Apr 4, 2007

Reservation குறித்த என் சந்தேகங்கள்

இட ஒதுக்கீடு - Reservation, மறுபடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறத்
துவங்கிவிட்டது. பல பதிவுகள் இதைப்பற்றி வந்தாலும், என் எளிய சந்தேகம்
ஒன்றே ஒன்று.. அது தீர்ந்தபாடில்லை. இதன் நுணுக்கம், செயல்பாடு பற்றிப்
பல பதிவுகள் வந்திருந்தாலும் இந்தக்கேள்விக்கு யாரும் தெளிவான
விடையிறுக்கவில்லை.

கேள்வி இதுதான்:

சிவாஜி என்று ரிலீஸ்? என்று ரிஸர்வேஷன் ஆரம்பிக்கும்?

பி கு1: சில உப்புமாவுக்கு சீஸன் உண்டு, சிலது ஆல்-டைம் -ஃபேவரைட் :-)

பி கு2: இந்த மீள் உப்புமா பதிவு, நானும் பதிவுலகத்தில்தான் இருக்கிறேன்
என்று காட்டிக்கொள்ள மட்டுமே.

பி கு 3: ரெண்டு போதாது?

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நல்லதொரு 'ராகி' உப்புமா...!!! இதுக்கு வெயிட்பண்ணிக்கிட்டே இருப்பீங்களோ ~!!!~

இலவசக்கொத்தனார் said...

இதையே உம்ம விநர்டு பதிவா நினைச்சுக்கறேன்.

1. எந்த மேட்டரையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தெரியாது.

2. உப்புமா பதிவு போடாவிட்டால் கை நடுங்கும்.

3. உலகிலேயே உப்புமாவை மீள்பதிவு செய்யும் ஒரே ஆள்.

4. அப்புறம் பின்னூட்டமே வரவில்லை என்று அழுவது.

5. இதுக்குப் பதிலா பேசாம வியர்டு பதிவே போட்டு இருக்கலாமோ என்று நண்பர்களைப் புடுங்குவது.

ஓக்கேவாப்பா உம்ம வியர்ட்டுத்தனங்கள் ஐந்து?

Anonymous said...

ரிசர்வேஷன் ஆரம்பித்துவிட்டது. ஆனால், இது ஒரு ஏமாற்றுவேலை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இது தனக்கு வேண்டப்பட்ட ரசிகர்களுக்கு மட்டுமே அநியாயமாக சில சலுகைகளை வழங்கும் முயற்சி என்று எல்லோரும் கருதுகிறார்கள்..

ஐயா, கோவிக்காதீங்க. நான் சிவாஜி பட ரிசர்வேஷன் பற்றித்தாங்க நிச்சயமா சொன்னேன்...

என்னவோ ஆயிரம் ரூபா கொடுத்தாக்க 20 டிக்கட் முதல் ஐந்து நாட்களில் எப்போது வேணுமானால் பார்த்துக்கொள்ளலாமாம். இதற்கு ரசினி மன்ற உறுப்பினர் ரெகமெண்டேஷன் வேணுமாம்..

ரிசர்வேஷன் என்றாலே கலாட்டாதான்...

Prabu Raja said...

somma uppumave podaathingappu...
kadai pakkam apram evanum vara maatan.
;-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செந்தழல். நான் உப்புமாவைத் தேடி போக மாட்டேன்.. வந்த உப்புமாவை விட மாட்டேன்.. (என்னா பஞ்ச் டயலாக்குடா!!)

கொத்ஸ்.. என்கிட்டே குணத்தை கண்டுபிடிச்சு அதிலே வியர்டையும் கண்டுபிடிச்ச நீர்தான்யா விஞ்ஞானி.. என்னால அது முடியாததாலதான் எழுதலை... இப்போ இதை ஒத்துக்கறேன் ;)

அனானி, உள்குத்து மாஸ்டரா இருக்கீங்க! ரசித்தேன் ;-)

ப்ரபு ராஜா .. நம்ம கடைக்கு வரவங்களே உப்புமாவை எதிர்பாக்கறாங்களேப்பா..

ஜோக்ஸ் அபார்ட், நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். எதாவதா நல்லா எழுத முயற்சிக்கிறேன்.

Anonymous said...

இந்த உப்புமா கிண்டுறதுக்குதானா மாங்கு மாங்குனு ஓட்டு போட்டு உங்கலை இண்டி பிளாகிஸுல தேர்வு பண்ண வச்சோம்...ஹூம்(பெருமூச்சு)

rv said...

ரிஸர்வேஷன் குறித்த இப்பதிவில் என் ரிஸர்வேஷனை ரிஸர்வ்ட் என்று சொல்லிமுடித்துக்கொள்கிறேன்.

 

blogger templates | Make Money Online