Oct 25, 2007

முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1)

M.Sc Wifeology (முதுகலை இல்லறத்தியல்) படித்த படிக்காத அன்பர்களே!
 
கல்யாணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படும் கட்டிளங்காளைகளே!
 
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
 
கணவனை அன்பாக நடத்தும் 0.0000000000000001% மனைவிகளே!
 
மிச்சம் உள்ள சாதாரண ரக மனைவிகளே!
 
இது உங்களுக்காகவே ஆரம்பிக்கப்படும் புத்தம் புதிய வகுப்பு.
 
இந்த வகுப்புகளைப் பற்றி சில அ கே கே (FAQ)
 
என்ன சொல்லித் தரப்போகிறேன்?
 
  • திருமண வாழ்வில் பிரச்சினை கிளப்பக்கூடிய நிகழ்வுகள் யாவை, அவற்றைச் சமாளிப்பது எங்ஙனம்?
  • மனைவிகளைக் கண்டு பயப்படாமல் வாழ்வது எப்படி?
  • உங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுக்காமல் இல்வாழ்வை நல்வாழ்வாக மாற்றுவது எப்படி?
  • வீட்டு வேலைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
  • மனைவி கேட்பதை வாங்கித்தராமலே அடிவாங்கா வாழ்க்கை வாழ்வது எப்படி? 
 
இப்படிப்பட்ட
 
  • How to survive Matrimony  என்பதைப் பற்றிய எளிய பாடங்கள் 
  • வாழ்க்கைத் தேர்வில் எளிதாய் வென்றிட ஏற்றமிகு கருத்துகள்
 நான் யார்? எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
 
M.Sc Wifeology யில் பட்டம் பெற்ற மாணவன், பின்னூட்டங்களில் முனைவர் பட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவன். கடுமையான சூழலுக்கு நடுவே ஏறத்தாழ பத்து ஆண்டுகள் களப்பணி செய்து வருபவன்.
 பாடத்தில் சொல்லப்போவதையெல்லாம் நான் கடைப்பிடிக்கிறேனா?
 
கிரிக்கெட்டில் பேட்டிங் சொல்லிக்கொடுக்கும் கோச் அவர் பேட் செய்கையில் அவுட்டே ஆகாதவரா? ஆனால் தன் / பிறரின் தவறுகளில் இருந்து பாடம் கற்பவர். அப்படித்தான் நானும். எனக்கும் வீங்கிய கன்னங்கள், சிராய்ப்புகள், விழுப்புண்கள் இருந்திருக்கின்றன. (இதைச் சொல்ல என்ன வெட்கம் - அதுவும் நமக்குள்ளே)
 யார் யார் பாடம் எடுக்கப்போகிறார்கள்?
 
நீங்களும் நானும்தான். உங்கள் பங்களிப்பும் மிக அவசியம். நிகழ்வுகளைக் கூறினால் அதற்கு துறை ஆசிரியர் குழு நடக்கவேண்டிய முறைக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள்.அவ்வப்போது How to survive Matrimony என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து, காணாமல் போன புத்தகத்தின் நினைவில் இருக்கும் பக்கங்களும் விஸிட்டிங் ப்ரொபசராக வரும்.
 படிப்பின் முடிவில் என்ன பட்டம் வழங்கப்படும்?
 
உங்கள் திறமை, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை வைத்து M B A (Marriage - Beginner's Approval), B.L (Beginner's Licence), M Tech (Marriage Technologist), PHD (Problem-free Household Doctorate), MBBS (Bachelor of Marriage and Bachelor of Solutions) ஆகிய பட்டங்கள் வழங்கப்படும்.
 
bcom, ca, cwa போன்ற பட்டங்களை சேர்க்காமல் விட்டது கணக்குப் பண்ணாதீங்கடா என்ற உள்குத்தின் காரணமாகவே. இது போன்ற பல மறை பாடங்கள் இருக்கும். ஆகவே ஆழ்ந்து படிக்கவும்.
 மனைவிகளை ஏன் இவ்வகுப்பில் அழைக்கிறேன்?
 
கீழ்க்கண்ட அரை டஜன் காரணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்:
 
  1. எதிரியின் நுணுக்கங்களை அறிந்துகொள்வது ராஜதந்திரம்.
  2. களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  3. கணவன்மாரின் பார்வையில் இஷ்டம் எது கஷ்டம் எது என்பதை அறிந்துகொண்டால், நமக்குத் தேவையானதுபோல செய்ய முடியும்.
  4. அழைக்கவில்லையென்றால் ஈயம் பித்தளை என்று என்னையும் கட்டம் கட்டிவிடுவீர்கள்.
  5. பாடத்தில் ரோல்ப்ளே போன்ற கட்டங்கள் வரும்போது, நல்ல இயல்பான நடிகர்கள் தேவைப்படுவார்கள்
  6. நாலு முட்டா பசங்க மேடையேறி பேசினா வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வருமே. வரப் போற கூட்டத்தை வாங்கன்னு கூப்பிட்டுடலாமேன்னுதான்
 வகுப்புகளுக்கு என்ன கட்டணம்?
 
இப்போது ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ஒரு பின்னூட்டம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம். பின்னூட்டம் என்பது வருகைப் பதிவு மட்டுமல்ல, அதில் கேள்விகளும் விடையும் கலந்த ப்ராஜக்ட் வொர்க்கும் உண்டு.
 வகுப்புகள் எப்போது ஆரம்பம்?
 29 அக்ட் திங்கள் முதல்.

60 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா.

ஆமாம் இப்படி பேசாப் பொருளை பேச துணிஞ்சுட்டீங்களே,இன்னிக்கு மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேட்கலையா?

இம்புட்டு நாளா உங்களுக்குள்ள இருக்கும் ஞாநியை அடையாளம் தெரிஞ்சுக்காம இருந்துட்டேனே. எதுக்கும் சட்டைக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துக்கோங்க. எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னா நல்லா திக்கா இருக்கிற சட்டையா பார்த்து போட்டுக்குங்க. அப்புறம் சட்டைக்குள் ஆணூல் நெளியுது இடுப்புல ஆணான் குடையுதுன்னு பேச்சு வந்தா நாங்க பொறுப்பில்ல!

மங்களூர் சிவா said...

//
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
//
attendance
Present Sir

இலவசக்கொத்தனார் said...

பேராசிரியர் அவர்களுக்கு,

ஒரு சந்தேகம். இந்தப்பதிவு துறை சார்ந்த பதிவுகள் பகுதியில் வருமா?

தயவு கூர்ந்து என் ஐயத்தை தீர்த்து வைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் உண்மையான மாணவன்,
கொத்ஸ்

நாகை சிவா said...

பெயரை பதிவு செய்ய இந்த பின்னூட்டம்

குசும்பன் said...

நான் 10 வதிலேயே 4 முறை கப்பு வெச்சுதான் பாஸ் செஞ்சேன், அதன் பிறகு Ms IT யை எப்படி முடிச்சேன் என்று சொன்னால் தனி பதிவாக போட வேண்டி இருக்கும் அதனால் என் சாதனைகளை கருத்தில் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் ஒதுக்கும் படி கேட்டுக்கிறேன்.

இப்படிக்கு
மாப்பிள்ளை பெஞ் மாணவன்.

நாகை சிவா said...

//இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)! //

நாளை என்பதுக்கு எல்லாம் நிறைய நேரமும், காலமும் இருக்கு... இப்படி எல்லாம் எங்களை பார்த்து பொறாமை படுவதை விட்டுட்டு பாடத்தை ஆரம்பிங்க...

Anonymous said...

I am new reader of your posts. Adichi Dhool kelapungha Professor.

Dinesh
Chennai

தகடூர் கோபி(Gopi) said...

//எனக்கும் வீங்கிய கன்னங்கள், சிராய்ப்புகள், விழுப்புண்கள் இருந்திருக்கின்றன. (இதைச் சொல்ல என்ன வெட்கம் - அதுவும் நமக்குள்ளே)//

அதானே. அது சரி.. சிலபஸ்ல தற்காப்பு கலையெல்லாம் உண்டா?

Anonymous said...

//
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!
//

Ullen Ayya....

Anonymous said...

உள்ளேன் ஐயா!

Anonymous said...

உள்ளேன் ஐயா!

Anonymous said...

உள்ளேன் ஐயா!

Anonymous said...

எனக்கும் ஒரு இடம் பிளீஸ்

இப்படிக்கு
கதவை சாத்திவிட்டு அடிவாங்குவோர் சங்க தலைவன்
கைப்பு.

Anonymous said...

தலைவா எனக்கும் அட்மிசன்!!!

இப்படிக்கு
வாய் பொத்தி அடி வாங்குவோர்
சங்க கிளை தலைவர்!

Anonymous said...

எனக்கும் ரகசியமாக ஒரு சீட்!

இப்படிக்கு
வெளியே புலி உள்ளே எலி கட்சி
பொதுசெயலாளர்.
லொடுக்கு

குசும்பன் said...

சார் எல்லோருக்கும் வழக்கம் போல் பிராக்ஸி கொடுத்துட்டேன், எல்லா கமெண்டும் ரிலீஸ் ஆகவேண்டும் என்று கழுதில் கத்தி வைத்து கேட்டுக்கிறேன்.

நளாயினி said...

வீரத்தழும்புக(ழு)ளுடன் வீரநடை போடுபவர்களே ...!!! முதுகலை இல்லறத்தியல்; பட்டத்தோடு வர வாழ்த்துக்கள். வீரத்திலமிட்டு உங்கள் எல்லோரையும் வாழ்த்தி அனுப்புகிறேன்.

கொண்டாங்க ஆராத்தியை அடிடா தேங்காயை.

Unknown said...

Present sir :)))

தருமி said...

Present Sir !

வடுவூர் குமார் said...

என்ன பினாத்தலரே!!
நான் ஊருக்கு போகும் நேரம் பார்த்து இந்த மாதிரி பதிவை போட்டு காண்பித்துக்கொடுக்கிறீர்களே??
மனைவி படிக்காம இருக்கனும்.
ஆண்டவா காப்பாத்து.

குட்டிபிசாசு said...

இது இல்லற்த்தியலா? மனைவியியலா? ஒரு சந்தேகம்!!

Anonymous said...

koottama irukkara edaththula enna velainnu en pondatti vaiyyara.. naan poren :((

Anonymous said...

எதிரிக்கும் நுட்பம் கற்றுத்தரத் துணிந்த உம்மை வாழ்த்தினோம் மடச்சீடா! விழுப்புண்களாகவெ வாங்கை நற்கதியடைய நல்வாழ்த்துகள்

கவிமடத்தலைவன்

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

மங்களூர் சிவா,

நாகை சிவா,

குசும்பன்,

தினேஷ்,

கோபி,

குசும்பன் ப்ராக்ஸி கொடுத்த 6 பேர்,

உள்ளேன் அய்யா சொன்ன அனானி,

தேவ்,

தருமி (நீங்க எல்லாம் ப்ரொபஸரா இருக்க வேண்டியவங்க! ஹூம்..)

வடுவூர் குமார்,

பயந்து ஓடிப்போன அனானி (இதையெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டோம்.. இதெல்லாம் ஜகஜம்)

ஆகியோருக்கு அட்மிஷன் செய்யப்பட்டாகிவிட்டது.

Anonymous said...

அவ்வப்போது விசிட்டிங் ப்ரொபரா வந்து மாணவர்களின் ஐயம் தீர்க்கலாமா?

இல்லறத்தியல் டாக்டர்

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

ஆணூல் என்பது மறைக்க முடியாதது!

துறை சார்ந்த பதிவா? ஆஹாஹா! தமிழ்மணத்துக்கு கோரிக்கை வைக்கலாமா?

நாகை சிவா,

பொறாமை எல்லாம் இல்லை.. நாளைக்கு நடக்கப்போறது தெரிஞ்ச வருத்தம்- அவ்வளவுதான்.

கோபி,

தற்காப்புக்கலையா? உங்களுக்குமாணூல் நெளியுதோ??


நளாயினி.. அதென்ன வாழ்த்தி வழியனுப்பிட்டு நின்னுட்டீங்க? நீங்களும் உள்ளே வரலாம்னுதானே போர்ட் மாட்டியிருக்கு!

குட்டிப்பிசாசு.. இல்லறம் நல்லறம் ஆக wifeology என்று ஆங்கிலத்திலும், இல்லறத்தியல் என்று தமிழிலும் பகர்வது வழமை. இல்லாளியல் என்று சொன்னால் இருக்கிறாள் இல்லாள் என்ற பொருளும் கொண்டு குழப்பும் என்பதால் தலைப்பு இப்படி வைக்கப்பட்டுள்ளது.

சரி.. அட்மிஷன் போட்டுறலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

விழுப்புண் வாங்க வாழ்த்தோ மடத்தலைவா? நன்று..:-(

விசிட்டிங் ப்ரொபசரா? சிட்டிங் ப்ரொபசராவே வாங்க தல.. இது நம்ம ப்ளாக்கு!

rv said...

உள்ளேன் ஐயா!

டபுள் டிகிரி கொடுப்பீங்களா?

அப்ப்ரெண்டிஸ் அல்லது பெர்மனெண்ட் ஜாப் ப்ளேஸ்மெண்ட்க்கு ஹெல்ப் (கவுன்சிலிங் அல்ல) உண்டா?

பினாத்தல் சுரேஷ் said...

டாக்டர்,

உம்ம திறமையை பொருத்து டபுள் என்ன, எத்தனை டிகிரி வேணும்னாலும் வாங்கிக்கங்க..

ப்ளேஸ்மெண்டு, அப்ரண்டிஸ்ஷிப் இதிலெல்லாம் கல்லூரி நிர்வாகம் தலையிடாது. நாங்க என்ன ப்ளாக்மேட்ரிமோனி.காம் ஆ நடத்தறோம்?

அட்வைஸ் எப்பவும் இலவசம் :-)

கோபிநாத் said...

உள்ளேன் ஜயா..;))

அடிக்கடி கட் அடிக்கலாமா? ;)

\\ இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)! \\

ஏதோ தீயர வாடை வருது..;)

பாலராஜன்கீதா said...

// bcom, ca, cwa போன்ற பட்டங்களை சேர்க்காமல் விட்டது கணக்குப் பண்ணாதீங்கடா என்ற உள்குத்தின் காரணமாகவே. //

by default, bcom தான். திருமணத்திற்குப்பின் வாயை திறந்து பேச முடியுமா என்ன ?
;-)
நாங்களும் எங்கள் 22 வருட அனுபவங்களைச் சொல்லலாம் அல்லவா ?

தகடூர் கோபி(Gopi) said...

பினாத்தலாரே,

//தற்காப்புக்கலையா? உங்களுக்குமாணூல் நெளியுதோ??//

ஆணூல் எல்லாம் நெளியலை... வாங்குற அடியெல்லாம் ஆணூழ்னால வேணா இருக்கலாம். அதான் தற்காப்பு கலை கத்துக்கிட்டா அடி படாம தப்பிக்கலாம்னு கேட்டேன்.

:-)))

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத், அட்மிஷன் ஆயாச்சு.

தீயற வாசனையா? நாகை சிவாவுக்கு முன்னே சொன்ன பதிலைப் பாத்துக்கப்பா

பாலராஜன் கீதா! அது அடங்கி வாழ வழிமுறை (Be Calm) ஆனா, நம்ம கல்லூரியில து மட்டுமே முக்கியமான சப்ஜெக்ட் இல்லையே..

வாங்க வாங்க, எச் ஓ டி யா போட்டுறலாமா சொல்லுங்க!

முரளிகண்ணன் said...

அவன் விகடன் தொடர்ச்சியா? சரி சரி ஒரு அட்மிசன் கொடுங்க. இது எனக்கு ஒரு டுடொரியல் காலேஜ். ஏன்னா எழுதின எல்லா பேப்பர்லயும் முட்டை

ramachandranusha(உஷா) said...

பயல்களா இந்த டிசைனர் வேர் கோர்ஸ் எல்லாம் நம்பாதீங்க. நாங்க எல்லாம் கிடைத்ததை, எங்க ரசனைக்கு ஏற்ப மாத்திக்குவோம் :-)

இராம்/Raam said...

/ அடிவாங்க போகும் தல ராம் said...

உள்ளேன் ஐயா!//


அடபாவிகளா இங்கனயும் ஃபிராக்ஸி'யா?? :)


வாத்தி,

பிரசண்ட் சார்......

Sridhar V said...

நேரடியா முதுகலையா? அப்ப என்னைப் போன்ற இளங்கா(ளை)லை எல்லாம் ஸ்பாட் அட்மிஷன் உண்டா?

ப்ராக்டிகல் எக்ஸாம் எல்லாம் உண்டா?

நமக்கு ப்ளேஸ்மென்ட் எல்லாம் வேணாங்க... ஏதோ பெயிலாக்காம இருந்தா சரி :-)

கண்மணி/kanmani said...

//ramachandranusha(உஷா) said...
பயல்களா இந்த டிசைனர் வேர் கோர்ஸ் எல்லாம் நம்பாதீங்க. நாங்க எல்லாம் கிடைத்ததை, எங்க ரசனைக்கு ஏற்ப மாத்திக்குவோம் :-)//

உஷா நம்ம பலம் தெரியாம கோர்ஸ் தொடங்கிட்டாங்க.]மிஞ்சிப்போனா அனா ஆவண்ணா தான் படிக்க முடியும்.நாம் யூனிவர்சிட்டி ரேஞ்சுல அப்பப்ப கலைகளை[அடிக்கும் கலை]மாத்துவோம்னு தெரியாத பச்சாஸ் [ஆமா உஷா நீங்க நம்ம கட்சிதானே]உங்களை நம்பித்தான் சவுண்ட் வுடுறேன்

ACE !! said...

நானும் ஒரு விண்ணப்பம் போட்டுக்கறேன்.. என்னயும் வகுப்புல சேத்துக்கோங்க..

ஆனா கடைசி பென்ச்ல தான் உக்கருவேன்.. இப்பவே சொல்லிபுட்டேன்..

பினாத்தல் சுரேஷ் said...

கோபி.. தற்காப்புக்கலை அவுட் ஆப் சிலப்ஸ். கோ கர்ரிகுலர் ஆக்டிவிடியா நீங்களே கத்துக்கலாம்,ஆசிரியர்களுக்கும் கத்துக்கொடுக்கலாம் (தேவைப்படுது) - தடை யில்லை.

முரளி கண்ணன், ராம், ஸ்ரீதர் வெங்கட், சிங்கம்லே ஏஸ் - அட்மிஷன் கன்பர்ம்ட்.

உஷா அக்கா, இது டிசைனர் வேர் கோர்ஸ் என்கிறீர்கள் - அப்ப ஆண்கள்தான் டிஸைனர் என்று உ
ஒப்புக்கொள்கிறீர்களா? உங்க இஷ்டப்படி மாத்திக்குவீங்கன்ற ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்னி.

கண்மணி, //நாம் யூனிவர்சிட்டி ரேஞ்சுல அப்பப்ப கலைகளை[அடிக்கும் கலை]மாத்துவோம்னு // முடிஞ்சா நீங்களும் பங்களிக்கலாமே.. பகைவனுக்கு அருள்வாY நன்னெஞ்சேன்னு யாரோ பாடல? சரி முடியாட்டி விடுங்க.. நாங்க எல்லாம் பட்டறிவு பார்ட்டிங்க.. எவ்வளவு மாத்தனாலும் மாறிக்குவோம்.

துரியோதனன் said...

கிளாசுக்கு லேட்டாதான் வருவேன் அதுக்கு பிரதிபலனாக சீக்கிரம் போயிடுவேன் சரிங்களா?

ilavanji said...

பினாத்ஸ்,

நான் ஏற்கனவே இந்த பாடத்துல வருசாவருசம் ஜீரோ வாங்கறவன்.

எனக்கு டிகிரியும் வேணாம்! டிப்ளமோவும் வாணாம்! இந்த வருசம் பாஸ்மார்க்கு வாங்கற அளவுக்காவது தேத்தி விடுவீகளா?

சொந்த புத்தியுடன் இந்த பரிச்சை எழுதித்தான் வருசாவருசம் அரோகராவாவதால் முன்னாடி பின்னாடி பார்த்தெழுத அனுமதித்தால் இன்னும் மகிழ்வேன் :)

cheena (சீனா) said...

விசிட்டிங் ப்ரொபசர் வேலைக்கு அப்ளிகேசன். சவுண்டு விடற பார்ட்டி எல்லாம் சமாளிக்கலாம்.

வெட்டிப்பயல் said...

//இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!//

ஹி ஹி ஹி

பரஸண்ட் சார் ;)

முகமூடி said...

இதெல்லாம் ஒரு சப்ஜெக்டு, இதுக்கு ஒரு கோர்ஸு, வாத்தி, ப்ராக்ஸியோட ஸ்டூடண்ட்ஸு.. ச்சை.. வெக்கமாயில்ல.. ஆம்பிளைங்கதான நீங்க எல்லாம்.












அப்படீன்னு நல்லா நாக்க புடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு வா அப்பால துண்ணலாம்னுட்டாங்க.. ரொம்ப பசிக்குது.. நான் சமைச்சத நானே சாப்பிட முடியாம ரொம்ப கொடுமையா இருக்கு... அவ்வ்...

பினாத்தல் சுரேஷ் said...

துரியோதனன்,

வழக்கமா வாத்தியாருங்க சொல்ற டயலாக்கையே நானும் சொல்றேன் - எங்களை ஏமாத்தணும்னு நெனச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க :-) அட்மிட்டட்!

இளவஞ்சி,

என்ன ஒரு ப்ரொபஸர் ஸ்டூடண்ட் ஆகிறார்? :-(

நல்வரவு ப்ரொபஸர் சீனா!

வாங்க வெட்டிப்பயல், அட்மிட்டட்!

தலை.. இப்ப என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எல்லாம் என்ன களப்பணியில பல விழுப்புண்கள் கண்ட எங்களுக்கு புதுசா? அட்மிஷன் வேணுமா வேணாமா? அந்தரங்கம் பாதுகாக்கப்படும் :-)

ramachandranusha(உஷா) said...

கண்ணே கண்மணி, ரிடையர் ஆன பாலராஜன் கீதாவில் இருந்து, போன வருஷம் கிராஷ் கோர்ஸ் எடுத்த இளவஞ்சி போல பலரும் உள்ளேன் ஐயா என்றாலும், பலமுறை கேட்ட சந்தேகம், இன்னும் விடைதான் கிடைக்கவில்லை. ஒரு
பையன், கல்யாணம் என்றால், தேவையாடா உனக்கு, கொஞ்ச நாளு நிம்மதியாய் இருக்ககூடாதா என்று அலுத்துக் கொள்கிறார்கள் அவர்கள். ஆனால் நாமோ ஒரு பெண் இன்விடேஷன் நீட்டினால் அகமும், முகமும் மலர வாழ்த்துவது ஏன் கண்மணி :-))))

பினாத்தல் சுரேஷ் said...

உஷா அக்கா,

//பலமுறை கேட்ட சந்தேகம், இன்னும் விடைதான் கிடைக்கவில்லை. //

யாரிடம் கேட்டீங்க இந்த ஜுஜுபி சந்தேகத்தை? வேணும்னுட்டே விடை தெரியாதவங்க கிட்டயா? உங்க ராஜதந்திரம் எல்லாம் தெரியாதா எங்களுக்கு?

சிம்பிளான காரணம்தான். இதுல ஆம்பிள பொம்பிள பேதம் எதுவும் கிடையாது. ஒருத்தர் வந்து உங்ககிட்ட சொல்றாரு, நான் பாழுங்க்கிணத்துல விழப்போறேன்னு, கங்கிராசுலேட்டா பண்ணுவீங்க? இன்னொருத்தர் வந்து சொல்றாரு, நான் வேட்டையாடி ஜெயிச்சுட்டேன்ன்னு.. அதுக்கு என்ன ஐ அம் சாரின்னு சொல்லுவீங்களா?

நீங்க மட்டும் இல்லீங்க, நாங்களும் ஒரு பொண்ணு வந்து இனிவ்டேஷன் நீட்டினா கங்கிராசுலேட்தான் பண்ணுவோம்.

ரசிகன் said...

என்னிய மறந்துபுட்டியே மக்கா...
அட்மிஷன் முடிஞ்சிருச்சா?... ஏதாவது ஒரு கோட்டாவுல சைடுல உள்ளார வுட்டுடுங்க..
//நாளைக்கு நீயாவும் இருக்கலாம்..// அப்பப்பா.. எப்பிடியெல்லாம் மெரட்டராய்ங்க....

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

மங்களூர் சிவா said...

//
அடி தாங்கி அபி அப்பா said...
உள்ளேன் ஐயா!

October 25, 2007 10:30 AM


இடி தாங்கி சிபி said...
உள்ளேன் ஐயா!

October 25, 2007 10:30 AM


அடிவாங்க போகும் தல ராம் said...
உள்ளேன் ஐயா!

October 25, 2007 10:31 AM


கைபுள்ள (டூப்ளீகேட்) said...
எனக்கும் ஒரு இடம் பிளீஸ்

இப்படிக்கு
கதவை சாத்திவிட்டு அடிவாங்குவோர் சங்க தலைவன்
கைப்பு.

//
கலக்கல் பின்னூட்டங்கள்
யார் பின்னூட்டியிருந்தாலும் சூப்பர்!

மங்களூர் சிவா said...

//
தேவ் (டூப்ளீக்கேட்) said...
தலைவா எனக்கும் அட்மிசன்!!!

இப்படிக்கு
வாய் பொத்தி அடி வாங்குவோர்
சங்க கிளை தலைவர்!

October 25, 2007 10:33 AM


லொடுக்கு (டூப்ளீகேட்) said...
எனக்கும் ரகசியமாக ஒரு சீட்!

இப்படிக்கு
வெளியே புலி உள்ளே எலி கட்சி
பொதுசெயலாளர்.
லொடுக்கு

October 25, 2007 10:35 AM


குசும்பன் said...
சார் எல்லோருக்கும் வழக்கம் போல் பிராக்ஸி கொடுத்துட்டேன், எல்லா கமெண்டும் ரிலீஸ் ஆகவேண்டும் என்று கழுதில் கத்தி வைத்து கேட்டுக்கிறேன்.

//
சூப்பர்
குசும்பா நீதானா ப்ராக்ஸி குடுத்தது
சூப்பர் சூப்பர்

மதுமிதா said...

அப்போ படிச்சு முடிக்கிறவங்களுக்கு பட்டம் குடுக்கும் பொறுப்பை
மிகப் பணிவா ஒத்துக்கறேன்:-)

(இந்தப் பட்டத்தை, வகுப்பில் வந்து படிச்ச கண்மணிகளுக்குக் கொடுக்க உங்களைத் தவிர யாருமே இல்லைன்னு பெனாத்தலார் கேட்டுக்கிட்டதால)

முத்துகுமரன் said...

//இன்விடேஷன் நீட்டினால் அகமும், முகமும் மலர வாழ்த்துவது ஏன் கண்மணி :-))))//

உஷா

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணம்தான். :-). ஆண்கள் நண்பர்களை எச்சரிக்கை செய்யும் கெடு மதிக்காரர்கள். :-)

*
உள்ளேன் அய்யா

ramachandranusha(உஷா) said...

பினாத்தலாரே! எண்ணம் போல வாழ்வு. நாங்க பசங்க இன்விடேஷன் கொடுத்தாலும் வாழ்த்ததான் செய்வோம். தான்
காலாகாலத்துல கல்யாணம் கட்டிக்கிட்டு, சந்தோஷமா இருந்துக்கிட்டு உலு உலாக்காட்டிக்கு சும்மா சின்ன புள்ளைகளை
பயமுறுத்துகிற கெட்ட எண்ணம் எல்லாம் எங்களுக்கு கிடையாது.

மது, சரிதான். போட்டோவுக்கு போஸ் கொடுத்து பட்டம் வாங்கினாலும், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது அம்மணி
:-)

பினாத்தல் சுரேஷ் said...

ரசிகன், உமக்கில்லாத அட்மிஷனா? என்சாய்!

கிரண்.. விளம்பரமா? பாத்து.. ஹாப்லாக் மாதிரி ஆயிடாதீங்க:-)

வாங்க மங்களூர் சிவா.. ப்ராக்ஸியில குசும்பனுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் போல!

மதுமிதா, பட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும்ன்ற்து இதானா?

முத்துக்குமரன்.. கரீட்டா சொன்னீங்க! வாங்க..

உஷாக்கா.. ஏந்தான் இப்படி சொ செ சூ வச்சுக்கறீங்களோ!

//நாங்க பசங்க இன்விடேஷன் கொடுத்தாலும் வாழ்த்ததான் செய்வோம்.//

வாழ்த்துவீங்க.. யார? அவனோட மனைவியை!

தான்
காலாகாலத்துல கல்யாணம் கட்டிக்கிட்டு, சந்தோஷமா இருந்துக்கிட்டு

இது ஒண்ணு போதுமே.. எங்க வலி உங்களுக்குப் புரியவே புரியாதுன்னு தெரிஞ்சுக்க!

மதுமிதா said...

///பாடத்தில் ரோல்ப்ளே போன்ற கட்டங்கள் வரும்போது, நல்ல இயல்பான நடிகர்கள் தேவைப்படுவார்கள்///

உஷா இதை முதல்ல கவனிங்க‌.
இது முக்கியம்!!!!!

(சீப்கெஸ்ட்டா இருந்துகிட்டு இதெல்லாம் வெளிப்படையா சொல்லக் கூடாதுதான். அதனால ரகசியமா உங்களுக்கு மட்டும் சொல்லியிருக்கிறேன் உஷா.)

தகடூர் கோபி(Gopi) said...

//கோபி.. தற்காப்புக்கலை அவுட் ஆப் சிலப்ஸ்.//

பினாத்தலாரே,

இத்தினி வருசமா வாத்தியார் வேலை பாக்கறீங்க... அதை அப்படி சொல்லக்கூடாது. "Its beyond the scope of our syllabus. If you still have any doubts, come and meet me in the department after the class"ன்னு இல்ல சொல்லனும்...

(பொறியில் கல்லூரி விரிவுரையாளரா இருந்தப்ப பலமுறை இந்த வசனத்தை பசங்க கிட்ட சொல்லியிருக்கமுல்ல...)

இவன்....இளையவன் said...

//இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் மிதப்பாகத் திரியும் இளைஞர்களே! (இன்னிக்கு நான், நாளைக்கு நீ என்ற எளிய சூத்திரம் புரியாதவர்களே)!//

சுரேஷ்!
சின்ன பசங்கள இப்படியெல்லாம் நீங்க பயமுறுத்தக் கூடாது,
ஆடு தான் கசாப்பு கடைக்கு போகுதுன்னு தெரியிதில்ல
போற வரைக்குமாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே
அத கெடுக்குறதுல உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்....

வான்னா வந்துட்டு போறோம்....
எழுதிக்குங்க எம் பேரையும்.

//இத்தினி வருசமா வாத்தியார் வேலை பாக்கறீங்க... அதை அப்படி சொல்லக்கூடாது. "Its beyond the scope of our syllabus. If you still have any doubts, come and meet me in the department after the class"ன்னு இல்ல சொல்லனும்...//

வாங்க கோபி சார்,
உங்கள தான் இவ்வள்வு நாளா தேடிகிட்டு இருந்தேன்
அதெப்படி... உங்களுக்கு பதில் தெரியாத கேள்வியா பையன் கேக்கும் போது
இத சொல்லுங்கனு வாத்தியாருங்க எல்லாருக்கும் யாரவது சொல்லி குடுக்குறாங்களா ???

நாங்க எல்லாம் ஒரு பார்ட் Electrical lab அதுவும் university lab - ஏ அட்டன் பன்னாம

அடுத்த பார்ட் fluid mechanics lab மட்டும் அட்டன் பன்னி 50/100 வாங்கி டோட்டல் பேப்பரயும் க்ளியர் பன்னவங்க..
நாங்களும் இந்த க்ளாஸ்ல இருக்கோம். மறந்துடாதிங்க...

பினாத்தல் சுரேஷ் said...

மதுமிதா, ரொம்ப ஜோரா ரகசியம் காப்பாத்தறீங்களே :-)

கோபி வாத்யார்.. நுணுக்கமான வாத்யாராத்தான் இருக்கீங்க! நான் அவ்வளோ மோசம் கிடையாதுப்பா :-)

கணேஷ் பாபு.. அது பயமுறுத்தறது இல்லை -- அறிவுறுத்தறது. லேட்டா வரதுதான் லேட்டஸ்ட்னே முடிவே பண்ணிட்டீங்களா?

 

blogger templates | Make Money Online