Apr 9, 2007

BJP..வீடியோ குறித்து..

பாரதீய ஜனதா கட்சியைப்பற்றி பெரிய அபிப்பிராயம் ஒன்றும் எனக்கு இருந்தது
கிடையாது. சந்தர்ப்பவாத காங்கிரஸுக்கு ஒரு மாற்று, வலதுசாரியும்
சேர்த்தால்தான் பாராளுமன்றம் சமச்சீர் பெறும் என்பதால் ஆதரவான
எண்ணங்களும், மாற்று என்பது alternate ஆக இல்லாமல் substitute ஆகச்
செல்கிறதே என்பதாலும், சிறுபான்மையினரின் அபிமானத்தை பெற இயலாமல்
இருப்பதாலும் எதிர்ப்பு எண்ணங்களும் சேர்ந்தே ஓடும்.

இன்று காலை சன் டிவி செய்திகளில் "கைதாவாரா பிஜேபி தலைவர்?" என்று
கேட்ட்போதும்கூட, சன் டிவியின் மீதுள்ள நம்பிக்கையால் (?) கவனிக்காமல்
விட்டுவிட்டேன்.

கில்லி மூலம் கிடைத்தது சித்தார்த் வரதராஜன் எழுதியுள்ள இந்தக்கட்டுரை:

http://svaradarajan.blogspot.com/2007/04/that-communal-bjp-cd-transcript.html

உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கமாக, பிஜேபி
தயாரித்திருக்கும் விளம்பரப்படத்தின் காட்சியமைப்புகளை எழுதியிருக்கிறார்
சித்தார்த் வரதராஜன்.

அந்தக்காட்சிகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன், ஆங்கிலத்தில் உள்ளது
அவர் பதிவின் காபி பேஸ்ட்:

காட்சி 1: இரு முஸ்லிம் இளைஞர்கள், இந்து எனப் பொய்சொல்லி, ஒரு தூய
இந்துவிடம் பசுமாட்டை விலைகொடுத்து வாங்கி, வெட்ட இழுத்துச்
செல்கிறார்கள். பசுமாதா செண்டிமெண்ட்!

Uncle [head in hands]: This is a terrible crime, what am I going to do?

Nephew: You can cry about this your whole life. You've committed a big
sin by selling your cow to the butchers.

காட்சி 2: இந்துக்கள் அனைவரும் குடும்பக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க,
முஸ்லீம்கள் திட்டமிட்டு தங்கள் ஜனத்தொகையை ஏற்றுகிறார்களாம்.

real news clip of speech by saffron-clad woman: "Hindus will produce
two children and Muslims will marry five times and produce 35 dogs
each and make this country into an Islamic state -- என்ன வார்த்தைகள்,
எவ்வளவு கண்ணியம்!

காட்சி 3: விவரம் தெரிந்த ஆசிரியர், மக்களுக்கு எதிர்காலத்தை
விளக்குகிறார் -- வேறு யாரும் ஆட்சிக்கு வந்தால் குங்குமம் இறங்கும்,
தாடி வளர்க்கவேண்டிவரும் என்று!

you are calling the Masterji mad but everything he said is correct. If
today we don't take care, these tilaks will go and we will all be
sporting beards and caps.

காட்சி 4: அதே ஆசிரியர், பெண்களிடம் பேசுகிறார் -- இப்போது சரியான
முடிவெடுக்காவிடில் புர்க்காவுடன் தான் அலையவேண்டி வரும்..

Woman 4: Masterji, why are you chewing your brains? People will vote
for whoever they want.

Masterji: It is your brain that has been ruined! You will end up
covered in burqas and eating paan!


காட்சி 5: ஹை டிராமா! இந்து எனப் பொய்சொல்லி காதலித்த பெண்ணை வேறு ஒரு
கிழவனுக்கு மணம் முடிக்கிறான் ஒரு முஸ்லிம் இளைஞன். செய்தி கேட்ட
சோகத்தில் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்!

Muslim man: Ha ha ha! When Hindu girls get ensnared by us, they scream
and shout but sadly there is no one to listen to them and we have
great fun. Ha ha ha ha ha!

காட்சி 6: மேற்படி ஆசிரியர் மறைவின்போது மக்கள் பேசிக்கொள்கிறார்கள் --
ஆசிரியரின் தியாகம், தீர்க்கதரிசனம் குறித்து, சோகன்லால்களும்
மோகன்லால்களும் நக்வியாகவும் அப்பாஸாகவும் மாறப்போகும் அவலம்
குறித்தும்..

Who knows how many more masters will be martyred because of their
concern for this country! But your eyes will still not open. And now,
that day is not far away when we will be afraid to even call ourselves
Hindu, and you will never be able to find a Sohanlal, Mohanlal,
Atmaram or Radhekrishan anywhere

இதைத் தொடர்ந்தும், உள்ளேயும், தலைவர்கள் பேச்சுக்கள், நிஜநிலைமை, பாபர்
மசூதி இடித்த வெற்றிச்சம்பவம் குறித்த க்ளிப்புங்குகள்..

மிகைப்படுத்தல், திரித்தல், பயத்தை உருவாக்குதல் என்ற வெற்றிகரமான
விளம்பரங்களின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கக்கூடிய வீடியோ.

திறமையான பிரச்சாரம், படிக்காத மக்களைச் சென்றடையக்கூடிய பிரசாரம்,
இம்பாக்டை உருவாக்கக்கூடிய காட்சியமைப்புகள் -- இதைத் தடை செய்தே
ஆகவேண்டும் என்பதற்கான முதல் காரணிகள்.

தலைமை அலுவலகத்தின் ஆசியோடு இப்படி ஒரு படம் வெளிவருமென்றால், இதை
மையமாகக் கொண்டு பேசக்கூடிய இரண்டாம் மூன்றாம் மட்டப் பேச்சாளர்களின்
தொனி எப்படி இருக்கும்! தலை குனியவேண்டும் அந்த ஸோ கால்டு மென்மையான
தலைவர்கள்.

சட்டமும் நீதியும் உடனடியாக கைகொடுக்கவேண்டும். இதைப் பரவாமல்
பார்க்கவேண்டும், இப்படிப்பட்ட தாக்கங்கள் மனதில் இல்லாமல் ஓட்டளிக்க,
தேர்தலையே தள்ளிவைத்தாலும் சரிதான்.

முந்தைய தேர்தல் தோல்வியினால் கடின நிலை எடுக்கவேண்டி இருக்கும் என்பது
எதிர்பார்த்ததுதான் - ஆனால் இவ்வளவு கடினநிலையா? ஆட்சிக்கு வரும் பாதை
இப்படிப்பட்டதென்றால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எந்த நிலைக்குச்
செல்வார்கள் இவர்கள்?

தீவிரவாதிகள் -- இரு மதத்திலும் உள்ளவர்கள் என்பது ஒரு சிறு
சதவிகிதம்தான். அதை அதிகப்படுத்தி, உணர்ச்சிகளோடு விளையாடி கலவரத்தைத்
தூண்டி அதன் மூலம் ஒரு ஆட்சியைப் பெற நினைக்கும் பிஜேபிக்கு..

சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ!

நாசமாய்ப் போங்கள்!

33 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..!!!

செந்தழல்

முத்துகுமரன் said...

ஓ. இதுக்கு பேருதானா ராமராஜ்யம்!

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!! ஜெய் ஸ்ரீராம்!!!.


பிஜேபி இல்லாம ராமராஜ்யம் காண்போம்னு யாரும் பீதிய கிளப்பிடாதீங்க புண்ணியவான்களா !!
**
பெனாத்தல் அருமையான பதிவு.
**

rajavanaj said...

Good post at the right time suresh!

I appreciate your stand in this.

Here is some more articles which exposes the facist ideological base of these hinduthva forces..

http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.html

http://vanajaraj.blogspot.com/2007/04/exposed-again.html

Greetings

R.V

மணியன் said...

தேர்தலை ஒத்திப்போட்டு பிஜேபியை தடை செய்வதே இதற்கான சரியான அணுகுமுறை.

//பிஜேபிக்கு..சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ!நாசமாய்ப் போங்கள்!// ..ரிபீட்டே

Anonymous said...

இந்த மாதிரி பதிவு போட்டா நீ பாப்பான் இல்லன்னு ஆயிடுமா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செந்தழல்.. அவ்ளோ கோபமெல்லாம் இல்லை..சந்தர்ப்பவாதம் அளவு மீறி போகுதேன்ற ஆத்தாமை.

நன்றி முத்துக்குமரன்.

நன்றி ராஜ்வனஜ்.

நன்றி மணியன்.

அனானி, வருகைக்கு நன்றி. எவ்ளோ கேவலமா யோசிக்க முடியும்ன்றதுக்கு உதாரணமா உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருக்கிறேன்.

Anonymous said...

இவன் சன்னும் (இவன் சன்னும்னு சொன்னது சன் டிவிய) பாப்பான்.. ஜெயாவும் பாப்பான்.. இந்தப் பாப்பான பாத்தான்னு (பத்தான்னு இல்லப்பா தப்பா படிச்சுடாதீங்க) ஆட்டோ அனுப்பி ஆக்காதவரைக்கும் எல்லாத்தையும் பாப்பான்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மறுமலர்ச்சி அ.மு.க உறுப்பினர்! நல்ல பதிலா கொடுத்திருக்கீங்க :-)

Anonymous said...

சரியான பதிவு சுரேஷ். அனானி பாப்பான் என்றதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டாம். வரவர போலிக்கே போலிகள் உருவாகி அட்டென்ஷன் சீக்கிங் டிஸார்டருடன் அலைகிறார்கள் - அந்தமாதிரி கொம்புசீவலாகத்தான் இது தெரிகிறது. மதவெறியர்களை விமர்சிக்கும் போதெல்லாம் அனானிகள் வந்து நொங்கு எடுப்பார்கள் - இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விடுங்கள். இந்த வீடியோவுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டு கட்டிவிட்டு விமர்சிப்பவனையெல்லாம் தேசத்துரோகி என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு வரும் பாருங்கள். தேசியக் கொடியைக் கயிறாக முறுக்கி அதாலேயே நம் கழுத்தையும் ஜனநாயகத்தின் கழுத்தையும் நெறித்துக் கொல்ல முயலும் இவர்கள்தான் தேசபக்தர்கள், இவர்கள் அமைக்கும் ராஜ்யத்தில்தான் தேனும் பாலும் ஓடும் - எதிர்த்துக் கேட்பவனுக்கெல்லாம் ஒரு பதில் - கயிற்றாலா கழுத்தை நெறிக்கிறேன், பாரத மாதாவின் கொடியால்தானே கழுத்தை நெறிக்கிறேன், ஏன் கூவுகிறாய் என்று! வெறிபிடித்த ஜென்மங்கள்.

Hariharan # 03985177737685368452 said...

பிஜேபி நம்ம பகுத்தறிவுக்காரர்கள் பதிவுகளில் சமூக நீதி போராட்ட வசனமாக எடுத்துவிடுவதைப் பின்பற்றுகிறார்களா??

"நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை
எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள்" என்பது தானே பகுத்தறிவு சமூக நீதி இயக்கத்தினரின் பஞ்சு டயலாக் :-))

ஒரு சமூகத்தில் சுயநலத்திற்காகச் சமூகப் பிளவை எடுத்துவருவது மிகஎளிது!

பன்முக சமூகத்தில் பரஸ்பர இணக்கத்தை எடுத்துவருவதுதான் பெரிய சிரமம்!

Anonymous said...

இன்னிக்குப் பின்னூட்டம் போட்ட மக்களைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு. இவங்க எல்லாம் உங்க பதிவுக்கு வராங்கன்ற விஷயமே இப்போதான் தெரியுது பாருங்க. இனிமே காமெடி எல்லாம் 'விட்டுட்டு' இந்த மாதிரி பதிவு எல்லாம் போடுங்க. இவங்க எல்லாரும் வருவாங்க. உங்களுக்கும் பின்னூட்டமே வரலைன்னு வருத்தமே இருக்காது!

Anonymous said...

Suresh ,there is a shade of proving or trying to prove that converted is purer than original..

If there was a mention at least that Commies too had used some CD about Gujarat riots during elections,( in West Bengal) it was even screened in movie halls, the article would have done justice. Election commission didn't raise anything there.

For all those who doubted that godhra train got fire from gas stoves or kerasin stoves, (even banerjee commn) would have got their answer from Samjotha express. ( or is that too is handiwork of RSS /VHP ???!!!)

Who doesn't exploit ... so give bad marks to everybody, may be BJP is topping the list, so yours is half truth.

Sundar - Dubai

இலவசக்கொத்தனார் said...

முதலில் எந்த விஷயமானாலும் அதனை ஜாதி மத கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, பாரபட்சமில்லாமல் தேர்தல் ஆணையம் மிகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சமயத்தை மையமாகக் கொண்ட பிரச்சாரமாக இருக்கட்டும், அவற்றிற்கான தனிச் சலுகைகளாக இருக்கட்டும், அதற்கு என் எதிர்ப்புகள்தான். (எல்லாவற்றிலும் சாதியை நுழைக்கும் - மேற்கண்ட அனானி போல்- எந்த மனிதரும் பண்பானவர்கள் இல்லை என்பதுதான் என் கருத்து)

Boston Bala said...

---நாசமாய்ப் போங்கள்!---

exactly!

Anonymous said...

ஹும்.. என்னவோ சிடி. வழக்கம் போல அரசியல் என நினைத்தேன்.. ஆனால் இந்த அளவு நாட்டை கூறு போட வித்திடும் விதமாக அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இன்னுமொறு குஜராத்துக்கு வழி வகுத்து அதில் அரசியல் ஆட்சி சுகம் காண நினைப்பது கேவலம் மட்டுமல்ல மிக கொடிமையானது..
கடுமையாக தண்டிக்கப்படவேடியது..

பிஜேபி தனி செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய கொடூரங்கள் நடைபெறுமோ என்ற அச்சத்தை அழுத்தமாக ஏற்படுத்தி இருக்கிறது இந்த விவகாரம்.


பிஜேபிக்கு -
சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ!

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹரிஹரன், உங்கள் பின்னூட்டத்தில்
//ஒரு சமூகத்தில் சுயநலத்திற்காகச் சமூகப் பிளவை எடுத்துவருவது மிகஎளிது!

பன்முக சமூகத்தில் பரஸ்பர இணக்கத்தை எடுத்துவருவதுதான் பெரிய சிரமம்! // இது புரிகிறது.

யாருடைய பஞ்சை எடுத்துத் துடைத்தாலும் அசிங்கம் அசிங்கம்தானே ஹரி?

பினாத்தல் சுரேஷ் said...

ம அ மு க தொண்டன்,

எல்லாரும் எல்லா நேரத்திலும் எல்லாப்பதிவுக்கும் வருவதும் இல்லை, வர இயலவும் இயலாது :-)

என் உப்புமாவுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை இழக்க விரும்புவேனா? ;-)

பினாத்தல் சுரேஷ் said...

சுந்தர்,

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால், பொதுவாகவே X ஐ எதிர்த்தால்தான் Y ஐ எதிர்க்க தகுதி வருகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது. அவர்கள் தவறுகளை இவர்களோ, இவர்களின் தவறுகளை அவர்கள் செயல்களோ நியாயப்படுத்தமுடியாது அல்லவா?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்ஸு, நீங்க நம்ம கட்சி!

பாபா, நீங்களும் நம்ம கட்சிதானா? ;-)

மனதின் ஓசை,
//பிஜேபி தனி செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய கொடூரங்கள் நடைபெறுமோ என்ற அச்சத்தை அழுத்தமாக ஏற்படுத்தி இருக்கிறது இந்த விவகாரம்.//

ஆமாம்.

Anonymous said...

//
பொதுவாகவே X ஐ எதிர்த்தால்தான் Y ஐ எதிர்க்க தகுதி வருகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது.
//

எதிர்க்கத்தான் வேண்டும் என்றால் எல்லோரையும் தான் எதிர்க்கவேண்டும்.

CPIM கட்சி முக்கியமாக யோசிக்கவேண்டும்.

முசுலீம் அடிப்படைவாதிகள், கோவை குண்டு வெடிப்புகளில் சம்பந்தப் பட்ட கிரிமினல்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு இருக்கும் போது இதெல்லாம் எதிர்ப்பதற்கு தகுதி இல்லாமல் போகிறது என்பது என் கருத்து.


---

சந்தில் ஒரு சிந்து:
எனக்கென்னமோ இந்த எஸ். வரதராசன் ஒரு பி.ஜே. பி ஆள் போல் தெரிகிறான். உ.பி ஐ விட்டு வெளியில் வராமல் போயிருக்கும் ஒரு சப்பை மேட்டரை தேசிய நாளிதளில் அரங்கேற்றி அழகு பார்க்கிறார். இப்போது உ.பி சிடியைப் பற்றி தமிழகத்தில் பேசுகிறார்கள்.

அந்த எஸ். வரதராசன் வலைப்பூவுக்கு:

மத நல்லிணக்கத்தில் அவ்வளவு அக்கரை இருந்தால் சர்சுகளில் வினியோகிக்கப் படும் துண்டுப் பிரசுரங்களும், முல்லாக்களின் வெள்ளிக்கிழமை ஜுமா தொழுகை கூட்டத்தில் சொல்லப்படும் விஷயத்தையும் எழுதவேண்டியது தானே என்று ஒரு கமெண்டை எழுதியிருக்கிறார்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

சிட்டுக்குருவி,

//முசுலீம் அடிப்படைவாதிகள், கோவை குண்டு வெடிப்புகளில் சம்பந்தப் பட்ட கிரிமினல்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு இருக்கும் போது இதெல்லாம் எதிர்ப்பதற்கு தகுதி இல்லாமல் போகிறது என்பது என் கருத்து.//

நான் யாருடனும் கூட்டும் பொரியலும் இல்லாததால் எனக்கு தகுதி இருக்கிறதல்லவா? ;-))

பினாத்தல் சுரேஷ் said...

Paramapitha,

//That did not come out. But this one did. BJP becomes victimized//

If those comes out, I am sure I will condemn those too.

ஓகை said...

// உணர்ச்சிகளோடு விளையாடி கலவரத்தைத்
தூண்டி அதன் மூலம் ஒரு ஆட்சியைப் பெற நினைக்கும் பிஜேபிக்கு.. சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ! நாசமாய்ப் போங்கள்! //

பிஜேபி நாசமாய்ப் போகட்டும்.
காங்கிரசோ கம்யுனிஸ்டோ நாட்டை ஆளட்டும்.
நாமனைவரும் நன்றாக வாழ்வோம்.


சுரேஷ், மதிமுக, திக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் இரண்டாம் நிலை மற்றும் அதற்குக் கீழானவர்கள் பேசும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா?

இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படி போயிருந்தும் இவ்வாறு எழுதுவீர்களானால், இப்படிச் சொல்வதை
//If those comes out, I am sure I will condemn those too.// எப்படி நம்ப முடியும்?

Amar said...

//If those comes out, I am sure I will condemn those too. //

அது சரி போங்க...அப்புறம் நீங்க Congress குறித்து, தி.மு.க குறித்துன்னு டெய்லி பதிவு(தனியொரு வலைபூ ஆரம்பித்து) போட வேண்டியது தான்.

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை,

//சுரேஷ், மதிமுக, திக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் இரண்டாம் நிலை மற்றும் அதற்குக் கீழானவர்கள் பேசும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா?//

கேட்டிருக்கிறேனே, நன்றாகக் கேட்டிருக்கிறேன். கேட்டிருப்பதால்தான் இப்படி எழுதியிருக்கிறேன்:

தலைமை அலுவலகத்தின் ஆசியோடு இப்படி ஒரு படம் வெளிவருமென்றால், இதை
மையமாகக் கொண்டு பேசக்கூடிய இரண்டாம் மூன்றாம் மட்டப் பேச்சாளர்களின்
தொனி எப்படி இருக்கும்.

சமுத்ரா -- ஆமாம், நீங்க சொல்றது உண்மைதான், அப்படிதான் ஆயிடும் போல இருக்கு.

ஒரு பொதுவான விளக்கம்:

குறிப்பிட்ட கட்சிக்கோ மதத்துக்கோ எதிராக எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை. வேறு யாரும் இப்படி வெறுப்பையும் விஷத்தையும் உமிழும் விளம்பரம்-வீடியோக்கள் செய்ததில்லை என்றும் நான் நம்பவில்லை. நிச்சயம் இருக்கும், அரசியல் என்பது ஹை-இன்வெஸ்ட்மெண்ட் ஹை ரிட்டர்ன் வியாபாராமகிவிட்ட சூழலில் விளம்பரமும் ஹை ப்ரொபைலாகத்தான் இருக்கும்.

ஆனால், மற்ற கட்சிகள் தரும் விளம்பரங்களுக்கும் இதற்கும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட எதிரியைப் பற்றி அன்றி,ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் அன்றி, ஒரு சம்பவத்தைக் காட்டி லீவரேஜ் பெறும் நோக்கம் அன்றி,ஒரு மதத்தின் இருப்பையே கேள்வி கேட்கிறது, அதுவும் நான் சார்ந்துள்ள மதத்தின் பெயர்சொல்லி - இது கண்டிக்க வேண்டியது எனத் தோன்றியதால் இப்பதிவு.

SapthaRishi said...

அந்த வீடியோவில் இருப்பதனைத்தும் உண்மை நிகழ்வுகள் - நடந்தவற்றை அப்படியே காட்டுவது உங்கள் விவாதப்படி 'சீத் தூ' ஆனால், அப்படி நடத்துபவர்களை நீங்கள் என்ன சொல்லி கூப்பிடுவீர்கள்? உண்மையை உலகத்திற்குக் காட்டுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் - உண்மை நிலையை உணர்வதற்கும், தாங்குவதற்கும் அதை விட தைரியமும், மனோ பலமும் வேண்டும். பெரும்பான்மையான இன்றைய சூடோ செக்யுலர்வாதிகளுக்கு அந்த தைரியம் கிடையாது. உங்கள் வாதப் படி, உண்மைக்கு உங்கள் வாயால் கொடுக்கும் பாராட்டு ' சீ தூ'. நன்றாகப் பினாத்துகிறீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சப்தரிஷி.

//உண்மையை உலகத்திற்குக் காட்டுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் - உண்மை நிலையை உணர்வதற்கும், தாங்குவதற்கும் அதை விட தைரியமும், மனோ பலமும் வேண்டும்.//

எல்லாவற்றையும் விட, அந்த உண்மை வெளியே வந்தவுடன், அது நாங்கள் செய்யவில்லை, யாரோ சின்னப்பசங்க தெரியாம செஞ்சுட்டாங்க, எங்க அங்கீகாரத்தை ரத்து செய்ய டெக்னிகலா யாருக்கும் உரிமையில்லைன்னு எல்லாம் பேசறதுக்கு ரொம்பவே தைரியம் வேணும் :-)

முத்துகுமரன் said...

//எல்லாவற்றையும் விட, அந்த உண்மை வெளியே வந்தவுடன், அது நாங்கள் செய்யவில்லை, யாரோ சின்னப்பசங்க தெரியாம செஞ்சுட்டாங்க, எங்க அங்கீகாரத்தை ரத்து செய்ய டெக்னிகலா யாருக்கும் உரிமையில்லைன்னு எல்லாம் பேசறதுக்கு ரொம்பவே தைரியம் வேணும் :-)//
ரிப்பீட்டே!

தருமி said...

வாங்க கொத்ஸு, நீங்க நம்ம கட்சி!

பாபா, நீங்களும் நம்ம கட்சிதானா? ;-)
சுரேஷ்,
நானும் இந்த 'ஆட்டைக்கு' வர்ரேன். சேத்துக்கங்க...

நண்பன் said...

நியாயமான, நேசமிக்க ஒரு மனிதனாக இருப்பதற்கு, சுற்றிலுமிருக்கும் சக்திகளே இடைஞ்சல் கொடுக்கும்.

தான் செய்த ஒரு தவற்றை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அங்கே பார், இங்கே பார் என்பது தீர்வாக இருக்காது.

தேசம் என்ற பெயரில், தன் பாசிஸ மனபாவத்தை மறைத்துக் கொண்டு நாடகமாடும் கட்சி தான் பி.ஜே.பி. காங்கிரஸிற்கு ஒரு மாற்று என்ற அளவில் கூட, இவர்களுக்கான ஆதரவைத் தரக்கூடாது.

உங்களுக்கு பாராட்டுகளும், ஆதரவும்,

நண்பன்

இலவசக்கொத்தனார் said...

சுரேசு, பாபா, தருமி, நானு. யப்பா பெனாத்ஸ், நாலு பேர் சேர்ந்தாச்சே, சீட்டைக் கலைச்சுப் போடுங்க.

ஆஆஆ! ஐய்யய்யோ சீட்டுன்னு சொல்லிட்டேனா? சிடி போயி சீட்டு வந்தது டும் டும் டும்!!! :-)

பினாத்தல் சுரேஷ் said...

முத்துகுமரன் :-)

வாங்க தருமி, நீங்க இல்லாமையா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பன். பினாத்தல்கள்லெ உங்களோட முதல் பின்னூட்டம்னு நெனைக்கிறேன்.

கொத்ஸு, சீட்டு ஆடற கும்பலை மீறி, கிரிக்கெட் ஆடற கும்பலையும் மீறி போய்கிட்டிருக்கு நம்ம கட்சி. அளவுக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத மாரதான் மாதிரி விளையாட்டுதான் நமக்கு சரிப்படும்:-)

நந்தா said...

// உணர்ச்சிகளோடு விளையாடி கலவரத்தைத்
தூண்டி அதன் மூலம் ஒரு ஆட்சியைப் பெற நினைக்கும் பிஜேபிக்கு.. சீஈஈஈஈஈய்த்தூஊஊஊஊஊஊஊஊஊ!நாசமாய்ப் போங்கள்! //

நல்ல உணர்ச்சி உள்ள எந்த ஒரு மனிதனிற்கும் வரும் தார்மீகக் கோபம்தான் இது.
"ரௌத்ரம் பழகு" இவனுங்களுக்காவே எழுதி வெச்சிட்டு போய் இருப்பாரோ?

 

blogger templates | Make Money Online