Nov 12, 2007

Wifeology பாடம் 3 - தயார் ஆகுங்க!

போன வாரப் பாடத்துல மனைவியருடைய விசேஷ குணாம்சங்களான அரை லாஜிக், உள்குத்துகள், அபார ஞாபகசக்தி ஆகியவற்றைப் பார்த்தோம். ரிவைஸ் பண்ணிட்டு வாங்க.
 
இந்த வாரப் பாடத்துல, நாம (ஆண்கள்) எப்படியெல்லாம் தம்மை மேம்படுத்திக்கணும், ஆரம்ப காலத்து அதிர்ச்சிகள் வராம எப்படி நம்மளை பாதுகாத்துக்கறது ஆகியவற்றைப் பார்க்கலாம்.
 
1. கருப்புப் பணம் காப்போம்!
 
"உங்க சம்பளம் என்ன?"
 
இந்தக்கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க? "பொம்பளை கிட்ட வயசைக் கேட்கக்கூடாது, ஆம்பளை கிட்ட சம்பளத்தைக் கேட்கக்கூடாது"ன்னு பழமொழி எல்லாம் இருந்தாலும்கூட இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடிவதில்லை. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றது பொதுவா மூணாவது நபர் கேட்டாலே அவ்வளவு சுலபம் இல்லை.
 
கேக்கறவங்க வேலைக்குச் சேரப்போற எச் ஆர் டிபார்ட்மெண்டா இருந்தா ஒரு 30% கூட்டிச் சொல்றதும்,  பொறாமைப் படக்கூடிய நண்பனா இருந்தா ஒரு 30% குறைச்சுச் சொல்றதும் சகஜம்தான், அதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
 
ஆனா, உங்க மனைவி ஆகப்போறவங்க இந்தக் கேள்வியைக் கேட்டால், குழப்பம்தான். நான் எவ்ளோ பெரிய ஆள் பார்னு அதிகப்படுத்திச் சொல்லுவாங்க சிலர், மனைவிகிட்ட ஏன் மறைக்கணும்னு சரியாச் சொல்வாங்க சிலர்.
 
ரெண்டு பேருமே தப்பு! ஒரு 10-15% குறைச்சுச் சொல்றதுதான் புத்திசாலித்தனம். ஏன்?
 
போன பாடத்தோட பின்னூட்டத்துல ஒரு அனானி சொன்னாங்க:
//ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா இருங்கன்னு// இந்தக்காலத்துப் பொண்ணுங்க சொல்வாங்களாம்.
 
உங்க சம்பளம் ஆயிரங்களிலா லட்சங்களிலா என்பது இல்லை இங்கே பிரச்சினை! மாச பட்ஜெட்டில் ஒரு பகுதி பக்கத்து வீட்டுக்காரி வாங்கின பட்டுப்புடவைக்கு அப்போர்ஷன் ஆகலாம் அல்லது அம்பானி மாதிரி பொண்டாட்டிக்கு ப்ளேன் வாங்கறதுக்கும் (உதைக்கணும் அவனை! செஞ்சுட்டுப் போ, நியூஸ் ஏன் கொடுக்கறே?) அப்போர்ஷன் ஆகலாம்.அதாவது, கல்யாணம் ஆன மறுநாள்லே இருந்தே நம்முடைய பொருளாதார உரிமை பறிக்கப்படப் போகுதுன்றதுக்கு பெண்ணீய வாக்குமூலமே இதுலே இருக்கு!
 
அதுனாலதான் சொல்றேன், ஒரு 10-15% ஐ யார் கண்லேயும் படாம ஒதுக்குப் புறமா வச்சிருங்க. நம்ம லாகிரிக்குத் தேவைப்படும்.
 
2. நாகாக்க!
 
நட்பா காதலான்னு நம்ம சினிமாக்காரங்க பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க! அவங்களே நண்பனா மனைவியான்னு பெரிசா கேள்வி கேக்கலல. நண்பன் கிட்டே பேசறதெல்லாம் மனைவிகிட்ட பேச முடியாது.. என்னாதான் சினேகிதனை.. சினேகிதனை.. ரகசிய சினேகிதனைன்னு பாட்டுப் பாடினாலும்! அடிவாங்கறது நிச்சயம். அதுவும் பிறவியிலேயே நாக்கு நீளமான என்னைப்போன்ற பிறவிகளுக்கு.
 
கல்யாணமான புதுசுலே வாக்குவாதம் வந்தது - ஆம்பளைங்க புத்திசாலிங்களா, பொம்பளைங்களான்னு! (தேவைதானா?) நான் சொன்னேன், சந்தேகத்துக்கே இடமில்லாமல் பொம்பளைங்கதான் - ஏன்னா அவங்கதானே இளிச்சவாயனுங்களைக் கல்யாணம் செய்துக்கறாங்க!  விளைவு என்னாச்சுன்னு கேக்காதீங்க, பர்சனல்!
 
அப்பவாவது திருந்தினேனா, ஒரு ட்ரஸ் செலக்ஷன் பண்ணும்போது இன்னொரு வாக்குவாதம் - நான் செலக்ட் பண்ணது நல்லா இருக்கா, அவங்க செலக்ட் பண்ணதா? வாக்குவாதத்தின் முடிவில், வழக்கம்போல தோற்றபிறகாவது சும்மா இருந்திருக்கலாம் - ஆனா நாக்கு இருக்கே! "உன் செலக்ஷன் தான் எப்பவும் சூப்பர்! என் செலக்ஷன் மோசம்தான் என்றேன் அவளை ஏற இறங்கப் பார்த்து! இதோட விளைவு முன்னை மாதிரி பல மடங்கு!
 
நாகாக்க! இந்த மாதிரி ஜோக்கடிக்கிறேன்னு தத்துபித்து பண்றது விபரீத விளைவுக்கு வழிகோலும். அதுவும் அவங்க வீட்டைச் சார்ந்தவங்களைப் பத்தி ஜோக் அடிச்சா முடிவே நிச்சயம்.
 
3. நிறங்களில் இத்தனை நிறங்களா?
 
இந்தக் கலர் எல்லாம் எப்பவாச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? பீச், பீச் ப்ளூ, காப்பர் சல்பேட், மயில் கழுத்துக் கலர், ராமர் கலர், டர்க்காய்ஸ், டீல் - சான்ஸே இல்லை!
 
ஒரு துணிக்கடையில 50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்!
 
பொதுவா, ஆம்பளைக்களுக்குத் தெரிஞ்ச வண்ணங்கள் எல்லாம் வானவில், குறிப்பா ட்ராபிக் சிக்னல் புண்ணியத்தால மூணு கலர் - இவ்ளோதான் உருப்படியாத் தெரியும்!  வேலை செய்யும்போதும் FFFFFF, 000000 போன்ற HTML கலர் கோடையே உபயோகப்படுத்துவோம், இல்லை எங்க இருந்தாவது காபி-பேஸ்ட் செய்வோம்!
 
திருமணத்துக்குத் தயாராகும் விதமா, இப்ப ஒரு சின்ன வீட்டுப்பாடம் :
 
1. வெள்ளை மயிலோட கழுத்து என்ன கலர்? சாதா மயிலோட கழுத்து என்ன கலர்?
2. ராமர் கலர் என்பது ராமர் ராஜாவாக இருந்தபோது இருந்த கலரா இல்லை காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது இருந்த கலரா?
 
பொது வீட்டுப்பாடம்:
 
பி கு: பலத்த மிரட்டல்களுக்கு இடையில் எழுதப்படும் இந்த இலக்கியவடிவம், திங்கள்தோறும் வெளியாவதைத் தடுக்க பெரிய அளவில் சதி நடக்கிறது. "அமீரகத்தில் அருவா ஆட்டம்" என்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகவும் வரலாம்!
 
போலீசாரின் கண்பார்வைக்குள்ளேயே இருந்துகொண்டு தந்திரமாக லெனின் எழுதியதுபோல இந்த இலக்கியத்தின் ஆசிரியரும் எழுதவேண்டி இருப்பதால், பிரதி திங்கள் என்ற இலக்கு தளர்த்தப்பட்டு, முடிந்தபோதெல்லாம் எழுத முடிவு கொண்டிருக்கிறோம்.

48 பின்னூட்டங்கள்:

மங்களூர் சிவா said...

ஆஹா நான் தீபாவளி கொண்டாட்டத்துல ரெண்டாவது பாடத்தை மிஸ் பன்னிட்டனே மொதல்ல அதை படிச்ச்சிட்ட்டு வந்திடறேன்

மங்களூர் சிவா said...

//
உங்க சம்பளம் ஆயிரங்களிலா லட்சங்களிலா என்பது இல்லை இங்கே பிரச்சினை! மாச பட்ஜெட்டில் ஒரு பகுதி பக்கத்து வீட்டுக்காரி வாங்கின பட்டுப்புடவைக்கு அப்போர்ஷன் ஆகலாம் அல்லது அம்பானி மாதிரி பொண்டாட்டிக்கு ப்ளேன் வாங்கறதுக்கும் (உதைக்கணும் அவனை! செஞ்சுட்டுப் போ, நியூஸ் ஏன் கொடுக்கறே?) அப்போர்ஷன் ஆகலாம்.அதாவது, கல்யாணம் ஆன மறுநாள்லே இருந்தே நம்முடைய பொருளாதார உரிமை பறிக்கப்படப் போகுதுன்றதுக்கு பெண்ணீய வாக்குமூலமே இதுலே இருக்கு!
//
இது அபாய எச்சரிக்கை

//
நாகாக்க!
//
//
பீச், பீச் ப்ளூ, காப்பர் சல்பேட், மயில் கழுத்துக் கலர், ராமர் கலர், டர்க்காய்ஸ், டீல் - சான்ஸே இல்லை!
//

மங்களூர் சிவா said...

//
50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்!
//
//
திருமணத்துக்குத் தயாராகும் விதமா, இப்ப ஒரு சின்ன வீட்டுப்பாடம் :

1. வெள்ளை மயிலோட கழுத்து என்ன கலர்? சாதா மயிலோட கழுத்து என்ன கலர்?
2. ராமர் கலர் என்பது ராமர் ராஜாவாக இருந்தபோது இருந்த கலரா இல்லை காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது இருந்த கலரா?
//
ஹோம் வர்க் ஏகத்துக்கு இருக்கும் போல இருக்கே :-((((((((((

மங்களூர் சிவா said...

//
50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்!
//
//
திருமணத்துக்குத் தயாராகும் விதமா, இப்ப ஒரு சின்ன வீட்டுப்பாடம் :

1. வெள்ளை மயிலோட கழுத்து என்ன கலர்? சாதா மயிலோட கழுத்து என்ன கலர்?
2. ராமர் கலர் என்பது ராமர் ராஜாவாக இருந்தபோது இருந்த கலரா இல்லை காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது இருந்த கலரா?
//
ஹோம் வர்க் ஏகத்துக்கு இருக்கும் போல இருக்கே :-((((((((((

gulf-tamilan said...

//பிரதி திங்கள் என்ற இலக்கு தளர்த்தப்பட்டு, முடிந்தபோதெல்லாம் எழுத முடிவு கொண்டிருக்கிறோம்.//
:((( why???

முரளிகண்ணன் said...

அடடா இதெல்லாம் தெரியாம கல்யாணம் பண்ணி ஆப்பு வாங்குறேனெ. குருவே இதையெல்லாம் ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடியே எதிலயாச்சும் எழுதியிருக்கலாம்ல (ஆனா அப்ப நீங்களே அனுபவம் பத்தாம அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருந்திருப்பீங்க, தம்பிகளாவது நல்லாயிருக்கட்டும்)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அம்பானி மாதிரி பொண்டாட்டிக்கு ப்ளேன் வாங்கறதுக்கும் (உதைக்கணும் அவனை! செஞ்சுட்டுப் போ, நியூஸ் ஏன் கொடுக்கறே?) ==>
சரியாச்சொனீங்க. எனக்கு அதை செய்திதாளில் படித்தபோது அப்படித்தான் தோன்றியது.

துளசி கோபால் said...

கு(ரை)றைச்சுச் சொல்லிக்க முடியாது.
பே(ய்)ஸ்லிப் வந்துருது:-))))

ஆம்புளைங்க செவ்வாய் கிரகம் புடிச்சவங்கன்றது புத்தகமா வந்துருக்கு:-)))

கலர் ப்ளைண்டுகளுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை(-:

Expatguru said...

//ஒரு துணிக்கடையில 50000 கலர் பட்டுப்புடவைன்னு விக்கும்போது இதையெல்லாம் எண்ணிப்பார்க்கவா போறாங்கன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்தாங்களாம்! ஒரு மனைவி அந்தப் பட்டுப்புடவையில இந்தக்கலரெல்லாம் இல்லைன்னு ஒரு லிஸ்டும், இந்தக்கலரெல்லாம் ரிப்பீட் ஆவுதுன்னு ஒரு லிஸ்டும் கொடுத்தபோது மயங்கிக் கீழே விழுந்தாங்களாம்! //

இதாவது பரவயில்லை. கடைசியில் ஒரு வழியாக புடவையை வாங்கிய பிறகு அதற்கு matching ரவிக்கை வாங்க கடை கடையாய் ஏறி இறங்குவது தான் தாங்கிக்கொள்ளவே முடியாது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது இது தான்!!

Anonymous said...

துளசிக்கு, பே சிலிப் வந்து என்ன புண்ணியம், அக்கவுண்டும் வரவும் செலவு கணக்கு மிக சரியாகவும் டாலி ஆகும். ஆனால் பதுக்கலில் வைத்திருக்கும் அமவுண்ட் மிக சரியாய், "அந்த பக்கம்" போயிடும். அப்பால அது கலர் பிளைண்டுனஸ் இல்லே, நமக்கு அசினோ, பிசினோ
சிரேயாவோ எல்லா எழவும் என்னத்த நடிக்கன்னு வருதுங்க, வெறும் கனா காட்சில டூயட் பாட என்று திட்டிக்கிட்டு இருப்போம். ஆனா நமக்குதான் இங்கிட்டு "கலர்" பிளைண்டுனெசு.
ஆனா, ஒண்ணு துளசி, எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார்.

ம. சிவா, இன்னும் கல்யாணம் ஆகாத பையன், எசகுபிசகா கமெண்ட் போட்டு, பின்னாடி அவஸ்தை படதேபா. உலகமே உன்னை வாட்ச் பண்ணுது,அவ்வளவுதான் சொல்லுவேன்.

மங்களூர் சிவா said...

//
துளசியின் தோழி said...
ம. சிவா, இன்னும் கல்யாணம் ஆகாத பையன், எசகுபிசகா கமெண்ட் போட்டு, பின்னாடி அவஸ்தை படதேபா. உலகமே உன்னை வாட்ச் பண்ணுது,அவ்வளவுதான் சொல்லுவேன்.
//
ஆஹா இவ்ளோ டேஞ்சரா இதுல.

கமெண்ட் கூட அடக்கி வாசிக்கனும் போல இருக்கே!!
அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

நான் பொண்டாடியோடு பட்ட பாட்டுக்கு 100 புத்தம் போடலாம். பொண்டாடி கழுதைகளைப் பற்றி பாடம் நடத்துறதை வுட்டுத் தொலை. சின்னவீட்டை குசிப்படுத்துறதைப் பற்றி எழுதப்பா.

புள்ளிராஜா

seethag said...

பெனத்தலாரே, எல்லாத்தயும் விட படு ஜோக் என்னென்னா, பொம்பளங்க ஷ்ஆப்பிங்க் போகும்போது, பின்னாடி ஆம்பிளங்க ஒண்ணும் பண்ணமுடியாம வெட்டியா பையை தூக்கிட்டு நடப்பாங்க பாருங்க எனக்கே சிரிப்பாவரும்ன்னா பார்த்துக்கன்ங்களேன்..

ilavanji said...

பெனாத்ஸ்,

மக்கா கஷ்டங்கள இப்படி புட்டுப்புட்டு வைக்கறியியேயய்யா! இப்ப மட்டும் நீர் நேர்ல இருந்திருந்தா கட்டிப்புடிச்சு ஓன்னு அழுதிருப்பேன்! வேறென்ன செய்ய.. நமக்கு நாமே தோள்கொடுத்து தேத்திக்க வேண்டியதுதான்...

Anonymous said...

சீதா மேடம், போத்தீஸ், குமரன் சில்க் வாசலில் தெய்வமே என்று உட்கார்ந்திருக்கும் ஆண் சிங்கள் கூட்டத்தைப் பார்த்தால்
இன்னும் சிரிபபய் வரும். இதுதான் பட்ஜெட் என்று பணத்தை கையில் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆவர்த்த வூட்டுட்டு, பிளவுஸ் எடுக்க, ஏன் ஆட்டுகுட்டி மாதிரி பின்னாடி போகணும்?

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

ஒழுங்கான ஸ்டூடண்ட் நீ மட்டும்தான்பா.. வரிவரியா படிச்சு டவுட்டு கேக்கறியேப்பா! நல்லா இரு. அந்த 0.00000000001 ல இருந்து உனக்கு ஒரு மனைவி கிடைக்க என் ஆசீர்வாதம்!

ஆனா, துளசியின் தோழின்ற பேர்ல வந்திருக்க பெண்ணீய அனானி பேச்சையெல்லாம் கேக்காதே. (அதுவும் இதுவும் ஒண்ணுதான்னு நம்ம துப்பறியும் படை சொல்லியிருக்கு).. பாத்தியா எப்படி பிரித்தாளும் சூழ்ச்சி செய்யறாங்கன்னு?

கல்ப் தமிழன் - அதான் சொல்லியிருக்கேனே - பலத்த மிரட்டலுக்கிடையேன்னு! பிரதி திங்கள்ன்ற கட்டுப்பாடுதான் இல்லையே தவிர வாரம் ஒண்ணு நிச்சயம்.

பினாத்தல் சுரேஷ் said...

முரளி கண்ணன்,

//ஆனா அப்ப நீங்களே அனுபவம் பத்தாம அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருந்திருப்பீங்க, தம்பிகளாவது நல்லாயிருக்கட்டும்// அதேதான்! நமக்கு சரியான நேரத்துல அட்வைஸ் கிடைக்காததால பாடு பட்டதாலதான் இப்படி எழுதவே ஆரம்பிச்சேன்.

சிவா,

ஆமாம். கூந்தல் இருக்கவன் அள்ளி முடியறான்னு விட முடியுதா? ஜவுரி வச்சாவது நானும் அள்ளி முடியணும்னு இல்ல ஒரு கும்பல் அலையுது?

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா,

உங்ககிட்ட சொல்லக்கூடாதுதான், இருந்தாலும் நட்புக்காக: பே ஸ்லிப்புன்றது ரெண்டு வகைப்படும். நிஜமா கம்பெனி தர்றது ஒண்ணு, வேற கம்பெனிக்கு மாறும்போது தயார் பண்றது இன்னொண்ணு.. நான் மூணாவதைச் சொல்றேன்!

அதே புத்தகத்துல பொம்பளைங்களுக்கு வேற ஒரு கிரகம் புடிச்சிருக்கதாவும் தகவல். வேணும்னு மறைக்கறீங்களா?

எக்ஸ்பாட் குரு -- அதேதான். புடவை கலர் 50000, ஆனா ப்ளவுஸ் பிட் ரகம் 200தான். இந்த 200க்கும் 50000க்கும் மேட்சிங், காண்ட்ராஸ்டுன்னு ஜார்கன் கேட்டாலே நட்டு கழண்டுடும்.

பினாத்தல் சுரேஷ் said...

துளசியின் தோழி,

கலர் ப்ளைண்டுநெஸ் என்பதற்கு புது விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே, ஏற்றுக்கொள்ளும் விதமாகவே இல்லை! வாஸ்தவம், அசின், ஷ்ரேயா போன்றவர்கள் திரையில் வந்தால், காட்சியைப் பார்ப்பவர்கள் நாங்கள் (கண்கொள்ளாக் காட்சின்னும் வச்சுக்கலாம் :-)), காஸ்ட்யூமைப் பார்ப்பவர் நீங்கள்!

அடடா! ப்ளேன் கேக்கற பார்ட்டியா நீங்க! உங்க ஹஸ்பண்டு இதைப் படிக்கறது இல்லையா?

அப்பால, மங்களூர் சிவாக்கு என்ன த்ரெட்டு விடறீங்க! ரணகளம் ஆயிடும் ஜாக்கிரதை!

புள்ளிராஜா,

இப்படி சைவமா எழுதும்போதே கொலை மிரட்டல் வருது.. அசைவம் ஆரம்பிச்சா மாலைதான்!

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

எனக்கே சிரிப்பா வரும்னா என்று எழுதியதில் உங்கள் பெண்ணீய விழுமியங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றது! அப்பாவிகளைப் பார்த்தால் சிரிப்பீர்களா? ரொம்ப தப்பு!

இளவஞ்சி.. வாங்க! கொன்னா பாவம் தின்னா போச்சுன்ற மாதிரி வாழற கஷ்டத்தை எழுதறதல் தணிக்க முயற்சி பண்ணிகிட்டிருக்கேன் :-(

மீண்டும் அனானியா வந்திருக்க துளசியின் தோழி (கண்டுபிடிச்சிடுவோம்ல!),

பட்ஜெட்? இதைப்பத்தியே ஒரு பாடம் எடுக்கணும்! சொல்லிய பட்ஜெட்டுக்கும் சொல்லாத பட்ஜெட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி! 1000 ரூபாய் புடவைன்னு கரெக்டா ATM லே இருந்து எடுத்து வச்சிருப்பான், அதுக்கு அக்ஸசரீஸ்னு சுலபமா இன்னொரு 500 ரூபா வேட்டு நிச்சயம்.. கூடவே இருந்தா முகம் பார்த்தாவது இரக்கம் வராதான்றதுக்காகத்தான் போத்தீஸ் வாசல் தவம்! தெரிஞ்சுக்கங்க!

Anonymous said...

//நிறங்களில் இத்தனை நிறங்களா?//
இதன் கீழ் வரும் அத்தனையும் சூப்பர். நாய்களின் கண்ணுக்கு Black & White மட்டும் தான் தெரியுமாம். பெண்களையும் அப்படிப் படைத்து இருக்கக் கூடாதா?
Nice post

ரசிகன் said...

ஹா.....ஹா....
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேரேரே..

கோபிநாத் said...

திகில் படம் பார்த்தமாதிரி இருக்கு!

அரை பிளேடு said...

சுரேஷ்...

பாடமெல்லாம் நல்லாதாங்க இருக்கு.

ஆனா ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஆயிரந்தான் நாம போருக்கு தயாரா இருந்தாலும் அவங்க ஆயுதங்களை நம்மால எதிர்க்கவே முடியாது.

என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது.

அது மட்டும் நம்ம மேல விழுந்துட்டா நாம டோட்டல் சரண்டர்.

இந்த கண்ணீர் ஆயுதத்துல இருந்து தப்பிக்கிற யுத்த முறைகள் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி கொடுங்க.

நாகை சிவா said...

அல்லாத்தையும் குறிச்சு வைத்துக் கொண்டாச்சு, வீட்டு பாடம் ஹிஹி...

நாகை சிவா said...

இந்த டிரஸ் விசயத்தில் நாம் ரொம்ப தான் பாவம்.. பச்சை ஷேடு இல்ல நீல ஷேட விட்டா வேற கலரே நமக்கு வாங்க தோணத மாட்டேங்குது...

உங்க இலக்கிய தொடர வேண்டும், எதிர்ப்பவர்கள் எதிரித்து ஷார்ஜா மெகா மால் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.

K.R.அதியமான் said...

மக்கா,

இந்த பாடத்தையெல்லாம் இப்ப கேட்டு என்ன பிரயோஜனம். 2001ல் கேட்டிருக்கனம்..

தி.நகர் (முக்கியமாக ரங்கனாதன் தெரு) கண்டிப்பாக ஷாப்பிங் செல்வதில்லை என்று சபதம் பூண்டுள்ளேன். ஏதோ வறுமையான தேசங்கராஙக. இஙக பார்த்தா அப்படி ஒன்னுந் தோனாது. வாங்கித்தள்ளுகிறாஙக. (என்னமோ உலகத்தின் கடைசி தினம் வந்திட்ட மாதுரி) ; கூட்டந் தாங்குல சாமி. மனைவியயை மட்டும் நைசா அவஙக அக்கா கூட ஷாப்பிங் அணுப்பிட்டு, நான் கழுண்டுகிறது வழக்கம்.

பினாத்தலாரே, லாஜிக்கல் சந்தேகம் ஒன்னு :

எறும்பு போவதுதான் தெரியும், யான போறது கண்னுக்கு தெரியாதுனு ஒரு பழமொழி.
கார் வாங்ப் போகிற அளவுக்கு வருமானம் வருது. ஆனா ஆட்டோல ஏறமாட்டோம். அவன் அநியாயமாய் கேட்கிறானாம். ஆனா நாங்க ஆயுரக்கணக்குள கண்டதுக்கு செலவு செய்வேம்ல. டவுன் பஸ்லதான் கஸ்டப்பட்டு போவோம். இது என்ன லாஜிக்னே எனக்கு விளஙகமாட்டேங்குது. நான் புஸ்தகத்துக்கு நிறையா செலவு செய்வேன் (துணிமணி, உயர்ந்த ரக் சாப்படு போன்றவற்றில் ஈடுபாடு இல்லை); புக் வாங்குவது வெட்டிச் செலவாம். ரகசியமாய் வாங்கி (உடனே பில்லை கிழித்துப் போட்டு விட்டு, வாங்கிய புக்ஸ புஸ்தக அலமாரியில் பதுக்கவதே விவேகம்....

RATHNESH said...

உங்கள் "வீட்டு"ப் பாடத்தில் இருந்த உளவியலை நன்கு ரசித்தேன்.

தொடர்ந்து எழுதுங்கள். இது குடும்ப விஷயம் தானே; குடும்பக் கட்டுப்பாடு விஷயம் இல்லையே, பிறகு ஏன் இடைவெளி?

பினாத்தல் சுரேஷ் said...

sabes,

நன்றி. நாய்களோட ஒப்பிட்டது தெரிஞ்சா நாலு நாள் சோறு கிடைக்காதே தெரியாதா:-))

நன்றி ரசிகன்.

கோபி -- ரொம்ப பயப்படாதே :-)

அரை பிளேடு,

//என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது.//

இதுக்கு ஒரு தனி போஸ்ட்டே வருது. சமாளிக்கறதைப் பத்தி இல்லை, (முடியவும் முடியாது), Anticipate பண்றதைப்பத்தி :-)

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா,

//உங்க இலக்கிய தொடர வேண்டும், எதிர்ப்பவர்கள் எதிரித்து ஷார்ஜா மெகா மால் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.// எதிரி ரொம்ப ஸ்ட்ராங்க்.. இதுக்கெல்லாம் அசர மாட்டாங்க :-(

ஆதரவுக்கு நன்றி..

அதியமான், 2001 லே நான் இருந்த நிலை என்ன! க்ளாஸ் எடுக்கற நிலைமையிலயா இருந்தேன்.. முதல் வருகை போலிருக்கு, நன்றி..

ரத்னேஷ், குடும்பம்னாலே கட்டுப்பாடுதான் :-)

வல்லிசிம்ஹன் said...

சுரேஷ்,
கொஞ்சம் உண்மை இருக்குனு ஒத்துக்கிட்டாக் கூட, ரங்கமணிகளெல்லாம் செய்யற தில்லுமுல்லுவும் நிறைய தான்.

அதுதான் உங்க ஆர்க்யுமெண்ட்ஸை ஒத்துக்க முடியாத நிலமலே இருக்கோம்.:))
கடைக்கே வராத சிங்கமெலாம் இருக்கு. உனக்குத் தெரியாததா நீயே எல்லாம் செஞ்சுடுனு சொல்லுவாங்க.
அப்புறம், இவ ராசில புடவை வாங்கறத்துக்குள்ள நான் கூடுவாஞ்சேரி ரோட்ட் ட்ரிப்பே போயிட்டு வந்துட்டேன்னு சொல்லுவாங்க.
ஏதோ போனாப் போகுது, நாமளும் இல்லைன்னா இவங்க அம்மா பெத்த செல்லத்த யாரு மேய்ப்பானூ தான் பொறுமையா இருக்கோம்:)))

பினாத்தல் சுரேஷ் said...

வல்லி சிம்ஹன்,

கொஞ்சம் உண்மையாச்சும் இருக்குன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி. உங்க சைட்லே இருந்து இதுவே பெரிய விஷயம் :-))

//கடைக்கே வராத சிங்கமெலாம் இருக்கு. //

அந்த சிங்கம் என்ன பொறந்ததிலே இருந்தேவா கடைப்பக்கம் போனதில்லை? ஒரு முறை கூப்பிட்டிட்டு போயி, காட்டு காட்டுன்னு காட்டினதாலதான இப்படி சூளுரை எல்லாம் எடுக்கற நிலை வருது??

K.R.அதியமான் said...

ஒரு நண்பன் கொடுத்த டிப்ஸ் :

1.கல்யாணமான புதுசில, புதுபொண்டாடி மயக்கதில், அவர் முதன் முதலில் செய்த சமையல்,
சகிக்கமுடியாம இருந்தா, 'சூப்பர்' என்று பொய் சொல்லதீங்க. பிறகு ஆயுசுக்கும் அந்த மாதிரிதான்
கிடைக்கும்.

2.மச்சினன் (மனைவியின் தம்பி) ஒழுங்கா படிக்காம ஊர் சுத்திக்கிட்டிருந்தா, மனைவியிடம் ' உன் தம்பி உருபட மாட்டான்' என்று திட்டாதீர்கள். பிறகு அவனை திருத்தி, படிக்க வைத்து, 'வேலை' வாங்கித்தரும் பொறுப்பு உமது தலையில் சூட்டப்படும்.

நணபன் கில்லாடி. ஜின்ல லெமன் கார்டியல் கலந்து (தண்ணிர் மாதிராதான் பார்பதற்க்கு தோன்றும்) மாமியார் எதிரவே அடிக்கும் ஜித்தன். அவனது ஒரு புலம்பல் : 'ஆபிஸ் முடிஞ்சு எங்காவது பார்டியில் ஒரு மூனு பெக் அடித்துவிட்டு வீட்டுக்கு இரவு திரும்பியதும், ஸ்டார் மூவிஸ் சானல்ல ஒரு ஆஙகில படத்த பார்த்திக்கிட்டு உட்காந்திருவேன். (மனைவி தூங்கும் வரை) ; கிட்டா போன மோப்பம் புடிசிருவாஙகளே. 'அன்னக்கினு பார்த்து பாடாவதி (அறுவை) படமா போடுவானுகடா, விதியேனு பார்ப்பேன்'..

மங்களூர் சிவா said...

@K.R.அதியமான்.

அண்ணே நல்ல நல்ல ஐடியாவா குடுக்கறிங்க தொடர்ந்து இது மதிரி நிறைய குடுங்கன்னே.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு விட்டுறாதீங்க!!!

Anonymous said...

>பெனாத்ஸ்,

மக்கா கஷ்டங்கள இப்படி புட்டுப்புட்டு வைக்கறியியேயய்யா! இப்ப மட்டும் நீர் நேர்ல இருந்திருந்தா கட்டிப்புடிச்சு ஓன்னு அழுதிருப்பேன்! வேறென்ன செய்ய.. நமக்கு நாமே தோள்கொடுத்து தேத்திக்க வேண்டியதுதான்<

யாரு, க.க.தொடர் எழுதின இளவஞ்சியா ? கொடும கொடும-ன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடின கதயால்ல இருக்கு ?

என்ன கொடும இளவஞ்சி இது ?

அன்புடன்
பொன்.முத்துக்குமார்

K.R.அதியமான் said...

தம்பி சிவா,

நன்றி. இதோ மேலும் சில டிப்ஸ் :

1.மனைவி ஊருக்கு போயிருந்தாலும், கணவன் ஒழுங்கா வீட்டலதான் இருக்கானா, இல்ல ஊர் சுத்தரானானு செக் பண்றதற்காக வீட்டு லான்ட்லைன்க்கு (செல்லுக்கு அல்ல) கூப்பிடுவாக. லான்டலைனில் கால் பார்வர்டிங் நம்ம செல்லுக்கு பண்னிட்டு, ஜாலியா சுத்தலாம். லான்ட்லைன் கால் டைவர்ட் ஆகி வரும். பதில் பேசும்போது பார்ல பேக்ரவுன்டு நாய்ஸ் இருந்தால். 'டி.வில நல்ல சண்டைபடமா பார்த்துக்கிட்டு இருக்கேன்' சொல்லவும். மறக்காம பிறகு கால்டைவர்டை கானஸல் செய்யவும்.

2.சில கில்லாடி மனைவிகள் கணவனின் செல்ப்போனை செக் பண்ணுவாங்க. அதனால் selective amnesia மாதிரி selective கால்களை மட்டும் delete செயாவும். எல்லா கால்களையும் delete செய்தால் மாட்டிக்குவோம்.

3.பார் நண்வர்களின் பெயர்களை வேறு ஏதாவது 'நல்ல' பெயரில் பதிவு செய்யவும். உ.ம் : ஆபிஸ் களார்க், etc.

Anonymous said...

எப்படிங்க இப்படி புட்டு-புட்டு வைக்கிறீங்க....அதிலும் பன்ச் (குடும்பம்னாலே கட்டுப்பாடுதான்) எல்லாம் சூப்பர்.....

மங்களூர் சிவா said...

//
K.R.அதியமான். 13230870032840655763 said...
தம்பி சிவா,

நன்றி. இதோ மேலும் சில டிப்ஸ் :
//
அண்ணே இதெல்லாம் மைண்ட்ல மட்டும் வெச்சு மறந்துட்டா என்ன பன்றது Gmail ல சேமிச்சி வைக்கிறேன் அண்ணே!

(இந்த டிப்ஸை எல்லாம் மறக்கற விசயமா வாழ்க்கை பிரச்சனையாச்சே)

பினாத்தல் சுரேஷ் said...

அதியமான்,

கலக்கல் டிப்ஸா கொடுத்துத் தள்ளறீங்க.. ஒரு விசிட்டிங் ப்ரொபஸரா சேத்துக்கலாமா? ;-)
நண்பன் ரொம்ப ரொம்ப நெருங்கிய நண்பன்னு -- ஈருடல் ஓருயிர் -- ஓருடல் ஓருயிர் மாதிரின்னு --பட்சி சொல்லுது :-))

பொன் முத்துக்குமார், வாங்க! இளவஞ்சிய நான் ஃபாகல்டிலேதான் எதிர்பார்த்தேன்.. ஏமாத்திட்டார்..

(நீங்க pmkr என்ற பேர்லே சிஸ் இந்தியாவுல இருந்தவரா?)

பஞ்சை ரசிச்ச அனானிமஸ்.. உங்க பயம் புரியுது :-)

மங்களூர் சிவா,

//(இந்த டிப்ஸை எல்லாம் மறக்கற விசயமா வாழ்க்கை பிரச்சனையாச்சே)//

அதானே!!

மங்களூர் சிவா said...

//
பினாத்தல் சுரேஷ் said...

பொன் முத்துக்குமார், வாங்க! இளவஞ்சிய நான் ஃபாகல்டிலேதான் எதிர்பார்த்தேன்.. ஏமாத்திட்டார்..

(நீங்க pmkr என்ற பேர்லே சிஸ் இந்தியாவுல இருந்தவரா?)
//
சுரேஷ் சிஸ் இண்டியா டிஸ்கஷன் பாரம்ஸ்ல நீங்க இருந்தீங்களா??

அப்டின்னா இதை கொஞ்சம் பாருங்க
http://mangalore-siva.blogspot.com/2007/08/blog-post.html

Unknown said...

அம்புட்டு மேட்டரையும் இப்படி பொதுவுல்ல வச்சா பொழப்பை எப்படிங்கண்ணா ஓட்டுறது...

இந்த தொடரை ரங்கமணிகளை விடத் தங்கமணிகளே அதிகம் படிப்பதாய் உளவு துறை ஒரு உண்மைத் தகவலைக் கொடுத்திருக்கு :-(

K.R.அதியமான் said...

சுரேஷ்,

அழைப்பிற்கு நன்றி.Wifeக்கு தெருஞ்சா செத்தேன். அவங்க s/wல இருக்காங்க.
By the by, நீஙக் பிறந்தது 28.3.1970 ஆ? எரிஸ்(aries) ? ; எனக்கு கொஞ்சம் ஜோசிய ஆர்வம் உண்டு.

மக்கா,

டிப்ஸ் எல்லாம் பார்த்து ஏதோ குடிகாரப் பயன்னு நினைச்சிகிடாதீக.1.5 பீர்தான் நம்ம லிமிட். அதூம் எப்பனாசிக்குதான். ஆனா 12 லார்ஜ் அடிக்கிற நண்பன் இருக்கான். (அவன் கூட இனிமே பழகினா டைவார்ஸ்தான் என்கிற கண்டிசன். அதனால தான் இந்த ரகசிய வேலையெல்லாம்.) !!!

இவன்....இளையவன் said...

//என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது. அது மட்டும் நம்ம மேல விழுந்துட்டா நாம டோட்டல் சரண்டர்.//

அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது
அது ஆம்பிள்ளையோட வீக்னஸ்ன்னு வேனும்னா சொல்லலாம்.

பொதுவா "ஆணுக்கு பெண் சமம்னு பேசறீங்க இல்ல, அப்போ உங்களுக்கு மட்டும் எதுக்கு தனி க்யூ?" ன்னு வீரவசனம் பேசினாலும், நாம ஒரு பத்து பேர் நிக்கும் போது ஒரு பெண் தனியா வந்தா "பரவால்ல நீங்க முதல்ல கட்டிட்டு போங்க" ன்னு சொல்லதான் செய்யறோம். இதை பெண்ணின் மேல் உள்ள ஒரு வகையான மரியாதை, இரக்கம், அன்பு, gentleness, etc, etc., என்றும் சொல்லலாம்.

அதுக்காக சரன்டர் ஆகுறோம்ன்னு அர்த்தம் கிடையாது.

1.என்னை மட்டுமே நம்பி வந்தவள்(உன் பேங்க் பேலன்ஸ், வேலை எல்லாத்தையும் சேர்த்துதான்)
2.நான் மட்டுமே அவளுடைய உலகம் (போடா டுபுக்கு)
3.இவளுடைய மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் நான் தான் பொறுப்பு
4.அப்பா அம்மா வீடு எல்லாவற்றையும் வேறோடு விட்டு வந்தவள்
5.பெண் பிள்ளையிடம் சன்டை போட கூடாது(அம்மா சொல்லிக்குடுத்தது)
6.பெண்ணை அழச்செய்யவோ அடிக்கவோ கூடாது(இதுவும் அம்மா சொல்லிக்குடுத்தது, ஒழுங்கா படிக்க கூடதான் சொன்னாங்க அத செஞ்சியா)
7.போயும் போயும் நம் வீறாப்பை(வீரத்தை) ஒரு பெண்ணிடமா காட்டுவது? (இங்க தான் ஸ்லிப்பிங்கே)
8.(தீபாவளிக்கு 5000 ரூபாய்க்கு புடவை எடுத்து குடுத்துட்டு வெறும் 500 ரூபாய்க்கு சட்டை எடுப்பது போன்ற) விட்டுக்கொடுக்கும், தன்னலம் இல்லா மனப்பான்மை.

இப்படி மேல இருக்க ஏதாவது ஒரு காரணத்த வச்சு விட்டுக்கொடுத்துடுறோம்.
(நாங்க சுத்தமா வித்தை தெரியாதவங்க கிட்ட மோதறது இல்லை)
இதுக்கு பேரும் சரன்டர் தானோ!

இந்த மரியாதை, இரக்கம், அன்பு, gentleness, etc, etc. எல்லாம் எங்கே, எப்படி, எவ்வளவு யூஸ் பன்னனும்னு தெரியாமதான் மாட்டிக்கிறோம்.

சுரேஷ்! இப்பதான் நீங்க பயமுறுத்துவதை நிறுத்திட்டு (கொஞ்சமா) தைரியம் சொல்ல ஆரம்பிக்கறீங்க.

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

பாத்துட்டேன், பதில் போட்டுட்டேன்.

தேவ்,

என்ன காரம்? கோபம் குறையுங்கள்! உங்கள் உளவுத்துறை உள உளாத்துறையாக கொடுத்துள்ள தகவல்களை நம்பாதீர்கள்.

கூலிங்!

அதியமான்,

தேதி சரிதான், ஏரீஸேதான்.

//அவன் கூட இனிமே பழகினா டைவார்ஸ்தான் என்கிற கண்டிசன்// அடுத்த பாகமே இதை மையமா வச்சுத்தான்!

கணேஷ் பாபு,

//இப்பதான் நீங்க பயமுறுத்துவதை நிறுத்திட்டு (கொஞ்சமா) தைரியம் சொல்ல ஆரம்பிக்கறீங்க.//

கோர்ஸ் முடிவுல பாருங்க, கல்யாணம் ஆகாதவங்க, இதையெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணனும்கறதுக்காகவே அவசரக்கல்யாணம் பண்ணிப்பாங்க!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

பதிவோட கமெண்ட்டும் பிரமாதமா வந்துட்டு இருக்கு.
k.r.அதியமான்,ஜமாயுங்க

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார்.
==>
பரவாயில்ல,நம்மாளுங்களும், பிரமாதமாய் வாக்குறுதி கொடுத்து,ஆஃ பணறாங்களே.

Anonymous said...

ஆமாங்க சுரேஷ், நாந்தான் அந்த pmkr. கடந்த சில நாட்களா பின்னூட்டம் இட முடியலை. அதான் லேட்.

அன்புடன்
முத்துக்குமார்

pudugaithendral said...

En thambiku ponnu pathu kittu irukkom. Ponna nan parthu nan konjam training koduthudrennu sonna annilernthu kalangi poirukan.

Unga paadangala padichu ready aaga solliten

 

blogger templates | Make Money Online