Jul 13, 2006

உமர்

மதி கந்தசாமியின் பதிவிலும், ஈ- வீதியில் பதிவில் இருந்தும் தான்  உமர் என்ற ஒருவர் இருந்தார், அவர் மறைந்தார் என்பதை அறிய முடிந்தது.
 
இன்று சுலபமாக கலப்பை கொண்டு தமிழ் உழ முடிகிறது, கவிதை எழுத முடிகிறது, ஆபாசம் பேச முடிகிறது, தனிநபரைத் தாக்க முடிகிறது, பதிவிட்ட சில மணிநேரங்களுக்குள் நூறும் ஆயிரமும் ஹிட் பார்க்க முடிகிறது என்ற சௌகர்யம், கணினியில் தமிழ் என்பது ஒரு கனவாக இருந்த அண்மை இறந்த காலத்தை மறக்க வைத்து விடுகிறது.
 
கையால் எழுதி ஸ்கேன் செய்த தமிழ் எழுத்துக்களில் இருந்து,
என் கணினியில் தெரிவதை ஸ்கிரீன்ஷாட்டாக இன்னொரு கணினிக்கு மாற்றிப் படித்து,
டிஸ்கி புஸ்கி என்ற தரங்களில் கஷ்டப்பட்டு
இன்று யூனிகோட் என்ற சுலபத்துக்கு அடிமையாகி இருக்கிற வேளையில்
 
எத்தனையோ இளைஞர்கள் இந்த ஒவ்வொரு படிக்கல்லுக்காகவும் சொந்த நேரத்தைச் செலவு செய்திருக்கிறார்கள், பிரதிபலன் பாராமல் தமிழுக்காய் உழைத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு மறந்து விடுகிறது.
 
நூறு கவிதை எழுதிய கவிஞனைவிட, ஆயிரம் கதை எழுதிய எழுத்தாளனைவிட, எல்லாவற்றையும் தமிழில் அலசும் ஆராய்ச்சியாளர்களைவிட, திரை மறைவிலே பெரும் வேலை செய்திருக்கும் இளைஞர்கள் தமிழுக்கு அதிகம் சேவை செய்தவர்கள், மெல்லத் தமிழினிச் சாகும் என்ற வசை எய்தாமல் காத்தவர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
 
அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.

9 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

//அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக. //

ஆமென்.

பாலசந்தர் கணேசன். said...

ஆமாம் தமிழை கணிப்பொறிக்குள் கொண்டு வந்தவர்களை நாம் அங்கிகரிக்கவே இல்லை. குறைந்த பட்சம் வலைப்பூக்களிலாவது அவர்கள் பெயர் பிரபலமாவது நல்லது. உமரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதல்கள்.

நன்மனம் said...

அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.

பினாத்தல் சுரேஷ் said...

நீங்கள் சொல்வது உண்மை பாலச்சந்தர் கணேசன்.

ராபின் ஹூட் - தெரிந்திருக்கவில்லைதான்.. அத்தவறைத்தான் ஒப்புக்கொண்டுள்ளேனே... உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?

உங்களுடன் நானும் இணைகிறேன் இலவசம், நன்மனம்.

தகடூர் கோபி(Gopi) said...

இன்று யூனித்தமிழ் வலைப்பதியும் பலருக்கு தேனீ எழுத்துரு மற்றும் உமர் அவர்கள் பற்றி தெரிய வாய்ப்பில்லை (அன்னார் அவ்வளவு எளிமையானவர்).

தகடூர் எழுத்துரு மாற்றியிலும் எனது வலைப்பதிவுகளிலும் துவக்க காலத்தில் தேனீ இயங்கு எழுத்துருவையே பாவித்தேன்.

தமிழ் வலையுலக தொழிநுட்பத்தில் அவர் பலருக்கு முன்னோடி. மானசீக குரு.

அவர் மறைந்தாலும் அவர் கணினித் தமிழுக்கு செய்த சேவை அவர் பெயரை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

Anonymous said...

அவர் ஆத்மசாந்திக்கும்; குடும்பத்தாரின் மனவமைதிக்கும் இறைவனை வேண்டுகிறேன்.
யோகன் பாரிஸ்

Anonymous said...

ராபின் ஹூட்
என் பெயரில் போலிப்பதிவு

http://robinhoot.blogspot.com/2006/07/blog-post_13.html

கதிர் said...

உமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

மு.கார்த்திகேயன் said...

தாங்கள் சொல்வது மிகவும் உண்மையே.. உமரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

 

blogger templates | Make Money Online