Aug 26, 2010

எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)

எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?

ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்‌ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.

ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!

ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!

69 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

சின்ன சைஸா இருக்குன்னு வருத்தப்படறவங்க, நேரடியா இந்த லிங்கை திறந்தா ஃபுல் ஸ்கிரீன்லே பார்க்கலாம்:

http://www.tamiloviam.com/flash/robo.swf

ஹோஸ்ட் கிடைக்காமல் திண்டாடிய நேரத்தில் உதவிய தமிழோவியத்துக்கு நன்றி.

எடிட்டிங் செய்து, கமெண்டடித்து உதவிய அண்ணன் டைனோபாய்க்கும் நன்றி :-)

அங்கங்கே இருக்கும் பாக்ஸ்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஃப்ளாஷின் யூனிகோட் சப்போர்ட் அந்த அழகில் இருக்கிறது! மன்னிக்கவும்.

ஸ்டார்ட் மீஜிக்.

பாரா said...

a11333111

யோவ் நீ நிஜமாவே ப்ரில்லியண்ட்டுய்யா.

வலைஞன் said...

a11332225 கலக்கஸ்

அபி அப்பா said...

அப்ப என்னிக்கு பாவனா வர்ராங்க?

அபி அப்பா said...

பெனாத்தலாரே! நீர் 2 வருஷம் பிளாக் உலகத்துக்கு லீவ் போட்டாலும் போட்டீர். டி.ராஜேந்தர் மாதிரி ஆயிட்டீர். டி.ராஜேந்தருக்கு தான் இன்னமும் காலேஜ்ன்னா 1978 அவரு படிச்ச போதே இன்னமும் நினைச்சுகிட்டு இப்ப எடுக்கும் படத்தில் கூட அப்படியே தாவணிய பசங்க புடிச்சு இழுத்து பாட்டு பாடுவது மாதிரி எடுப்பாரு. அதே போல நீர் போன போது பாவனா புள்ள சூடா இருந்துச்சு. அதே நியாபகத்துல இருக்கீர். இப்ப அனுக்ஷா, தம்மண்ணா எல்லாம் வந்தாச்சு. அதனால கொஞ்சம் லேட்டச்ட்டா பார்த்து போட்டு குடுங்கய்யா:-))

Athisha said...

a41333131 கலக்கீட்டீங்க போங்க.. நான் எழுதற விமர்சனத்தை விட பெட்டரா வருதே இந்த விமர்சன சாஃப்ட்வேர்ல!

ஜெ. ராம்கி said...

:-) சுவராசியமாக இருந்தது.

பைதபை, ரஜினி படம் வரும்போது கமல் ரசிகர்களெல்லாம் ஏதாவது உருப்படியா செய்றாங்க.. ஆனா கமல் படம் வரும்போது ரஜினி ரசிகர்கள் எல்லாம் ஏன் காணமா போயிடறாங்க? இதெப்படி இருக்கு?!

ராம்ஜி_யாஹூ said...

nice

ரா.கிரிதரன் said...

a11113115 சூப்பர்.:) :) இதை எதிர்பார்க்கவேயில்லை! ;)

ஆயில்யன் said...

//யோவ் நீ நிஜமாவே ப்ரில்லியண்ட்டுய்யா./

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))


எனக்கு கோடுன்னு சொல்லிட்டு _________________________________________________________________ இப்பிடி வருதேய்ய்ய்ய்ய்ய்ய் :)))

ஆயில்யன் said...

//எடிட்டிங் செய்து, கமெண்டடித்து உதவிய அண்ணன் டைனோபாய்க்கும் நன்றி :-)///


ஓஹோ!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கலா இருக்கும் போல..

எனக்கு தமிழ் எழுத்துகள் டப்பா டப்பாவாகத் தெரிகிற்து.

யோசிப்பவர் said...

எல்லா ஆப்ஷன்ஷும் பார்த்துட்டேன்னு நினைக்கிறேன். ஆனா ரொம்ப ரசிச்சது உலக சினிமா பார்வையாளர் கம் அறிவு ஜீவி எழுத்தாளர் கமெண்ட்தான்.
a52232131

Thamiz Priyan said...

a12222225

Anonymous said...

a42323315

Vijay said...

a11223225

சாநீஎபோ. கலக்கல்.

Vijay said...

முதல் முறை ஒழுக்கமா தேர்வு செஞ்சு பார்த்தாச்சு. இனி மேலே யோசிப்பவர் சொன்ன மாதிரி மத்த option-களையும் பார்க்கணும். :D

Manion said...

Font missing!
But SuperB!

Anonymous said...

a11121115

கபீஷ் said...

a23323235

கோபிநாத் said...

தல கலக்கியிருக்கிங்க...

a41323235

;)

Unknown said...

a11111111..

நல்லாயிருக்கு..

Sukumar said...

கலக்கல் கான்செப்ட் பாஸ்... பிளாஷ் செய்வதற்காக நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள நேரம் மற்றும் உழைப்பிற்காக பாராட்டுக்கள்.. அருமையாக வந்திருக்கிறது.....

Anonymous said...

a12211111

சென்ஷி said...

தெய்வமே........................!!!!!!!!!


இன்னொரு மாஸ்டர் பீஸ் :))))

Vijay Vasu said...

a11121221

சென்ஷி said...

//
ஜெடிக்ஸ் சேனல் பார்ப்பதுபோல இருந்தன சண்டைக்காட்சிகள். பாரதிராஜா காதலுக்கு ஸ்லோமோஷன் வைத்தால் ஷங்கர் சண்டைக்கு வைக்கிறார். பார்க்கிறவனுக்குதான் லூஸ் மோஷன்.
//

ஒவ்வொண்ணா மாத்தி மாத்தி படிச்சிட்டு இருக்கறதுல இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது :)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

a51221123

சூப்பர்!

Guru said...

a11221125
அசத்தல் ப்ளாஷ்!! சூப்பர்!

யூர்கன் க்ருகியர் said...

a32322235

வடுவூர் குமார் said...

னக்கு தமிழ் எழுத்துகள் டப்பா டப்பாவாகத் தெரிகிற்து.
எனக்கும் தான் ஆனால் லினக்ஸில் இருப்பதால் இந்த குறை போல் இருக்கு.

gulf-tamilan said...

a12222125
இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்குதா?

ப்ரியமுடன் வசந்த் said...

சுரேஷ் சார் இந்த ஃப்லாஷ் அனிமேசன் சாஃப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறதா? எனக்கு a51222225 வந்திச்சு இது நாங்க தேர்ந்தெடுத்த ஆப்சன்சோட நம்பர்ஸ்தான?

நெசமாலுமே நீங்க பிரில்லியண்ட் தான் சார் கலக்கல் சிந்தனைகள்

யோ வொய்ஸ் (யோகா) said...

a12211235

fabulous work sir, wel done

மின்னுது மின்னல் said...

a12222233

Sanjai Gandhi said...

உள்ளேன் ஐய்யோ..
a12222235

சிங்கை நாதன்/SingaiNathan said...

//வடுவூர் குமார் said...

னக்கு தமிழ் எழுத்துகள் டப்பா டப்பாவாகத் தெரிகிற்து.
எனக்கும் தான் ஆனால் லினக்ஸில் இருப்பதால் இந்த குறை போல் இருக்கு.
//

எனக்கும் ;( சாளரத்தில் முயல வேண்டும்

Manion said...

Thalai,
Forward panna friends kum font missing. why did u brake the fonts and re upload.

but it's working in my home.

a23333334

Yenna solla...
Intha Entiran Super Hitu Ponga...
Adutha padathil yennak oru chance?
:P

Chithran Raghunath said...

சிறந்த எண்டெர்டெய்னிங் பதிவு என்ற விருதை இந்தப் பதிவுக்கு அளிக்கிறேன்.

Chithran Raghunath said...

கோடு இதோ: a22222221

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

a31322115

great!!!

Arun said...

a21121235

வடுவூர் குமார் said...

a43323135

In IE its visible but in Firefox as boxes.

Nalla Irukku.

அது ஒரு கனாக் காலம் said...

எனக்கும் டப்பா டப்பா தான் ... ஏதோ மெஷின் கோடு இருக்குமோ ????!!!!!!..இருந்தாலும் வோட்டு போட்டுட்டேன் ...ஹி ஹி !!!!!!!!!!!

கீழை ராஸா said...

எப்படி பினாத்தல் அங்கிள் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...அசத்திட்டீங்க போங்க..:-)

அனு said...

a11212115
ஹிஹிஹி.. அசத்திட்டீங்க போங்க :)

(கடைசி கேள்விக்கு என்ன போடுறதுன்னு தெரியல.. அதுல நான் எந்த categoryயிலயும் வரல :))

shankar,neyveli said...

a11111111

Fantastic sureshji.Very good efforts. Kalakiteenga. No need for new reviews when movie is released. you have tried all variations.Enjoyed the show. Good luck. keep it up.

முரளிகண்ணன் said...

a32322235

வெட்டிப்பயல் said...

எந்திரன் விமர்சனமே இவ்வளவு ரிச்சா இருக்கும் போது படம் எவ்வளவு ரிச்சா வரும் :)

இதுக்காகவே சூப்பர் ஸ்டார் நிறைய படத்துல நடிக்கலாம் போல ;)

பதிவு செம க்ரியேட்டிவ்.

Cable சங்கர் said...

a51231311 அட்டகாசம்

Leo Suresh said...

a51121115 வழக்கம் போல கலக்கல்

ராஜா said...

வித்தியாசமான முயற்சி, அருமை

a21322225

Sridhar Narayanan said...

இதை முழுசா யாரும் ரசிச்சிருப்பாங்களான்னு சந்தேகப்படற அளவுக்கு பல கோணங்கள்ல அசத்திருக்கீங்க தல.

ஃப்ளாஷ்ல ப்ரெசெண்டேஷன் உங்க ட்ரேட்மார்க். அத விட பல பாணிகளை 2-3 வரிகள்ல காட்டியதுதான் உங்க ஸ்பெஷாலிட்டி. :)

☀நான் ஆதவன்☀ said...

a12332125 கலக்கல் :))))) குருவே நானெல்லாம் இன்னும் ப்ளாஷ்ல நிறைய படிக்கனும். நேரம் கிடைக்கும் போது சொல்லிக்கொடுங்க :)

அரசு said...

a21323121

-அரசு

Unknown said...

a13312221

:-)

Unknown said...

follow-up-kku.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... கலக்கல்

நாகை சிவா said...

a51122125

Asir said...

a21222115

Congrats....

Balaji said...

a41322121

ச.சங்கர் said...

ABCD12345

சூப்பர்...கலக்கல் தல..எப்படி இப்படியெல்லாம்

கோடும் போட்டாச்சு...கொமென்ட்டும் போட்டாச்சு

:)

Vidhoosh said...

a11333225

Gayathri said...

a23231224
மிகவும் வித்யாசமா இருக்கு..வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

ஓ.. இதுதானா அது..?

சரி.. சரி.. ஆனாலும் படம் பார்த்துட்டு அந்தச் சோகத்தையும் கொஞ்சம் எழுதுங்கண்ணே..!

Anonymous said...

a11111115
ரஜினி ஒரு விஞ்ஞானி, அவர் செய்யும் ரோபோட்டுகளுக்கு 3 விதிகள் உண்டு. தன்னைக்காப்பதற்கு முன்னால் மனிதர்களையும், மனிதர்களின் ஆணைகளையும் காத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவ்விதிகள். ரோபோ தயாரிப்பின்போது சில குழப்பங்கள் நேர்ந்துவிடவே அந்த விதிகளுக்கு முரணாக மனிதர்களையே அழிக்கத் தொடங்குகிறது ஒரு ரோபோ (அதுவும் ரஜினியே) எப்படி அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் விஞ்ஞானி என்பதுதான் மீதிக்கதை.

ரஜினியின் ஸ்டைலுக்கு அளவே இல்லை. வசனம் ஒன்றும் கேட்கவில்லை - விசில் சத்தம்தான் கேட்டது.

ஐஸ்வர்யாவுடனான காதல் காட்சிகளில் ரஜினிக்கு 50 வருடம் வயது குறைந்திருக்கிறது.

ஹாலிவுட் படங்கள் ஷங்கரிடம் ட்யூஷன் எடுத்துக்கொள்ளலாம். வெறும் 100 கோடி ரூபாயில் ஐந்து ஹாலிவுட் படம் பார்த்த எ·பெக்ட்.

ஆஸ்கார் கொடுத்ததை முழுக்க முழுக்க நியாயப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். தீம் மியூசிக்கில் பட்டை கிளப்பி இருக்கிறார். பாட்டுகள் அத்தனையும் தேன் சொட்டுகள்.

வயிறு வெடிக்கச் சிரிக்கவைக்கிறது சந்தானம் காமெடி. இனி ஆதித்யா சிரிப்பொலிகளில் தினமும் தவறாமல் இடம் பிடிக்கவைக்கக்கூடிய சிரிப்பு.

டெக்னாலஜி விளையாடி இருக்கிறது சண்டைக் காட்சிகளில். கீனு ரீவ்ஸ் பார்த்தால் அடுத்த ப்ளைட் பிடித்து வந்துவிடுவார், இந்த ஸ்டண்ட் கலைஞர்களைத் தேடி!

நான் பாத்துட்டேனில்ல, நீங்களும் போய் பாத்துருங்க!

Narayan. said...

http://bit.ly/ai8Y0a
Enthiran Result from Preview Show
Great Info about the songs, but movie not so encouraging.

Anonymous said...

a12221223

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

 

blogger templates | Make Money Online