Nov 11, 2006

இளைய ராஜா? (11Nov 06)

சர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:


ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".

(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).

திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.

இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.


இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -

"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

38 பின்னூட்டங்கள்:

Hariharan # 03985177737685368452 said...

இளையராஜாவை நேர்மையாகச் செலுத்துவது அவரது தீவிரமான ஆன்மீக ஈடுபாடு.

செய்வனத்திருந்தச் செய்ய இயலாது என்பதாலேயே இசையமைக்க இயலாது என்று முடிவெடுத்திருக்கிறார்!

நேர்மை பிசகிய முடிவாக இதைக்காண வேண்டியதில்லை! இளையராஜாவை அவ்வளவு எளிதில் குறைகூறிவிட அவரை விமர்சிக்கும் எவர்க்கும் அவரளவுக்கு நேர்மை கிடையாது!

G.Ragavan said...

இதத்தான் நானும் சொல்றேன். அவர் என்ன சொன்னார்னு தெரிஞ்சிக்காமலே ரெண்டு பதிவுகள். அவரைத் திட்டிப் பல பின்னூட்டங்கள். அதை எடுத்துச் சொன்னா சாமாதன இம்சைகள்னு பட்டம் வேற. அவர் ஒரு இசையமைப்பாளர். இசையில அவர் கிட்ட கூடக் கொறச்சலாயிருக்குன்னு விமர்சனம் பண்றது சரியாயிருக்கும். ஒருவர் எல்லாத் துறையிலயும் அறிவாளியா இருக்க முடியாது. அவர் எடுத்த முடிவு சரி அல்லது தப்பு என்பதல்ல வாதம். அவரிடம் இசையை மட்டும் எதிர்பாருங்கள் என்பதே வாதம்.

✪சிந்தாநதி said...

உண்மை தான். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மேடையேறி கருணாநிதியைக்கூட வானளாவப் புகழ்ந்து பாட அவருக்கு எந்தக்கூச்சமும் இல்லை. பெரியாரைப் பாடுவதில் மட்டும் ஏனிந்தத் தயக்கம்.

//"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.//

இதில் கூட எந்தத் தவறுமே இல்லை. ஆனால் கோடிகொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதாக வந்த தகவல்...?

Mr.Blogger said...

Yours is the first ever tamil blog I have ever come across !

Wonderful Mr.Pinathal Suresh.

By the way how you post in tamil on blog ?

ஓகை said...

//இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது. நான் அப்படித்தான் பார்க்கிறேன்.//

நானும் அப்படித்தான் பார்க்கிறேன்.

உண்மையில் அவர் பெரியார் படத்துக்கு உதவியே செய்திருக்கிறார். தன் மனமொப்பாத செயலை செய்வதற்கில்லை என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். 'போற்றிப் பாடடி பெண்ணே' பட நிகழ்வுக்கு பொருத்தமான பாடலே.

வன்முறை கலாசாரம் ஒழியவேண்டுமென்று சேதி சொல்ல எடுக்கப்பட்ட படம், வெளிவந்த பிறகு ஜாதிக்காரர்களால் போற்றப்பட்ட காரணத்திலால், படம் எடுக்கப் படுவதற்கு முன்னாலேயே இளயராஜா அதற்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்கிற வாதம், ஒரு சிறந்த அறிவியல் புனைகதைக்கான கரு.

லொடுக்கு said...

அவரை அவர் போக்குக்கு விட்டு விடுவோமே!!

ILA (a) இளா said...

//நான் அப்படித்தான் பார்க்கிறேன்//
நானும் அப்படித்தான் பார்க்கிறேன்

நாகை சிவா said...

சரியான பதிவு.....

அவரு என்ன சொன்னாரு என்பதை சரியாக உள்வாங்கி கொள்ளாமலே அவருக்கு சாதி, மதம் எல்லாம் பூசி அழகு பாத்துட்டுங்க நம் மக்கள்....(வழக்கம் போல்)

பினாத்தல் சுரேஷ் said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஹரிஹரன்.

சரிதான் ராகவன். //ஒருவர் எல்லாத் துறையிலயும் அறிவாளியா இருக்க முடியாது// இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் அவர் இசை மீதுள்ள அபரிமிதமான எதிர்பார்ப்பே என்று நான் நினைக்கிறேன்.


சிந்தாநதி, //ஆனால் கோடிகொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதாக வந்த தகவல்...? //

அந்தத் தகவல் பற்றி எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு Polite ஆக ஆங்கிலத்தில் கூறியவர், தமிழில் அப்படிக் கூறியிருப்பார் என்று நம்ப முடியவில்லை.

வாங்க, Mr.Blogger (நாங்கள்ளாம் என்னவாம்?)

தமிழ்லே அடிக்க முதல்லே ஈ-கலப்பையை கூகிள்லே தேடி டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். அப்புறம் அதன் ஹெல்ப் கோப்பிலேயே, கீபோர்ட் மேப்பிங் இருக்கும். அவ்வளவு கஷ்டமெல்லாம் கிடையாது.


ஓகை, // தன் மனமொப்பாத செயலை செய்வதற்கில்லை என்று அழகாகச் சொல்லியிருக்கிறார்// நானும் அப்படியே கருதுகிறேன்.

லொடுக்கு.. வுட மாடேங்கறாங்களே!

நன்றி இளா.

நன்றி நாகை சிவா.

Boston Bala said...

பழசெல்லாம் மறந்தே போச்சு. நினைவூட்டலுக்கும் அருமையான பதிவுக்கும் நன்றி சுரேஷ்.

பினாத்தல் சுரேஷ் said...

பாஸ்டன் பாலா, ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம் பின்னூட்டம்.... டாங்க்ஸ்!

Anonymous said...

பெனாத்தலாரே

இப்படி நான் ஒரு நிலமைக்கு திரும்பி வந்ததுக்கு பின்னாடி இப்படி ஒரு பதிவை போடறீங்களே. இதே நேத்து போட்டு இருந்தீங்கன்னா, இங்க சாமியாடி இருப்பேன். (சாமியாடினா சாதீயம் பேசறவனா முத்திரை வருமா?)

அதாவதுங்க மத்தவங்க பேசினா சாதீயம், ஆனா இவங்க காலையில் எழுந்து காப்பி குடிக்கிறாங்களோ இல்லையே, சாதீயம் பேசணும். அதுக்கு எந்த விவகாரம் மாட்டுனாலும் சரிதான். ஆனா ஒண்ணு இதுக்கு பேரு அவங்க பண்ணும் போது சாதீயம் இல்லை.

அதே மாதிரி இவங்களுக்கு வேணுங்கிற மாதிரி நான் தப்பா பண்ணுனாலும் அது சரி, அது என் தனி மனித சுதந்திரம். ஆனா அவங்களுக்கு பிடிக்காதது செஞ்சா அதுக்கு பேரு அடிமைத்தனம்.

இவங்களாகட்டும், இவங்களுக்கு மல்லு கட்டி நின்னு பதில் சொல்லறவங்களாகட்டும் உருப்படியா ஓண்ணும் பண்ணறது இல்லை. இதை நிறுத்தினா எல்லார் நேரமும் மிச்சம். போயி உருப்படியா எதனா பண்ணச் சொல்லுங்க. சாயங்காலமா, பக்கத்துல இருக்கிற பசங்களுக்கு பாடம் (ஒழுங்கான பள்ளிக்கூட பாடம் ஐயா) கத்துக் குடுக்க சொல்லுங்க.

இல்லைன்னா அணையற தீய அணைய விடாம சுள்ளி போட்டு வளர்க்கறதுதான் இவங்க பண்ணறது. சிலவங்க மந்திரம் சொல்லி அரச மரத்து சுள்ளி போடறாங்க. மத்தவங்க வேற சுள்ளி போடறாங்க. ரெண்டு பேரும் நிறுத்துங்கப்பா. தீ தானா அணையும்.

இதெல்லாம் சொல்ல வந்தா ஜிரா சொல்லற மாதிரி சமாதான இம்சைங்கன்னு நாட்டாமை தீர்ப்பு. நல்லா இருங்கடா. (ஐயையோ டா ன்னு சொல்லிட்டேனே. அதுவும் வம்பாச்சே. அதை மட்டும் அழிச்சிட்டு படிங்கப்பா)

பினாத்தல் சுரேஷ் said...

சமாதான இம்சை நம்பர் 1,

ரொம்பக் கோவமா இருக்கீங்கன்னு தெரியுது. கூல்!

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா பின்னூட்டம் வரலைன்னு அழுதுகிட்டே இருப்பீரே. இப்போ நல்லா வந்து கொட்டும் சந்தோஷம் தானே. நடத்தும் நடத்தும்.

enRenRum-anbudan.BALA said...

அன்பின் சுரேஷ்,
அருமையா பெனாத்தியிருக்கீங்க :)) உங்களிடம் பிடிச்சது இந்த நிதானம் தான் !

//நான் அப்படித்தான் பார்க்கிறேன்
//
இளாவுடன் சேர்ந்து நானும் வழி மொழிகிறேன் !

கொஞ்சம் விளம்பரம்:
http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_11.html

எ.அ.பாலா

சிறில் அலெக்ஸ் said...

எனக்கென்னவோ ராஜா சொல்லும் நியாயம் சரியானதாகப்படவில்லை. கண்டபடி எந்த சிச்சுவேஷனுக்கும் பாட்டு பொட்டும் திறமை உள்ளவர்.

இதுவரை புரட்சிப்பாடல்களுக்கு இசை அமைக்கவில்லையா என்ன?

ராஜா ஒரு திரைப்பட இசை அமைப்பளர் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுவரை அவர் கொள்கை ரீதியா எத்தனை படங்களுக்கு இசை அமைக்க மறுத்திருக்கிறார்ர் எனத் தெரியலியே.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

அதெல்லாம் நமக்கு ராசி இல்ல சாமி.. அப்சல் பத்தி எழுதனவங்களுக்கெல்லாம் 50 - 100ன்னு பின்னூட்டம் விழ, என் டைமிங், 20 மட்டும்தான் வந்தது:-)

இப்போ நீங்களே கூட பாருங்களேன்.. மத்த பதிவிலே இளையராஜா பத்தி குமுறிட்டு, இங்கே வந்து பின்னூட்டம் பத்தி மட்டும் பேசறீங்க!

பாலா, நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்,

காரணம் சிறிதோ, பெரிதோ,அவர் "என்னால் இந்தப்படத்துக்கு இசையமைப்பதில் முழு நியாயம் செய்ய முடியாது" என்று உணர்ந்தபின் செல்லக்கூடிய காரணம்தான் - என்பது என் பார்வை.

இலவசக்கொத்தனார் said...

//மத்த பதிவிலே இளையராஜா பத்தி குமுறிட்டு,//

யப்பா சாமி,

முதல்ல அவங்க நேத்தே பதிவு போட்டுட்டாங்க. அதனால கருத்தை சொல்லியாச்சு. இப்ப அதெல்லாம் அரைச்ச மாவா ஆகிப்போச்சு.

இரண்டாவது அங்க அவரு தப்புன்னு சொன்னா மாதிரி எழுதி இருந்ததால நம்ம கருத்தைச் சொல்ல வேண்டியதாப் போச்சு. நீங்க நான் சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன ஆமாஞ்சாமின்னு மண்டையை ஆட்டிக்கிட்டு போக வேண்டியதுதானே!

சரிங்க சிபா பதிவுல போட்ட அளவு உமக்கும் பின்னூட்டம் பொட்டு பி.க. பண்ணிடறேன். சந்தோஷமா இருங்க சாமி. :)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தண்ணா,

சும்மா போட்டு வாங்கினேன் அண்ணா! பி க எல்லாம் வேண்டாம்.. அவரவர்க்கு வாய்த்தது அவரவர்க்கு:-) :-(

ஓகை said...

//மத்த பதிவிலே இளையராஜா பத்தி குமுறிட்டு//

என்ன சுரேஷ் அப்டி சொல்றீங்க? 'குமுறோ குமுறுன்னு குமுறிட்டு' அப்ப்டீன்னுல்ல சொல்லனும்?

கொஞ்சம் குமுறா குமுறியிருக்கார்?இகொ.

இலவசக்கொத்தனார் said...

சரி. அப்ப பி.க. பண்ணலை. இப்பவாவது சந்தோஷமா?

(பின்னூட்டம் நம்பர் 3)

மு.கார்த்திகேயன் said...

/அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது. //


சரியான அலசல் சுரேஷ்.. மனதுக்கு ஒத்துவராமல் இசையமைத்தல் என்பது சரியில்லாதது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளவேண்டும் கட்டாயம்

கோபிநாத் said...

"அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது. நான் அப்படித்தான் பார்க்கிறேன்."

அருமையான பதிவுக்கும் சுரேஷ்.
Mr. Hariharan சொன்னது 100% சரி

நன்றி

இலவசக்கொத்தனார் said...

//கொஞ்சம் குமுறா குமுறியிருக்கார்?இகொ.//

அதுக்காக எனக்கும் புனித பிம்பம் அப்படின்னு பட்டம் வேற கிடைச்சு இருக்கு. சந்தோஷப்பட வேண்டியதுதானே. :)

இலவசக்கொத்தனார் said...

ஐய்யய்யோ! போன பின்னூட்டத்தில் பின்னூட்டம் நம்பர் 4 ன்னு போட மறந்துட்டேனே!

(பின்னூட்டம் நம்பர் 5)

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை,

குமுறோ குமுறுன்னு குமுறிட்டாரு.. அதைச்சொல்லுங்க!

பினாத்தல் சுரேஷ் said...

இ கொ:

நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி.

(5 பின்னூட்டமா போடிருக்கலாம்தான்.. போரடிக்குது!)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கார்த்திகேயன் முத்துராஜன்.

நன்றி கோபிநாத்.

Anonymous said...

ஆசைப்பட்டு அடிமையாகிப்போன இளையராஜா சுயமரியாதையைப் பற்றி பேசிய பெரியார் படத்துக்கு இசை அமைக்க மறுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

பினாத்தல் சுரேஷ் said...

கொட்டாங்கச்சி,

உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

சுரேஷ்,

எவனோ இருந்தாலும் சாதியை பார்க்கறானுங்க. இளையராசானா தலித்ங்கறாங்க.இசையை எடுத்து குப்பை கூடைல போட்டு போயிடறாங்க.

என்னப்பா எல்லா பக்கமும் சாதியை சொல்லி கும்மி அடிக்கிறீங்கனு கேட்டா நீ ஆதிக்க சாதியானு கேட்கறாங்க. இன்னா மச்சி பைனலா சொல்ல வார்ரேனு கேட்டா நாங்களேல்லாம் சேர்ந்து சாதியை ஒழிக்கப்போறாமுனு சொல்லறாங்க.

அட மக்கா நீ நடத்துனு சொல்லிட்டு அப்பீட்டு ஆக வேண்டியதாயிடுது.

இளையராசா ஒரு தொழில் பண்ணறாரு. அதை அவர் விருப்பத்துக்கு பண்ணிட்டு போகட்டுமே

என்னைக்கு இளையராசாவை தலித்தா பாக்கமா மனுசனா பாக்கறானுங்களோ அன்னைக்குதான் இங்க விடியும் சாமி.

தருமி said...

சுரேஷ்,
ரொம்ப நிதானமா நல்லா யோசிச்சி எழுதியிருக்கீங்க...தரமான, சரியான பதிவு.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நன்றி தருமி.

Anonymous said...

யோவ் பெனாத்தல்,

எல்லாம் சரி.

பாங்கு என்றால் தொழுகைக்கு அழைப்பது என்று எழுதச் சொன்னால், தொழுகை கலைப்பது என்று எழுதியிருக்கிறீரே!!
அதில் ஏதாவது உள்குத்து வச்சிருக்கீரா?

சாத்தான்குளத்தான்

பினாத்தல் சுரேஷ் said...

மன்னிச்சுடுங்க குரு.. உங்க டெலித்தமிழ் சரியாப் புரியறதில்லை:-( இப்போ திருந்திட்டேன்.. திருத்திட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

சினேகிதன், உங்கள் கருத்துக்கு நன்றி.

இளையராஜா, கே ஆர் நாராயணன் மட்டுமல்ல, யாரையுமே ஜாதிரீதியாக பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. அப்துல் கலாம் ஒரு முஸ்லீம் என்பதால் ஜனாதிபதியாக்கப்பட்டார் என்று சொல்லும்போதே எனக்கு எரிகிறது!

Anonymous said...

மிக மோசமான தமிழ் சமூகம் கட்டமைக்கப்பட்டது பல முட்டாள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரால்.
இளையராஜா இன்று தோற்றுப்போய்விட்டார் என்று சொன்னான் ஒரு முட்டாள்.நிறைய தமிழ் படங்கள் அவருக்கு இல்லையாம்.அவனுக்கு தெரியாது அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் இளையராஜவுக்கும் இருக்கும் நட்பு.coward philistines.

 

blogger templates | Make Money Online