Nov 8, 2007

தீபாவளி - பரிணாம வளர்ச்சி!

தீபாவளி- 1978

என்னப்பா பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கே? கோபி வீட்டிலே நூறு ரூபாய்க்கு வாங்கி இருக்காங்களாம் தெரியுமா?ஒரு பாக்கெட் கூட ராக்கெட், ட்ரெயின் இல்லையே - எல்லாம் நமுத்துப்போன ஒத்த வெடியா இருக்கு?

அய்யோ தூறல் போடுது - காய வெச்ச பட்டாசெல்லாம் நனைஞ்சிடும் - ஒடு..

அவன் தான்மா நான் பாக்காத நேரத்திலே லக்ஷ்மி வெடி வெச்சுட்டான். புதுச்சட்டை வீணாப்போச்சு, விரலை மடக்கவே முடியலை அம்மாஆஆஆஅ!

தீபாவளி - 1986

ஏன்டா தீபாவளியும் அதுவுமா தியேட்டர் வாசல்லே தேவுடு காக்கறீங்க?

அதுசரி - நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்?

பட்டாசு வெடிக்கலையா?

அதெல்லாம் கார்த்திகை தீபத்துக்கு பார்த்துக்கலாம். தலைவர் படம் பேரெல்லாம் சேர்த்து ஒரு கவிதை(?!) எழுதித் தரச் சொன்னேனே - செஞ்சியா?

தீபாவளி - 1994

இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.

நான் தீபாவளிக்கா சார் லீவு கேக்கறேன்? என் பாட்டி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க சார். அவங்களுக்கு என் மேலே உயிர்! நான் போகலேன்ன ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க சார்.

கஸ்டமர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் சார். எல்லா மெஷினும் இப்போ கண்டிஷன்லேதான் இருக்கு. எதாவது ப்ராப்ளம் ஆனாலும், மேட்டரை பெரிசா ஆக்க மாட்டாங்க சார். ப்ளீஈஈஈஈஈஸ் சார்!

தீபாவளி - 1999

ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவுதான் ஸ்வீட் சாப்புடுவான்? ஒரு சோதனைச் சுண்டெலி மாட்டினா போதுமே? ஊர்லே எல்லார்கிட்டே இருந்து வந்த பட்சணத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணிடுவீங்களே!

இதப்பாரு, நான் சரம் மட்டும்தான் வெடிப்பேன் - இந்த புஸ்வாணம், சக்கரம் எல்லாம் லேடீஸ் மேட்டர்.

நிச்சயமா முடியாது. தீபாவளி அன்னிக்கு சினிமா போறதில்லைன்னு ஒரு பிரின்சிப்பிள்ளே வச்சிருக்கேன். அடுத்த வாரம் ட்ரை பன்னறேன் - உறுதியா சொல்ல முடியாது.

தீபாவளி - 2005

சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.

பட்டாசா? எந்த ஊர்லே இருக்கே தெரியுமா? ஜெயில்லதான் தீபாவளி கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டயா? நீயும் பொங்கல் ரிலீஸ்தான் ஞாபகம் வெச்சுக்க!

சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்வீட் பண்ணு போதும். சுகர் எற்கனவே கச்சா முச்சான்னு இருக்கு!
 
2005  என்ன 2007ம் அதே கதைதான் என்பதால், இங்கிருந்து ஒரு மீள்பதிவு.
 
தீபாவளியை கொண்டாடுபவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

28 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஆமாம் பெனாத்தல் சார்..எவ்ளோ எதிர்பார்ப்புகளோட இருப்போம். தீபாவளி வருதுன்னூட்டு.இப்போ வேர நாட்ல தெரியரது கூட இல்ல. எனக்கு எப்பவும் தீபாவளின்னாலே அப்பா, நான், தங்கச்சி எல்லாம் எண்ணை தேச்சிகிட்டு நிக்கறது தான் ஞாபகம் வரும்.அதும் இப்போ வயசாகி இருக்கிர அப்பா,looking very vulnerable...ரொம்ப மனசு என்னென்னவோ யோசிக்கிது.

Anonymous said...

உங்களுக்குத் தீபாவவளி வாழ்த்துக்கள்

Anonymous said...

ச்சே நான் பொய் பேசினா எட்டு நாளுக்கு மேல யாரும் நம்ப மாட்டேங்குறாங்க!

Anonymous said...

நான் சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்.

-பனங்காட்டிலிருந்து நரி!

Anonymous said...

யானைக்கொரு காலம் வரும்போது எங்களுக்கு ஒரு ரோவே வரும்!

Anonymous said...

எங்க மாமியா உடைச்சா மண் குடம்!நான் உடைச்சா மட்டும் பொன் கொடமா?

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, நீங்க சொல்றது சரி. கொஞ்சகாலம் விட்டுப்பாத்தா தெரியற மாற்றங்கள் சில நல்லவை, பல அல்லவை :-(

மோகினிகள் கழகம், நன்றி.

கெட்டிக்காரன்,நரி, பூனை,மருமகள் - என்னதான் சொல்ல வரீங்க?

Anonymous said...

ஏன்யா கடைத் தேங்காயை எடுத்து எனக்கு உடைகுறீங்க!

Anonymous said...

அட என்னங்க இது! ஊரார் வீட்டு நெய்யை எடுத்து என் கைல கொடுக்குறீங்க!

Anonymous said...

தலைவலியும் பல்வலியும் எனக்கு வந்தாத்தான் தெரியும்!

Anonymous said...

அடக் கடவுளே!

ஒண்ட வந்த பிடாரி இப்போ எங்களையே விரட்டுதே!

இதைக் கேப்பார் யாருமில்லையா?

Anonymous said...

நான் நான்னு சொல்லி கோவிலுக்குப் போனா அங்க என்னை மாதிரி ரேBடு பேர் ஆடிகிட்டு இருந்தாங்களாம்!

Anonymous said...

நான் கண்ணை மூடித் தூங்குறப்போ உலகம் ஒண்ணும் இருண்டு போயிடாது!

பினாத்தல் சுரேஷ் said...

என்ன சொல்ல வரீங்க பழமொழிக்காரங்களே.. சம்மந்தம் இல்லாம பழமொழியாக் கொட்டறீங்களே..

நாகை சிவா said...

நாம இன்னும் 1986. 1994 ல பாதியுமா தான் இருக்கோம் :)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Baby Pavan said...

தாத்தா....தீபாவளி வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

//எங்க மாமியா உடைச்சா மண் குடம்!நான் உடைச்சா மட்டும் பொன் கொடமா?//


ஆமாம். கண்டிப்பாச் சொல்றேன், நான் ஒடைச்ச பொன் குடத்தைப் ப்ரின்ஸ் ஜுவல்லரியிலெ கொடுத்து வேற நகை வாங்கிப்பேன்.

உங்களாலெ வேற குடம் இதெ மண்ணைவச்சுச் செய்ய முடியுமா?


என்ன பினாத்தலாரே,...... இப்படியெ இருந்தால் எப்படி?

நாமும் வளரணும் இல்லை? :-)))

பாரதிய நவீன இளவரசன் said...

கலக்கல் பதிவு... பரிணாம வளர்ச்சீன்ன ஒடனேயே, எங்கியோ கிமு காலத்துக்குக் கொண்டு போயிட்டீங்களோன்னு நெனச்சேன். நல்ல வேளை, சமீபத்தில் (யாரையும் சத்தியமா நக்கல் பண்ணல!) 1978ன்னு ஆரம்பிக்கிரீங்க..
:)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Anonymous said...

நான் சரஸ்வதி வெடி தான் வச்சேன்.

லட்சுமி வெடினு அவன் பொய் சொல்றான்.

Anonymous said...

//சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு//

அது என்ன MNC ங்களா?

ரசிகன் said...

ஆஹா.. சுரேஷ் மாமே.. டார்வீனுக்கு போட்டியா பரிணாமத்த தீபாவளியில கண்டுபிடிச்சதுக்கு பாராட்டுக்கள்.
மாறிவரும் கால சூழ்னிலையும்,மனநிலையும் நல்லாவே சொல்லியிருக்கீங்க..
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

[ஆமா..//நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்? //
இடையில என்னிய ஏனுங்க வம்புக்கு இழுக்கிறீங்க..ஹிஹி...]

என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

Anonymous said...

Happy Diwali!!!!!!innikku class illiya?

கோபிநாத் said...

இது என்ன தீபாவளி ஸ்பெசல் கிளாஸா சார் !?..:))

தீபாவளி வாழ்த்துக்கள் :)

Unknown said...

வயசு ஆவ ஆவ பார்வைகளும் மாறும்னு சொல்றது (வேற யாரு, நாந்தான்!) இதானா?

உங்கள் பினாத்தல்கள் அருமை..

Anonymous said...

பெனாத்தலாருக்கு 35 வயசாயிடுச்சா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா.

துளசி அக்கா.. குடம் கூட வா கோல்டுல டிமாண்டு வைக்கறீங்க? பாவம் கோபால் சார். (அதுசரி, இங்க சத்தமா பேசாதீங்க.. இன்ஸ்பாயர் ஆயிரப்போறாங்க!)

பாரதீய நவீன இளவரசன், நன்றி. (சமீபத்தில் 1978 யாருக்கோ காபிரைட் ஆச்சே!)

வெடி வைத்தவன், வாங்க!

டவுட் கேட்பவன் - இது உண்மைக்கதை, என் சோகக்கதை :-) நிலக்கரிச் சுரங்கத்தை சைட் என்பது வழக்கம், அங்கே வாகனம் விற்றவர்கள் சார்பில் இருக்கக்கூடிய குழுவில் நான் இருந்தேன், சிலசமயம் நண்பர்களுடன், பலசமயம் தனியாக!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ரசிகன்.. நான் சினிமா ரசிகனைத்தான் வம்புக்கிழுத்தேனே ஒழிய என் ரசிகர்களை அல்ல (இருக்கறதே ஒண்ணு ரெண்டு பேரு - வம்பிழுத்து அவங்களும் ஓடிட்டாங்கன்னா?)

நன்றி ஜெசிலா, லீவ் போட்டுட்டேன் 2007லே.

கோபிநாத்.. என்ன படிக்கறே நீ.. wifeology வகுப்பு பிரதி திங்கள் மட்டும்தான்!

தஞ்சாவூரான்.. வயசாக ஆக மட்டும் இல்லை, நம் பார்வைகள் மாற அனுபவங்களும் படிப்பும் கூட காரணமாய்விடுகின்றன.

வைத்தி -- அது ஆச்சு 37!

Anonymous said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சுரேஷ்.

//இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.//

தற்போது இது தான் என் நிலைமையும், தீபாவளிக்கு மறுநாள் லீவ் கேட்டேன் கொடுக்க மாட்டேன் சொல்லிடாங்க. இதோ மொத்தமா 15 பேர் தான் office la இருக்கோம். தனியா போர் அடிக்குது.

 

blogger templates | Make Money Online