Jan 10, 2007

கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)

நேற்று இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தமிழ்மணம் பார்த்துவிட்டுச் சென்றதன் விளைவோ என்னவோ, ராத்திரி கனவிலும் தமிழ்மணமே வந்தது. கனவில் வந்த கணினியில் Print Screen போட்டு Screenshot ஐ சேமித்து வைத்துவிட்டேன். (லாஜிக்கா பார்க்கிறீங்க பினாத்தல்கள்லே?)

அந்தப்படத்தை உங்கள் வசதிக்காக இங்கே கொடுத்துள்ளேன்.



பிளாக்கரில் சரியாகத் தெரியாவிட்டால் இங்கே இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

டிஸ்கி: யாரையும் காயப்படுத்த அல்ல, நகைச்சுவைக்காக மட்டுமே!

142 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சும்மா நச்சுன்னு இருக்கு! :-)))

கோவி.கண்ணன் [GK] said...

பினாத்தலாரே...!

சூப்பர்

-கோசி கிருஷ்ணன்
:)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கலக்கிப்புட்டீங்க பெனாத்தலு கலக்கிப்புட்டீங்க.

Radha Sriram said...

Suresh,

dude!! how creative can you get??

ultimate!!!

Hariharan # 03985177737685368452 said...

உங்களது கனவுப் படைப்புகளில் தோன்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி!

ஹரிகிரன்


எப்படிங்க இப்படி? கலக்கல்:-)))

Anonymous said...

இத ஒரு பேனரா போட்டு வித்துடுங்க :)

கலெக்ஷன்ல பாதி எனக்கு.

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் உமக்கு நக்கல் ஜாஸ்தியாயிக் கிட்டே போகுது. இது எங்க போயி முடியப் போகுதோ தெரியலை.
:)))))

G.Ragavan said...

சூப்பருங்கோ...ரசிச்சேன்..நல்லவேளை தப்பிச்சேன்னு நெனைச்சேன்...ஆனா மாட்டிக்கிட்டேன் :-) நல்லாயிருந்தது.

லக்கிலுக் said...

Photoshopல் தானே செய்தீர்கள்?

Size 640 x 480 Pixel ஆக வைத்து 75 DPI கொடுங்கள். வலையில் சுலபமாக ஏறும்.

மற்றபடி, எங்கள் Ad Agencyயில் ஒரு கிரியேட்டிவ் டைரக்டர் போஸ்ட் காலியாக இருக்கிறது. நீங்க வந்துடறீங்களா? :-))))

Anonymous said...

பேட்டா சிலிப்பருக்கு மாறுவோம் வாருங்கள் தமிழ் மணத்தின் லேட்டஸ்ட் ஹிட் பதிவைக் கனவினில் காண மறந்துப் போனதற்கு என் கண்டனங்கள்

Anonymous said...

யோவ்பெனாத்தலு,

ஒரே கெட்ட கெட்ட கனவா வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீரே. அதுதானா இது? நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Leo Suresh said...

கலக்கிட்டீங்க சுரேஷ்
எப்படீய்யா இப்படியெல்லாம் யோசிக்க்றீர்

லியோ சுரேஷ்

இலவசக்கொத்தனார் said...

நிறையா வாட்டி வந்து பாத்துட்டேன் இடுகைகள் எதுவும் மாறவே இல்லையே. இந்த பாழாப்போன பிளாக்கர் சர்வர் டவுணா?

தமிழ்மணமேட்டிஸ் வியாதியஸ்தர்.

ramachandranusha(உஷா) said...

ஒரு நல்லெண்ணத்துடன் கேட்கிறேன். எது யார் என்று யாராவது விளக்க பட்டியல் யாராவது போடுங்களேன். நட்சத்திரம் யார் என்றுக் கண்டு பிடிக்க முடியவில்லை.மற்றப்படி சூப்பர் என்ற தமிழ் பாராட்டு சொல்லை நானும் வழிமொழிகிறேன் :

Anonymous said...

செம ஹாட் மச்சி :))

Anonymous said...

தேவ், நீங்களுமா? பாட்டா ஸ்லிப்பர் இல்லையோ? (பேட்டா என்றால் குழப்பாமா இருக்கே, பீட்டாவை பேட்டா என்று சிலர் சொல்றாங்களாம் :) )

சுரேஷ், சிலித் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு குறைவா இருக்கே! கனவில் ஒழுங்கா ஸ்கிரீன் ஷாட்டலையா?

"பீட்டாவைக் கண்டு பயந்து சாகுங்கள்" ஓல்ட் தலைப்பாயிடுச்சுபா.. "போட்டோவைக் கண்டு பயந்து சாகுங்கள்" தான் இன்றைய ஹிட் ;)

Anonymous said...

கலக்கல் :-)

Anonymous said...

AHHA AHHA AVANA NEE! ROMBA NERAM NALLATHANEIYA PESIKITURUNDAN!

-KANAVIL VARADHAVAN.

அறிஞர். அ said...

பெனாத்துறதுக்கு எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்

✪சிந்தாநதி said...

இவ்வளவு பர்பெக்டா கனவு வந்ததுக்கு முதல்ல உங்க மூளைய செக்கப் பண்ணணும்...இந்த மாதிரி மூளைகளுக்கு இப்போ நல்ல டிமாண்டாம்...

இப்படிக்கு

சிந்தாமணி

தகடூர் கோபி(Gopi) said...

வெறும் ScreenShot போட்டு ஒரு பதிவா? அட! அப்றமா படிச்சிப் பாத்தாதான் தெரியுது...

:-)))))))))))))

ஹைய்யோ... ஹைய்யோ...

எப்படிங்க இதெல்லாம்... உக்காந்து யோசிப்பீங்களோ...

dondu(#11168674346665545885) said...

கலக்கல்

டோண்டு ராகவன்

Anonymous said...

சுரேஷ்,

சூப்பரா இருக்கு....

Geetha Sambasivam said...

"அவன் விகடன்" பெனாத்தல், "துக்ளக்" பெனாத்தலை விடச் சிறந்த பெனாத்தல் இந்தத் தமிழ் மணம் பெனாத்தல். அது சரி, உங்க மனைவி எப்படிங்க பொறுத்துக்கிறாங்க, உங்க பெனாத்தலை எல்லாம். பாவம்ங்க அவங்க. குழந்தைங்க 2-ம் பயந்துக்கலியே? :D

லொடுக்கு said...

அருமை நண்பரே! :)

முத்துகுமரன் said...

ஆமா, மூளை ருசியா இருக்கும்னு சொல்ல கேள்விபட்டிருக்கேன். சிந்தாமணியாரே கிடைச்சா அனுப்பிவைக்கவும்.

தருமி said...

தருமன் என்னைக்கி bridge-யைக் கிராஸ் பண்றது..என்னைக்கி நாமளும் அதுக்குப் பிறகு தாண்டறது.... ஒண்ணும் கவைக்காவறதில்லை...

thanks for remembering and recognizing me
.........தருமன்

enRenRum-anbudan.BALA said...

சூப்பர் கலாய்த்தல் :))) வரலாற்றுப் புகழ் மிக்க இப்பதிவில் எனக்கும் ஒரு சிறு இடம் அளித்தமைக்கு
நன்றி, சுரேஷ் ;-)

ஆனாலும், "இன்றைக்கு அன்புடன்" என்பது சற்று TOO MUCH, நான் "என்றென்றும் அன்புடன்" தான்
!!! "இன்றைக்கு மட்டும் அன்புடன்" என்று சொல்லாம விட்டீங்களே ;-)

'திருநங்கையாழ்வார் பூகோளம்' -- எனது எந்தப் பதிவினுடைய 'உல்டா' தலைப்பு இது ?? அல்லது
சும்மா நீங்களே சேர்த்ததா ??? அடியார்கள் கோபத்துக்கு ஆளாதீர்கள், சுவாமி :))))

எ.அ.பாலா

கதிர் said...

உலகமகா உள்குத்துடா சாமீ!!!!!

கனவா இது? ரெண்டு நாள் உக்காந்து யோசிச்சா மாதிரில்ல இருக்கு!

எது எப்படியோ கலக்கல் கனவு!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நன்றி நன்றி..

யாரும் கோபிக்காமல் இருந்ததற்கும், இந்தப்பதிவை சூப்பர் ஹிட் ஆக்கியதற்கும்!!!!!!

பதில் மரியாதையைத் தொடர்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

சந்தனமுல்லை! டாங்க்ஸ்! (தமிழ்மணம்னுதானே போட்டிருக்கேன், முரசுன்னு இல்லையே:-))

பினாத்தல் சுரேஷ் said...

கோசி கிருஷ்ணன், உங்களை சீரியஸா கலாய்க்கலை.. இன்னொரு முறை வரும்:-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செந்தில் குமரன்.

ராதா ஸ்ரீராம், இப்படி எதாவது போட்டா மட்டும்தான் உங்களை இங்கே பாக்க முடியுது;-))

பினாத்தல் சுரேஷ் said...

ஹரிஹரன், கனவுப்படைப்பா? கலாய்ப்பை இப்படி கூட திசை திருப்ப முடியுமா? சூப்பர்! நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன்.. இதை பேனரா விக்க முடியுமான்னு ஒரு சர்வே போட்டுச் சொல்லுங்களேன்..

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், நக்கலையா குறைக்கணும்? எங்க போய் முடியப்போவுது? நமக்கு நாமே ..புலே தான் முடியும்;-) அதென்ன நமக்கு புதுசா?

பினாத்தல் சுரேஷ் said...

ராகவன், சொல் ஒரு சொல்லுக்கு யாரைப்போடலாமுன்னு பார்த்தேன்.. குமரன் "தமிழ்மணம்" கனவிலே வராததாலே நீங்க மாட்டினீங்க:-))

பினாத்தல் சுரேஷ் said...

லக்கிலுக், offerக்கு நன்றி;-))

சின்ன சைஸா போட்டிருக்கலாம், படிக்கறதுக்கு ஜூம் பண்ணி படிக்கணும் - அதுக்கு இதுவே தேவலாமின்னு விட்டுட்டேன்

பினாத்தல் சுரேஷ் said...

தேவ் - அதைத்தான் கொஞ்சம் மாத்தி பீட்டாவைக்கண்டு பயந்து சாகுங்கள்னு போட்டிருந்தேனே.. உங்கள் கண்டனத்துக்கு என் கண்டனங்கள்:-))

பினாத்தல் சுரேஷ் said...

சாத்தான்குளத்தான் - குறிச்சொற்கள்லே சைதாப்பேட்டையானைக் கவனிக்கலையா? சாதுவா பேசறீங்க??

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லியோ சுரேஷ்.

கொத்தனார்.. வியாதி முத்திடுச்சி போல.. ஸ்கிரீன்ஷாட்டையுமா ரெப்ரஷ் செய்வீங்க??

பினாத்தல் சுரேஷ் said...

உஷா, நட்சத்திரம் முழுக்கற்பனை. மத்ததெல்லாம் தெரியாத அப்பிராணியா நீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மணியன்.

பொன்ஸ் - பெரிய நன்றி (பதிவிற்கு உதவியதைக் குறிப்பிட்டுத்தான் தீர்வேன்).

//போட்டோவைக் கண்டு பயந்து சாகுங்கள்" தான் இன்றைய ஹிட் // பா க ச வேலையே பிரதானமா இருக்கீங்க:-)) ஒரு லிங்க் கொடுத்திருக்கக்கூடாதா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுரேந்தர்74.

கனவில் வராதவன் அவர்களே, என்மீது அபாண்டமாக பழி போடாதீர்கள். நான் என்றாவது "நல்லாத்தான் பேசிக்கிட்டிருந்ததாக" உங்களால் நிரூபிக்க முடியுமா??

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மாஹிர். ரொம்ப எல்லாம் கஷ்டம் இல்லை. ஒரு மூணுமணிநேரவேலை..

சிந்தாநதி.. எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம். இல்லாத ஒரு பொருளைப்பத்தி (என் மூளை) நீங்க பில்ட் அப் கொடுக்க, முத்துக்குமரன் சப்புக்கொட்டிகிட்டு உக்காந்திருக்கார் பாருங்க!

ஜெயஸ்ரீ said...

-)))))))))))))))))))))))))))

இன்னும் நான் சிரிச்சு முடிக்கலை !!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி. உக்காந்து யோசிக்க வேணாம், உக்காந்து தமிழ்மணம் பாத்தா போதாது?;-)

நன்றி டோட்லு - சாரி டோண்டு:-))

நன்றி ராம்.

பினாத்தல் சுரேஷ் said...

கீதா.. grrrrrrrrrrr

//சரி, உங்க மனைவி எப்படிங்க பொறுத்துக்கிறாங்க, // நான் ஏன் பினாத்த ஆரம்பிச்சேன்னு தெரியுமா உங்களுக்கு?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லொடுக்கு.

முத்துக்குமரன்.. மாட்டு ரெக்கை டேஸ்டா இருக்கும்னு சொன்னா நம்புவீங்களா? இல்லாத ஒண்ணுக்கு ஆசைப்படாதீங்க;-))

பினாத்தல் சுரேஷ் said...

தருமி.. அதுக்குள்ளே ஏன் கவலைப்படறீங்க? முதல்லே ஆணி அடிச்சு பிரிட்ஜைத் தயார் செய்யலாம்.. அப்புறம் க்ராஸ் பண்ணவேண்டியதுதானே?

ps: உங்கள் கமெண்டை படித்து, உங்கள் பதிவையும் படித்ததால் உங்கள் வருத்தத்தின் சாயலைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

பாலா:-))

இன்றைக்கு மட்டும் அன்புடன் என்றுதான் எழுத வந்தேன்.. நீளம் அனுமதிக்காததால் மாற்றிவிட்டேன்.

திருமங்கையாழ்வார் பூகோளம் எதனுடைய உல்டாவும் இல்லை. பொதுவான உங்கள் ஆழ்வார் பதிவுகளின் இன்ஸ்பிரேசன் தான்:-))

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி, உள்குத்தா? பாய் ஷாப்பிங் திருவிழா பற்றிய ஒரு வலைப்பதிவு பரிசீலனையில் இருந்தது, எடிட்டிங்கில் காணாமல் போனது. அது திரும்பி வரணும்னு ஆசைப்படறீங்களா?

மூணு மனிநேரம்தான் சாமி. கொஞ்சம் வேலை தெரிஞ்சவங்களுக்கு இன்னும் கம்மியாகூட ஆயிருக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜெயஸ்ரீ. சிரிச்சு முடிச்சுட்டு பெரிசா கமெண்டு போடுவீங்க இல்ல?

podakkudian said...

பினாத்தலாரே...!

அமர்களம் நல்ல சிந்தனை ஹா ஹா

ramachandranusha(உஷா) said...

சுரேஷ், யாரும் கோபிக்காம இருந்ததற்கு நன்னி, கின்னின்னு ஆரம்பிக்காதீங்க. கண்ணுப்பட்டுட போகுது :-)) சொல் ஒரு சொல்தான் டாப் :-))))

ராதா ஸ்ரீராம், உங்களைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். நீங்கள் பல மாதங்களுக்கு முன்பு என் கதை ஒன்றை விமர்சித்து எனக்கு ஒரு பர்சனல் மெயிலுக்கு நான் போட்ட ரிப்ளை பவுன்ஸ் ஆகிவிட்டது. ரீடிப் ஐடியில் இந்த குழப்பம் அடிக்கடி வருகிறது.

Kasi Arumugam said...

//கனவா இது? ரெண்டு நாள் உக்காந்து யோசிச்சா மாதிரில்ல இருக்கு!//

வழிமொழிகிறேன் சுரேஷ்.

Anonymous said...

//சாத்தான்குளத்தான் - குறிச்சொற்கள்லே சைதாப்பேட்டையானைக் கவனிக்கலையா? சாதுவா பேசறீங்க?? //
ஓ.. நான் ஆழியூரானைச் சொல்றீங்கன்னு நினைச்சேன்.. காட்டாங்குளத்தான் மாதிரி ஏதாச்சும் புரிகிறமாதிரி போட்டிருக்கலாம் ;)

//பா க ச வேலையே பிரதானமா இருக்கீங்க:-)) //
ஆங், மறந்திட்டேன். கலாய்க்கப்படவே பிறவி எடுத்த எங்கள் தலையை இந்த மெகா கலாய்த்தலில் சேர்க்காமல் விட்டதை பாகச சார்பில் கண்ண்ண்டிக்கிறேன் ;)

இலவசக்கொத்தனார் said...

ஒரு வழியா 50 அடிச்சுட்டீரு. இனிமேலாவது பின்னூட்டம் வரலைன்னு அழாம இரும். (கனவுல கூட அதேதானாய்யா வரும்?)

இப்போவாவது ஒண்ணு புரிஞ்சுக்குங்க. நல்ல தரமான பதிவாப் போட்ட பின்னூட்டங்கள் அதிகம் வரும். அதிக பின்னூட்டம் வாங்க ஒரே வழி அதுதான். வேறெந்த குறுக்கு வழியும் கிடையாது!!!

தருமி said...

சுரேஷ்,
ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க. ஒத்த ரூபா தாரேன் என்பது முந்திய பதிவு என்று போட்டு, அதற்கான பின்னூட்ட எண்ணிக்கை 86ன்னு போட்டுருக்கீங்க. அவ்வளவு யோசிச்சு கரெக்டா செஞ்சிருக்கீங்க...

என்ன, எனக்கு இன்னும் கொஞ்சம் கூடவே பின்னூட்ட எண்ணிக்கை போட்டிருக்கலாம்ல.. காஸ்ட்லி மேஸ்த்திரியும், டோட்லு மாதவன் மட்டும் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமாக்கும்..??

சிறில் அலெக்ஸ் said...

This is the best so far. கலக்கிட்டீங்க.

:)

rv said...

அய்யோ@ எத quote செய்யறதுன்னே தெரியலை! கலக்கிருக்கீரு.

நட்சத்திரம் சரியான குத்து! IDML அநுபவங்களும் தான்! தூள்

காவேரியில் குளித்துவிட்டு வந்த சுகமா ஊத்திக்கறதுக்கு ஏத்தாப்போல கரெக்டான பேர் தான்.

முதல்ல யூஸ் செஞ்ச குஷும்பர் எங்க?

----
க்ளக்..இரம்...நாதன்

rv said...

பினாத்தல் கணேஷோட வருத்தமெல்லாம் இந்தப்பதிவுல தீர்ந்துடுச்சா??

அதுக்காக இந்த பி.க

அரை பிளேடு said...

அன்பான அப்பாவி ஆண் வாத்துக்களை பிரியாணி செய்து சாப்பிடும் பெண்புலிகள் பற்றிய நம்ம கட்டுரைய கனவுல கூட கண்டு நீங்க பயந்து இருக்கீங்க அப்படின்றத படிக்கறப்பவே நீங்க ஒரு அப்பாவி ஆண்வாத்துதான் அப்படிங்கற உண்மை நமக்கு தெரிஞ்சிருச்சி....
இந்த மொக்கை முக்கா கத்தி என்னிக்கும் ஆணியத்துக்கும் சமத்துவத்துக்கும் ஆதரவான கத்திதான் அப்படின்றத புரிஞ்சிக்னு இருப்பீங்கோ...
ஆணுக்கும் சமஉரிமையே நம்ம லட்சியம்.. மெட்றாஸ் பஸ்ல ஆணுக்கும் 33% சீட்டு ஒதுக்கி ஆடவர் அப்பிடின்னு எயுதற வரிக்கும் நம்ம உரிமைக்குரலு கேட்டுக்னே இருக்கும்.
நம்ப பதிவை ஹைலைட் பண்ண உங்களுக்கு இந்த முக்கா கத்தி ஒரு படா தாங்ஸ் வச்சிக்கிறான் நைனா...

இப்பிடிக்கு
துருப்பிடிச்ச மொக்கை முக்கா கத்தி.
:)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொதக்குடியான்.

உஷா, நன்றி சொல்றதுக்குக்கூட பயப்படற மாதிரியா ஆயிடுச்சி நம்ம பொழைப்பு?

காசியா!! ஆ!!! ஆச்சரியம் சார்.. எப்படி இருக்கீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், சாத்தான் குளத்தார்தான் எதைப்பத்தி எழுதினாலும் குறிச்சொல் மாத்தவே மாட்டார்:-))

பா க ச செஞ்சிருக்கலாம், ஒரு ஐடியாவும் இருந்துது. கொலசாமி படையலை வைச்சு. நீளம் கருதியும், அவரைக்கலாய்க்க ஒரு படையே இருப்பதால் பரிதாபத்தாலும்:-)) விட்டுவிட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ், சாத்தான் குளத்தார்தான் எதைப்பத்தி எழுதினாலும் குறிச்சொல் மாத்தவே மாட்டார்:-))

பா க ச செஞ்சிருக்கலாம், ஒரு ஐடியாவும் இருந்துது. கொலசாமி படையலை வைச்சு. நீளம் கருதியும், அவரைக்கலாய்க்க ஒரு படையே இருப்பதால் பரிதாபத்தாலும்:-)) விட்டுவிட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

//இப்போவாவது ஒண்ணு புரிஞ்சுக்குங்க. நல்ல தரமான பதிவாப் போட்ட பின்னூட்டங்கள் அதிகம் வரும். அதிக பின்னூட்டம் வாங்க ஒரே வழி அதுதான். வேறெந்த குறுக்கு வழியும் கிடையாது!!! //

கொத்தனார்!!!!!!!!!!!! மூணுமணிநேரம் கஷ்டப்பட்டு போட்ட பதிவை விட உம்ம வரிகள் அதிகம் சிரிக்க வைக்கின்றது!!

பினாத்தல் சுரேஷ் said...

தருமி.. ரியலிஸ்டிக்கா இருக்க வேணாம்? வாலி மாலை மாதிரி எங்கே போட்டாலும் மூலப்பதிவிலே டோட்லுவோடது ஏறும். மேஸ்திரி இன்னிக்கு புதன்கிழமைன்னு பதிவுபோட்டாலும் நூத்துக்கணக்குலே எகிறுது! அவங்க கூட எல்லாம் நீங்களும் நானும் போட்டி போட முடியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிறில் அலெக்ஸ்.

ரம்நாதர்.. குசும்பர் நம்ம பக்கமெல்லாம் வர மாட்டாருபா!

பினாத்தல் கணேஷின் ஏக்கத்தையும் தீர்க்கும் நீவிர் வாழ்க!

பினாத்தல் சுரேஷ் said...

அரைபிளேடு!

உங்க கட்டுரையைப் பாத்து நான் பயந்தேனா? இல்லை சார். என்னைப்போல அபலை ஆண்களுக்கு (இதிலேகூட அபலை ஆண்தான் ரைமிங்கா வருது இல்ல?) ஆதரவாக் குரல் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரத்தைப் பார்த்து பயமா வரும்?

Anonymous said...

:)))))))

கலக்க்கல் பதிவு!!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அருட்பெருங்கோ!

தருமி said...

//அவங்க கூட எல்லாம் நீங்களும் நானும் போட்டி போட முடியுமா?/

சரியாச்சொன்னீங்க, சுரேஷ்.
அதுவும் அந்த காஸ்ட்லி மேஸ்த்ரி இருக்காரே... அம்மாடியோவ் !

Anonymous said...

அட சாமி, இது கனவா? எவ்வளவு நாள் யோசிச்சதுங்க இது. ஆனா ஜூப்பருங்கோ

இளா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பினாத்தலாரே...!
எப்படி முருகப்பிரான் கனவில் வந்தது உம் கனவுக்கு transfer ஆச்சு? :-)

சூப்பர்! சும்மா தூள் கிளப்பிட்டீங்க!
அதுவும் நட்சத்திரம் பகுதியில் நீர் போட்ட வரிகள் நச்!

நம்மள வைச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே என்று இதில் வராத மற்ற பதிவர்களை ஏங்க வைத்து விட்டீர்களே! அடடா!!

தொடரட்டும் தங்கள் திருப்பணி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பினாத்தலாரே...!
கனவிலும் தமிழ்மணமா?
கனாக் கண்டேன் தோழா நான் அப்படின்னு பாட்டு படிக்காம இருந்தா சரி!

அப்பறம், ஓட்டெடுப்பு, பதிவர் மாநாடு இதெல்லாம் உங்க கனவில் வராதா? :-))

சரி இரவுக் கனவில் வந்ததைத் தந்தது போல், பகல் கனவில் வந்ததையும் தந்து விடுங்கள்!

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு.. வித்யாசமான பதிவும் கூட... பாராட்டுக்கள்!!!

முகமூடி said...

என்னது, மூணு மணி நேரம்தான் ஆச்சா.. பிரமாதம் பெனாத்தல் சுரேஷ்.. ச்சே, பினாத்தல் கணேஷ்.

அப்புறம் இதுக்கெல்லாம் டிஸ்கி போடுற மாதிரி ஆயிடுச்சே, தமிழ் கூறும் நல்லுலகத்துல... என்னாத்த சொல்வேணுங்கோ...

பினாத்தல் சுரேஷ் said...

கிட்டாதாயின் வெட்டென மறன்னு எங்க பாட்டிகூட சொல்லிக்கொடுத்திருக்காங்க தருமி:-))

இளா, நன்றி. ஏன் அனானிமஸ் எண்ட்ரி?

கண்ணபிரான், நன்றி. பகல் கனவு காணறதையெல்லாம் போட்டா என்னைப் பைத்தியம்னே முடிவு கட்டிடுவாங்க:-))

பதிவர் மீட்டிங்கா? அது 3 தனிப்பதிவு போடற மேட்டர். ஐடியா இருக்கு, பார்க்கலாம்;-)

surveyfathar ஓட்டெடுப்பு ஒண்ணு வச்சிருக்கேனே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெட்டிப்பயல்.

வாங்க தலை! தொண்டன் பேரு கூட மறக்கிற தலைவனா ஆயிட்டீங்க:-( டிஸ்கி விடுவதெல்லாம் உங்ககிட்ட கத்துகிட்ட பாடம்தானே:-))

ரவி said...

கொடுமை கொடுமை !!!

பக்கத்தில் மானேஜர் அமர்ந்து ஏதோ ஒரு பி.பி.டியை பிடித்து உலுக்கிக்கொண்டிருக்க, பிஸினஸ் யூனிட் ஹெட் ஏதோ உளறிக்கொண்டிருக்க, நான் லூசுமாதிரி சிரித்துவைத்து வருடக்கணக்கா கட்டிக்காத்த உருப்புடியான பெயரை டரியல் ஆக்கிடக்கூடாதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் பினாத்தலாரே !!!!

தும்மல் வந்து அடக்குறமாதிரி எனக்கு இப்படி ஒரு காமெடி கஷ்டத்தை கொடுத்திடீங்களே - உருப்புடுவேளா ?

வயிற்றுவலியுடன்,
நாந்தான்.

ரவி said...

நாந்தான் = செந்தமிழ் மணி

இலவசக்கொத்தனார் said...

பெரிய ஹிட்தான் போல இருக்கு. நடுவுல காணாமப் போன நிறையா பேரை வெளிய கொண்டுவந்துட்டீங்களே!

Anonymous said...

நான் எக்ஸ்ட்ராவா என்னத்தச் சொல்ல...

அட்டகாசமான பதிவு...

VSK said...

இப்பத்தான் பார்த்தேன்!

ஒவ்வொண்ணும் சூப்பர்![அதான் இப்ப இது தமிழ் சொல்லாயிடுச்சே!]

பதிவில் "பெயர் பெற்ற" அனைவருக்கும் வாழ்த்துகள்!

இனிமே ஒரு பெரிய நன்றி அறிவிப்பு பதிவா வரும்னு நினைக்கிறேன், "பெயர் பெற்றவரிடமிருந்து"!

அட்டகாசமான கற்பனை, பெனாத்தலாரே!

குமரன் (Kumaran) said...

இது முறையா நீதியா சுரேஷா இது தகுமா?

எப்படி என்னை மறக்கப் போகும்?

Santhosh said...

கலக்கிட்டிங்க சுரேஷ்.

சேதுக்கரசி said...

ரொம்ப மெனக்"கெட்டு" எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன் :-D பெரும்பகுதி புரிஞ்சுது...

பினாத்தல் சுரேஷ் said...

//நாந்தான் = செந்தமிழ் மணி // அப்படிச் சொன்னாதான் புரிஞ்சுக்கிற ரேஞ்சிலையா நான் இருக்கேன் ரவி?

நல்லவேளை தப்பிச்சீங்க! இல்லாட்டி எல்லாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கற ரவியோட வேலையப் பறிச்சது பினாத்தல்னு ஒரு இழிபெயர் வந்திருக்கும்:-))

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் கொத்தனார். நெறைய பேர் படிக்கறாங்கன்னு தெரியுது. ஆனா பின்னூட்டம் வரைக்கும் இழுக்கணும்னா பதிவு நல்லா இருக்கணுமுன்னும் புரியுது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜி.

நன்றி எஸ்கே. சூப்பர் இப்ப தமிழ்ச் சொல்லா? சங்க காலத்துல இருந்தே தமிழ்ச்சொல்தான் சார்.

குமரன் அதான் சொன்னேனே. சொல் ஒரு சொல்லே மட்டும்தான் நீங்க குவாலிபை ஆவீங்க, அதுலே இன்கி பின்கி பான்கியிலே ராகவன் மாட்டிட்டாரு:-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சந்தோஷ்.

சேதுக்கரசி அதென்ன "கெட்டு" என்ன உள்குத்து? என் தேகம் வெளிக்குத்தை தாங்கும்.. பல ஏரியாக்கள்லே உங்க பின்னூட்டத்தை பார்த்திருந்தாலும் என் ஏரியாலே இதான் முதல்தரம். வாங்க வாங்க!

இலவசக்கொத்தனார் said...

//ஆமாம் கொத்தனார். நெறைய பேர் படிக்கறாங்கன்னு தெரியுது. ஆனா பின்னூட்டம் வரைக்கும் இழுக்கணும்னா பதிவு நல்லா இருக்கணுமுன்னும் புரியுது.//

சரி. பின்னூட்டம் வ்ரைக்கும் இழுக்கணமுன்னா என்ன பண்ணனுமுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்க. அவங்க திரும்பத் திரும்ப வரணமுன்னா என்ன செய்யணும்? அதை யோசிச்சிச் சொல்லுங்க. :)

இலவசக்கொத்தனார் said...

//சரியாச்சொன்னீங்க, சுரேஷ்.
அதுவும் அந்த காஸ்ட்லி மேஸ்த்ரி இருக்காரே... அம்மாடியோவ் !//

ரொம்ப புகையுற வாசனை அடிக்குதே... யாருப்பா எதாவது எரியுதான்னு பாருங்க.

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல்,

இது வரை வந்ததுல எத்தனை கலக்கிட்டீங்க, சூப்பர் போன்ற பின்னூட்டங்கள்?

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் ரொம்ப நல்ல பதிவு குடுத்தா ஜாக்கிரதையா இருந்துக்குங்க அடுத்த பதிவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் கவுந்துடும்.

இலவசக்கொத்தனார் said...

கவுந்தாக்கூட பரவாயில்லை. அங்க வந்து யாராவது Back to Form அப்படின்னு போட்டா அப்புறம் பொழப்பு நாறிடுமில்ல.

இலவசக்கொத்தனார் said...

என்னது, நானே சொல்லித்தரேனா? அது சரி. நம்மால சும்மா இருக்க முடியலையே! :(

இலவசக்கொத்தனார் said...

ஆஹா கவுண்ட் விட்டுட்டேனே. இது 96 / 97?

இலவசக்கொத்தனார் said...

நான் மட்டும் இவ்வளவு போட்ட பின்னாடி 100 அடிக்க முடியாம போகட்டும், உம்மை சும்மா விட மாட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொத்தனார் அவர்களே..ன்னு முடிச்சுடாம..

கொத்தனார், அந்த சூட்சுமங்கள சுருக்கமா இங்கே சொன்னாதான் என்னவாம்? னு கேக்கறது 50% பலன் தரும்.

என்னிடம் வந்து கேட்கிறீர்களே, உங்களையே திருப்பிக்கேட்டுக்கொள்ள தெம்போ திராணியோ இருக்கிறதா? னு கேக்கறது 75% பலன் தரும்.

தோழர்களே, பாருங்கள் - கொத்தனாரின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதுன்னு கெளப்பிவிட்டா 100% உத்தரவாதம்:-))

கரெக்டா? எல்லாம் தெரியும் சாமி. பண்றதுக்குதான் நேரமும் பொறுமையும் இல்லை.

இலவசக்கொத்தனார் said...

உஷாக்காவிற்கு நட்சத்திரம் யாருன்னு தெரியலையாமே. ஒரு ஹிண்ட் குடுக்கலாமில்ல.....

இலவசக்கொத்தனார் said...

இதுதான் 100ஆவதா?

இலவசக்கொத்தனார் said...

இல்லை இது 100ஆவதா?

இலவசக்கொத்தனார் said...

எப்படியோ 100 தாண்டியாச்சி இல்ல. வாழ்த்துக்கள். அடுத்த விக்கி பதிவைப் போட ஏற்பாடு பண்ணுங்க.

வர்ட்டா....

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸ்,

நூறு அடிச்சதுக்கு தாங்க்ஸ். முன்னேயும் பின்னேயும் யாரும் வர விடாம கம்பு சுத்தி ஜெயிச்சுட்டீங்க:-))

பினாத்தல் சுரேஷ் said...

form is temperory, class is permanentனு யாரோ சொல்லலே?

Back to form அவஸ்தைய பல முறை அனுபவிச்சிருக்கேன் கொத்ஸ்:-(

ஸ்டார் யாரா? அவரு நேத்துதான் எழுத வந்திருக்காரு அவரை எப்படி உங்களுக்கு தெரிய முடியும்??

Anonymous said...

நம்ம பொட்டியில GMAIL Authentication வேலை செய்யமாட்டேங்குதுங்க. அதான் ரொம்ப நாளா யாருக்குமே பின்னூட்ட போட முடியில. ஆனா உங்க பதிவு...போல்ட் நட்டு ஆயில் பெரிய இயந்திரத்துக்கு நடுவுல இப்படி ஒரு சிந்தனையா. வந்தனம்
இளா..

Unknown said...

லேட்டஸ்ட்டா, லேட்டா வந்திருக்கேன், நல்லா வாய்விட்டு சிரிச்சேன்.

கெ.பி.
பினாத்தலார் ரசிகர் மன்றம், அமெரிக்கக் கிளைத் தலைவி:-)

இலவசக்கொத்தனார் said...

//form is temperory, class is permanentனு //

அதுனாலதான் அந்த காலத்துல போர்த் பார்ம், பிப்த் பார்ம் அப்படின்னு சொன்னாக்கூட நீ எந்த கிளாஸ் படிக்கிற என்ற கேள்விதான் நிலைச்சு இருக்கு. சரிதாங்க நீங்க சொல்லறது. :)))

இலவசக்கொத்தனார் said...

..Back to form அவஸ்தைய பல முறை அனுபவிச்சிருக்கேன் கொத்ஸ்:-(//

அவ்வளவு தடவை நல்ல பதிவும் போட்டு இருக்கேன் அப்படின்னு சுயதம்பட்டமா? நடக்கட்டும் நடக்கட்டும். :)))))

கோபிநாத் said...

வணக்கம் சுரேஷ்
கலக்கிப்புட்டீங்க..
அட்டகாசமான பதிவு...

தருமி said...

////சரியாச்சொன்னீங்க, சுரேஷ்.
அதுவும் அந்த காஸ்ட்லி மேஸ்த்ரி இருக்காரே... அம்மாடியோவ் !//

ரொம்ப புகையுற வாசனை அடிக்குதே... யாருப்பா எதாவது எரியுதான்னு பாருங்க.//

காதுல புகையா வருதே..!

ஆனாலும் சுரேஷ்,

அந்த மனுஷன சும்மா சொல்ல்க் கூடாது. பாருங்களேன்..தனியாளா நின்னு கம்பு சுத்தி 100வது பின்னூட்டம் தனதாகத்தான் இருக்கணும்னு எவ்வளவு பாடுபட்டிருக்கார். நல்ல மனசுக்காரர்தான் ... இல்ல..

தகடூர் கோபி(Gopi) said...

"கனவில் வந்த தமிழ்மணம் - 2 " எப்ப ???

மு.கார்த்திகேயன் said...

அருமையான கற்பனைங்க பெனாத்தல்.. ஹிஹி.. என் பேரும் எப்படியோ உங்க கனவுல வந்திருக்கே..

மு.கார்த்திகேயன் said...

பெனத்தலாரே.. உங்க கனவு கண்ணை டெஸ்ட் பண்ணுங்க.. ஹிஹிஹி.. பேரெல்லாம் மாத்தி மாத்தி தெரியுதே

Anonymous said...

சுரேஷ், உங்கள் பக்கம் முழுசா எனக்கு வரலை.. சொன்னீங்களே.. !! உங்களுக்காவத கனவு மட்டும்..நமக்கு கனவில் நம்ம நண்பர்கள் சுத்தி நின்னுக்கிட்டு..கேள்வி மேல கேள்வி கேட்கறாங்க.. நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டம கேள்வி கேட்கறாங்க என்ன செய்றது.. :)
சூப்பரா இருக்குன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க..எனக்குதான் பக்கம் முழுசா வரலை ...:(

ramachandranusha(உஷா) said...

மு.கார்த்திகேயன் said...
பெனத்தலாரே.. உங்க கனவு கண்ணை டெஸ்ட் பண்ணுங்க.. ஹிஹிஹி.. பேரெல்லாம் மாத்தி மாத்தி தெரியுதே
:-)))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

நீண்ட காலமாக அணியில் தொடர்ந்து ஆடிவரும் பேட்ஸ்மன், மன்னிக்கவும் ஆல்ரவுண்டர் அவர். இப்போது தான் சதம் அடித்திருக்கிறார். யார் அவர்?




பினாத்தலார் தான்.
அதுலயும், இ.கொ. மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணிட்டாருன்னு பேசிக்கிறாய்ங்க:-))

fhygfhghg said...

பட்டையைக் கிளப்பிட்டீங்க....

Jayaprakash Sampath said...

பினாத்தலாரே...பொதுவா அம்பதுக்கு மேல கமண்ட் இருக்கிற பதிவுகளைப் படிக்கறது கிடையாது... இருந்தாலும் ஒரு 'இதுலே' வந்தேன்..

சும்மா சொல்லக்கூடாது.. பின்னிட்டிங்க.. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு :-)

பினாத்தல் சுரேஷ் said...

இளா, சிந்தனைக்கு போல்டு நட்டு ஆயிலா தடை செய்ய முடியும்;-))

பினாத்தல் சுரேஷ் said...

@கெ பி.. லேட்டஸ்டாவாவது வந்தீங்களே, நன்றி. இந்த மாசம் உங்க கிளைலே எவ்வளோ வசூல்?

@கொத்தண்ணா.. எப்படி அண்ணா இவ்ளோ பொறுமை உங்களுக்கு? கமெண்டை ஓப்பன் பண்ணி படிச்சு பதில் சொல்றதுக்கு பேஜ்லோஅட் டிமுக்குள்ளேயே ரெண்டு முறை சாப்பாடு ஓவர்:-(

//அவ்வளவு தடவை நல்ல பதிவும் போட்டு இருக்கேன் அப்படின்னு சுயதம்பட்டமா? நடக்கட்டும் நடக்கட்டும். :)))))// பின்ன இல்லையா?;-))

@கோபிநாத் - நன்றி

@தருமி, கரெக்டா புடிச்சீங்க! பாசக்கார மனுசன். எவ்வளோ கிண்டலடிச்சாலும் கோபமே வராது. ரொம்ப நல்லவன்:-))

@முத்துராஜன் கார்த்திகேயன், எதோ ஒரு இடத்திலே சேஞ் ஆயிருக்கும்.. அவ்வளவுதான்:-)))

@கவிதா, டவுன்லோஅடு பண்ணி பாத்துருங்க! கலாய்க்கப்பட்டவர்கள் அனைவரும் பார்த்தே ஆகணும்.

@அனானி, உங்களுக்கு ரெகார்டு சரியாத் தெரியல. ஒரு முறை அடிச்சிருக்கேன்.. அது ரொம்ப நாள் முன்னாலே:-( அதுலேயும் போலியார் 40ஓ 45 ஓ!

@வழிப்போக்கன் -- நன்றி!

@ஐகாரஸ் பிரகாஷ்.. நீங்க சொல்றது புரியுது. கமெண்ட் மாடரேட் பண்றதுக்குள்ளேயே பெண்டு கழலுது.

சேதுக்கரசி said...

உள்குத்தெல்லாம் இல்லீங்க.. ஹிஹி. இப்படிப் பாருங்களேன்: தினமும் தமிழ்மணம் பார்த்து கெட்டுப்போக ஆரம்பிச்சிருக்க என்னை மாதிரி newbies-க்கே முக்கால்வாசி புரியுதுன்னா, முழுசா புரிஞ்சு ரசிச்சவங்களை நினைச்சுப் பாருங்க. அதுல நீங்களும் ஒருத்தர் தானே அதான் அப்படி சொல்லிட்டேன் (அப்பாடா தப்பிச்சேனா?)

சேதுக்கரசி said...

//பொதுவா அம்பதுக்கு மேல கமண்ட் இருக்கிற பதிவுகளைப் படிக்கறது கிடையாது...//

அட இது நல்ல பழக்கமா இருக்கும் போலிருக்கே.. நம்மளும் முயற்சி பண்ணிப் பார்க்கணும் :)

பினாத்தல் சுரேஷ் said...

சேதுக்கரசி,

அந்த "கெட்டு"வைச் சொல்லறீங்களா, அதாச்சு ரொம்ப காலம்! ஐகாரஸோட அறிவுரைய நான் பின்பற்ற ஆரம்பிச்சும் ரொம்ப காலம் ஆச்சு.. கொள்கையெல்லாம் இல்லை.. டயலப்:-)

பினாத்தல் சுரேஷ் said...

ஒரு நாள் கூத்தா இருந்து அப்புறம் எல்லாரும் மறந்து போற பதிவா இது??

பி க செய்தே தீர்வேன். பின்னூட்டத்துக்காக அல்ல, இன்னும் பலர் பார்ப்பதற்காக:-))

இலவசக்கொத்தனார் said...

////form is temperory, class is permanentனு //

அதுனாலதான் அந்த காலத்துல போர்த் பார்ம், பிப்த் பார்ம் அப்படின்னு சொன்னாக்கூட நீ எந்த கிளாஸ் படிக்கிற என்ற கேள்விதான் நிலைச்சு இருக்கு. சரிதாங்க நீங்க சொல்லறது. :)))//

இம்புட்டு கஷ்டப்பட்டு சோக்கு எல்லாம் அடிச்சா சிரிக்கறது கூட இல்லையா? எந்த ஊரு நியாயம் ஐயா இது?

(இது பி.க.வுக்காகத்தான்.)

பினாத்தல் சுரேஷ் said...

சோக்கு அடிச்சா இடாலிக், கலருன்னு எப்படியாவது வித்தியாசப்படுத்தி காமிச்சிருமையா! இல்லாட்டி தெரியறதில்லை!

சோக்கு நல்லாத்தேன் இருக்கு:-))

ஜெயஸ்ரீ said...

பொங்கல் நல்வாழ்த்துகள் பினாத்தல் கணேஷ் !

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜெயஸ்ரீ. (பினாத்தல் கணேஷ் சார்பாகவும்:-)

அனைத்து தமிழர்களுக்கும் த தி நல்வாழ்த்துகள்.

Anonymous said...

பார்த்தலே தெரியுதே இது கனவல்ல.யாரோ ரொம்ப யோசித்து செய்த லொள்ளு என்று...சிரித்து வயிறு வலிக்க வைத்து விட்டீர்கள்.பொங்கல் வாழ்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துர்கா, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

கனவுதான்:-) ஆசீப் சொன்னா மாதிரி கெட்ட கனவு:-)

சேதுக்கரசி said...

அது யாரு "பினாத்தல் கணேஷ்"?

பினாத்தல் சுரேஷ் said...

சேதுக்கரசி,

பினாத்தல் கணேஷா? அவரு ரொம்ப நல்லவரு....

ஆவி அம்மணி said...

நாங்க இல்லைன்ற தைரியத்துல துளிர் விட்டுப் போச்சும் ஓய் உமக்கு!

அதான் எங்க ஊர்க்காரங்க யாரும் உங்க கனவுல (கூட)வரலையா?

Anonymous said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

Anonymous said...

பெனாத்தலாரை நான் வேக வெச்சித் தாரேன்! அதுவரைக்கும் பொறுமையா இருக்கணும் கண்ணுங்களா!

வேணும்னா சூப் எடுத்து தாரேன் மொதல்ல!

Anonymous said...

தலைக் கறி எங்களுக்குத்தான் வேணும்!

சேதுக்கரசி said...

//பினாத்தல் கணேஷா? அவரு ரொம்ப நல்லவரு//

இது ஏதோ எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி இருக்கே? ஏதோ சம்திங் ராங்.. :)

பினாத்தல் சுரேஷ் said...

ஆவி, குட்டிச்சாத்தான் அண்ட் கம்பேனி:-)

லேட்டா வந்தாலும் உங்களுக்குள்ள செம அண்டர்ஸ்டேண்டிங்! பப்ளிஷ் பண்ரதுக்கு முன்னாடியே எப்படி ஒருத்த்ருக்கு ஒருத்தர் பதில் எல்லாம் கொடுத்திருக்கீங்க!!

பினாத்தல் சுரேஷ் said...

பினாத்தல் கணேஷ் காணாமப்போயிடுவாரு சேதுக்கரசி. அவரோட ஏக்கம்தான் 2007லே தீந்துபோச்சே:-)

 

blogger templates | Make Money Online