May 21, 2007

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!! (21 May 2007)

1024 என்றால் என்ன என்று கேட்டிருந்தேனே, இதோ அதற்கு விளக்கம்.

விமர்சனம் எழுதுவதற்கு படம் வெளியாகியிருக்கத் தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. நம்முடைய முந்தைய முடிவுகளும், விருப்பு வெறுப்புகளும்தான் விமர்சனமாக வெளிவருகிறது எனும்போது,
அப்படி ஒரு விமர்சனம் எழுத ஒரு பில்டர் (Builder)செய்யத்துணிந்தேன்.

இந்த ப்ளாஷை 5 நாள் முன்பே தயாரித்துவிட்டிருந்தாலும், படம் வெளிவரை வெறும் டீஸர் மட்டும் கொடுக்கலாம் என்றே ரிஸர்வில் வைத்திருந்தேன். ஆனால், படம் வெளிவருவதில் அரசியல் உள்பட பல சிக்கல்கள் - அவர்களுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக நான் ரிலீஸ் செய்துவிடுகிறேன் :-)

உங்கள் முன்கருத்துக்களைத் தெரிவு செய்தால், உங்கள் விருப்புக்கேற்ற சிவாஜி விமர்சனம் திரையில் வரும், அதை காபி பேஸ்ட் செய்துகொள்ளவேண்டியதுதான்.

விமர்சனம் மட்டுமல்ல, மதிப்பெண் போட்டு, விமர்சன பஞ்ச் லைனும் கொடுக்கும் என் சாப்ட்வேர்.

பாருங்க, பாருங்க பாத்துகிட்டே இருங்க. உங்களுக்கு கிடைத்த முடிவையும் மதிப்பெண்ணையும் பின்னூட்டமாகப் போட்டுவிடுங்கள்.

59 பின்னூட்டங்கள்:

Sridhar V said...

நல்லா பண்ணியிருக்கீங்க. :-))

இதுக்கும் 1024-க்கும் என்னய்யா சம்பந்தம்?

மேலே உள்ளது கேள்வி அல்ல. அங்கலாய்ப்பு :-)))

Ayyanar Viswanath said...

ஒருமுற பாக்கலாம்ஜி - 35 :)

குட்டிபிசாசு said...

சும்மா சொல்லக்கூடாது!!!
நல்லா குழப்பிடிங்க 3 நாளா!!

வித்யாசமான முயற்சி...வாழ்த்துக்கள்!!!

ச.சங்கர் said...

வித்தியாசமாக ?:) சிந்திக்கும் பினாத்தலாருக்கு ஜே...இல்லை..(சிவா)ஜி:)

Anonymous said...

really superungooooo

Anonymous said...

excelent!

தகடூர் கோபி(Gopi) said...

பெனாத்தல்ஜி!

சிவாஜி விமர்சன ஃப்ளாஷ் கலக்கல்ஜி

:-)

Anonymous said...

:)

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா இது? சன் டிவி திரை விமர்சனம் மாதிரி வெளிய வரவங்க எல்லாம் சூப்பருங்க, நல்லா இருந்துச்சு, இன்னும் ஒரு முறை வருவேன்னே சொல்லிக்கிட்டு இருக்காங்க?!!

உள்ள போகவே பயமா இருக்கே!!

இலவசக்கொத்தனார் said...

ஸ்ரீதர், பதிவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு தலைப்பு எல்லாம் வைக்கிறாரு. அதைப் பார்க்கறது இல்லையா?

1024ன்னா என்ன? இப்போ சொல்லுங்க!

ப்ரசன்னா said...

ஒரு முறை பார்க்கலாம்ஜி - 46

இலவசக்கொத்தனார் said...

நம்ம விமர்சனம் சொல்லாம விட்டுப் போச்சே!!

ஒரு முறை பார்க்கலாம்ஜி - 41

Anonymous said...

சிவாஜிய விட வீராசாமி தேவலனு சொல்லுற தமிழ் மக்களை ஆண்டவனே கை விடமாட்டான்


:)


100/100
பிளாஷ்க்கு


0/100
படத்துக்கு


மிண்டும்
:)


M

rv said...

பெனாத்தலார்,
படம் வருமுன்பே விமர்சனத்தை வெளியிட்டு ரஜின் படத்துக்கே வழக்கமா வரும் prejudiced விமர்சன சுதந்திரத்தை பாதுகாத்து வளர்க்கும் பெனாத்தலாரின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

Anonymous said...

http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் வெங்கட்,

1024 விதமான விமர்சனங்கள் வர வாய்ப்பிருக்கிறது இந்த ப்ளாஷிலிருந்து :-)

நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அய்யனார். ஒருமுறை பாத்துடுங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

குட்டிபிசாசு,

கொழப்பணும்னுதானே ரூம் போட்டு யோசிச்சேன். ப்ளாஷ் தயார் பண்ண ரொம்ப நேரம் எடுக்கலை. விளம்பரத்துக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சேன் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ச சங்கர். ஜே இல்லை ஜி யா - அப்படீன்னா? திட்டறீங்களா, வாழ்த்தறீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானி

நன்றி அபு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி.

நன்றி பாலா. (நீங்கள் பிரபல பின்னூட்ட புகழ் பாலாவா? என்ன வெறுமனே சிரிச்சுட்டு போயிருக்கீங்க?)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தண்ணா,

நல்லா இருந்தா அப்படித்தான் சொல்லுவாங்க. உங்களுக்கு பயம் வரக்கூடாதுன்னு மோசம்னா சொல்லச் சொல்றீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தண்ணா - 2

அதானே.. தலைப்புக்கு கூட ரொம்ப கன்பூஸ் ஆனேன். சிவாஜி - திருட்டுவிசிடி விமர்சனங்கள் கூட பரிசீலனையில் இருந்ததுன்னா பாத்துக்கங்களேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ப்ரசன்னா - ஒரு முறையா அப்ப 30 - 50 மார்க்கா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இலவசம் - பாசக்கார மனுஷன்யா. உள்ளே வரதுக்கே பயமா இருந்தாலும் ஏழு பி க பண்ணிட்டீரே.

(என்ன மூணுதான் இருக்கேன்னு பாக்கறீங்களா? இன்னும் நாலு போடாமலா போயிடப்போறீங்க?)

பினாத்தல் சுரேஷ் said...

M,

ப்ளாஷுக்கு 100/100 கொடுத்ததற்கு நன்றி.

ஆண்டவன் கைவிட மாட்டானா? அப்ப வீராச்சாமி பெட்டர்ங்கறீங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு,

prejudiced விமர்சன சுதந்திரமா? ஸ்பெல்லிங் மிஷ்டீக்:-) விமர்சன தந்திரம் அய்யா அது!

பினாத்தல் சுரேஷ் said...

என்ன செந்தழல்,

ஜஸ்ட் ஒரு விளம்பரம் போட்டிருக்கீங்க, அந்தப்பதிவுக்கும் இதுக்கும் எதாச்சும் உள்குத்து சம்மந்தம் இருக்குதா?

கோபிநாத் said...

கலக்கிட்டீங்க தலைவா ;))))

27/100 ;))

வடுவூர் குமார் said...

வித்தியாசமான முயற்சி.
நன்றாக இருந்தது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.

நன்றி வடுவூர் குமார்.

ப்ரசன்னா said...

//நன்றி ப்ரசன்னா - ஒரு முறையா அப்ப 30 - 50 மார்க்கா?//

46 மார்க். போன பின்னூட்டத்திலேயே இருக்கே...

வெட்டிப்பயல் said...

கலக்கல்..

நல்லா யோசிச்சி பண்ணியிருக்கீங்க...

படத்துக்கு 85/100 ;)

Sridhar V said...

ஹ்ம்ம்... கொஞ்சம் permutation / combination-ல கோட்டை விட்டுட்டேன். அதுனால முன்னாடி தப்பான விடை வந்திடுச்சு. அதான் அந்த அங்கலாய்ப்பு :-) Sorry!

இப்ப திருப்பி போட்டு பாத்து 1024 வகையில உப்புமா கிண்டலாம்னு உறுதிப் படுத்திகிட்டேன்.

அப்ப நாந்தான் பர்ஸ்டா? :-)))

பினாத்தல் சுரேஷ் said...

சாரி ப்ரசன்னா, கவனிக்க மறந்துவிட்டேன் :-(

நன்றீ வெட்டிப்பயல்.

சிறில் அலெக்ஸ் said...

//1024 விதமான விமர்சனங்கள் வர வாய்ப்பிருக்கிறது இந்த ப்ளாஷிலிருந்து//

யாராவது தல பினாத்தலுக்கு வால குடுங்களேன்...ப்ளீஸ்
:)

இதெல்லாம் எப்டி செய்யுறதுன்னு ஒரு விளக்கப் பதிவு போட்டா நாங்களும் கலக்குவோம்ல. அல்லது ஏற்கனவே போட்டுட்டீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் - ஆமாம், நீங்கதான் பர்ஸ்ட் :)

சிறில் - அது வால -வா வேலயா? கொஞ்சம் கன்பூஸ் ஆகுது.

விளக்கப்பதிவுதானே, போடலாம். ஆனா இணையத்துலேயே ஆயிரக்கணக்குல இருக்கு. அதைப்பார்த்து பார்த்துட்தான் நான் டெவலப் பண்ணிகிட்டேன், அத்தனையயும் தமிழ்லே மொழிபெயர்க்கணும்னா பெண்டு கழண்டுரும்.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் எப்பவும் எனக்குப் பின்னூட்டம் வரலை பின்னூட்டம் வரலைன்னு அலுத்துப்பீரே. இப்போ என்ன? சந்தோஷம்தானே?

பினாத்தல் சுரேஷ் said...

என்ன கொத்ஸு இப்படிச் சொல்றீங்க?

எப்பாவாவது, நல்ல மேட்டர்னு நானே நெனச்சு அது முகப்புல ரொம்ப நேரம் இல்லாம ஓடிப்போயிடும்போதுதான் அப்படியெல்லாம் புலம்புவேன்.

மத்தபடி உப்புமா மேட்டர்க்கெல்லாம் நூத்துக்கணக்குல எதிர்பாக்கற ஆளும் நான் கிடையாது:-)

(டிஸ்கி : நோ உள்குத்து)

Anonymous said...

Nice attempt

4*4*4*4*4 = 1024 correcta? :)

Unknown said...

ஆக விமர்சனம் ஹிட் ஆகிருச்சு...:)

இலவசக்கொத்தனார் said...

சிறிலு, அதெல்லாம் மனுசன் கெட்டி. வியாபாரத் தந்திரங்களை எல்லாம் அப்படிச் சீக்கிரம் சொல்லித் தந்திட மாட்டார். பார்த்துக்கிட்டே இரும். கடைசி வரை இப்படி எதாவது சொல்லி அல்வாதான். இல்லை, இது பத்தி விக்கி பசங்க போஸ்ட் ஒண்ணு போட்டு இருப்பாருல்ல.

பினாத்தல் சுரேஷ் said...

சஞ்சீவி..

கரீக்டா கணக்கை புடிச்சீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் தேவ்.. ஹிட்டுதான் ஆயிடுச்சி.

ஆனா நீங்கதான் மார்க் போடாம இருக்கீங்க..

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தண்ணா..

இதிலே என்ன தந்திரம் வாழுது? சொல்ல ஆரம்பிச்சேன்னா இந்த பழையகால ப்ரோக்ராமையா யூஸ் பண்றேன்னு கேள்வி வரும். யாராவது விவரம் தெரிஞ்சவங்க பாத்தா அட இந்த வேலையையா இவன் இப்படி சுத்திமுத்தி பண்றான்னு சிரிப்பாங்க..

சொல்லிக்கொடுக்கற அளவுக்கு எனக்குத் தெரியாதுன்றதுதான் உண்மை :-)

இங்கே பாருங்க, நெறய டுட்டோரியல் இருக்கு:
www.kirupa.com

நாகை சிவா said...

84 மார்க்....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா அலையஸ் புலி

ALIF AHAMED said...

இங்கே பாருங்க, நெறய டுட்டோரியல் இருக்கு:
www.kirupa.com
///


பயன் உள்ள தகவல்
மிகவும் நன்றி

அபி அப்பா said...

iஇதுல எனக்கு என்னா பயம்ன்னா நீங்க கஷ்டப்பட்டு உழைச்ச இந்த பதிவு போட்ட 2 நாளில் ஈ அடிக்குதுன்னு ஒரு உப்புமா பதிவு போட்டு தூக்க வேண்டி வந்துடுச்சி, அது போல சிவாஜி கஷ்டப்பட்டு எடுக்கராங்க அதுவும் .....என் வாயால சொல்லமாட்டேன்பா:-))

நல்லதே நெனைப்போம்!!

Anonymous said...

ஒரு முறை பார்க்கலாம்ஜி - 47

மணியன் said...

38 மார்க் வந்ததை சொல்லாமல் போய்விடலாம் என்று பார்த்தால் இருகைகளை சூடாக்கி பயமுறுத்துகிறீர்களே !

தினமும் இருமுறை வந்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன், விட்டுவிடுங்கள் :)

பினாத்தல் சுரேஷ் said...

மின்னல்,

அது ஒரு சுரங்கம். அங்கே இருந்து actionscript.org யும் போய் பாருங்க.கான்சப்டை புரிஞ்சுகிட்டா அப்புறம் கலக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா..

நல்லதே நினைப்போம் - சரி, யாருக்கு நல்லது? ;-)

பினாத்தல் சுரேஷ் said...

பாலு,

நன்றி.

மணியன்,

அதெப்படி சொல்லாம போலாம்? தப்பில்லை?

Unknown said...

Ennaku, 28/100. Ithhu eppadi iruku!!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நெல்லை காந்த்!

பேஜாருஜி :-)

Anonymous said...

Neat programming.

Anonymous said...

ennudaya mark7/100.i couldnot beleive the review ..it was 100percent my thots.kili josyam theriyuma enna?


just read your avan vikatan. hilarious.honestly there is nothing more streotypical than women's magazine.
thaiyal kurippu matrum michamana kuzhambai repair seiyvadhum sollirirundal .......perfect.

திவாண்ணா said...

மொத்தத்தில் சிவாஜி பேஜாருஜி.
21/100

நினைத்தபடி சரிதான்!
திவா

 

blogger templates | Make Money Online