்கி - 1.பாலு மகேந்திரா இயக்கியது வெறும் கோகிலா.. இதை இயக்கியது ஜி என் ரங்கராஜன். 3.சன் டிவி கெட்டுப்போகலையோ? பாசம்:-))

லக்கிலுக், இளவஞ்சி, சுதர்சன்.கோபால், தேன் துளி, மணியன், மானு, சீமாச்சு, பாஸ்டன் பாலா - என் முதலாளி சார்பாக(வும்) நன்றி!

பாபா, பஹேலி பனா அளவுக்கு மோசம் இல்லைதான். நீங்கள் சொல்லும் கான்சப்ட் எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் ட்ரீட்மெண்டில் கொன்றுவிட்டார்கள்..

சன் டிவி தலைவலி மாறவில்லை எனத் தெளிவாகத் தெரிந்தாலும், ராதிகா - சரத்குமாரை இன்னும் கூட எதிரிகளாகப் பார்க்க ஆரம்பிக்கவில்லை, ஏன் என்று புரியவில்லை!

பினாத்தல் சுரேஷ் said...

லக்கி - 1.பாலு மகேந்திரா இயக்கியது வெறும் கோகிலா.. இதை இயக்கியது ஜி என் ரங்கராஜன். 3.சன் டிவி கெட்டுப்போகலையோ? பாசம்:-))

லக்கிலுக், இளவஞ்சி, சுதர்சன்.கோபால், தேன் துளி, மணியன், மானு, சீமாச்சு, பாஸ்டன் பாலா - என் முதலாளி சார்பாக(வும்) நன்றி!

பாபா, பஹேலி பனா அளவுக்கு மோசம் இல்லைதான். நீங்கள் சொல்லும் கான்சப்ட் எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் ட்ரீட்மெண்டில் கொன்றுவிட்டார்கள்..

சன் டிவி தலைவலி மாறவில்லை எனத் தெளிவாகத் தெரிந்தாலும், ராதிகா - சரத்குமாரை இன்னும் கூட எதிரிகளாகப் பார்க்க ஆரம்பிக்கவில்லை, ஏன் என்று புரியவில்லை!

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் பினாத்தலார்.. ஆமாம், உங்க பதிவுல எங்களுக்குப் போட்டியா அதென்ன புது சங்கம் முளைச்சிருக்கு? ( //வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் // )

பாலசந்தர் கணேசன். said...

.மீண்டும் கோகிலா ஒரு நல்ல படம்
2.பஹேலி- நாம ஹிந்தி படங்களை எல்லாம் கண்டுக்கிறது இல்லைங்க.
3.சன் டீவி -ஜெயலலிதாவை புகழ்ந்தால் காசு(கூட) கிடைக்கும் என்றால், சன் அதனையும் செய்யும்.
4.இல்லை.
5.விளம்பரங்கள் தரம் உயர்ந்து கொண்டு வருகின்றது. காரணம் மீடியாவின் வளர்ச்சி. அதனால் பட்ஜெட்டும் உயருகிறது. ஆபாசமும் ஆங்காங்கே தென்படுகிறது.
6.உங்களை மறக்க முடியுமா?
7.அப்படி போடுங்கள்... நல்வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்ஸ். லக்கி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிட்டாரு. நல்லா கேன்வாஸ் பண்ணி ஆளைப்பிடிச்சு கவர் பண்ணிடுங்க:-))

வாங்க பாலச்சந்தர் கணேசன். (உங்கள் பேரை சுருக்கமா எப்படிச் சொல்றது?)வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

//நல்லா கேன்வாஸ் பண்ணி ஆளைப்பிடிச்சு கவர் பண்ணிடுங்க:-))//

பொறாமைய்யா.. பொறாமை.. இவிங்க மட்டும் எப்படி வருத்தப்படாம இருக்காய்ங்கன்னு..

இருக்கட்டும், மடிப்பாக்கம் கிளை இனிமே தான் ஆரம்பிக்கணும்.. ஸ்டார்ட் அப்ல நல்ல ஸ்கோப் இருக்கிறது உண்மைதான் ;)

 

blogger templates | Make Money Online