Jul 28, 2007

துபாய் வலைப்பதிவர் சந்திப்பு - ஆங்கோ தேக்கா ஹால்! (28 jul 2007)

ஆங்கோ தேக்கா ஹால் என்றால் நேர்முக வர்ணனை என்று ஹிந்தி.
 
நேற்று (27 ஜூலை 2007) சாயங்காலப்பொழுது அற்புதமாகச் சென்றது. மொக்கை, கும்மி என்று எப்படி அழைத்தாலும், துபாய் வலைப்பதிவர்களிடையே ஒரு இளமை அலையை இந்தச் சந்திப்பில்தான் பார்த்தேன்.
 
அளவுக்கதிகமாக போன்மூலமாகவே ஓட்டப்பட்டு பரிதாபமாக வந்த சென்ஷி,
 
இந்தப்பூனையும் பால்குடிக்குமா என்ற முகத்தோடு எல்லாக்குசும்பையும் செவ்வனே செய்துமுடிக்கும் குசும்பன்,
 
வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் அதிகமாகப்பேசிய தம்பி,
 
ஓட்டுதலுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட அபி அப்பா,
 
பொறி படத்துக்கு நல்லவிதமாக விமர்சனம் எழுதியதால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த கோபிநாத்,
 
குடும்பத்தோடும், ஒரு பிரபல அனானியோடும் வந்த பாஸ்ட் பவுலர்,
 
அளவாகப்பேசி அரட்டையில் கலந்துகொண்ட சுல்தான்,
 
பெண்பதிவர்களுக்கு ஒரு சோற்றுப்பதமாக, குடும்பத்தோடு வந்திருந்த ஜெஸிலா,
 
வார நட்சத்திரம் (நன்றாகவே வாரப்பட்டார்:-)) அய்யனார்,
 
சங்கத்து சிங்கமா, புலியா எனக்குழப்பத்தில் இருந்த நாகை சிவா,
 
அனானி என்று நல்ல பெயருடன் அறிமுகமான தியாகு
 
மற்றும் உங்கள் உண்மையுள்ள பெனாத்தலார்..
 
நல்ல மிக்ஸ். பொது மொக்கைகள் மட்டுமின்றி, தனித்தனியான குழுக்களும் கூடி அரட்டை அடித்தோம்.
 
குறித்தபடி மதியம் 4:30க்கே அரட்டை ஆரம்பித்துவிட்டாலும் சிலர் தாமதமாக வரவர களைகட்டியது. எதைப்பற்றிப் பேசினோம் என்பது யாருக்கும் நினைவிருக்காது என்றே நினைக்கிறேன்.
 
கும்மி அடிப்பது சரியா தவறா என ஆராயப்பட்டது ;-)
 
கும்மி அடிப்பது சரியா தவறா எனப்பார்ப்பதைவிட அதைத் தவிர்க்கமுடியாது, எந்த விதமான சூழலிலும் என்று நான் கூறினேன். ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசும் அலுவலகக்கூட்டங்களிலும் தனித்தனியாகக் குழு சேர்ந்து கும்மி அடிப்பது தவிர்க்கமுடியாததுபோல..
 
அய்யனார் அவருடைய கவிதைகளுக்காகவும் எழுத்து நடைக்காகவும் பெரிதும் வாரப்பட்டார். அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நான், அவர் எழுதுவது புரியாவிட்டால் ஒன்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அல்லது படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள் - அதைவிடுத்து அவர் எழுதுவதே தவறு என்பதுபோன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள் என்றேன்.
 
"இன்னுமாய்யா இந்திய டீம் மேலே நம்பிக்கை வச்சுருக்கே?" என்று பாஸ்ட் பவுலர் கேட்கப்பட்டார். ஒரு சிரிப்பிலே அதைச் சமாளித்த அவர், அய்யனார் மீது தாக்குதலைத் தொடங்கினார். அவ்வப்போது புகைப்படம் எடுத்தார், அவர் பதிவிலோ, லொடுக்குவின் பதிவிலோ அவற்றைக்காணலாம் :-)
 
பதிவைப்படிக்காமல் ஏன் பின்னூட்டம் போடுகிறார் என்ற அரிய தகவலைப் பகிரிந்துகொண்டார் அபி அப்பா. (நேரக்குறைவாம்). எழுத்துப் பிழைக்கு ப்ளாக்கர் மிஸ்டேக் என்று பெயர் வைத்த அவருடைய ராஜதந்திரத்தை அனைவரும் வியந்தோம்.
 
துபாய்க்கு வந்தவுடன் கிடைத்த ராகிங்கால் சரவணபவன் சர்வரைப்பார்த்து நீங்கள் சர்வர்தானே? குசும்பன் இல்லையே என்று கேட்கும் நிலையில் இருந்தார் சென்ஷி. பதிவுகளை விட பின்னூட்டங்களையே அதிக ஞாபகம் வைத்திருக்கிறார். "அந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டம் நான் போட்டேன், ஆனால் 8ஆவது பின்னூட்டத்தில்தான் நீங்கள் நன்றி சொன்னீர்கள்" என்ற ரேஞ்சுக்கு!
 
நாகை சிவா வந்தவுடனே எல்லார் கண்ணும் அவர்கையில் இருந்த ட்யூட்டி ப்ரீ பேக்கிற்குத்தான் சென்றது. என்ன வாங்கிவந்திருக்கிறார் என்பதை கடைசிவரை சஸ்பென்ஸாக வைத்திருந்தார். சில நாட்களாக தமிழ்ப்பதிவுகளைப் பார்க்கமுடியாத நிலையில் இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். சந்திப்பு முடிவடையும் வேளையில் வவாசங்கம் சார்பாக அனைவருக்கும் ஒரு சிங்கப்பொம்மையை பரிசளித்தார்.
 
தமிழ்மணத்தில் இருந்து விடைபெற வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை பனித்த கண்களோடு விளக்கினார் குசும்பன். அந்தப்பதிவு உண்மையாக இல்லாமல் மொக்கையாக இருந்தது அனைவரின் வருத்தத்தையும், நிஜமாக நடக்கப்போகும் அந்த நாளும் எந்த நாளோ என்ற ஆதங்கத்தையும் அனைவருக்கும் வரவழைத்தது :-)
 
ஜெஸிலா அளவாகப் பேசி, அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தார். சென்னை பெண்கள் மட்டும் சந்திப்பின் கதியைப்பற்றி பேசியபோது மட்டும் தன் ஆதங்கத்தை மறுபடியும் தெரிவித்தார். அவருடைய குழந்தையும், பாஸ்ட் பவுலருடைய குழந்தையும் சந்திப்பை வண்ணமயமாய் ஆக்கியது.
 
கோபிநாத் இன்னொரு சென்ஷி. பின்னூட்டத்தில் மட்டுமே வாழ்ந்துவருவதற்கு காரணம் தெரியவில்லை. எல்லாப்பதிவுகளையும் படிக்கிறார், எல்லார் பின்னூட்டத்தையும் ரசித்து பதில் பின்னூட்டுகிறார். ஆனால் பதிவு மட்டும் ஏனோ எழுதுவதில்லை.
 
தம்பி - பாவனா விவகாரத்தில் ஒரு முடிவை நிச்சயம் கொண்டுவருவேன் என்று நாகை சிவா சூளுரைத்தார், அதைக்கேட்டதும் தம்பி கலவரமடைந்தார். நீ முடிவுக்கு கொண்டுவந்தால் என்ன முடிவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாதா என ஆவேசப்பட்டார். தம்பியின் "மாணிக்கம் பொண்டாட்டி" கதை பற்றி பெரும்பாலானோர் சிலாகித்ததைப் பார்த்து தம்பி கூச்சத்தில் ஆறரை அடியாக சுருங்கினார். (அதற்கு முன் ஏழடி)
 
சுல்தான் தமிழ்மண மேட்டிஸ் வியாதியஸ்தரானது எப்படி என்று விவரித்தார். குறைந்தபட்சம் 1 மணிநேரமாவது பதிவுகளைப் பார்க்காமல் இருந்தால் கை நடுங்குகிறது என்றார் :-)
 
அய்யனாருடன் நடந்த குழுவிலிருந்து விலகிய பேச்சுக்களில் வண்ணநிலவன் முதல் ஜெயமோகன் வரை அனைவரையும் அலசிப் பிழிந்துக் காயப்போட்டோம். சிறுகதை வடிவம் செத்துக்கொண்டிருக்கிறது என்ற அய்யனாரிடம், அதற்கு யாரேனும் உயிர் கொடுக்கவேண்டாமா என்ற தீவிர விவாதம்..
 
இடையில் மின்னுது மின்னலின் தொலைபேசி அழைப்பு, டெல்லியில் இருந்து முத்துலட்சுமியின் தொலைபேசி அழைப்பு.. எட்டு மணியானது தெரியாமலே நேரம் கடக்க, அருகாமை சரவணபவனில் இரவு போஜனத்தோடும், கைகுலுக்கல்களோடும் விடைபெற்ற போது மணி 9:30 - 5 மணிநேரங்கள் பஞ்சாய்ப் பறந்திருக்கின்றன! 
 
விட்டவற்றை மற்றவர்கள் நிரப்புவார்கள் என்ற ஊகத்தோடு நான் நிறுத்திக்கொள்கிறேன்.
 
பிகு:  சந்திப்பு முடிகையில் அய்யனார் எனக்கு ஒரு அற்புதமான நினைவுப்பரிசினை வழங்கினார்.. ஹோட்டல் ருவாண்டா படத்தின் டிவிடி!
 
வீடு வந்து சேர 10:15 மணியானாலும் அதற்குப் பிறகு ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மணிபோல பார்த்து முடித்தேவிட்டேன். இந்தப்படத்துக்கும், சிவாஜிக்கும் இருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப்பற்றியும் இரண்டு படங்களுக்குமான சேர்த்த விமர்சனத்தை விரைவில் வெளியிடுகிறேன்!

21 பின்னூட்டங்கள்:

குசும்பன் said...

அச்சா ஆங்கோ தேக்கா ஹால் என்றால் (நல்ல நேர்முக வர்ணனை என்று ஹிந்தி).

எப்படி என் ஹிந்தி...

நானும் சரளமாக என்னிடம் ஹிந்தி பேசுபவர்களிடம் நானும் சரளமாக ஹிந்தி நகி மாலும் பாய் என்று சூப்பராக பேசுவேன். உங்கள் பதிவின் மூலம் மேலும் நான்கு வார்தைகள் கற்றுக்கொண்டேன்.

முரளிகண்ணன் said...

என்ன சார் அதிகமா இந்த பக்கம் பார்க்க முடியல. விரைவா விமர்சனம் எழுதுங்க

லொடுக்கு said...

தாக்கிட்டீங்க :)

Naufal MQ said...

தாக்கிட்டீங்க :)

குசும்பன் said...

"தமிழ்மணத்தில் இருந்து விடைபெற வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை பனித்த கண்களோடு விளக்கினார் குசும்பன். அந்தப்பதிவு உண்மையாக இல்லாமல் மொக்கையாக இருந்தது அனைவரின் வருத்தத்தையும், நிஜமாக நடக்கப்போகும் அந்த நாளும் எந்த நாளோ என்ற ஆதங்கத்தையும் அனைவருக்கும் வரவழைத்தது :-) "

அது ஏங்க எல்லாரும் என் மேல காண்டாவே இருக்கீங்க பதிவ படிக்காமயே! டேய் ஓடி போய் விடு,ஏதும் குளம்,குட்டையில் போய் விழு என்று திட்டுகிறார்கள். நான் அப்படி என்னதாங்க தப்பு செஞ்சேன்:(

கதிர் said...

சூடா போட்டுட்டிங்க போல :)

சுவாரசியமான சந்திப்பு, அதைப்பத்தி படிக்கறதூ அதைவிட சுவாரசியம். :)

நன்றி

ALIF AHAMED said...

வெல்கம் பேக்.. :)

ALIF AHAMED said...

அளவுக்கதிகமாக போன்மூலமாகவே ஓட்டப்பட்டு பரிதாபமாக வந்த சென்ஷி,
//

பாவம்ய்யா அவரு போன எடுத்தாலே கையெல்லம் நடுங்குது பாத்து பேசுங்கனு அபிஅப்பா நம்பர் குடுத்தாரு எல்லாருக்கும்..:)

Anonymous said...

இந்தப்பூனையும் பால்குடிக்குமா என்ற முகத்தோடு எல்லாக்குசும்பையும் செவ்வனே செய்துமுடிக்கும் குசும்பன்,
//

இந்த பூனை பீர் மட்டும் தான் குடிக்கும்

கோபிநாத் said...

தல

பதிவு சூப்பரு ;-)

\\கோபிநாத் இன்னொரு சென்ஷி. பின்னூட்டத்தில் மட்டுமே வாழ்ந்துவருவதற்கு காரணம் தெரியவில்லை. எல்லாப்பதிவுகளையும் படிக்கிறார், எல்லார் பின்னூட்டத்தையும் ரசித்து பதில் பின்னூட்டுகிறார். ஆனால் பதிவு மட்டும் ஏனோ எழுதுவதில்லை.\\

நீங்க கேட்டு எழுதமால் இருக்கு முடியுமா....கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க - பதிவு போட்டிருக்கேன்

கோபிநாத் said...

\\ிகு: சந்திப்பு முடிகையில் அய்யனார் எனக்கு ஒரு அற்புதமான நினைவுப்பரிசினை வழங்கினார்..\\

அட உங்களுக்கு ஒன்னு தானா? எனக்கு ரெண்டு நினைவுப்பரிசு ;-))

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலாரே, வீட்டில் தங்கமணியை பார்ஸல் பண்ணிட்டு இப்படி சின்னப் பசங்களை சேர்த்துக்கிட்டு கும்மி அடிக்கிறது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.

என்னது, வயறு எரியுதா? ஆமாய்யா ஆமாம்!!

இலவசக்கொத்தனார் said...

//ஆங்கோ தேக்கா ஹால் என்றால் நேர்முக வர்ணனை என்று ஹிந்தி.//

ஆங்கோ மேங்கோன்னு போட்டா அது ஹிந்தியாய்யா? ஆயீயேன்னா அது ஹிந்தி. வாங்கோன்னா தமிழ். அதையும் இதையும் சேர்த்து ஆங்கோன்னு போட்டு இப்படி மானத்தை வாங்கறீரே. உமக்கு ஹிந்தி தெரியுமுன்னு காட்டிக்கலைன்னா என்ன குறைஞ்சு போச்சு.

//நேற்று (27 ஜூலை 2007) சாயங்காலப்பொழுது அற்புதமாகச் சென்றது. //

அது உமக்கு. கூட இருந்து தலையில் அடிச்சுக்கிட்டவங்களுக்கு எப்படி இருந்துதாம் கேட்டீரா?

//மொக்கை, கும்மி என்று எப்படி அழைத்தாலும், //
உப்புமா பதிவுதானே எழுதக்கூடாது. அந்த வார்த்தையையேவா எழுதக்கூடாது. உப்புமா பற்றி எழுதாத உமக்கு என் கண்டனங்கள்.

//துபாய் வலைப்பதிவர்களிடையே ஒரு இளமை அலையை இந்தச் சந்திப்பில்தான் பார்த்தேன்.//

அப்பாடா. இப்பவாவது வயசாச்சுன்னு ஒத்துக்கிட்டீரே. சரி, உமக்குத்தான் வயசாச்சு. அந்த பதிவுக்கு வந்தவங்க எல்லாருமேவா அப்படி?

தொடரும்......

Unknown said...

நினைவுப்பரிசா! ஒழுங்கா திருப்பித்தரலைன்னா பாண்டிச்சேரியில வாங்குன இடத்துக்கே அனுப்பினாலும் அனுப்புவார் அய்யனார். அவர் மீசை இல்லாமல் இருப்பதன் காரணத்தை உங்களிடம் விளக்கினாரே!

Jazeela said...

இரண்டாவது நாள் வலைப்பதிவர்களை சந்தித்த நிறைவு உங்க பதிவு.

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன் கணக்கில வீக்கா? நீங்க புதுசா கத்துகிட்டது 3 வார்த்தைதான். அச்சா ஏற்கனவே ஸ்டாக்லே இருக்க வார்த்தைதானே!

முரளி கண்ணன் -- ஒரு சின்ன ப்ரேக் தான். ஊருக்கு போய் வந்ததும் புல் ஸ்விங்லே இறங்கிடறேன்.

லொடுக்கு, பாஸ்ட் பவுலர் -- எதைத் தாக்கிட்டேன்னு சொல்றீங்க? உங்க ரெண்டு பேருக்கும் உள்ள் உறவைக்கூட நான் உடைக்கலையே!

குசும்பன், தான் என்ன தப்பு செய்தோம் என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க பாத்தீங்களா? அதுதான் சந்திப்புக்கு கிடைத்த வெற்றி!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தம்பி.. அதென்ன சந்திப்பை பத்தி எழுதாம கவுஜ? அதுவும் வாரமலர் ரேஞ்சுக்கு? எல்லாம் நோட் பண்ணிகிட்டுதான் இருக்கோம்..

மின்னல்.. உங்களை மிஸ் பண்ணினோம். குசும்பனோட விளையாட்டுக்கப்புறம் யார்கிட்டயும் வெறும பேர்மட்டும் கேட்டா கன்பார்ம் ஆவறதில்லை. இன்னொரு பாஸ்வேர்டு, கோட்வேர்டு எல்லாம் தேவைப்படுது!

அனானி.. குசும்பனைப்பத்தி பேச்சு வந்தப்ப யாரோ சொன்னாங்க.. "அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை" "அட.. ப்ளாக் எழுதறாரே அந்த கெட்ட பழக்கம் போதாது??"

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்,

உன் பதிவைப் படிச்சேன். வச்சீரேய்யா நம்ம பொசிஷனுக்கே ஆப்பு.. நான் கவிமடத்தலைவன் கிடையாது-- சாதா சிஷ்யந்தான். மடத்தலை என்னிக்கும் நம்ம அண்ணாச்சிதான்.

அப்பால உம்ம நினைவுப்பரிசை எப்படி ஆட்டை போடறதுன்னு (குறிப்பா ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்) ப்ளான் பண்ணிகிட்டிருக்கேன்.

கொத்ஸு.. உம்மகிட்ட பிடிச்ச விஷயமே இதுதானய்யா! நீரே கமெண்டும் போட்டு, அதிலே எங்கே பிடிப்பாங்கன்னு தெரிஞ்சு நீரே ஆண்டிசிபேட்டரி பெயிலும் வாங்கறீர் பாரும்!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. வார்த்தை வார்த்தையா பிரிச்சு மேயற அவஸ்தை.. தொடருமா!!! நல்லாக் கிளப்பறாய்ங்கய்யா பீதிய!

சுல்தான், திருப்பிக் கொடுத்து விடுவேன்.. இருந்தாலும் ஒரு முறை பார்க்கும் அனுபவமே ஒரு பரிசுதானே.. (அய்யனார்.. பாண்டிச்சேரியெல்லாம் வேணாமய்யா)

நன்றி ஜெஸிலா..நீங்களூம் உங்கள் பார்வையை எழுதுங்களேன்.

காயத்ரி சித்தார்த் said...

//பதிவைப்படிக்காமல் ஏன் பின்னூட்டம் போடுகிறார் என்ற அரிய தகவலைப் பகிரிந்துகொண்டார் அபி அப்பா. (நேரக்குறைவாம்). //

இது ரொம்ம்ம்ம்ப ஓவரு!

//துபாய்க்கு வந்தவுடன் கிடைத்த ராகிங்கால் சரவணபவன் சர்வரைப்பார்த்து நீங்கள் சர்வர்தானே? குசும்பன் இல்லையே என்று கேட்கும் நிலையில் இருந்தார் சென்ஷி//

சென்ஷி நீங்க துபாய் போயும் அப்டியே தான் இருக்கீங்களா? :))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க காயத்ரி..

அபி அப்பாவே சொன்ன விஷயம்தான் அது..

சென்ஷியப் பார்த்தவுடனே எனக்கு தில்லுமுல்லு டயலாக்தான் ஞாபகம் வந்தது..

|இந்த உலகத்துல சென்ஷிங்க இருக்கறவரைக்கும் குசும்பனுங்க அவங்க வேலைய செஞ்சுகிட்டுதான் இருப்பாங்க|

 

blogger templates | Make Money Online