Apr 29, 2007

aussies won - so, whats new?

மழையாமே, சரி ரிஸர்வ் தினத்தில்தான் மேட்ச் நடக்கும் என்று வேறு வேலை பார்க்கப் போய்விட்டேன். வந்து பார்த்தால் ஆஸ்திரேலியா வழக்கத்துக்கு மாறாக அடக்கமான ஆரம்பம். 84/0 - 14 ஓவர்களில். சரி ஒரு 5 -6 ரன்ரேட் துரத்த வைப்பார்கள், மேட்ச் சமச்சீராகத்தான் இருக்கும் என்று பார்க்க ஆரம்பித்தால் கில்லிக்கு வந்தது சாமி!

என்னய்யா இது, ஒரு பவுலருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம்? அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து 140 கிமீ வேகத்தில் போடுகிறானே, அவன் பாலோ த்ரூ முடிவதற்குள் எல்லா எல்லைகளையும் தாண்டிய வரம்பு மீறிய ஆட்டம்.

இத்தனை மேட்சில் அமைதியாக இருந்த கிள்கிறிஸ்ட் இன்று ஆடவும், தலை ஆடுது, இன்னிக்கு வால் ஆடக்கூடாது என்று தீர்மானம் போட்டு ஹேடனும் பாண்டிங்கும் அமைதி (அவங்க ரேஞ்சு அமைதி சார், அதாவது 80 - 90 ஸ்ட்ரைக் ரேட்) காக்க, ஒரு வழையா 281 அடிச்சு அவங்க கடைய மூடும்போதே மணி 11.. தூக்கம் கண்ணை கெஞ்ச ஆரம்பிச்சாச்சு!

பத்தே நிமிஷத்துல ஆரம்பிக்கும்போதே மேன் ஆப் த மேட்ச், முடிவு எல்லாம் ஏறத்தாழ தீர்மானமாகிவிட்டிருந்தது. தரங்கா யாருக்கும் அதிகம் பிரச்சினை வைக்காமல் வீடு திரும்ப, ஜெயசூரியாவும் சங்கக்காராவும் செத்த பிணத்துக்கு உயிர் கொடுக்க முயற்சித்தார்கள். டைட் ஓவரை லூஸ் ஆக்கி 16 ரன், மெக் க்ராத் ஓய்வு பெறுவதை நியாயப்படுத்த 17 ரன் என்று அவ்வப்போது ஒளி தெரிந்தாலும், 8.3க்கு குறையாத ரன்ரேட், நம்பிக்கையை ப்யூஸ் செய்துகொண்டே இருந்தது. சங்கக்காராவும் ஜெயசூரியாவும் அவுட் ஆனபிறகு ஆட்டம் தொடர்வதில் ஸ்டேடிஸ்டிக்ஸுக்கு மட்டும்தான் உதவும் என்று தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த அம்பயர்கள் செய்த அநியாயங்கள்? பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்குக்கு, க்ளார்க் அடித்த முதல் ரன்னை சாப்பிட்டார்கள். வெளிச்சக்குறைவை ஏற்று இலங்கை பேட்ஸ்மேன் வெளியேற, ஆட்டம் முடியவில்லை, நாளை தொடரும், கொண்டாடாதீர்க்ள் எனத் தடை போட்டார்கள். அடப்பாவிகளா! அது முன்னாலேயே தெரிந்திருந்தால் 30 ஓவரிலேயே வெளியேறி கொஞ்சமாவது அதிகமாக வாய்ப்புகளை வைத்திருப்பார்களே!

இந்தப் பிரச்சினைகளில் 30 - 40 நிமிடம் வழக்கத்தை விட அதிகமாகி, பால் எங்கே அம்பயர் கால் எங்கே என்று தெரியாத ஒரு இருட்டில் ஆட்டத்தை ஆடி கணக்குக் காட்ட முயன்றார்கள். ஜெயவர்தனேவின் பண்பு பாராட்டத்தக்கது. அவர் வேண்டுமானால் பிடிவாதம் பிடித்து இன்னொரு நாள் தோல்வியை தள்ளிப்போட்டிருக்கலாம்.

எனக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால், அம்பயர்களின் முடிவுகள் வெளிப்படையாக இல்லாதது. முதல் இன்னிங்ஸில் சட்டப்படி அவர்கள் எடுத்த முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால் பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்கை க்ளார்க்கின் முதல் பாலிலேயே தண்டனை கொடுப்பது நியாயமா? 3 ஓவரில் 80 ரன் அடிக்கவேண்டி மறுநாள் வருவது சட்டமாக இருக்கலாம், இவர்களுக்கே ஓவராகத் தெரியாதா?

ஒரு வழியாக கோப்பையை ஆஸ்திரேலியர்கள் ஷாம்பெயினால் குளிப்பாட்டிய போது மணி 4! ஆலிம் தர் குறைந்தபட்சம் 40 நிமிஷம் சாப்பிட்டுவிட்டார்!

ஆஸ்திரேலியா எப்படி இப்படி சொல்லிச் சொல்லி ஜெயிக்கிறார்கள்? என்றைக்காவது பாண்டிங்தான் எங்கள் கடவுள் என்று ஒரு போஸ்டர் பார்த்திருக்கிறோமா? வார்னேவை டீமில் சேர்க்க உண்ணாவிரதம் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா? ஈஸ்ட் ஆர் வெஸ்ட், கில்லி இஸ் த பெஸ்ட் என்றாவது ஒரு போஸ்டர்? தனிநபர்களாக இல்லாமல் குழுவாகவேதேன் இந்தப் பத்து வருடமுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறது ஆஸ்திரேலியா. மெக்க்ராத் சொல்கிறார், நாலு பந்து ஆடியிருப்பேன் உலக்ககோப்பையில், அது ஃபோர் டூ மெனி -யாம்.

பேட்ஸ்மேன் அவர்கள் வேலையைச் சரியாகச்செய்கிறார்கள், பௌலர்கள் தங்கள் வேலையை, பீல்டர்களும் அவ்வாறே. வேறெந்த டீமிலும் இல்லாத ப்ரொபஷனல் அணுகுமுறை. பேட்ஸ்மேன்கள் இரண்டிரண்டு பேராக ஜோடி சேர்த்து ஆடுகிறார்கள், கில்லி அவுட்டானால் ஹேடன், பாண்டிங் அவுட்டானால் க்ளார்க்கு, சைமண்ட்ஸ் அவுட்டானால் ஹஸ்ஸி! எதாவது ஒரு மூணு பேர் ஆடிவிடுகிறார்கள்.

தெளிவான திட்டமிடல், எந்த தேவையில்லாத டென்ஷனையும் மேலேற்றிக்கொள்ளாத மனப்பாங்கு, பெர்பார்ம் செய்யாவிட்டால் தொங்கும் கத்தி (பழம்கதையெல்லாம் உதவாது!)-- பொறாமைப்பட வைக்கிறது ஆஸ்திரேலியாவின் டீம்.

ஜெயிச்சதுக்கு வாழ்த்தெல்லாம் அவங்களே எதிர்பார்க்கமாட்டாங்க - சோ, வாட்ஸ் நியூன்னு சொல்லிட்டு போயிடுவாங்க!

7 பின்னூட்டங்கள்:

Naufal MQ said...

//பொறாமைப்பட வைக்கிறது ஆஸ்திரேலியாவின் டீம்.
//

அதே அதே.

-L-L-D-a-s-u said...

East or west Aussie is the best

Gillie, the God

I want Warne Back

Ponting the Greate

McGrath, the Angel

சொல்லியாச்சு.. இனிமேயாவது இந்தியா மாதிரி விளையாடுவார்களா?

பினாத்தல் சுரேஷ் said...

பாஸ்ட் பவுலர்.. எரிச்சலை எழுப்பும் பொறாமை.. இல்லையா?

எல் எல் தாஸு -- பேசாம ஒரு யாகமே நடத்திடலாம் இதுக்கு நீங்க ;-)

Naufal MQ said...

//பாஸ்ட் பவுலர்.. எரிச்சலை எழுப்பும் பொறாமை.. இல்லையா?//

அப்படியில்ல தல. இவ்வளவு கட்டுக்கோப்பா, விளையாட்டை வியாபாரமா நினைக்காம( ஆக்காம) விளையாட்டா மட்டும் எடுத்து, அரசியல் பூசல்கள் இல்லாம, எதிரிக்கு அஞ்சாம அவனுங்க விளையாடுறத பாக்கும் போது இந்த பிரச்சனைகள் நம்ம அணியை சீர்குழைச்சிருச்சே அப்படிங்கிற பொறாமை.

ஹூம் என்ன செய்ய முடியும். இந்திய வாரியத்தில் அடிப்படை மாற்றங்கள் நடக்கும் வரை ஏதோ ஒன்றிரண்டு போட்டிகளில் இந்தியா ஜெயிக்கும் அதை பார்த்து நாமும் கைதட்டி அவனுங்களுக்கு கட்-அவுட் வைக்க வேண்டியது தான். மற்றபடி நம்பர் ஒன் அணியாகவெல்லாம் நம்மால் வரமுடியாது. :(

மஞ்சூர் ராசா said...

//பேட்ஸ்மேன் அவர்கள் வேலையைச் சரியாகச்செய்கிறார்கள், பௌலர்கள் தங்கள் வேலையை, பீல்டர்களும் அவ்வாறே. வேறெந்த டீமிலும் இல்லாத ப்ரொபஷனல் அணுகுமுறை. பேட்ஸ்மேன்கள் இரண்டிரண்டு பேராக ஜோடி சேர்த்து ஆடுகிறார்கள், கில்லி அவுட்டானால் ஹேடன், பாண்டிங் அவுட்டானால் க்ளார்க்கு, சைமண்ட்ஸ் அவுட்டானால் ஹஸ்ஸி! எதாவது ஒரு மூணு பேர் ஆடிவிடுகிறார்கள்.//


பெப்ஸி விளம்பரம் பாக்கலெயா நீங்க. நம்ம பசங்க நாலு வருஷத்திலெ பெரியவங்களா ஆகி உலக கோப்பையெ எடுப்பாங்களாம்.

பெப்ஸிக்கு ஏகப்பட்ட நஸ்டம் போல தெரிகிறது. அதனால் தான் இந்த வாங்கு வாங்கியிருக்கிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

பாஸ்ட்.. இப்படி மனசைத் தளர விட்டுட்டா எப்படி?

மத்த கேம்ஸ்லே எல்லாம் கிரிக்கெட் அளவுக்கு பணம் இல்லை, அதனால வளர முடியலைன்றாங்க. கிரிக்கெட்லே நெறயப் பணம் அதனால வளர முடியலைன்னு சொன்னா, யாரைத்தான் திட்டறது?

மஞ்சூர் ராஜா,

அந்த பெப்ஸி விளம்ப்ரம் பாக்கும்போதே பயங்கரமான எரிச்சல். எப்படி ஜெயிச்சாலும் தோத்தாலும் தனக்குக் காசாக்கிக்கறதுக்கு பாக்கறானுங்க இவனுங்க! ஜெயிச்சிருந்தா இவனே சச்சினுக்கும் டிராவிடுக்கும் ஊரெல்லாம் கட்-அவுட் வச்சிருப்பான். அரசியல்வாதிகள் மட்டுமா சந்தர்ப்பவாதிகள்?

Anonymous said...

//ஆனால் பாண்டிங்குக்கு கொடுத்த வார்னிங்கை க்ளார்க்கின் முதல் பாலிலேயே தண்டனை கொடுப்பது நியாயமா? //

இது ஒன்று தான் அவர்கள் ஒழுங்காக கடைப்பிடித்த விதி. இதே மாதிரி இந்தியாவின் ஆட்டத்தில் ஓட்டக் குறைக்கப்பட்டிருக்கிறது.

முதல் தடவை பான்டிங்குக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை முழு அணிக்கும் கொடுக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த தடவை அதே தவறை அந்த அணியில் யார் செய்தாலும் அது இரண்டாம் முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டு, ஓட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது. உங்கள் கவனத்திற்கு.

மற்றபடி - ஆஸ்திரேலியாவை அடுத்த உலகக்கோப்பையில் நேரடியாக இறுதி ஆட்டத்தில் சேர்ப்பது ஒரு மிகச்சிறந்த முடிவு ... மற்ற அணியினருக்கு உதை முதல் ஆட்டத்தில் இருந்தே வாங்கவேண்டிய அவசியம் இல்லை பாருங்கள்?

 

blogger templates | Make Money Online