Jun 3, 2010

என்னோட நண்பனுக்கு எட்டு பொண்டாட்டி

எழுதுவதற்கு ஆசை வந்தவுடன் முதலில் புனைபெயரைத்தான் தேட ஆரம்பித்தேன். சுரேஷ், சுரேபா, ராமசுப்பு, சுரேஷ்ராமமூர்த்தி என்று மனதுக்குப் பிடிக்காத பலவிதமான பெயர்கள் முதல் பரிசீலனையைத் தாண்டவில்லை. பதிவு எழுத ஆரம்பித்தபோதுகூட பதிவுக்குதான் பினாத்தல்கள் என்று பெயர் வைத்திருந்தேனே ஒழிய என் பெயர் சுரேஷ் என்றுதான் இருந்தது. பிறகு பல சுரேஷ்கள் குவிய ஆரம்பித்த பிறகுதான் பினாத்தல் சுரேஷ் என்று ப்ளாக்கர் ஹாண்டிலை மாற்றினேன். இந்தப் பெயர் கிண்டல் எழுத்துக்கு ஓக்கே, உருப்படியா எழுதினா? என்ற எண்ணத்தை, முதல்ல உருப்படியா எழுது, அப்புறம் புனைபெயர், பூனைபெயர் எல்லாம் பாத்துக்கலாம் என்று ஒத்திவைத்தேன்.


அந்த உருப்படியா எழுதுவது மட்டும் விலகிக்கொண்டே போனது. அவ்வப்போது ஒன்றிரண்டு தப்பிப்போனாலும்.

யாருடைய மூளைக்குழந்தையோ, இன்னும் எனக்குத் தெரியவில்லை, ஐம்பெருங்காப்பியங்களை எளிய நாவல்களாக்க உத்தேசம், உன்னால் முடியுமா என்று கேட்டபோது “என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே” என்றுதான் கேட்கத் தோன்றியது. ஆனால் பயம் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதானே வரும்? எனக்குதான் அந்தச் சுமையே கிடையாதே.

குருட்டுத் தைரியத்தில் ஒப்புக்கொண்டு சீவகசிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள்களில் ஆர்வம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, இருந்தாலும், நாமளும் இதையெல்லாம் படிக்கணும்டா என்பது மாதிரி ஆர்வம் எப்போதாவது வந்து போகும்.

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

என்பதுபோல சந்தத்தோடு, கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துவிடக்கூடிய பாடல்கள் சில இருந்தாலும், பல பாடல்களில் இருக்கும் சொற்கள் பிரித்தாலும் புரியாமல், சேர்த்தாலும் புரியாமல் இலக்கியத்தரமாக இருந்தது. (இப்போ புரியுதா இலக்கியத்தரம்னா இன்னான்னு?)

சரி, உரையை எடுத்துப் படிக்கலாம் என்றால் பலநேரங்களில் செய்யுளே புரிந்துவிடுகிறது, உரை புரியவில்லை. வந்தான் என்று சொல்வதற்கு வந்தனன், நின்றனன், சென்றனன் னு உரையாசிரியர் வேற இலக்கியத்தரம் வளர்க்கிறார்.

எனக்கு வேலை சொன்ன பாராவை சாட்டில் பிடித்தேன்.

“படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கே, எதாவது படிக்கச் சுலபமான மொழியிலே உரை இருக்கா, கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்”

“அதானேய்யா உனக்குக் கொடுத்த வேலை! படிக்க சுலபமா உரை இருந்தா அதை ரெகமண்ட் பண்ணிட்டு போயிரமாட்டோமா?”

இப்போதுதான் புரிந்தது அந்த ஐடியாவின் அருமை. தமிழ் மீடியத்தில் படித்து, யாப்பு இலக்கணத்தில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு வெண்பா வெண்பாம் என்றெல்லாம் மற்றவர்களை இம்சிக்கும் எனக்கே புரிவதில் இவ்வளவு கஷ்டம் இருந்தால், தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருக்கும் ஆர்வத்தை மட்டுமே கொண்ட தலைமுறைக்கு எப்படி இருக்கும்?

விளையாட்டாக ஆரம்பித்ததைக் கொஞ்சம் தீவிரமாக்கினேன். சீவகன் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்தான். “வா சுரேஷ், சும்மா மொக்கைப்பதிவே போட்டுகிட்டிருக்காம என்கிட்டே வா.. என் கதை என்ன தெரியுமா? நான் ஏன் எட்டு கல்யாணம் செஞ்சேன் தெரியுமா? எத்தனை திருப்பம் தெரியுமா என் வாழ்க்கையில்?”

சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். “நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி. செய்யுளுக்குச் செய்யுள் அர்த்தம் சொல்லும் உரை அல்ல. “வா சீவகா, உட்கார்” என்று நெருங்க வைக்கும் முயற்சி. தேமா புளிமா கூவிளங்காய் தெரிந்து புணர்ச்சி இலக்கணம் தெரிந்த பண்டிதர்களுக்காக அல்ல - ”தமிழில் எதோ காப்பியம் எல்லாம் இருப்பதாகச் சொல்றாங்க, என்ன மேட்டர்னு புரியலை” என்பவர்களுக்காக.

தீக்குச்சி விழுந்து தெரிக்குதடி -கருந்தேக்குமரக் காடு வெடிக்குதடி” என்று எளிமையாக அக்கினிக்குஞ்சு பாட்டை ரீமேக் செய்திருக்கிறாரே வைரமுத்து, அதைப்போல ஒரு முயற்சி.

எழுதி முடித்தபின் புனைபெயர் இப்போது தேடலாம் என்ற எண்ணம் வந்தது.

ராம்சுரேஷ் என்ற பெயரில் இதோ, என் முதல் புத்தகம். உங்கள் ஆதரவை எதிர்பார்த்து:




இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கு படத்தின் மேல் க்ளிக்கவும். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

52 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

பின் அட்டைப் படம் தராமல் வஞ்சகம் செய்த கிழக்கு பதிப்பகத்திற்கும் குறிப்பாகப் பாராவிற்கும் என் வன்மையான கண்டனங்கள்.

இலவசக்கொத்தனார் said...

என் நண்பன் பெரீய்ய்ய்ய எளக்கியவியாதின்னு இனிமே நானும் சொல்லிப்பேன். எதுக்கும் ஒரு நேர்முகம் தர ரெடி ஆயிக்கோ கண்ணு.

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!

இது மாதிரி நிறைய எழுத!!

Goinchami said...

நபநப

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!!

Vijayashankar said...

பெனாத்தல் என்ற பெயரே நன்று, பேயோன் இருக்குமிந்த காலத்தில்! வாழ்த்துக்கள்.

ஈ புக் விற்பனை உண்டா?

அப்புறம் மறக்காமல் பிரிண்ட் எழுத்தாளரா ஆனா அனுபவம், ராயல்டி போன்றவை பற்றியும் எழுதுங்க!

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் நண்பரே.. படிக்க மிக ஆவலாயிருக்கிறேன்..

Sridhar Narayanan said...

வாழ்த்துகள்ங்க :)

முதல் புத்தகத்துலயே முக்கியமான இலக்கியத்தை வடிச்சிட்டீங்க. அப்படியே அடுத்து வளையாபதி, குண்டலகேசின்னு கலக்கவும் :)

யாத்ரீகன் said...

முதல் புத்தகமே வித்தியாசமானதொரு முயற்சி/வாய்ப்பு :-) .. மென்மேலும் பினாத்த.. errr.. எழுத வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!!

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் பினாத்தலாரே!!!

நல்லா இருங்க.

மேன்மேலும் வளர்க!!!

Guru said...

வாழ்த்துக்கள் சார் ! ஆரம்பமே அமர்க்களம் !பேரும் புதுசு ! புத்தகமும் புதுசு ! புத்தகம் இங்க கிடைக்குமா? கிடைக்க ஆவன செய்யுங்கள் சார் !

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் !

பின் அட்டையினையும் வெளியிட்டு இருக்கலாம்!

ரைட்டர்சுரா என்றும் கூட வைத்திருந்திருக்கலாம் ! :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வாழ்த்துக்கள் சார்!!!

தகடூர் கோபி(Gopi) said...

எழுத்தாளர் பினாத்தல் சுரேஷ் (எ) ராம்சுரேஷுக்கு வாழ்த்துக்கள்...

பரத் said...

வாழ்த்துகள் சுரேஷ்!!

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் சுரேஷ் ... பதிவை படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது

யோசிப்பவர் said...

வாழ்த்துக்கள் ராம்சுரேஷ்!!
கண்டிப்பாக வாங்கிவிடுகிறேன். கூடவே படித்தும் விடுகிறேன்! முடிஞ்சா விமர்சனம் எழுதறேன்;-)

யோசிப்பவர் said...

அடுத்தாப்ல ஒங்க பேட்டி வாங்கி பதிவு போடலாமோ?!;-)

ஜீவன்பென்னி said...

வாழ்த்துக்கள்.

ரவி said...

கண்டிப்பாக ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துவிடுகிறேன்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!!

Shankar said...

அருமையான முயற்சி.வாழ்த்துக்கள் சுரேஷ்.மிகவும் பெருமையாக உள்ளது.உங்கள் சேவை தொடரவும்.Keep it up..!!

Anonymous said...

Exciting Suresh, looking for first opportunity to go to Chennai and T Nagar

Radha Sriram said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ்..:)
இன்னும் பல பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்..ராம்சுரேஷ் நல்ல தேர்வு..:)

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா ;-)

நாகை சிவா said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை!

ALIF AHAMED said...

வாழ்த்துக்கள்

ச.சங்கர் said...

வாழ்த்துக்கள் ராம்சுரேஷ் - புக்கர் வரை போக


கூப்பிடவே ஒருமாதிரியா இருக்கு..பினாத்தல்னே பழகிப் போச்சு:)

இப்னு ஹம்துன் said...

இப்போதெல்லாம் பதிவுலகை அதிகம் எட்டிப் பார்ப்பதில்ல்லை. எதேச்சையாக, ஜீமெயிலில் உங்கள் நிலைச்செய்தியை பிந்தொடர்ந்ததில் தெரிந்ததிந்த மகிழ்ச்சியான செய்தி.

மனமார்ந்த வாழ்த்துகள்... ராம்சுரேஷ்.

திவாண்ணா said...
This comment has been removed by the author.
திவாண்ணா said...
This comment has been removed by the author.
திவாண்ணா said...

ஒண்ணுமிலீங்க! அதிலே இருந்த எ.பி. எனக்கே தாங்கலை! திருத்தின பின்னூட்டம்:
அட! ரொம்ப நாளா பதிவே காணோமே, இப்படி ஒரு டேலண்ட் வீணாகிகிட்டு இருக்கான்னு நினைச்சா... நல்ல முயற்சி! பாராட்டுக்கள்.

கபீஷ் said...

அய்யோ பேர் மாத்திட்டீங்களா:-(((
வாழ்த்துகள் :))))

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சுரேஷ்.

எனக்கு உரை படிக்க ரொம்ப பிடிக்கும். நீங்க சொல்ற வந்தனன், போயினன் ஸ்டைலுக்காகத் தான். அதையே தொடர்ந்து படிக்கவா உங்க நாவலைப் படிக்கவா? :-)

வடுவூர் குமார் said...

முன்னுரை நன்றாக இருக்கு,அங்கங்கெங்கே மெலிதான கிச்சு கிச்சு உடன்,அப்படியே தொடர்ந்தால் முதல் பின்னூட்ட்டத்திலேயே நம் கொத்தனார் தூள் கிளப்பிட்டார்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Dear Ram Suresh,

Many congratulations!

Now i understood your silence for not posting many in the recent months.

Your introduction itself evinces interest to read further.

Good start!

Well Done!

Suresh said...

வாழ்த்துக்கள் சுரேஷ்!!

நிறைய எழுதுங்க!

Unknown said...

உங்க பில்டப்பும் சங்கர் விமர்சனமும் படிச்சேன், முழுக்க படிக்கணும்னு தோணுது. கட்டாயம் இந்த ஊர் ட்ரிப்ல வாங்க பாக்கறேன், இல்லை, eBook கிடைக்குமா?

மனமார்ந்த வாழ்த்துகள்.

நானும் தல பதிவு காணோமே, ஹஸ்பண்டாலஜிக்கு பதில் சொல்லிட்டிருக்கீங்களோன்னு நினைச்சேன். இது தானா? ஓகே, ஓகே, எட்டு பெண்டாட்டி நண்பனோட கதையா, வீட்ல தெரியுமா? :-)) ஏதோ நம்மாலானது.

(நானும் பிரபல பின்னூட்டக்காரங்க தான்:-)

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்.

Geetha Sambasivam said...

உண்மையிலேயே மனதளவில் மகிழ்ச்சி என்பதற்கான அர்த்தம் புரிகிறது. மனம் நிறைய மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீங்க சொன்னாப்போல் கட்டாயமாய்ப் புத்தகம் வாங்கிப் படிச்சுட்டுக் கிழிச்சுடறேன், கிழிச்சு! சரியா????? நான் உ.வே.சா. பத்தி எழுதினதுதான் உங்களுக்கு inspiration அப்படினு ஒரு சுய விளம்பரம் பண்ணிக்கலாமானு யோசனை! எப்படி வசதி?? :)))))))))))

Indian said...

வாழ்த்துகள் ராம்சுரேஷ்!!

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்! ஊர் வரும் போது கண்டிப்பா வாங்க வேண்டிய லிஸ்ட்டில் வைத்தாச்சு.. :)
நல்ல முயற்சிக்கு நன்றிகள் பல!

Gurusamy Thangavel said...

வாழ்த்துக்கள் பினாத்தல்

தமிழன்-கறுப்பி... said...

நல்ல விசயம்.

Sundar, Thailand said...

Great Suresh. Your introduction is excellent and I felt that your are talking sitting next to me. This created a great interest on me to read this book. Next month I am in Chennai and I will buy this book and read it.

"சீவக சிந்தாமணி - தமிழ் அறிஞர்களுக்காக எழுதப்படவில்லை. நமக்காக. நான் எப்படி ஒரு நாவல் இருந்தால் படிப்பேனோ, அப்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன்." - This is what I have been expecting for long time. Thanks for your efforts. Important - Please continue to do such approach.

Sundar - Thailand

Anonymous said...

VATSALA ATHAI-THAILAND

ALL THE BEST TO RAM SURESH

seetha cookemane gopalakrishna said...

நூலையும் உவமைகூற இயலாத மெல்லிய இடை ஒடிய விம்மி அடி பருத்த “ என்றெல்லாம் இருக்கும் அட்ஜெக்டிவ்களை கழட்டிவிட்டு நேரடியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முயற்சி.

my friend who is a non indian teaching english for people form the subcontinent always finds these 'adjectives' difficult to comprehend as literature.

Thamira said...

காண்க நண்பரே..

http://www.aathi-thamira.com/2010/06/blog-post_28.html

m.sathyaa premkumar said...

before 1 month only i read your novel, after that only i searched you in net... interesting. good work.. expecting more... do good... thank u..

 

blogger templates | Make Money Online