Mar 2, 2010

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி வருவாயா வரை.

பெரும்பாலான முதல்நாள் விமர்சகர்கள் வித்தியாசமான காதல் கதை என்று பாராட்டியதாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அற்புதம் என்று சிலாகித்ததாலும், மின்னலே முதல் வாரணம் ஆயிரம் வரை கௌதம் படங்கள் பிடித்தே இருந்ததாலும் - கவிழ்ந்தேன் - படம் பார்த்ததும்தான் தெரிந்தது, நம் மக்கள் எவ்வளவு காய்ந்துபோயிருக்கிறார்கள், வித்தியாசத்தின் அளவுகோல் எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது!

"மச்சி காதல்ன்றது " என்று நண்பர்களிடம் பேசும் காட்சி ஆர்டினரி.. "எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது" என்று பேசுவது வித்தியாசம்

பாடல் காட்சிகளில் 40 ஆண் 40 பெண் ஆடுவது ஆர்டினரி, 10 ஆண்கள் மட்டும் அக்ரோபாடிக்காக ஆடுவது வித்தியாசம்.

பஸ் ஸ்டேண்டில் சைட்டடிப்பது ஆர்டினரி, கேஎஃப்சிக்கு துரத்திச் செல்வது வித்தியாசம்.

அண்ணன்கள் அரிவாளோடு காதலனைத் தேடுவது ஆர்டினரி, பாக்ஸிங் செய்வது வித்தியாசம்

காதலுக்குத் தடையாக மதம் இருப்பது ஆர்டினரி, காதலுக்குத் தடையாக மதம்+வயது இருப்பது வித்தியாசம்.

எல்லா கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவது ஆர்டினரி, தமிழில் பேச முயற்சித்து திக்குவது வித்தியாசம். (நல்ல தமிழ் பேசக்கூடிய உமா பத்மநாபன், கிட்டி ஆகியோரும்கூடத் திக்குவது ஸ்பெஷல் வித்தியாசம்)

தங்கை காதலுக்கு உதவுவது ஆர்டினரி, "அவளுக்கு ரூட் போடாதே" என்று சொல்லிவிட்டு பிற்கு போய் காதலியின் கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டு வருவது வித்தியாசம்.

"அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.

சிம்பு விரலை ஆட்டிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு பேசினால் ஆர்டினரி, விரலை ஆட்டாமல் பல்லைக்கடித்தால் வித்தியாசம்.

நாயகி முதல் சீனில் நாயகனிடம் திட்டுவாங்கி மூன்றாவது சீனில் காதலுக்கு ஓக்கே சொன்னால் ஆர்டினரி, இடைவேளை தாண்டியபின் சொன்னால் வித்தியாசம்.

கதாநாயகியைத் துரத்திக்கொண்டு கேரளா போய் "மனசுக்குள்ளே காதல் வந்துச்சா" - ஆர்டினரி, "மன்னிப்பாயா" வித்தியாசம்.

கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "என்ன சொல்லப்போகிறாய்" என்பது ஆர்டினரி. கதாநாயகனின் கனவாக சினிமா இருந்து "ஆரோமலே" என்பது வித்தியாசம்.

நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு குடைக்குள் மழையாகக் கனவு கண்டால் ஆர்டினரி, நாயகியைக் கல்யாணம் செய்துகொண்டு ஜெஸ்ஸி ரீலீஸாகக் கனவு கண்டால் வித்தியாசம்.

அமெரிக்க மாப்பிள்ளை (பாவம் இந்த ப்ரீட்!) உடனான திருமணம் க்ளைமாக்ஸில் நின்றால் ஆர்டினரி, இடைவேளையில் நின்றால் வித்தியாசம்!

இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.
ஸ்லோவாப் போனா க்ளாஸிக் மூவி என்ற அடூர் காலத்து எண்ணத்தில் இருந்து எப்பதான் வெளிய வரப்போறோமோ! நுணுக்கமான விவரணைக்காக திரைக்கதை நொண்டியடித்தால் ஓக்கே - இந்த சப்பை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரங்களுக்கா? அநியாயம்.

நல்ல விஷயமே இல்லையா படத்தில்? இருக்கிறது! அவையாவன: 1. ரஹ்மானின் பின்னணி இசை எனக்குபபிடித்த முதல் படம் இதுதான். 2. ஒளிப்பதிவு - தெள்ளத்தெளிவு. 3. காத்திருந்து வந்த இடைவேளை, 4. நொந்து முடிந்தபின் வந்த சுபம்.

இதிலே பெரிய காமெடி என்னவென்றால், இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான். இதே அளவுகோலை வேட்டைக்காரனுக்கும் வைக்கப்போகிறேன். "என்னா ஃபைட்டு.. உங்களுக்கெல்லாம் படம் சுறுசுறுப்பா இருந்தா பிடிக்காதா? வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு!"

இதனால் அறிவிப்பது என்னவென்றால், நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்! (இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)

31 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

அவனுங்க விட்டாலும் நீ விடறது இல்லைன்னு சபதம் போல!! நல்லா இரு!!

விதாவ - விடாது தாக்கும் வதை

SurveySan said...

hmm. naalaikku polaamnu nenachen. pochu.

சென்ஷி said...

பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க... :)))

நான் கூட சிம்பு படமா.. நல்லா இருக்காமா.. அப்படின்னு அதிர்ந்து போயிட்டேன்.

ஆயில்யன் said...

//அவனைக் காதலிச்சா என் பொணத்துமேலதான் கல்யாணம்" என்பது ஆர்டினரி "Over my dead body" என்பது வித்தியாசம்.///

LOL :))

ஆயில்யன் said...

//இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான்//

அதுவும் அந்த ஆஸி-பெரியபாண்டி கொஞ்சம் ஒவராத்தான் போறாரு பாஸ் :)))

சென்ஷி said...

/இந்தப்படம் பிடிக்காதவர்கள் கிழவர்கள் என்று ட்விட்டரிலும் பஸ்ஸிலும் மக்கள் அடிக்கும் கூத்துதான்.//

இதே லொள்ளத்தான் வாரணம் ஆயிரம் வந்தப்பவும் சொன்னாங்க. அதென்னமோ கௌதம் படம் வந்தா மாத்திரம் இந்த யூத்து பேச்சு பலமா அடிபடுது :))))

(எனக்கு வாரணம் ஆயிரமும் பிடிக்கல -:( )

Raju said...

அமெரிக்க மாப்பிள்ளைகள் என்றுமே அண்டத்தைத் தாண்டிய பெருவெளியில் ஒரு தீராக் கனவுடன்சஞசரிக்கும் பாவப்பட்ட ஜீவன்களே..!

கார்க்கிபவா said...

நேத்து நர்சிம், ஆதி, முரளி, கேபிள் எல்லாம் என்னை போட்டு வதைச்சுட்டாங்க. ஏன் பிடிக்கலன்னு..:((

ஜோ/Joe said...

// நம் மக்கள் விமர்சனத்தின் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டேன்!//

இணைய ஆகா ஓகோ விமர்சனங்களின் பேரில் ‘தமிழ்படம்’-க்கு பின்னால் மைல்டா டவுட் வர ஆரம்பிடுச்சு.

gulf-tamilan said...

/இது இந்த விமர்சனத்துக்கும் பொருந்தும்:-)/

:)))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நான் ஆர்டினரி, நீங்க வித்தியாசம்!!!

விண்மீன் said...

இந்தப்படமே முழுவதுமாக காதல் உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது.

Ananya Mahadevan said...

இது தான் எனக்கு தெரிஞ்சு உருப்படியான விமர்சனம்! நன்றி நன்றி நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

அப்படி போடுங்க அருவாள! :)

ஹுஸைனம்மா said...

//இவை மட்டுமல்ல, நிறைய நிறைய வித்தியாசங்கள் கொட்டிக்கிடக்கின்றன படம் முழுவதும்.//

மற்றவர்களுடைய விமரிசனங்களைப் படிக்கும்போதே இதுவும் வாரணம் ஆயிரம் ரகம்தான் என்று புரிந்திருந்தது.

ILA (a) இளா said...

உங்களுக்கு இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சது, படம் புடிக்காம போனதுக்கு ரெண்டே காரணங்கள்தாங்க. 1. உங்களுக்கு வயசாகிருச்சு, காதல் ப்யூஸ் போயிருச்சு. 2. உங்களுக்கு வயசாகிருச்சுன்னு உங்களுக்கு மறந்து போயிருச்சு.

Sridhar Narayanan said...

//பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை //

அப்ப வேட்டைக்காரன்? முத நாளே விமர்சனம் வந்திருச்சே உங்க கிட்டேந்து...

வித்தியாசமா பாக்கிறதுக்கு பிராக்டிஸ் பண்ணிட்டிருக்கேன். அப்புறமாத்தான் படம் பாக்கனும் :)

வெற்றி said...

படம் யூத்துகளுக்கு பிடித்தால் ஆர்டினரி..அதுவே பெருசுகளை வயிரெறிய வைத்தால் வித்தியாசம் :)

Anonymous said...

I am firm on my policy - tamil films on pirated or cheap DVD only. Few exceptions of course for rare good movies.

கோபிநாத் said...

ஆகா தல ஆப்பு வாங்கிட்டிங்களா...சூப்பரு ;))

Cable சங்கர் said...

/நேத்து நர்சிம், ஆதி, முரளி, கேபிள் எல்லாம் என்னை போட்டு வதைச்சுட்டாங்க. ஏன் பிடிக்கலன்னு..:((
//

கார்க்கி லவ்ங்கிறது ஒரு விதமான ஃபீலீங் அதெல்லாம் உனக்கு தெரியாதது.. எங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கு. பாருங்க.. நான் எங்கேயும் {அந்த ரெண்டு எழுத்த யோசிக்கல.. எழுதல):)

கானா பிரபா said...

உங்களுக்கு இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சது, படம் புடிக்காம போனதுக்கு ரெண்டே காரணங்கள்தாங்க. 1. உங்களுக்கு வயசாகிருச்சு, காதல் ப்யூஸ் போயிருச்சு. 2. உங்களுக்கு வயசாகிருச்சுன்னு உங்களுக்கு மறந்து போயிருச்சு.//

repeatu ;)

ramachandranusha(உஷா) said...

என் பையனுக்கு வயசு பதினெட்டு படம் அறுவை என்று அவன் பிரண்ட்ஸ் உட்பட சொல்லியாச்சு. இப்ப நம்ம பினாத்தல் போன்ற மூத்த பதிவருக்கு படம் பிடிக்கவில்லை. இதனால் அறியப்படுவது என்னவென்றால் இருபத்தி அஞ்சு வயசுக்குமேலே முப்பத்தி ஐந்துக்கு கீழே இருப்பர்கள் மட்டுமே படம் சூப்பர் என்கிறார்கள்
நான் இன்னும் படம் பார்க்கவில்லை, என் கொள்கை அனானிமஸ் சொன்னதுதான்.

லக்ஷ்மி said...

நல்ல விமர்சனம். நீங்க சொல்வது போல இந்த படம் பிடிக்கலைன்னா.... அப்படின்னு மக்கள் மிரட்டறதுதான் ரொம்ப எரிச்சலா இருக்கு...

- யெஸ்.பாலபாரதி said...

தல.. வழக்கமான டச் விமர்சனம். மகா கன்றாவி.. ஒளிப்பதிவும், சில வசனங்களும் தவிர.. இசை உட்பட ஏற்றிய படம் இது.

seethag said...

என்னடா நீங்க்கள் கூட இந்தமாதிரி படமெல்லாம் ரசிக்கிறீர்களா என்று நினைத்தேன். இந்திஅயாவில் சுதந்திரமஅக காதலிக்க இயலாதபோது, இப்படிதான் 'வித்த்யாசமான' படஙளைக்கண்டு சந்தோஷப்படவேண்டும்.!!!!!

மேலும் நம்ம் சமுதாயம் நித்ய மார்கண்டேய சமுதாயம். ஏன்னென்றால் நம் பெற்றோர் நம்மை எந்த முடிவும் எடுக்க விடாதபோது 65 வயதுவரை நம்முடய adolescence தொடரும். வேறு வழி, இப்படி காதல் என்று சொல்வதையெல்லாம் recycle செய்து வாழ்க்கை ஓட்டவேண்டியதுதான்...ரொம்பவும் பித்தது உங்க வித்யாசமான விமர்சனம்.

அத்திரி said...

//கார்க்கி said...
நேத்து நர்சிம், ஆதி, முரளி, கேபிள் எல்லாம் என்னை போட்டு வதைச்சுட்டாங்க. ஏன் பிடிக்கலன்னு..:((//



சகா அவங்க எல்லாம் யூத்து சகா அதான்..........

நல்ல விமர்சனம்

முகமூடி said...

மே ஐ கம் இன்?

// என் பையனுக்கு வயசு பதினெட்டு // எனக்கு வர்ற தை வந்தா பதினைந்து முடிஞ்சி பதினாறு.. நான் உங்களை எப்படின்னு கூப்பிடுறது ஆண்ட்டி?

அதான் // இருபத்தி அஞ்சு வயசுக்குமேலே முப்பத்தி ஐந்துக்கு கீழே இருப்பர்கள் மட்டுமே படம் சூப்பர் //னு சொல்றாங்க இல்ல.. நாமளோ ஓவர் குவாலிஃபைடு.. அப்புறமும் ஏன் // நான் இன்னும் படம் பார்க்கவில்லை // ன்னு ஒரு கொலவெறி ஸ்டேட்மெண்டு...

**

இதுவரை சொம்பு படம் எதையும் தியேட்டருக்கு போய் பார்த்ததில்லை.(கைக்குழந்தையாய் இருந்தப்போ ஒரு தாயின் சபதம் படம் பார்த்துட்டு ஜுரம் வந்திடுச்சி. அதனால அது சாய்ஸ்ல விட்டுட்டேன்) சரி சொம்ப இது மூலமா பயாஸ்கோப்புல மொத மொதலா பார்க்கலாம்னு இருந்தேன்.காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியதற்கு நன்றி பெனாத்தல் @ இலவசக்கொத்தனார் @ சர்வேசன் { ஒண்ணுமில்ல கோயிஞ்சாமி எஃபக்டு. ஹிஹி.. }

Anonymous said...

konuting talivaa
.

புருனோ Bruno said...

சுரேஷ்

சூப்பர் விமர்சனம்

--

ரசித்தேன்

bondamano said...

Hello boss,

Rahman pathi edhuvumey ezhudhala. who else can compose such numbers in tamil cinema?

Innum "roja" padathula vandha rukkumani rukkumani song adichikka aal illa.. enna humming enna style..

Rahman's music is eternal and original..

 

blogger templates | Make Money Online