Nov 19, 2007

தேவையா தேவ் ஐயா?

தன்னிலை விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால், எதிரிகளின் புரளிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது ராஜதந்திரம் என்றால், தன் இனத்தவரின் சந்தேகங்களைத் தீர்க்காமல் இருப்பது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதும் அதுவேதானே!
 
அன்பு கச்சேரியார் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார். நம் ரகசியங்களை எதிரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனாம், ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கிறேனாம்!
 
உண்மை என்ன? நம் இல்லறத்தியல் வகுப்புகளால்,
 
அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும். என்று சொன்ன ஒரு தங்கமணியை
 
எல்லாத்தயும் விட படு ஜோக் என்னென்னா, பொம்பளங்க ஷ்ஆப்பிங்க் போகும்போது, பின்னாடி ஆம்பிளங்க ஒண்ணும் பண்ணமுடியாம வெட்டியா பையை தூக்கிட்டு நடப்பாங்க பாருங்க  என்று சொல்ல வைத்திருக்கின்றன நம் சோக கீதங்கள்!
 
பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட் என்று அளப்பறை விட்ட அதே பெண்ணீய அனானி,
 
எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார். என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு மாற்றம் இருப்பதே இத்தொடருக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கறேன். ஏனென்றால் நாம் எடுக்கும் வகுப்புகளால் உலகம் தலைகீழாகத் திரும்பிவிடும் என்று எதிர்பார்த்து இத்தொடர் தொடங்கப்படவில்லை. பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. இதெல்லாம் உலக நியதி!
 
மேலும், இந்த வகுப்புகளால் மனைவிக்குப் பயப்படாமல் வாழும் நிலை உருவாகும் என்பதா நம் நோக்கம்? நடக்க இயலாதவற்றைச் சொல்ல நாம் என்ன விளம்பரத்துறையில் இருக்கிறோமா அல்லது ஹாரி பாட்டர் கதை எழுதுகிறோமா?
 
அறிவிப்பின்போது தங்கமணிகளையும் ஏன் இந்த வகுப்புக்கு அழைத்தேன் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
 
இங்கே பாருங்கள், அந்த ரகசியம் விளங்கும்!
 
ஆயுதங்களைக் காட்டிக்கொடுக்கிறேனா? அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா! தங்கமணிகளுக்கு இந்த ரகசியங்கள் தெரிந்துவிடக் கூடுமே என்று எதையுமே சொல்லாமல் தவிர்த்தால் நம் இளைய ரங்கமணிகளுக்கு ஏது எதிர்காலம்?
 
கச்சேரியாருக்கு இன்னும் ஒரு சந்தேகம்:
 
நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்...
 
வேறெந்த நேரத்திலய்யா இப்படி ஒரு தொடர் வெளிவரவேண்டும்? இதைவிடச் சிறந்த, பொருத்தமான நேரம் வாய்க்குமா?
 
கைப்புள்ளைக்கு ஆப்பு வாங்குவது என்ன புதிதா? அவருடைய "ஆப்பு" அனுபவத்துக்கு இந்தத் தொடர் மட்டுமல்ல வேறெந்தத் தொடருமே தேவையில்லையே!
 
வெட்டிப்பயலின் தற்போதைக்கு கடைசிப்பதிவைப் பார்த்து நானே புல்லரித்துப் போயிருக்கிறேன்! லகான் எங்கே என்று தெரிந்த குதிரையாக உலக இயல்புகளையும் நடப்புகளையும் புரிந்துகொண்டிருக்கும் அவருக்கு இத்தொடரால் நஷ்டமா?
 
ஆனால், இல்லற வாழ்வில் குதிக்கக் காத்திருக்கும் பலகோடி இளைஞர்கள், கல்வியறிவு பெற்றிடக்கூடாது, வாழ்க்கை சாகரத்தில் தொபுக்கடீர் எனக்குதித்து அடிபட்டுத்தான் முன்னேற வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தங்கமணிகளின்  சூழ்ச்சிக்கு நீங்கள் பலியானது மட்டுமின்றி அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை புதிர்காலமாக  ஆக்கும் நோக்கமும்  அல்லவா தெரிகிறது? 
 
கம்ப்யூட்டரைத் திறந்தாலே  ஒரு எக்காளச் சிரிப்பு கேக்குது. "பாத்தியா, பிரிஞ்சுட்டாங்க, சண்டை போட்டுக்கறாங்க! இனிமே நமக்கு வெற்றிதான்"னு தங்கமணிங்க குரல்கள்! ரங்கமணிங்க ரெண்டுபட்டா தங்கமணிங்களுக்கு கொண்டாட்டமாம்!
 
தேவ் எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான், சூழ்ச்சிக்கு பலியாகி மட்டும்தான் இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கி இருப்பார் என்று உளமாறவே நான் நம்புவதால், அவரைக் குறை சொல்ல விரும்பவில்லை.
 
ஒரு ஆம்பளை மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தான் புரியும் என்பதால், தேவ் இந்த விஷயங்களைத் தெளிவா புரிஞ்சுப்பாருன்னு நம்பறேன்.
 
 எனவே, மீண்டும் நமது ஒற்றுமையை தங்கமணிகளின் உலகுக்குப் பறைசாற்றி, அவர்கள் ஆனந்தத்தில் அணுகுண்டு போடுவோம் வாருங்கள்! 
 
பி கு: இல்லறத்தியல் பாடம் இன்னும் ஓரிரு நாட்களில்.

20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அட்றா அட்றா...இப்படி எதிர்பாக்கவே இல்ல.

seethag said...

பினாத்தலரே நானே கேட்கணும்னு நினைச்சேன் .நிங்க பாடம் எடுகிறிங்க்களா இல்லை என்னைப்போன்ற அப்பாவி தங்கமணிகளுக்கு உங்க வித்தையெல்லாம் சொல்லித்தரிங்களானனு .

உங்க க்ளாஸ் ரொம்ப உபயோகமா இருக்கு.!!!!!!நிருத்தாதேங்க ப்ளிஸ் .இகலப்பை வேற வேலை செய்யல. மெல்லினம் வல்லினம் எல்லாம் ஒரே தப்பா வருது.மன்னிக்கவும்

இலவசக்கொத்தனார் said...

ஐயா

முதற்கண் தாங்கள் வருத்தப்படக் கூடிய ஒரு செயல் நிகழ்ந்திருந்தாலும் உடனே அவசரப்படாமல் அது எதனால் நிகழ்ந்திருக்கும் என ஆராய்ந்து பார்த்தது மட்டுமல்லாமல் அதன் பின்புலங்களை அறிந்து கொண்டதன் மூலம் தங்கள் விவேகம் வெளிப்படுகிறது.

இந்த நேரத்தில் ஒரு குட்டிக் கதை ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சமயம் ரங்கமணிகள் நிறைந்த ஒரு பெரும் கூட்டத்தில் தலைவன் ஒருவன் தங்கமணி பேச்சைக் கேட்பவர்கள் ஒரு புறமாகவும் மற்றவர்கள் மறுபுறமாகவும் நிற்கும் படி ஆணையிடுகிறான். அனைவரும் சொன்ன பேச்சு கேட்கும் வரிசைக்குப் போய்விட ஒருவன் மட்டும் இந்தப் பக்கம் நின்றான். அவனிடத்தே எப்படி இது எனக் கேட்கையில் அவன் சொன்னான், "அதெல்லாம் எனக்குத் தெரியாது. தங்கமணிதான் இந்த வரிசையில் நிற்கச் சொன்னார்கள்' என்று.

எதற்காக இந்தக் கதையை சொல்கிறேன் என்றால் தான் செய்வதின் உள்நோக்கம் அறியாது, அதன் பின் இருக்கும் விஷமத்தனத்தை அறியாது தன்பால் சொல்லப் புரட்டுக்களை உண்மை என நம்பி அதன் பேரில் ஒரு பதிவு எழுதிவிட்டான் என் தம்பி.

அவன் நல்ல மனம் படைத்தவன். எனக்கு எத்தனையோ சமயங்களில் பல விதமான இக்கட்டுகளும் இன்னல்களும் வந்த பொழுதெல்லாம் உதவி செய்ய முதல் ஆளாய் நின்றவன். எனக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவன்.

ஆனால் ரொம்ப நல்லவன். அதாவது வெகுளி எனச் சொல்லும் அளவிற்கு நல்லவன். (அதனால்தான் எனக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கிறானா என்றெல்லாம் கேட்பவர்காள் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்) அவன் வெளுத்ததெல்லாம் பால் என நம்புபவன். அதனால் நம்மிடையே பிளவு உண்டாக்க ஆசை வார்த்தைகள் பேசி நயவஞ்சகமாக அவன் நெஞ்சில் நஞ்சை ஊற்றி அவனை இது போல் பதிவெழுதத் தூண்டிய பாவையர்களின் சதிக்கு அவன் பலியாகி விட்டான்.

அப்படிப்பட்ட நல்ல நெஞ்சம் கொண்டவர்களின் கூடாரமான சங்கத்தில் திருட்டுத்தனமான நுழைந்து தம் கைவரிசையைக் காட்டிய கைகேயிகளினால் பாதிக்கப் பட்ட மற்றொரு பாலகன் நம் நாகைப்புலி.

ஆனால் திரைப்படங்களின் கடைசி சீனில் வரும் போலீஸ் போல் இல்லாமல் உடனுக்குடன் அவர்களிடம் போய் நடந்தவற்றை எடுத்துரைத்து நல்வழிக்குத் திரும்பக் கொண்டு வரும் பொறுப்பை நானே எடுத்துக் கொண்டு அவர்களுடன் இருந்து, அவர்களை உண்மையைப் பார்க்கும்படி செய்து வருகின்றேன்.

அதற்கு ஆவேசப்ப்படாத உங்கள் அன்பான இந்தப் பதிவு பெரும் துணையாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளவுன் ஐயமில்லை.

மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இலவசக்கொத்தனார் said...

ஆஹா!! நான் சொன்ன நயவஞ்சகம் இங்கேயே வந்து விட்டது பார். சீதா என்ற பெயரில் வந்திருக்கும் இந்தப் பின்னூட்டத்தைப் பார். நேரடியாக இதனைப் படித்தால் சாதாரணமாகத் தெரியும் இந்தப் பின்னூட்டம் ஒரு போலியான தங்கமணியால் எழுதப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா தேவ்? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா?

அப்பாவி தங்கமணி என்ற ஆக்ஸிமோரான் பதங்களை பயன்படுத்துவதிலிருந்தே தெரியவில்லையா இது ஒரு போலிப் பின்னூட்டம் என்று.

நமக்கு வெளிப்படையாக தெரியும் இது தேவ் போன்ற நல்ல உள்ளங்களுக்கு உண்மை போல் தெரிந்ததில் ஆச்சரியம் இருக்கிறதா? இது போன்ற கபட நாடகங்கள் நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள் அந்தத் தங்கமணியினர் என்பது நமக்குத் தெரியாதா? நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு வேறு சான்று வேண்டுமா?
இந்த ஒரு வரிதானா சான்று? இதனை இல்லை என மறுக்கும் தங்கமணிகளுக்கு இது போலி என்பதற்கு இன்னு ஒரு ஆதாரம் தர முடியும்.
அது அந்தப் பின்னூட்டத்தின் கடைசி வார்த்தைகள். ஆம் எந்த தங்கமணியாவது தான் செய்தது தப்பென்று ஒத்துக் கொள்வதாகவோ அதற்கு மன்னிப்புக் கேட்பதாகவோ சரித்திரத்தில் சான்று உண்டா?
இது போதாதா இது போலி பின்னூட்டம் என்பதும் இது தேவ் போன்ற நல்ல உள்ளங்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்ல பயன்படுத்தப் படும் ஆயுதம் என்பதும்?
தம்பி, இது ஊழ்வினை காலம், நாம் எல்லாம் ஞானம் பெற பெனாத்தலார் படும் பாட்டை எண்ணி அஞ்சி அதனை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்கள் வெளியே உலாவும் காலம். ஆகையால் எதையும் தனியாகப் பார்க்காதே. அதன் பின்புலத்தை யோசி. அதன் பின்னர் மூத்தோரை கலந்து ஆலோசி. அது இல்லாமல் செய்யும் எந்தவிதமான எதிர்வினையும் பெரும் கெடுதலில் முடியும். இதனை நினைவில் கொள்!

ஜே கே | J K said...

//பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. //

எப்படி இப்படியெல்லாம்.
அவ்வ்வ்வ்வ்வ்

நாகை சிவா said...

ஒரே கொயப்பமா இருக்கே....

செயற்குழுவ கூட்டிட வேண்டியது தான் :)

seethag said...

அய்யா கொத்ஸு, . எனக்கு மிகவும் வருத்தம் தருவது என்னவென்றால், உங்கள் தங்கமணியின் பொறுமயைபார்த்து நான் வியக்கும் வேளயில் நீர் இப்படி எழுதுகிறிரே?நீர் , quiz எழுதி வலைப்பூவில் பெருமை சேர்த்துக்கொள்ளும்போது பழமொழிக்கு ஏற்ப்ப உம் பின்னாடி நின்றாரே அந்த மாதரஸி பாவம்.oxymoron என்றால் என்னைப்பொறுத்தவரை,உண்மைப்பேசும் ஆண்
அய்யா..நீங்கள் தான் அதற்க்கு உதாரணம்.இன்னும் சொல்வேன். ஆனால் உங்கள் தங்கமணிக்காக விட்டுவைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க இனியவன்.. நம்ம கடன் பணி செய்து கிடப்பதே!

சீதா, உம்ம வேலை இங்க பலிக்காது. கொத்ஸோட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க!!

அப்பாவி தங்கமணி (சொல்லும்போதே நாக்கு குழறுதே! நிறுத்தாதீங்கன்னு சொல்றீங்க, பின்னால கஷ்டப்படுவீங்க!

கொத்ஸு.. நான் உமக்கு என்ன கைம்மாறய்யா செய்வேன்! இவ்வளவு அழகாக லூப் ஹோல்களைக் கண்டுபிடித்து சூப்பராக பதிலும் சொல்லி .. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜேகே..

நாகை சிவா.. செயற்குழுவா? உடனடியா கூட்டுங்க! ஆனந்தத்துல அணுகுண்டு போடுவோம் வாங்க!

சீதா,

உண்மை பேசும் ஆண் Oxymoron இல்லை, Redundant repeat னு வேணா சொல்லலாம்.

இராம்/Raam said...

/நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்... //

சிங்கங்களின் பிடறியை பற்றி இழுத்து சண்டைக்கு இழுக்கும் பதிவென வ.வா.ச செயற்குழு ஐயத்தினை ஏற்படுத்தி கொள்கிறது. தக்க விளக்கங்களுடன் மற்றொரு பதிவு வராத பட்சத்தில் வ.வா.ச சார்ப்பில் ப.ம.க'வின் கயமைகளை பொதுவில் வைக்க நேரிடும் என எச்சரிக்கை படுகிறது.

இவண்,
வ.வா.ச

ஒப்பம்..
புலி,
கப்பி,
ஜொள்ளு,
தம்பி,
இராயல்

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா கைப்புள்ள ரீப்ளேஸ்மெண்ட்,

//சிங்கங்களின் பிடறியை பற்றி இழுத்து சண்டைக்கு இழுக்கும் பதிவென வ.வா.ச செயற்குழு ஐயத்தினை ஏற்படுத்தி கொள்கிறது//

என்ன சொல்ல வரீங்க?

நீங்க கோட் பண்ண வரிகள் உங்க சங்கத்துப் போர்வாள் பதிவுலே இருந்து நான் கோட் பண்ணது!

இராம்/Raam said...

//என்ன சொல்ல வரீங்க?

நீங்க கோட் பண்ண வரிகள் உங்க சங்கத்துப் போர்வாள் பதிவுலே இருந்து நான் கோட் பண்ணது!//

அதை நன்றாகவே நானறிவேன்... நீங்கள் உங்களுக்கு வாய்ந்த தங்கமணிகளின் போர்முறைகளை இங்கே பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் வரப்போகும் புதிய எதிரிகள் அவர்களுடைய போர்யுக்தியினை மாற்றிக்கொள்ளகூடும் என ஐயத்தினால் தான் கொஞ்சமாய் கூவல் விட வேண்டியாதாகி போன கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம் என்பதினை சபையில் தெரிவித்து கொள்கிறேன்....

ஓப்பம் என முத்திரை பதித்த சிங்கங்களின் அணிவரிசைகளை பாருங்கள்.

இராம்/Raam said...

// நம சிங்கத் தலை கைப்புள்ள, சங்கத்தின் தங்க மகன் இளையதளபதி வெட்டிப் பயல ஆகியோர் இல்லறத்தில் இனிதே அடியெடுத்து வைத்த நேரம் பாசமிகு தம்பிகளாம் நீங்களும் மண வாழ்வில் நுழைய வரிசையில் காத்து நிற்க இப்படி ஒரு தொடர்... //

இதை மட்டும் எடுத்தாண்டு பதிவிட்ட தாங்கள் ஏன் அதற்கு முன்னர் இருந்த கிழ்கண்ட வரிகளை காட்டவில்லை?

//தம்பியுடையான் படைக்கஞ்சான்... இது நாள் வரை பெனத்தலார் இந்தப் பதிவினை எழுதமால் இப்போது ஏன் எழுதியிருக்கிறார் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..//

அது தாங்களின் வயது அதிகரித்ததில் நிகழும் சாதாரண தவறனென கொண்டாலும் கிழ்கண்ட வரிகளில் சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் அவர்களின் சுட்டிக்காட்டும் அந்த உண்மையை மறைந்தது ஏன்????

//ரகசியங்களை வெளியிடுவதன் மூலம் வருத்தப் படாத வாலிபர் சங்கத்தை வருத்தப்பட வைக்கலாம் என பமக படைத் தளபதி பெனத்தலார் செய்கிறார்ரோ என ஐயம் கிளம்புகிறது.. உன் பின்னூட்டம் படித்தப் பின்..//

//தம்பி தடம் புரண்டது நீ மட்டும் அல்ல.. நானும் தான் ... இனி விழித்துக் கொள்வோம்...பமக சதியை முறியடிப்போம்.... சங்கத்துச் சிங்கங்களே.. ம்ம்ம் இனியும் ரெஸ்ட் வேண்டாம் கிளம்புங்கள் கச்சேரிக்கு//

இதுதான் எங்களின் கர்ஜனைகளுக்கு வழிகாட்டிய மற்றும் தூண்டுகோலாய் அமைந்த வரிகள்...

பினாத்தல் சுரேஷ் said...

//ஓப்பம் என முத்திரை பதித்த சிங்கங்களின் அணிவரிசைகளை பாருங்கள்//

பயந்து விடுவோமா?

//ரகசியங்களை வெளியிடுவதன் மூலம் வருத்தப் படாத வாலிபர் சங்கத்தை வருத்தப்பட வைக்கலாம் என பமக படைத் தளபதி பெனத்தலார் செய்கிறார்ரோ //

உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்து பார்த்துதான் ஆணுக்கு ஆணே எதிரின்ற நிலைமைக்கு வந்திருக்கிறோம்..

தங்கமணி Vs ரங்கமணி பெரும் யுத்தத்தில் பமக வ வாச என்று பிளவு காட்டுவது தேவையா என்பதுதான் இந்தப்பதிவின் அடிநாதம்!

மனதின் ஓசை said...

rhamid//பாம்புன்னா படம் எடுக்கும், பாலைவனம்னா சுட்டெரிக்கும், டாஸ்மாக்னா தள்ளாடவைக்கும், தங்கமணின்னா டப்பா டான்ஸ் ஆடும் .. இதெல்லாம் உலக நியதி! //

:-))))

ILA (a) இளா said...

Wait and See Boss..

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மனதின் ஓசை, நன்றி.

இளா, என்னத்த வெயிட்டறது? என்னத்த சீயறது?

Unknown said...

பாசத்துக்குரிய பெனத்தாலரே,,,, பதிவிட்டு உங்கள் எண்ணங்களை எனக்கு அறிவித்திருக்கிறீர்கள் அதைப் படித்தேன்... பாசத்தின் சிகரம் தலைவர் கொத்ஸ் அண்ணன் தனி மடலிட்டும் ... சாட்டிலும் என்னை அழைத்துப் பேசிய அந்த அரசியல் நாகரீகத்துக்கு முன் நான் தலை வணங்குகிறேன்...

நட்பு அன்பு பாசம் இந்த மூன்றும் களம் காணும் வீரனின் நெஞ்சில் இருக்கக் கூடாது என எங்கள் சங்கத்தின் காவல் தெய்வம் கைப்புள்ளயின் முன்னோர் புலிகேசியார் போருக்குப் போகும் வீரர்களுக்கு எடுக்கும் பாடங்கள் தமிழக வீரவரலாற்றில் முக்கிய இடம் பெற்றவை..

அந்தப் பாடங்களைச் சங்கத்திண்ணையில் அமர்ந்து கற்ற சிங்கங்கள் நாங்கள்... யுத்தம் என்று வந்து விட்டால் அந்தக் கலைகள் அனைத்தையும் களத்தில் பயன் படுத்தி உங்களைக் கதிகலங்கச் செய்ய சற்றும் தயங்கமாட்டோம் என எச்சரிக்கிறேன்...

பெனத்தாலரே.. உங்கள் தொடரின் நோக்கம் நன்றே எனினும் விளைவுகள் சரியில்லையே...

எங்கத் தல கைப்பு சொல்லுவது... உங்க ஆரம்பம் எல்லாம் அசத்தலாத் தான் இருக்கு ஆனா பினிசிங் சரியில்லையே...

ரங்கமணிகளை ஆதரிப்பதாய் சொன்னாலும் தங்கமணிகளுக்கு கைடாக அல்லவா இப்பதிவு நோக்கப்படுகிறது... உண்மையில் இங்கு எத்தனை ரங்கமணிகளால் பின்னூட்டம் இட முடிகிறது.. யோசியுங்கள் பினாத்தலாரே,,,

கொத்ஸ் ஒரு வீரர்.. பலப் போர்களங்கள் கண்ட தீரர் அதனால் தைரியமாகப் (!!!) பின்னூட்டுகிறார்... அவரை மட்டுமே வைத்து ரங்கமணிகள் இந்தப் பதிவினால் பலன் அடைகிறார்கள் எனத் தப்புக் கணக்குப் போட வேண்டாம்.. ரங்கமணிகளின் வலையுலக சுதந்திரத்தைத் தட்டி பறிக்கும் முயற்சியாக இந்தத் தொடர் அமைய வேண்டாம்

நாங்கள் சொல்ல வருவது இது தான்... இந்தத் தொடரைப் படிக்க தங்கமணிகளுக்கு தடை என அறிவியுங்கள்..இல்லையேல் இந்தப் பதிவை வருத்தப் படாத வாலிபர்களுக்கு எதிரானப் பதிவாக அறிவிக்க வேண்டி வரும் எனத் திட்டம் வட்டமாக சதுரமாக இன்னும் பிற எல்லா வடிவங்களிலும் தெரிவிக்கிறேன்...

மங்களூர் சிவா said...

கலக்கல் பதிவு.

பின்னூட்டங்கள் சூப்பர்.

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்,

//நாங்கள் சொல்ல வருவது இது தான்... இந்தத் தொடரைப் படிக்க தங்கமணிகளுக்கு தடை என அறிவியுங்கள்..//

உங்கள் நீஈஈஈஈண்ட பின்னூட்டத்தில் பதில் அளிக்கத் தகுதியுள்ள ஒரே வரி இதுதான். மற்றவை வார்த்தைக் கோபத்தின் வெளிப்பாடு (இங்கிலீஷ்லே கச்சாமுச்சான்னு ட்ர்ரென்ஸ்லேட் பண்ணிக்காதீங்க)

தங்கமணிகளைத் தடை செய்வதாக அறிவிப்பது சுலபம். ஆனால், அப்படி அறிவித்தால் அந்தத் தடை தரும் கவர்ச்சியினால் மட்டுமே ஓடோடி வந்து பார்ப்பார்கள், ஒருவேளை திறந்த அழைப்பு விட்டால் ரகசியம் ஒன்றும் இல்லை என்பதால் நம்மைத் தொந்தரவு செய்யாமல் விடுவார்கள் என்ற உளவியல் கருத்தியலின் காரணமாகத்தானே அப்படி ஒரு முடிவெடுத்தேன். அதைத்தானே சூசகமாக இணைப்பில் கொடுத்தும் இருந்தேன்!

ரங்கமணிகள் மீது அளவற்ற வன்முறை கட்டவிழ்த்து விடப்பட கல்லூரி நிர்வாகம் எந்நாளும் காரணமாக இருக்கவும் இருக்காது, அவ்வாறு நடந்தால் அஃதைப் பொறுத்துக்கொண்டும் இருக்காது என்பதை திட்ட பெண்டகனாக அறிவித்துக் கொள்கிறோம்.

 

blogger templates | Make Money Online