Oct 29, 2009

படுக்கை - சிறுகதை

படுக்கையில் கிடந்தான் கிழவன். எவ்வளவு நாள் ஆசைப்பட்டிருப்பேன் இவனை இப்படிப்பார்க்க.

”தேவா”

கவனிக்கவில்லை. அவனை இந்தப்பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை.

“தேவா.. கண்ணைத் திறந்து பாரு”

புரண்டு படுக்க முயற்சித்தான். குத்தல் வலியில் முகம் அஷ்டகோணல் ஆனது. இந்த நிலையில் இருப்பவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறுதான். இருந்தாலும் என்னால் மகிழ்ச்சியை மறைக்கமுடியவில்லை.

“நீயா? இப்ப திருப்தியா இருக்கணுமே”

“திருப்தி? அதை நான் இழந்து பல ஜென்மம் ஆச்சு.”

“இன்னுமா உன் கோபம் அடங்கல?”

“அவ்வளவு சுலபமா? உன் வீரத்தை என்கிட்ட எத்தனை முறை காமிச்சிருக்கே? இப்பதானே நான் ஆட ஆரம்பிச்சிருக்கேன்!”

வலியிலும் கிழவனுக்கு சிரிப்பு வந்தது,

“நீயா? இப்ப ஆடறியா? நீ ஜெயிச்சிட்டதா நினைக்கிறயா?”

”தெரியும் தெரியும். இப்பவும் எதாச்சும் சொல்லுவே. இப்படி நீ படுக்கையா கிடக்கறதுக்கு நான் காரணம் இல்லன்னு சொல்லுவே”

”நீ நம்பமாட்டே. ஆனாலும் சொல்றேன். நீ இல்லை!”

அதே சிரிப்பு. பலவருடங்கள் முன்பு எரிச்சலை ஏற்படுத்திய அதே சிரிப்பு.

தேவா அப்போது மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அப்போதும் என்னைப்பார்க்கையில் கிழவன் தான்.

நான் பயணத்தில் களைத்துப் போயிருந்தேன். ஏமாற்றங்களில் அடிபட்டிருந்தேன்.

”திரும்ப வந்துட்டியா? போன வேலை?” உண்மையான கனிவோடு கேட்பவன் போலவே கேட்டான்.

தலையை ஆட்டினேன். கண்ணீர் அவனுக்கு கதை சொல்லியிருக்கும்.

”என்ன பண்ணப்போறே?”

எச்சிலை விழுங்கிக்கொண்டேன். இவனிடம் எப்படிச் சொல்வது?

“நீங்க..” வார்த்தை திக்கியது.

“நான்?” தேவாவின் முகம் குழப்பமானது.

“நான் உங்களை..”

“என்னை?” வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளி அவனைத் துன்புறுத்தியது போல.

“நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறீங்களா” சொல்லியே விட்டேன். இந்தக் கிழவனைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லும் அளவுக்கு விதி என்னைக் கொண்டு விட்டதை நினைத்து இலக்கில்லாத கோபம் வந்தது. விதியா? இவனா? இல்லை என் கோபத்தின் இலக்கு இவன் தான்.

உடனே பதில் வரவில்லை. என்னை ஏற இறங்கப் பார்த்தான். என் அழகு பருவத்தின் உச்சத்தில் இருந்த நேரம் அது. சம்மதித்து விடுவான். எங்கே போகிறான். கல்யாணம் மட்டும் ஆகட்டும். இவன் எனக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம். வட்டியும் முதலுமாக.

இந்த வயதில் இவ்வளவு அழகான பெண் கிடைத்திருக்கிறாள். முதலில் அவன் கண்ணில் தெரிந்தது ஆசைதான். ஆனால் கொஞ்ச நேரம்தான். நடைமுறைச் சிக்கல்களை நினைத்திருப்பான் போல. ஆசை போய் ஏமாற்றம் வந்தது.

“என்ன பேத்தறே? உன் வயசென்ன என் வயசென்ன? இந்தக் கிழவனை ஆசையா படறே?” அவன் குரலில் அது உண்மையாக இருந்துவிடக்கூடாதா என்ற ஆசை இருந்தது.

“நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா எனக்கு வேற வழி இருக்கா?”

உண்மை சுட்டிருக்கவேண்டும். கோபமாக எழுந்தான்.

“உனக்கு வேற வழி இருக்கான்னு தெரியாது. எனக்கு வேற வழி இருக்கு. நீ எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?”

ஒருவேளை பொய் சொல்லியிருந்தால் கிழவன் அன்றே மசிந்திருப்பானோ என்று பலமுறை பிறகு யோசித்திருக்கிறேன். எவ்வளவு சுலபமாக முடிந்திருக்கவேண்டிய பழிவாங்கல். எத்தனை வருடங்கள் இழுத்துவிட்டது. ஆனால்.. இன்றாவது முடிந்ததே. கிழவனை திருப்தியாகப் பார்த்தேன். முனகிக்கொண்டுதான் இருந்தான்.

“நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன். உன்னோட ஆசையும் அதுதான்னு எனக்கும் தெரியும்” தேவா ஒவ்வொரு வார்த்தை பேசும்போதும் வலி தெரிந்ததில் என் வெறி தணிந்தது.

“உன்னோட ஆசை மட்டும் இல்ல.. என்னோட ஆசையும் அதுதான். சொல்லப்போனா அன்னிக்கு உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்னை நானே திட்டிக்காத நாளே கிடையாது.”

சாகும் நேரத்தில் பேசுகிறான். ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

“பாழாப்போன கௌரவர்கள், பாண்டவர்கள்.. அவங்க நல்லதை நினச்சு பிரம்மச்சரியம் பேசியே என் வாழ்க்கையை கெடுத்துகிட்டேன். உன் வாழ்க்கைய சர்வநாசம் செஞ்சிட்டேன். சால்வன் உன்னை திருப்பி அனுப்புவான்னு எதிர்பார்க்கவே இல்லை. அம்பா.. என்னை மன்னிச்சுடு..” அம்புகள் புரள ஆசைப்பட்டபோதெல்லாம் குத்தியதில் புதிதாக ரத்தம் பீரிட்டது.

“இப்ப என் பேர் அம்பா இல்லை. சிகண்டி” திரும்பினேன் நான்.
***

34 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

நச்சோ நச்!

வெற்றி பெற வாழ்த்துக்கின்றேன் பினாத்தலாரே.

அது ஒரு கனாக் காலம் said...

சும்மா.... நச்சன்னு இருக்கு !!!!!!

Vijay said...

நல்ல கதை, ஆனால் பாதிக் கதை படித்ததும் யூகிக்க முடிந்தது. ச
ில நாட்களுக்கு முன் ஒருபக்கம் ஸ்ரீதர் இதே மாதிரி பீஷ்மர் கதை எழுதியிருந்தார்.

கோபிநாத் said...

கலக்கல தல ;))

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

சென்ஷி said...

:) நல்லாருக்குது. ஆனா பினாத்தலார்கிட்ட இன்னும் ரொம்ப அதிகமா நான் எதிர்பார்க்கிறேன்!

ஷண்முகப்ரியன் said...

பீஷ்மர் கதை என்று எனக்குத் தோன்றவே இல்லை.
மஹாபாரதக் கதாபாத்திரத்துக்கு இப்படியும் ஒரு அறிமுகமா?

மனம் நிறைந்த பாராட்டுக்கள்,நண்பரே.

ஆயில்யன் said...

பீஷ்மர் கதைன்னு டக்குன்னு புரிபட்டுருச்சு :)

//:) நல்லாருக்குது. ஆனா பினாத்தலார்கிட்ட இன்னும் ரொம்ப அதிகமா நான் எதிர்பார்க்கிறேன்!//

அதே!! :)

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Excellent ! Typical Penathalar style! It is difficult to narrate a known story in an interesting way and you did it with ease.

Wish you all the very best to win.

☀நான் ஆதவன்☀ said...

ஆகா பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் கலந்துகிறீங்க போல. நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசிக்கிறேன்.

”நச்” சூப்பர் :)

மணியன் said...

//:) நல்லாருக்குது. ஆனா பினாத்தலார்கிட்ட இன்னும் ரொம்ப அதிகமா நான் எதிர்பார்க்கிறேன்!//

சென்ஷி சொல்வதை ரிபீட்டிக்கிறேன் :)

Vanchinathan said...

பாத்திரங்களே முதமையாய், ஆசிரியரின் குரல் வெளியே வராமல் அழகாக எழுதப்பட்ட கதை.

ஒரு திருத்தம்: "இந்த பாண்டவ கௌரவர்களுக்காக ..." தான் பிரம்மசரிய விரதம் இருந்ததாக பீஷ்மர் (உங்கள் கதையில்) குறிப்பிடுவது சரியில்லை. சந்தனு தான் விரும்பிய பெண்ணை மணக்க இடையூறாக இருக்கக்கூடாதென்று தேவதத்தன் சபதம் பூண்டான். அப்போது பாண்டு, திருதராஷ்டிரன் எல்லாம் பிறக்கவில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துளசி அக்கா.

நன்றி அது ஒரு கனாக்காலம்.

நன்றி விஜய். பாதி முடிந்ததும் ஊகிக்கிறீர்கள் என்றால் எதையோ எதிர்பார்த்து அணுகுகிறீர்கள் :-) செல்லாது செல்லாது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.

நன்றி சென்ஷி.

//ஆனா பினாத்தலார்கிட்ட இன்னும் ரொம்ப அதிகமா நான் எதிர்பார்க்கிறேன்!//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணகளமா இருக்கு :-)

நன்றி ஷண்முகப்ரியன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆயில்யன். டக்குன்னு புரிபட்டுடுச்சா? அப்போ பினாத்தல்கிட்டே வேறெதையோ எதிர்பாக்கறீங்க போல. சென்ஷிகிட்ட சொன்னதேதான் :-)

நன்றி ஸ்ரீதரன் (ஷார்ஜா).

நன்றி மணியன். சென்ஷிக்கு சொன்னதும் ரிப்பீட் :)

நன்றி வாஞ்சிநாதன்.

பாண்டவ கௌரவர்களுக்காக என்ற வார்த்தையை அவன் சொல்வது போரின் முடிவில், அம்புப்படுக்கையில். தன் விரதம் இவர்கள் சண்டையில் வீணாகப்போனதே, தன் மனதுக்கினியவளை இந்தச் சண்டைச் சகோதரர்களுக்காக இழந்தோமே என்ற (கற்பனை) சிந்தனையின் விளைவாக :-) தகவல் பிழை இல்லை என்றே நினைக்கிறேன் :-)

இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் ட்விட்டரில் பறந்து ஆடும் பிங்கு ஜட்டியும் நம்ம ஊர் கண்டுபிடிப்புதான்னு நிலைநாட்டப் பார்க்கறீங்க. ஆல் தி பெஸ்ட்.

நேசமித்ரன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கிறேன்

:)

Sridhar V said...

வழக்கம் போல விறுவிறுப்பா எழுதிருக்கீங்க. ட்விஸ்ட் நல்லாவே இருக்கு.

//நான் அன்னிக்கே உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டிருப்பேன். ஆனா ரொம்ப சீக்கிரமா படுக்கையில விழுந்திருப்பேன்//

இந்த இடம் மட்டும் சட்டுனு புரியல. பிரம்மச்சாரிகளுக்கு ஆயுள் அதிகம் மாதிரி சொல்ல வர்றீங்களா? இல்ல அந்த ‘படுக்கை’யும் அம்பு படுக்கையும் வேறயா? :)

டாக்டர் விஜய் (இளைய தளபதி இல்லை. நம்ம ட்விட்டர் சுக்கானான் டாக்டருக்கு) அவர்களே!

பெனாத்தலார் என் பதிவெல்லாம் படிக்கிறது நிறுத்தியே வருசக் கணக்காயிடுச்சி. சாய்ஸ்ல விட்டுருவார். :)

Swami said...

நல்ல கதை..

ஆனா நீங்க இன்னும் நல்லா பண்ணலாம்..பண்ணீயிருக்கீங்களே..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

வண்டிக்காரன் said...

நல்ல நச்-ங்க ..நான் கூட எழுதியிருக்கேன் ..நம்மளோடது தேறாதுன்னு நினைக்கிறேன்

வண்டிக்காரன் said...

நல்ல நச்-ங்க ..நான் கூட எழுதியிருக்கேன் ..நம்மளோடது தேறாதுன்னு நினைக்கிறேன்

Beski said...

ஒன்னுமே புரியல. ஏன்னும் தெரியல.

இதச் சொல்லக்கூட தயக்கமா இருக்கு. ஏன்னா, ஒருத்தர் கூட அப்படி பின்னூட்டம் போடலியே!

Prabhu said...

புராணத்தில கூட நச்ச நுழைக்குறீங்களே!

யோசிப்பவர் said...

இந்த ஸ்டைலை உங்க ஃபார்முலா மாதிரி ஆக்கிட்டீங்களே!!!:-)

ச.சங்கர் said...

//எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...
ஒன்னுமே புரியல. ஏன்னும் தெரியல.

இதச் சொல்லக்கூட தயக்கமா இருக்கு. ஏன்னா, ஒருத்தர் கூட அப்படி பின்னூட்டம் போடலியே!//


கவலைப்படாதீங்க..பொதுவா பெனாத்தல் எழுதுறது இப்படித்தான் இருக்கும். புதுசா வாசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.ஆரம்ப அதிர்ச்சில இருக்கீங்க.போகப் போக சரியாயிரும்.

போனமுறைக்கு முந்திய முறை இவர் என்னைக்கு வந்திருந்த போது டெம்போல ஆளனுப்பி டேமேஜ் பண்ணியும் இவரு திருந்தலை..இந்த முறை வேற யோசிக்கணும் :)


பினாத்தல் அண்ணாச்சி

ஸ்ரீதர் அண்ணாச்சி கேட்ட சந்தேகத்தை விளக்கிப் போடுங்க.அப்பத்தான் கதை எங்களுக்கும் புரியும் போல.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

//பிங்கு ஜட்டியும் நம்ம ஊர் கண்டுபிடிப்புதான்// அதிலென்ன சந்தேகம்?

நன்றி நேசமித்ரன்.

நன்றி ஸ்ரீதர்.

//இல்ல அந்த ‘படுக்கை’யும் அம்பு படுக்கையும் வேறயா? :)//

அன்பு படுக்கை, அம்பு படுக்கை - யோசிச்சாலும் ஆறு வித்தியாசம் தேறாது :-)

இந்த வரியில வைபாலஜி சுரேஷ் வெளியே வந்துட்டான். அதாவது, பீஷ்மருக்கு எப்ப மரணம்? அவர் நினைக்கும்போது. அம்பா கேட்டப்ப ஒத்துக்கிட்டிருந்தார்னா, அவர் சீக்கிரமா நினைச்சிருப்பாரா மாட்டாரா?

ட்விட்டர்லே நிறுவோ நிறுவுன்னு நிறுவிட்டேன், உங்க குற்றச்சாட்டு (சாய்சில விடறது) அபாண்டம்னு!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுவாசிகா.

நன்றி வண்டிக்காரன். தேறாதுன்னு எல்லாம் எப்படி சொல்லமுடியும்? உங்க கதையும் நல்லாவே இருந்தது.

எவனோ ஒருவன் (அ) அதிபிரதாபன்,

வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு? கதையை 500 பேர்கிட்ட படிச்சிருக்காங்க, 15 பேர் பின்னூட்டம் போட்டிருக்காங்க, மிச்சம் 485 பேர் உங்க கட்சின்னு நினைச்சுக்கங்களேன் :-)

இது ஒரு சிம்பிள் புராணக்கதை - அம்பை, பீஷ்மர் சால்வன்னு மஹாபாரதத்தின் ஆரம்பத்தில் வருவது. அதை புராண சாயல் இல்லாமல் கடைசியில் சொல்வதுதான் நச், அந்த க்ராப்டை மட்டும்தான் முயற்சித்தேன். (தொழில்முறை இன்ஸ்ட்ரக்டரா இருக்கறதால, எந்த சந்தேகம் கேட்டாலும் பதில் சொல்லியே தீர்வேன், தயங்காமல் கேளுங்கள்)

பப்பு,

நச் ஆ நச்சு ஆ? உங்கள் நுண்ணரசியல் கண்டு பிரம்மித்து நிற்கிறேன். (நுகபிநி ந்னு கொத்ஸ் ஷார்ட்டா சொல்வார்)

பினாத்தல் சுரேஷ் said...

யோசிப்பவர்,

நன்றி. ஃபார்முலாவா? அப்ப மாத்திரவேண்டியதுதான் :-)

வாங்கய்யா ஆட்டோ சங்கர்! (டெம்போ சங்கர்)

விளக்குமாறு கேட்டிருக்கிரீர்கள், விளக்கியிருக்கிறேன். விளங்கியதா?

இந்த முறை ஊருக்கு வருவதை பரம ரக்சியமாக வைக்கவேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியதற்கு ஸ்பெஷல் நன்றி ஹை.

துளசி கோபால் said...

//விளக்குமாறு கேட்டிருக்கிரீர்கள்//

ஹா......எதுக்கு??????
எதுக்கும் ஊருக்கு வருவதை வெளியிடவேணாம்:-)

Sreenivasan said...

இதுல உங்க எழுத்து திறமை, கற்பனை நல்லா திரியுது. ஆனால், பீஷ்மர் உண்மையில இதுக்கு வருதபட்டிருக்க முடியாது. வேணுமுன்னா சால்வன் வெட்கப்படனும், வருத்தப்படனும். அம்பை சால்வன உண்மையா காதலிசத்துக்கு வருத்தப்படனும்.

Sridhar V said...

//இந்த வரியில வைபாலஜி சுரேஷ் வெளியே வந்துட்டான். அதாவது, பீஷ்மருக்கு எப்ப மரணம்? அவர் நினைக்கும்போது. அம்பா கேட்டப்ப ஒத்துக்கிட்டிருந்தார்னா, அவர் சீக்கிரமா நினைச்சிருப்பாரா மாட்டாரா?//

அம்புட்டுத்தானா?

அம்பை -> படுக்கை; அம்பு -> படுக்கை; அன்பில்லா படுக்கை; அழும்பு செஞ்சதனால அம்பு படுக்கைன்னு போட்டு பொரட்டி எடுப்பீங்கன்னு நினச்சேனே.

வாழ்த்துகள் :)

S P Suresh said...

கதை நன்றாக இருந்தது. வேறு சிலர் குறிப்பிட்டது போல் என்னால் ஊகிக்க முடியவில்லை. ஶ்ரீதருடைய பீஷ்மர் கதையைப் படிக்காததனால் இருக்கும்!

ஆயின் என் மனம் பீஷ்மரைப் பற்றி இவ்விதம் எழுதியதை ஏற்க மறுக்கிறது. நிறைய உபன்யாஸங்கள் கேட்டதனாலும் ஸம்ஸ்க்ருத சுலோகங்களின் பொருள் சிறிது உணரமுடிவதாலும், பீஷ்மர் எவ்வளவு கம்பீரமான பாத்திரம் என்பதை எண்ணி எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன!

"ஆதிபர்வா"வில் பீஷ்மருடைய சபதம் வரும் கட்டம் மஹாபாரதத்திலேயே மிக உயர்ந்த நிகழ்வுகளுள் ஒன்று! அந்தப் பெயருக்கே பயங்கர பிரதிஞையை மேற்கொண்டவன் என்று பொருள். மேலும் இச்சபதம் பாண்டவர் பொருட்டு மேற்கொண்டதல்ல -- தன்னைக் காரணம் காட்டித் தன் தந்தைக்குப் பெண் தர மறுத்தனர் என்ற பொழுது தான் அரசாள்வதில்லை என சூளுரைத்தார். தனக்குப் பின் தன் தனயர் எவரேனும் இருப்பின் அவர் உரிமை கோருவரே என்ற வினா எழுப்பப்பட்டு மீண்டும் த்ந்தைக்குப் பெண் மறுக்கப்படவே "இப்பொழுது முதல் என் வீரியம் கீழே பாய்வதில்லை" எனச் சபதம் உரைத்தார்! தேவர்கள் பூமாரி பொழிந்தனர்!

பெண்ணாசையை இவ்வளவு அடக்க இயலுமா என்ற ஐயம் எழலாம் ... ஆனாலும் அஷ்டவசுக்களில் ஒருவர், சாபம் தீரவே இங்கு வந்தார் என்று கதை கூறுவதால், அமானுஷ்யமான சக்தியும் மனோபலமும் படைத்தவர் என்று கொள்ளவேண்டும்!

உங்கள் கதையில் அதிகம் குறை காணுவதாக எண்ணவேண்டாம்! நெடுனாளைய பீஷ்மர் fan என்றதால் மிகுதியாக எழுதிவிட்டேன். எழுதியபிறகே வாஞ்சி அவர்கள் எழுதியதையும் உங்கள் விடையையும் பார்த்தேன். ஆயினும், மிகுந்த முயற்சியுடன் எழுதியதால், வீணாகவேண்டாமே என்று அனுப்பிவைக்கிறேன்!

போட்டிக் கதை என்று அறிகிறேன். வெற்றி பெற வாழ்த்துகள் பல!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தக் கதையின் முடியவை யாரும் யூகிக்க முடியாது என்று நினைக்கிறேன்

CS. Mohan Kumar said...

முதல் வரி படிக்கும் போது கிடைக்கும் அதிர்ச்சி கடைசி பாராவிலும் கிடைக்கிறது. பின்னோட்டத்தில் நீங்கள் சொன்னது மிக சரி. வரலாற்றுக்கு கதை என ஊகிக்க முடியாமை தான் இக்கதையின் speciality.

நானும் இந்த கதை போட்டியில் குதித்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க இங்கே கிளிக்கவும் : http://veeduthirumbal.blogspot.com/

மோகன் குமார்

Subramanian Vallinayagam said...

@SP Suresh,

ungalutha pathil Balakumara avarkaluthu novel onreai enakku ninaivu paduthiyathu.

 

blogger templates | Make Money Online