Mar 18, 2007

சர்வேசன் போட்டிக்கதை :-)

"எழுந்திருடா"

"இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சி எழுப்பேண்டா"

"பஸ் விட்டுடுவோம்.. கிளம்புடா"

"என்னடா டீ இது.. பூனை மூத்திரம் மாதிரி? சூடா கொடுக்க மாட்டானா அந்த
லூஸு? மூணு ரூபா வாங்கறானில்ல? சும்மா விடப்போறதில்லை அவனை! ஏறர ஏறுலே
அவன் ஆப் ஆயிடணும் இன்னிக்கு"

"சரிதான். அவன் டீ கொண்டுவந்துவச்சு 30 நிமிஷம் ஆச்சு. சூடாவே
இருக்கறதுக்கு பிளாஸ்க்கா வாங்கிக் கொடுத்த?"

******

"எட்டு அஞ்சுதானடா ஆச்சு? அதுக்குள்ளே கிளப்பிட்டான்.. அவனுக்கு கொழுப்பு
அதிகமாப் போச்சு. இன்னிக்கு ஆபீஸ் போனவுடனே பெர்சனல்லே போட்டுக் கொடுத்து
அவன் சீட்டைக் கிழிச்சாதாண்டா என் மனசு ஆறும்."

"உன் வாட்ச முதல்ல ரைட் டைமுக்கு செட் பண்ணு. எட்டேகால் ஆச்சு!
போட்டுக்கொடுத்தே.. உன் சீட்டுதான் கிழியும்"

*******

"லேட்டா வந்ததுக்கு என்னை மட்டும் பிடிச்சு ஏறறான் அந்த மேனேஜன். நேத்து
விக்கி எத்தனை மணிக்கு வந்தான் தெரியுமா? பதினொண்ணரை! அவனை மட்டும்
சும்மா விட்டுட்டான். அவனுக்கு இன்னிக்கு ஆப்பு வைக்கிறேன்."

"விக்கிக்கா? நேத்து அவன் ஆப் டே லீவு. லெட்டர் முந்தாநேத்தே
கொடுத்துட்டான். வேலை சீக்கிரமா முடிஞ்சு பதினொண்ணரைக்கே வந்ததுக்கு அவனை
பாராட்டதான் செய்வாங்க!"

******
"பசிவேளைலே இவ்வ்ளோ பெரிய க்யூவில சாவடிக்கிறாங்க! ஒரு ப்ளேட் வெஜ்
பிரியாணி கொடுப்பா"

"சார், பிரியாணிக்கு அந்த க்யூவில நிக்கணும். இந்தக் க்யூ தோசை சப்பாத்தி
மட்டும்தான்"

"ஏன்யா, இவ்ளோ நேரம் நிந்தவன் என்ன லூஸா? எந்த க்யூ எதுக்குன்னு
எழுதிவைக்க மாட்டீங்க? கம்ப்ளெயிண்ட் புக் எடுப்பா, உங்களைச் சும்மா
விடறதில்ல!"

"சார், அங்க தெளிவா எழுதி ஒட்டியிருக்கே, படிக்கத் தெரியாதா? வந்துட்டாரு
கம்ப்ளெயிண்ட் எழுதறதுக்கு!"

******

"சார் எழுந்துருங்க"

"ஏன் சார் தூங்கறவனை எழுப்பறீங்க? ரிட்டன் பஸ்லே தூங்கறதுகூட தேசத் துரோகமா?

"லேடீஸ் சீட்லே உக்காந்திருக்கீங்க சார். நிர்மலா மேடம் உக்கார இடமில்லாம
நிக்கறாங்க, நீங்க பின்சீட்டுக்குப் போயிடுங்க."

"ஏன் அவங்க பின் சீட்லே உக்கார மாட்டாங்களாமா?"

"பின்சீட்லே ஏற்கனவே ரெண்டுபேர் இருக்காங்க சார். நீங்கதான் அட்ஜஸ்ட் பண்ணனும்"

******

"சினிமாவாடா இது? திராபை! அந்த டைரக்டர் மட்டும் என்கையில மாட்டினான்"

"என்னடா காலைலேருந்து எவன்கூடவாவது சண்டைக்கே அலைஞ்சுகிட்டு இருக்கே?"

"பின்ன என்னடா.. ராத்திரி மூணுமணி வரை முழிச்சி மேட்ச் பாத்தா
பன்னிப்பசங்க தோத்துட்டு நிக்கறாங்க! அவனுங்க மேல இருந்த கோபத்தை
எங்கயாவது இறக்கலாம்னு பாத்தா இன்னிக்குன்னு ஒரு பய மாட்லேடா!"

"சரி நிம்மதியா தூங்கு. நாளைக்கு மேட்ச்லே ஜெயிச்சுடுவாங்க"
****

14 பின்னூட்டங்கள்:

ச.சங்கர் said...

"""நாளைக்கு மேட்ச்லே ஜெயிச்சுடுவாங்க"""

மெய்யாலுமா ??? இந்த நக்கல்தான வாணாங்கிறது :)

கோபிநாத் said...

தல
இது கதை அல்ல நிஜம் ;-)

\\எங்கயாவது இறக்கலாம்னு பாத்தா இன்னிக்குன்னு ஒரு பய மாட்லேடா!""\\

கொஞ்சம் பொறுங்க lineஆ வருவங்க..

இலவசக்கொத்தனார் said...

நாங்க பகல் பொழுதுலதான் பார்த்ததால அவ்வளவு கோபம் வரலை!! :))

பினாத்தல் சுரேஷ் said...

ச சங்கர் ..

நம்பிக்கைதான் சார் வாழ்க்கை! எத்தனை முறை ஏமாந்தாலும், திரும்பவும் நம்பத் தயாராகிறது இந்தியனின் பொதுப்புத்தி.. அதைத்தான் நான் கதையில் வடித்திருக்கிறேன்:-)

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்..

நிஜமா நிஜமேதான்..

லைனா வருவாங்களோ மாட்டங்களோ, நான் கதையில இறக்கிட்டேன் சாமி:-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்ஸ்.. இந்தக்கதையை போன வேல்டு கப்புல அனுபவிச்சிருப்பீங்களே:)

வல்லிசிம்ஹன் said...

எப்போ பர்த்தாலும் எப்படீப் பார்த்தாலும் தோல்வி தோல்விதான்.
கோபம் கோபம்தான்.
ஒரே ஒரு சந்தோஷம் பக்கத்து நாட்டுக்காரங்களும் நம்மைவிட மோசமாப் போயிட்டாங்க.
பெர்மூடாவோட ஜெயிச்சுடுவோம்:-)
நல்லாப் படைச்சிட்டீங்க பினாத்தல்!
நம்புவோம்:-)

இலவசக்கொத்தனார் said...

//வாங்க கொத்ஸ்.. இந்தக்கதையை போன வேல்டு கப்புல அனுபவிச்சிருப்பீங்களே:)//

அந்த சோகக் கதையை ஏன் கேட்கறீங்க? இறுதிப் போட்டியை சும்மா ரீவியில் பார்த்தா போதாதுன்னு, காசு குடுத்து ஒரு சினிமாத் தியேட்டரில் போயி பெரிய திரையில் பார்த்தா, நம்மாளுங்க சொதப்பின சொதப்புக்கு... :-X

அதுவும் அந்த ஐடியா குடுத்த நம்மளை மக்கள்ஸ் அடிக்காத குறை!

பினாத்தல் சுரேஷ் said...

வல்லிசிம்ஹன்,

பின்னே, இன்னும் கொஞ்சம்கூட எரிச்சல் அடங்கலை. பெர்முடாஸ்கூட 600 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சாலும் அடங்காது. கப்பே எடுத்துகிட்டு வந்தாலும் அடங்காது.

கதிர் said...

"எங்கியோ போற மாரியாத்தா
எம்மேல வந்து ஏறாத்தா"

சொ.செ.சூ இதுதான்னு நினைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

பைனல்ஸா? பாண்டிங் அன்பா தட்டிக்கொடுத்தாரே அந்த மேட்சா? தூக்கக் கலக்கத்துலயா? எப்பா, எங்க கஷ்டம் நீங்களும் பட்டிருக்கீங்கன்னு நெனச்சாலே.....

ஷ்டாருத் தம்பி.. சொ செ சூ எங்கேருந்து வந்தது??

Anonymous said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி ஹை.

http://www.desipundit.com/2007/03/18/worldcup/

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டுபுக்கு :)

சேதுக்கரசி said...

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

blogger templates | Make Money Online