Nov 2, 2007

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்?

முதலில் டிஸ்கி: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது, வேலைக்குத் தேவையான தகவல்களைப் பெற மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் ஸ்பானரும் ஆயில் கிரீஸும்தான்!

சாப்ட்வேர்காரர்களின் அதிக சம்பளத்தால் சமூகத்தில் பாதிப்பேற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியான விடை - ஆம் ஆகத்தான் இருக்கும்.

சென்னையில் 80களிலும் கூட தி நகர், மாம்பலம் போன்ற பகுதிகளில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு  நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய விலைக்குள் இருந்தது,  90களில் ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகள் நடுத்தர வர்க்கத்தினரின் சரணாலயமாக இருந்தது.ஆனால், 2000 - 2007ல், இது வேகமாக ஓடி, இப்போது சிங்கப்பெருமாள் கோயில் மதுராந்தகம் போன்ற இடங்கள் கூட மத்யமரின் வாங்கும் சக்திக்குள் இல்லை. இந்த மாற்றம் அதிவேகமாக நடந்ததனால், முன்னாளில் கௌரவம் எனக் கருதப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் கூட, ஒரு அடுக்குமமடியின் பொந்து கூட வாங்க முடியாமல் தவிக்கிறான்.

இதற்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் சாப்ட்வேரில் புழங்கும் அதிகப் பணம்தான். ட்ரீட் கொடுத்து, 500 ரூபாய் ஆம்னிபஸ்ஸில் பயணம் செய்தபின்னும் மிஞ்சுவது, மேற்படி சர்க்கார் உத்யோகஸ்தனின் முழுச்சம்பளத்தைவிட சில மடங்குகள் அதிகமாக இருப்பதே.

அப்பாவை விட அதிகச் சம்பளம் என்பது பையனுக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கலாம். ஆனால் அப்பாவுக்கு? அப்படிப்பட்ட பையன்கள் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாக்களுக்கு?

அதிகப்பணம் எங்களுக்கு மட்டும்தானா? அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவில்லையா? சினிமாக்காரர்கள் கோடிக்கணக்கில் வாங்கவில்லையா என்ற கேள்விகளும் அர்த்தம் அற்றவையே! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரின் தினப்படி செயல்பாடுகளில் போட்டிக்கு வந்ததில்லை, அவர்களின் ஜனத்தொகையும் பொதுமக்களின் ஜனத்தொகையில் 1 சதவீதத்தைத் தாண்டியதில்லை.

விலையேற்றம் என்பது சகஜம்தான். அந்த காலத்துல 5 பைசாவுக்கு கைநிறைய பொரிகடலை கிடைச்சுது என்று சொல்வது அபத்தம். ஆனால், Burning platform என்பது இப்படிப்பட்ட திடீர் நிகழ்வுகளால் வேகமாவது, அந்த வேகத்தில் கூடச்சேராத மக்களைப் பாதிக்கத்தான் செய்யும். இங்கே பிரச்சினை விலையேற்றம் அல்ல - அதன் வேகம்!

பிரச்சினை பணம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. வாழ்க்கைத்தரம் பற்றிய அளவுகோல்கள் வேகமாகத் திருத்தப்படுவது! இது அங்கே ஒரு அரசியல்வாதி, இங்கே ஒரு வியாபாரி என்றில்லாமல், பொது ஜனத்தொகையில் 15-20 சதமாக இருப்பதால் மிச்சமுள்ள, பேண்ட் வேகனில் ஏறமுடியாதவர்கள் 80% ஆக இருப்பதும், அவர்களின் அந்தஸ்து சடாலெனக் குறைவதும், நேற்றுவரை அவர்கள் கைக்குள் இருந்த வசதிகள் இப்போது பகட்டாகவும் ஆடம்பரமாகவும் மாறிவிட்டதுதான்.

அன்றைய தேதிக்கு விலைபோகும் படிப்பைப் படித்து, அன்றைய தேதியின் நல்ல வேலையில் சேர்ந்து, சரியான பணி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் பெற்றுவரும் ஒரு ஆள், கோட்டின் மற்ற பகுதி திருத்தப்படுவதால் வாழ்க்கைத்தரம் குறைவதின் வலி, அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

சம்பள ஏற்றத்தாழ்வு என்பது இன்று நேற்று வந்த பிரச்சினையில்லை. ஆனால் இன்று அது உச்சத்தில் இருப்பதற்கும், பேசுபொருளாக ஆகியிருப்பதற்கும் காரணம் திடுதிப்பென மாறும் சமூக அளவுகோல்கள்.  10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான். 

மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச்சொன்னாராம் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு பணக்காரக் குழந்தை எழுதினாளாம்: Once upon a time, there was a very poor family, everybody in the house were poor, the parents were poor, the housemaid was poor, the gardener was poor, the car driver was poor, everybody was poor":  என்று! சாப்ட்வேர்காரர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. வாங்கற சம்பளம் ட்ரீட் கொடுத்து, ஐ மாக்ஸில படம் பாத்து, 500 ரூபா ஆம்னிபஸ்ஸில போயி, மிஞ்சவே மாட்டேங்குது என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் முன் பத்தியில் சொல்லப்பட்ட ஆளுக்கு எப்படிப்பட்ட எரிச்சலைத் தரும்?

ஆனால்!

இந்தப்பிரச்சினைக்கு சம்பளம் வாங்குபவர்களைக் காரணமாகச்சொல்வது எந்த விதத்தில் சரியாகும்?

ரஜினியை வைத்து 50 கோடிக்கு படமும் 10 கோடி சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றால் அந்தப்பணத்தை வசூலித்துவிடமுடியும் என்ற நம்பிக்கைதானே காரணம்?

சாப்ட்வேரை விற்றால் பணம் வராது என்ற நிலையில் 2000த்தின் ஆரம்பங்களின் டாட்காம் வீழ்ச்சியிலும் பின்னர் 2002லும் கூட எத்தனை சாப்ட்வேர் மக்கள் வேலை இழந்தார்கள்? அப்போது, மற்றவர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சாப்ட்வேர்காரர்களுக்குத் தந்தார்களா? சாப்ட்வேர் படித்தவர்கள் அத்தனை பேருமா கோடியில் கொழிக்கிறார்கள்? (சிவாஜி பவுண்டேஷன் ஆரம்பிக்கிறார்கள்:-)) அனுமதிக்கப்பட்ட விலக்குகள் (வீட்டுக்கடன், சேவைகளுக்குத் தரும் நன்கொடை) நீங்கலாக அவர்கள் கடமையான வருமான வரியிலிருந்து தப்பிக்கவோ ஏய்க்கவோ முடியாமல் சோர்சிலேயே கழிக்கப்படுகிறது. மிச்சப்பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பது அவரவர் சௌகரியம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

அவர்கள் பொறுப்பில்லாமல் செலவழிப்பது மட்டுமே விலையேற்றங்களுக்குக் காரணம் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வியாபாரிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய, எப்படிப்பட்ட சம்பாத்தியம் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. சென்னையில் பிரம்மச்சாரிகளுக்கு வீடுகிடைக்காத நிலை மாறி, பிரம்மச்சார்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், இரு பக்கமுமே குற்றமில்லை - காலம் செய்த குற்றம்தான்.

இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத் தான் இருக்கிறது. சாப்ட்வேர் வேலைகளைப் பரவலாக்குதல், சேலம், சத்தி போன்ற நடுததர ஊர்களிலும் மென்பொருள் பூங்காக்களை அமைத்தால், சென்னையில் 100 பேர் என்பது சென்னையில் 50 மற்ற ஊர்களில் 10 - 10 என்று பிரியும், சுபிட்சம் பரவலாகாவிட்டாலும், ஓரிடத்தில் குவிக்கப்பட்டதாக இருக்காது. அதிக வரிவிதிப்பு போன்ற முறைகள் எல்லாம் அநியாயம்தான்.

சாப்ட்வேர் இளைஞர்கள் ஒரு விஷயத்தை உணரவேண்டும். தங்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து பறிக்கப்பட்டதாக உணரும் மக்கள்தான் பெரும்பான்மை. அதிலும், உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் இல்லாத, வன்முறைக்கு ஏங்கும் ஒரு இளைய தலைமுறையும் அதில் அடக்கம். அவர்கள், தங்கள் வலிக்குக் காரணமாக உங்களை நினைக்கிறார்கள் - சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள் - நான் தப்பு என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒரு ஊதுபொறிக்காகக் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் எதுடா சாக்கு என்று கலவரம் கிளம்புவதைக் கவனித்திருக்கலாம். உங்கள் பகட்டு இதற்குக் காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.

75 பின்னூட்டங்கள்:

Pavals said...

//கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன்.// :( இதை சொல்ல எவ்ளோ முன்னேற்ப்பாட ஒரு பக்கம் எழுத வேண்டியிருக்கு பாருங்க..

வடுவூர் குமார் said...

only 50 seconds balance from airport free internet.I will come back later.

Anonymous said...

முக்கியமான விஷயத்தை (அதாவது வலைப்பதிவுகளில், இணையங்களில் நடமாடுமாடுகின்ற பலருக்குத் தென்படும், உறுத்தும் விஷயத்தை) விவாதத்திற்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இவ்வாறு குறுகிய காலத்தில் கண்ணிற்குத் தெரியுமளவிற்குச் சிலரிடம் அதிக அளவு பணம் புழங்க ஆரம்பித்திருப்பது இது போன்ற வீட்டுவிலையுயர்வு தவிர வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களில் பலருக்கும் பெற்றோர் என்றல் 55 வயதில் பதினைந்தாயிரம் சம்பளத்தை எட்டிப் பிடிக்காதவர்தானே என்ற இளக்காரமான எண்ணம் இருக்கிறது. வீட்டில் காபியைக் கூட போட்டுக்கொள்ளத் தெரியாமல் முப்பது வயதை எட்டியவர்கள் இருக்கிறார்கள் ("அம்மா சும்மாதானே இருக்கிறார்கள் செய்யட்டுமே") .

இதோடு மற்றொரு முக்கியமான நிலையையும் கவனிக்க வேண்டும். இத்தனை வருடங்களாக ஒரு அலுவலகத்தில், நூறு பேர் வேலை செய்தால் அதில் நான்கைந்து பேர் முந்தநாள் சேர்ந்தவர்களாயிருப்பார்கள். போனவாரம் கல்யாணமானவர்கள், தவழுங்குழந்தைக்குப் பெற்றோர்களாயிருப்பவர்கள், பையன் எஸ் எஸ் எல் சியில் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்ற கவலை கொண்டவர்கள், கல்லூரியில் மகனுக்கு/மகளுக்குப் படிக்க வைக்க அலுவலகத்தில் பி எஃப் கடன் வாங்குபவர்கள்,
அல்லது மகன், மகளின் ஜாதகக் கட்டுடன் வரன் தேடுபவர்கள் என்று எல்லா வயதினரும் இருப்பார்கள்.

விழித்திருக்கும் வேளையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் அலுவலகத்தில் இப்படி பல வயதில் வெவ்வேறுவிதமான பொறுப்புகளைக் கொண்டவர்களுடன் நெருங்கப் பழகும் வாய்ப்பு இருக்கும். இந்த சூழல் வாழ்வில் நமக்குப் பொறுப்பை நமக்கறியாமலேயே பாடமாக நடத்தும். ஆனால் மென்பொருள் நிறுவனங்கள் இளைஞர்களின் கூடாரமாக இருக்கின்றன.
கல்லூரி வளாகத்தின் நீட்சியாக அதைக் காட்ட வேண்டும் என்று உயரதிகாரிகளும் நினைக்கிறார்கள்.
அலுவலகம், ஒருவருக்கொருவர் செல்போனிலும் மின்னஞ்சலிலும் சிரிப்புத் துணுக்குகளைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருக்கின்றது. இது வாழ்க்கையில் ஒரு சமநோக்குப் பார்வையைக் கற்றுக்கொள்ள ஏற்ற சூழலாக இல்லை.
இருபது வருடத்திற்குப் பிறகு இந்த தலைமுறை அந்த வயதிற்குத் தேவைப்படும் எதையாவது கற்றிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. அப்போது அவர்கள் தங்களுடைய கல்லூரிப்பருவதிற்கு வந்துவிட்ட பிள்ளைகளிடம் எத்தகைய சிக்கல்களை உறவுகளில் காண்பார்களோ என்பது நினைக்க கொஞ்சம் பயமாக இருக்கிறது.

மங்களூர் சிவா said...

//
அவர்கள் பொறுப்பில்லாமல் செலவழிப்பது மட்டுமே விலையேற்றங்களுக்குக் காரணம் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வியாபாரிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய, எப்படிப்பட்ட சம்பாத்தியம் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது.
//
:-))))))

M Poovannan said...

நான் துபாயில் கை நிறைய் சம்பளம் வாங்குகிறேன் என்ற திமிரில் சென்னையில் உலா வந்தால் இந்த சாப்ட்வேர் பசங்க நம்க்கும் மேலே செலவு செய்கிறாங்க ! கழுத்திலே ஓர் அட்டையை தொங்க விட்டுக்கொண்டு பக்கத்திலே அட்டை மாதிரி ஒரு பெண் ஓட்டிக் கொண்டு பணக்கார உணவு விடுதி, மல்டிப்ளக்ஸ் தியேட்டர், உற்சாக பானம், பறக்கும் வண்டி, தூள் கெளப்புறாங்க

வாக்காளன் said...

நல்ல அலசல் சுரேஷ் அவர்களே..


ஐனாக்ஸிலும் , வீக் என்ட் பார்ட்டி, ஸ்பென்சர் பிளாசா, அபிராமி மால்கள் எல்லாவற்றுக்குள் ஐ டி துறை மக்கள் தான் வருகிறார்கள் என்றால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.. கல்ல்லுரி மாணவர்களும் அதிகம் புழங்கும் இடம் இது.. அதே போல் .. ஐ டி க்கு இனையாக சம்பளம் தரும் வேறு துறைகள் உங்களுக்கு தோணவில்லையா?

ரியல் எஸ்டேட் விலை எகிறியது ஐ டி யால் மட்டுமில்லைங்க.. அரசியல், ரியல் எச்டேட்காரர் கள். இடைத்தரகர்கள், தொழிலதிபர்.. சினிமா துறை சார்ந்தோர்... நம்மில் இருக்கும் மக்களின் பேராசை.. அனைத்தும் தான்..
ஐ டியில் இல்லாதவர் வீடு வாங்காமல் இல்லை... அதே போல்.. ஐ டி யில் இருப்பவர் அனைவரும் வீடு வாங்கும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்...

பினாத்தல் சுரேஷ் said...

ராசா.. அந்த ஒரு வரிதான் உங்களுக்கு ஒத்துப்போகுதோ? மத்த வரியை எல்லாமல் ஒரே வீச்சுல முன்னேற்பாடுன்னு வெட்டித்தள்ளிட்டீங்களே ராசா :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க வடுவூரார்.. வெயிட்டிங்!

அனானிமஸ், ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. இதுக்கு ஏன் அனானி?

இளக்காரமான எண்ணம், கலந்துகட்டிய ஆபீஸ் சூழல், சமநோக்குப் பார்வையை இழத்தல், நாளைய குடும்ப உறவு என்று, நான் யோசித்திராத / இந்த விவாதத்தில் எங்கும் படித்திராத ஒரு புதுக்கோணத்தை உள்ளே கொண்டு வந்திருக்கீங்க. உங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். ஒத்துப்போகாதவர்கள் வாதிப்பதை வரவேற்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மங்களூர் சிவா.

பூவண்ணன், நன்றாகவே திரிக்க முயற்சிக்கிறீர்கள். நான் துபாய்க்கு வந்தது சமீபத்தில்தான், வருவதற்கு முன்னும் பின்னும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் எந்த மாறுதலும் இல்லை.

//மிச்சப்பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பது அவரவர் சௌகரியம் - அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.// இந்த வரியைப் படித்தும் எனக்குப் பொறாமை என்ற எண்ணம் உங்களூக்கு வந்தால் நான் என்ன செய்ய முடியும்??

selventhiran said...

நல்ல கட்டுரை

பினாத்தல் சுரேஷ் said...

இதுவும் அதுவும் (நல்ல பேரு:-),

மால்களைப்பற்றி, அங்கே உலாவுகிறவர்கள் ஐ டி காரர்கள் மட்டும்தான் என்றெல்லாம் நான் எதுவும் எழுதின மாதிரி தெரியவில்லையே..

ஐடிக்கு அதிகமாக சம்பளம் தரும் ஆயிரம் துறைகள் இருக்கின்றன.. அவர்கள் செயல்பாடு மற்ற்வர்களை பாதிக்கும் அளவில் அவர்களின் எண்ணிக்கை இல்லையே..

//ஐ டியில் இல்லாதவர் வீடு வாங்காமல் இல்லை... அதே போல்.. ஐ டி யில் இருப்பவர் அனைவரும் வீடு வாங்கும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்...// இதை ஒத்துக்கறேன்.

Kasi Arumugam said...

சபாஷ் புரபசர்:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா போகுது விவாதம்.. க்ரேட்.

Voice on Wings said...

இந்த உரையாடலை ஒரு பார்வையாளனா மட்டும் வேடிக்கை பார்த்துக்கிட்டு வர்றேன். பலர் பதிவுலயும் பின்னூட்டமாவும் (பல அனானிகள் கூட) அருமையான கருத்துக்களை வழங்கிட்டிருக்காங்க. மென்பொருளாளர்கள் மத்தியிலும் பலர் சுய பரிசோதனை செய்யற மாதிரி படுது. இத்தகைய செரிவான விவாதத்தை மக்கள் மத்தியில் கிளப்பியிருப்பதே அந்தப் படத்தின் வெற்றிதான்னு நினைக்கறேன். பணம் பண்ணும் உத்தின்னு அதை ஒதுக்க முடியல. பணம் பண்றதுக்கு ஒரு விஜய் படத்தையோ, ரஜினி படத்தையோ எடுக்கலாமில்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செல்வேந்திரன்.

நன்றி காசி.

நன்றி முத்துலட்சுமி.

வாய்ஸ் ஆன் விங்ஸ் வாங்க. ரொம்ப நாள் ஆச்சில்ல இந்தப்பக்கம் வந்து?

விவாதத்தை ஆரம்பித்துவைத்ததற்கு அந்தப் படத்துக்கு நன்றி சொல்லலாம்தான். ஆனால் நெகட்டிவ் கருத்தாக்கத்தோடு ஆரம்பித்து வைத்திருக்கிறதே என்பதும், இது புதுப் பிரச்சினைகளுக்கு வழிகோலிவிடக்கூடாதே என்ற பயமும்தான் என் காட்டமான வரிகளுக்குக் காரணம். படம் பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். பி பி ஓக்காரனை மிரட்டுவதாக ஒரு காட்சி வருவதாக அறிந்தேன், அந்தக்காட்சியில் தியேட்டரின் முன் வரிசை முழுக்க கைதட்டலாம்.அவர்கள் விவாதித்து அறிந்து அதற்குப்பிறகா தங்கள் முடிவை அமைத்துக்கொள்ளப் போகின்றனர்?

முரளிகண்ணன் said...

சாப்ட்வேர் ல் இல்லை என்ற காரணத்தால் பெண் கூட கிடைக்கவில்லை என என் பல (research scholars in mechanical engg) நண்பர்கள் புலம்புகிறார்கள். நான் கல்யானத்திற்குப் பிறகு அந்த அளவு சம்பாதிக்க முடியவில்லை என தொடர்ந்து சுற்றத்தாரால் அவமானப்படுகிறேன்.
சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் என்கிறார்கள், படிப்பு முடித்து ஒரு பீல்ட் ல் கேரியர் டெவலப் செய்தபிறகு எப்படி மாறுவது?.நான் வலையுலகில் இயங்குவது கூட இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்குக்கு தான். உன்னைவிட வாழ்க்கையில் வசதி குறைந்தவர்களை எண்ணிப்பார் என்கிறார்கள். அதை மற்றவர்களும் பின்பற்றி நம்மை ஏளனம் செய்யாமல் இருக்க வேண்டுமே?. அல்டிமேட் ஆக மனிதன் வாழ்வதே ஒரு அங்கீகாரத்துக்கு தான். அறிவுபூர்வமாக உழைத்தும் (inteligent hardwork)அது கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது. demoralised & depressed man

வெட்டிப்பயல் said...

என் கருத்து இது தான். சம்பளத்தை குறைத்து சிறுநகரங்களில் தொழில்சாலைகள் துவங்க வேண்டும். எல்லாரும் சென்னைல இருக்கறதுக்கு பதிலா அதை பிரிச்சி சேலம், கோவை, திருச்சி, மதுரை இப்படி நிறைய ஊர்ல கம்பெனிகள் வர வேண்டும். வெளிநாட்ல இருந்து வர காசு Infra Structureக்கு பயன்பட வேண்டும் .

அதைவிட்டு சாப்ட்வேர் இஞ்சினியருங்க செலவை குறைத்து அவர்கள் பேங் பேலன்ஸ் ஏறுவதில் எனக்கு சம்மதமில்லை.

சம்பளத்தை குறைத்தால் ஆடம்பர செலவை தானாக அவர்கள் குறைத்து தான் ஆகவேண்டும்... இது தான் என் பதிவின் சாரமும். புரிதலில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய சுரேஷ்,

சமூகத்தின் பிரிவுகளும், உட்பிரிவுகளும் குறைந்தபட்ச பொருளாதார ஏற்றத்தாழ்வை பொருட்படுத்துவதில்லை.

நீண்டகால உழைப்பு, தொழில், அதிர்ஷ்டம், படிப்பு இவற்றால் வருகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சமூகம் பொருட்படுத்துவதில்லை.

கற்றது தமிழ் சிறிது மிகை. பிறகு என்றேனும் விவாதிக்கலாம்.

சென்னையின் நிலச்சொத்து விலையேற்றங்களைக் கவனித்தால், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள்.

ஆந்திரத்தவர் கொஞ்சம் விலையேற்றினார்களாம், ராஜஸ்தானிகள் கொஞ்சம் விலையேற்றினார்களாம், பிறகு சினிமாக்காரர்கள் கொஞ்சம் ஏற்றியிருக்கிறார்கள், பிறகு பழியைச் சுமந்தவர்கள் வளைகுடா வருமானத்தினர், இப்போது கணினியர் காலம்...அவ்வளவே.

தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகளின் வளர்ச்சியாலும் பல பகுதிகளில் விலையேற்றம், அரசியல் நிகழ்வால் குறிப்பிட்ட இடத்தில் விலையேற்றம், கணினியர்களால் சில இடங்களில் விலையேற்றம் என்ற அளவில்தான் இதனை என்னால் பார்க்கமுடிகிறது.
சமயம் இருப்பின் விவாதிக்கலாம்.

*

கணினித்துறையானது நேரடியாக அதில் ஈடுபடுவோரின் பொருளாதாரத்தை மட்டுமே உயர்த்துகிறதா?

எனக்குத் தேவையான சில தச்சவேலைகளைச் செய்த தச்சருக்கு உதவியாக வந்த இளைஞர் திடீரென்று வராமல் போனார். அடுத்தநாள் வந்தபோது கேட்டேன். ஓட்டுனர் உரிமத்திற்குப் போனதாகவும், வண்டி வாங்கப்போவதாகவும், சில கணினிக்காரர்களுக்கு வாடகைவண்டி தேவைப்படுவதாகவும், தச்சவேலையைவிட அதில் அதிகப் பணமென்றும் சொன்னார்.

இங்கே, அந்த இளைஞரின் பொருளாதாரம் உயர்கின்றது. ஆனால், பாரம்பரியத் தச்சரில் ஒருவரை சமுதாயம் இழக்கிறது.

இது அதிமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம். பார்க்கலாம் சென்னை எப்படிப்போகிறதென்று.

அன்புடன்
ஆசாத்

Akilan said...

Sorry for writing in English

During Industrial Revolution
till 1989.

1) One job for life

2) Salary based on seniority and
age

3) Pension and retirement benefits

During Information Revolution

1) Many Job for life.

2) Salary based on skill

3) No pension and retirement
benefits

Its changing world,nothing is permanent. (RichDad.com)

I work in IT, my next cubicle french lady is charging 1500 USD per day for her consultancy.

முரளிகண்ணன் said...

பிரிட்டிஷ் ஆட்சி ஒரு தலைமுறையை கிளார்க்குகளாக மாற்றியது. இந்த துறை ஒரு தலைமுறையை லாஜிக் மற்றும் ஆங்கிலம் தெரிந்த வேலையாட்களாக மாற்றப்போகிறது. அதைத்தான் மேலைநாட்டினர் எதிர்பார்க்கிறார்களோ என்னவோ?. ஒரு புதிய கண்டுபிடிப்பு கூட இங்கு இல்லை. நல்ல திறமை உள்ளவர்கள் எல்லாம் இந்த துறைக்கே செல்வதால் மற்ற அத்தியாவசிய துறைகள் பாதிக்கப்படுகின்றன. அம்மி கொத்த சிற்பி எதற்கு? இந்த வேலைக்கு மற்ற துறைகளில் நன்கு சாதிக்ககூடிய திறமை உள்ளவர்கள் கூட செல்வது நம் நாட்டை பலவீனப்படுத்தும். என் நெருங்கிய நண்பர் ஒரு நல்ல ஆசிரியர். சந்தோசமாக சென்ற அவரது திருமண வாழ்வு அவர் தம்பிக்கு (10 வயது சிறியவர்) இத்துறையில் பணி கிடைத்ததும் ஆடிப் போனது. அவர் மனைவி அவரை மதிப்பதே இல்லை. எதற்க்கெடுத்தாலும் அவர் மனைவி கம்ப்பேர் செய்து மன சித்திரவதைப்படுத்த அவர் இப்பொழுது தன் பணியை வெறுக்கிறார். மாணவர்கள் ஒரு நல்ல ஆசிரியரை இழந்தனர்

Premkumar said...

கட் அண்ட் பேஸ்ட் ஃப்ரம் வெட்டிப்பயல் பதிவு.

sorry for the troll :-)

*********
உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், விலை ஏத்தறவன் மேலே துளிக் கூட தப்பு இல்லேங்கறதுதான் அப்பட்டமான உண்மை. நம்மளது மார்க்கெட் எகானமி. அதாவது சந்தைப் பொருளாதாரம். ஒரு பொருள் அல்லது சேவையின் விலையானது, அந்தப் பொருள் அல்லது சேவைக்கான உண்மையான விலை அல்ல. வாங்கு திறன் ( purchasing power ) கொண்டவர்களால் என்ன விலைக்கு வாங்க முடியுமோ அதுதான் விலையாக வைக்கப்படும்.

ஒரு பிசிஓ விலே லோக்கல் கால் செய்ய ஒரு ரூபாய். அதே லோக்கல் காலை லீ மெரிடியன் ஓட்டலில் செய்தால், ஐம்பது ரூபாய். என்ன விலை வைத்தால், அந்த விற்பனை எல்லைக்கு உட்பட்டவர்கள் வாங்குவார்களோ அதுதான் விலை.

உதாரணமாக, எவ்வளவு செலவு செய்து, அந்த வெள்ளறிக்காயை சந்தைக்குக் கொண்டு வந்து, தெரு முக்கிலே மிளகாய் தூவிக் கொடுத்தாலும், ரெண்டு ரூபாய்தான். சப்போஸ் மூணு ரூபாய் சொல்கிறான் என்று வையுங்கள், வாங்குபவர்கள் குறைவார்கள். விற்பனை குறையும். அதே ரெண்டு ரூபாய்க்கு வித்தான்ன, நெறைய பேர் வாங்குவார்கள். விற்பனை அதிகமாகும். விற்பனை ஆகும் அளவைப் பொறுத்து, மூன்று ரூபாய்க்கு விற்பதை விட, ரெண்டு ரூபாய்க்கு விற்றால் லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இப்ப வெள்ளரிக்காயின் விலை என்ன? மூணா இல்லே ரெண்டா? (இதை எல்லாம் டீப்பாக இல்லாமல் , தேவை / தேவையின்மை கருதி மேலோட்டாமாகவே சொல்கிறேன். )

வெள்ளறிக்காய் கூவிக் கூவி விற்கிற சமாசாரம். At any given instance, the supply will always be in excess, barring few excpetional situtations. ஆனால், வீடு சமாசாரம் அப்படி இல்லை. சப்ளை கம்மியாத்தான் இருக்கும். அந்தச் சமயத்திலே, விற்கிறவன் கை ஓங்கி, அதிக விலை கொடுக்கிறவனுக்கு வீடு கொடுப்பான். இந்தச் சூழ்நிலையிலே லிக்வில் கேஷ் அதிகம் வெச்சிருக்கவனுக்குத்தான் வீடு கிடைக்கும். சம்பள விகிதங்களில், ஐடீ தான் முன் நிற்கிறது. ஐடியை விட அதிகம் சம்பாதிக்கும் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும், பிறரும் இந்த ரேசில கலந்து கொள்ளப் போவதில்லை. நேச்சுரலி சாஃப்ட்வேர் காரங்களுக்குத்தான் அடுத்த வாய்ப்பு. இதுலதான், இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் பிரச்சனை வரும். " ஒழுங்கா இருந்தோங்க... இந்த சாஃப்ட்வேர் பசங்க வந்து எல்லாத்தையும் கெடுத்தானுங்க" என்று சொல்லத்தான் செய்வார்கள்.

உடனே, உனக்கேன் போறாமை? வக்கிருந்தா, நீயும் சம்பாதி..என்னை விட அதிக விலை குடுத்து வாங்கிக்கோன்னு அயோக்கியத்தனமா கேக்கமாட்டீங்கன்னு நம்பறேன்.

நாம என்னிக்காவது டாட்டா, பிர்லா போன்ற பணக்காரர்களைப் பற்றி புலம்பியிருக்கிறோமா? அல்லது அமைச்சர்களின் சொகுசுக் கார் பற்றி புலம்பியிருக்கிறோமா? ஏன் என்றால் அந்த மாதிரி ஆட்கள் நம் மக்கள் தொகையிலே ரொம்ப ரொம்ப குறைச்சலான சதவீதம். அவர்களுடைய பணப் புழக்கம், சாதாரண மக்களிடம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது . ஆனால், இது நாள் வரை இல்லாத வகையிலான சம்பள உயர்வு, அதனால் ஏற்படும் பணப் புழக்கம், நமக்கு வெகு பக்கத்தில் நடக்கும் போது, இந்த ஹேவ்ஸ் & ஹேவ் நாட்ஸ் க்கும் இடையில் உரசல் வரத்தான் செய்யும். ஏன்னா இந்தச் சமுதாயம் எல்லோரும் சம வாய்ப்பைத் தர இயலவில்லை. எல்லாரும் அவரவருக்கான வாய்ப்புகளை போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.

நெய்வலி பவர் ப்ளாண்டுக்காக இடத்தைக் கொடுத்து விட்டு, அதற்குரிய நட்ட ஈட்டை பெற இன்றைய தேதி வரை முப்பது வருடங்களாகப் போராடி வரும் கிராமத்தினர், எனக்கு ஒரு நியாயம், மெட்ராஸுல இருக்கிறவனுக்கு ஒரு நியாயமான்னு கேக்கத்தான் செய்வான். உடனே ஆஹா,, நம்ம சீட்டுக்கு ஆப்பு வெக்கராண்டா என்று எண்ணையில் இட்ட அப்பம் மாதிரி துள்ளி குதிக்கக் கூடாது.

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஐடி வேலைசெய்யும் உங்களைப் போன்ற இளையர்கள் பொறுப்பில்லை அதே சமயம், ஐடி கம்பெனிகள், அவங்க சம்பள பாலிசி, அதனால் மற்ற துறையில் நிகழும் பாதிப்பு என்று பேசும் போது, குறுக்க பூந்து அய்யோ அம்மான்னு அலறக் கூடாது.

துட்டு வருதா, வர வரைக்கும் கமுக்கமா வேலை பாத்து துட்டு சேர்த்துட்டுப் போய்ட்டே இருக்கணும். ரெண்டாயிரம் ரூபாய் டின்னர் அலுத்துப் போச்சு, டேக் ஹொம் பே குறைஞ்சுகிட்டே வருது, ஒரே financial problem , சமாளிக்க முடியலைன்னு, இதே தேசத்துல , நீங்க வசிக்கிற இடத்துலந்து நாநுறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற விவசாயிகிட்ட சலிச்சுகிட்டே சொல்லுங்க... பொளேர்னு கழுத்து மேல போடுவான், அதாவது தற்கொலை செஞ்சுக்கறதுக்கு முன்னாலே....

ஒர்த்தர் சொன்னார், இந்த யுப்பீ இளைஞர்கள், தாங்கள் வாழும் வாழ்க்கைமுறை வழியாகவே இந்த உலகத்தைப் பார்க்கிறார்கள். நாம சௌக்கியமா இருந்தா நாடே சௌக்கியமா இருக்குன்னு நினைக்கிறார்கள் என்று. .. நான் நம்பிக்கை இழக்கலை.. அதாவது இன்னும் நம்பிக்கை இழக்கலை..

உடனே கேப்பீங்க.. இதுக்கல்லாம் நாங்களா காரணம் கெவருமெண்ட்டை போய்க் கேளுங்கன்னு... அய்யா... நாங்க கேக்கறது கெவருமண்ட்டைத்தான்.. உங்களை அல்ல... நீங்கதான் குறுக்க குறுக்க வந்து எக்குதப்பா ஆக்சிடண்ட் ஆகிடுது.

பினாத்தல் சுரேஷ் said...

முரளி கண்ணன்,

மன அழுத்தம் வரும் அளவுக்கு நிலைமை இருப்பது உண்மைதான். நானும் சில வேளைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், நம் கையில் இல்லாத விஷயங்களுக்கு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை :-) இதைச் சொன்னாலே, பொறாமை என்று கருதப்படும் சூழலில்தான் வாழ்கிறோம்.

பினாத்தல் சுரேஷ் said...

வெட்டிப்பயல்,

உங்கள் பதிவைப் படித்தபின் தான் இதை எழுதத் தொடங்கினேன். நீங்கள் சொன்ன கடைசி வரிகள் - பரவலாக்கல் - நடக்கக்கூடியது, நடக்க வேண்டியது என்பதில் உடன் படுகிறேன். ஆனால், நமது கட்டுப்பாடுகளை இழக்கக்கூடிய ஒரு வாழ்முறையைத் தேடித் தேர்ந்தெடுத்துவிட்டு, என்னால் இவ்வளவு செலவுக்குமேல் சேமிக்க முடியவில்லை, எனவே நானும் பிறரும் ஒன்றுதான் என்ற டோனில் வந்த உங்கள் வாசகங்கள் உறுத்தின.. இப்பதிவின் பழைய ட்ராப்ட் ஒன்றில் இருந்த வாசகம் - பதிவைப்படிச்சா அனுபவிக்கணும்தான், ஆராயக்கூடாதுதான், ஆனா முடியலையே :-)

பினாத்தல் சுரேஷ் said...

அபுல் கலாம் ஆசாத்,

ரியல் எஸ்டேட் காரர்கள் விலை ஏற்றுவதற்குக் குறைந்தபட்சக் காரணங்களே போதும். அவர்களுக்கு வாங்க ஆள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மையான காரணம்.

ஆந்திரர்கள், வளைகுடாக்காரர்கள், சினிமாக்காரர்கள் ஏற்றிய விலை எல்லாம் ஒரு கிராமத்தைத் தாண்டாது. இப்போது நிகழ்வது, சமச்சீராக எல்லா இடங்களிலும் நிகழ்வது. இதற்குக் காரணம், மென்பொருளாளர்கள் இல்லை என்று சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றீக்கொள்வதுதான்.

//இங்கே, அந்த இளைஞரின் பொருளாதாரம் உயர்கின்றது. ஆனால், பாரம்பரியத் தச்சரில் ஒருவரை சமுதாயம் இழக்கிறது.//

வேலைகள் மாறுவதும் புதிய வேலைகள் உருவாவதும் எந்த சமூக மாற்றத்திலும் சகஜம்தான். டைப்பிஸ்டுகள் வந்தவுடன் காலிக்ராபிஸ்டுகள் காணாமல் போகவில்லையா? ஆனால், இதை மறைமுக வேலைவாய்ப்பு என்று ஏற்கமுடியவில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

அகிலன்,

எதுவும் நிலையானதில்லை என்ற தத்துவம் சரிதான். ஆனால் மாற்றங்கள் நிகழ்கையில் பழையவர்கள் அடித்துப்போகப்படுவது?

ஆல்வின் டாப்ளரின் ப்யூச்சர் ஷாக், தேர்டு வேவ் ஆகிய புத்தகங்களில் மாற்றங்களின் வேகம் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் தெளிவாக அலசப்பட்டிருக்கும். நேரம் கிடைத்தால் படியுங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

முரளி கண்ணன்,

நீங்கள் சொல்வது மிகச்சரி. எல்லாரும் ஒரே இடத்திற்குச் செல்வது வேறு இடங்களில் வெற்றிடத்தை உண்டு செய்வது வருத்தமே. பல கலைகளும், தொழில்களும் முடங்கிக் காணாமல் போவதை கண்முன்னே பார்க்கிறோம் :-(

பினாத்தல் சுரேஷ் said...

ஜான் ஆபிரகாம் (அக்ரஹாரத்தில் கழுதை:-),

உங்கள் பின்னூட்டத்தை நான் வெட்டிப்பயல் பதிவுலேயே பாத்துட்டேன். உங்கள் கருத்துக்களோடு ஏறத்தாழ 100% ஒத்துப்போகிறேன்.

//நான் நம்பிக்கை இழக்கலை.. அதாவது இன்னும் நம்பிக்கை இழக்கலை..//

பினாத்தல் சுரேஷ் said...

ஜான் ஆபிரகாம் (அக்ரஹாரத்தில் கழுதை:-),

உங்கள் பின்னூட்டத்தை நான் வெட்டிப்பயல் பதிவுலேயே பாத்துட்டேன். உங்கள் கருத்துக்களோடு ஏறத்தாழ 100% ஒத்துப்போகிறேன்.

//நான் நம்பிக்கை இழக்கலை.. அதாவது இன்னும் நம்பிக்கை இழக்கலை..//

நானும்!

வெட்டிப்பயல் said...

பினாத்தலாரே,
இங்கு விலையை ஏற்றி விற்பவன் மேல் குற்றமேயில்லையா?

ஆம்/இல்லைனு மட்டும் சொல்லுங்க. காரணம் வேண்டாம்.

Aruna Srinivasan said...

இன்னும் கொஞ்சம் சிந்திக்க..... ;-)

http://news-service.stanford.edu/pr/2007/pr-gradtrans-062007.html

ILA (a) இளா said...

ஒரு துறை மட்டும் வேகமா முன்னேறினா இப்படித்தான் ஆகும். மத்த துறையும் சரி சமமா முன்னேறா விட்டால் S/W மக்கள் எல்லாம் ஒரு காலத்தில் கொள்ளை அடிக்கப்படுவார்கள். உங்க கருத்த ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்

ILA (a) இளா said...

பெனாத்தலாரே!
1990 களிலும் மால்கள் இருந்தன. அப்போதும் மக்கள் வந்தும் போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நானும் அப்போது வயிறு எரிந்தவந்தான். இப்போ கொஞ்சம் Percentage ஜாஸ்தி அவ்ளோதான். அப்போ வியாபாரிகளின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என இருந்தது கூட்டம்,. அதாவது அப்பா காசுல செலவு பண்ணின கூட்டம், இப்போ அவனே சம்பாரிச்சு அவனே செலவு பண்றான். இது முன்னேற்றம்தானே?

அரை பிளேடு said...

//மன அழுத்தம் வரும் அளவுக்கு நிலைமை இருப்பது உண்மைதான். நானும் சில வேளைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், நம் கையில் இல்லாத விஷயங்களுக்கு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை :-) இதைச் சொன்னாலே, பொறாமை என்று கருதப்படும் சூழலில்தான் வாழ்கிறோம்.//

மன அழுத்தம் என்பது சாஃப்ட்வேர் துறையில் இருப்பவரை வரை பார்த்து மற்றவருக்கு வருவதை விட அதே துறையில் ஒருவருக்கு மற்றவரைப் பார்த்து வரும் வாய்ப்பு அதிகம்.

இத்துறையில் அனைவருக்கும் அதிக சம்பளம் கிடைப்பதில்லை. அதிக சம்பளம் பெறுவோரின் சதவீதம் குறைவே.

"உனது நண்பன் இரண்டே வருடத்தில் அமெரிக்கா போய் மாசம் லட்சம் ரூபாய் அனுப்புகிறான். உன்னை உனது கம்பெனி ஏன் அனுப்பவில்லை" என்று தந்தை கேட்டபோது என்னிடத்தில் விடை இல்லை.

"என் தங்கச்சிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை உங்கள மாதிரி இல்லை. அவரும் சாஃப்ட்வேர் இஞ்சினியர். உங்களை விட சின்ன வயசு. ஆனா சம்பளம் டபுள். நீங்களும் இருக்கீங்களே" என்று மனைவி சொன்ன போது வாழ்க்கையை வெறுத்திருக்கிறேன்.

நான்கு ஆண்டு எக்ஸ்பீரின்ஸிற்கு பிறகு எனக்கு கிடைத்த சம்பளத்தை விட புதிதாய் வந்தவனுக்கு நிறுவனம் அதிகம் வழங்கியபோது எனக்கும் மனஅழுத்தம் வந்தது.

இதனை பொறாமை இல்லை என்று சொல்லமாட்டேன். மனித மனம் :)

இரண்டு ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் நாலு கம்பெனிகள் மாறுவது எதற்காக. பணத்திற்காகத்தானே.

நிறுவனங்களும் அந்தநேரத்திற்கு ஆள்தேவை என்று அந்த நேரத்திற்கு அள்ளி விடுகின்றன.

இங்கு சம்பளமோ வேலையோ எதுவும் நிலையில்லை. "ஆடும் வரை ஆட்டம்" .

இந்த சம்பளங்கள் அளவுகோள்கள் ஒரு அதிர்ஷ்டத்தை பொறுத்தது என்று தோன்றுவதுண்டு.

இங்கு எல்லா வேலைகளும் ஒரே தரத்தவையும் அல்ல. எல்லோருடைய சம்பளங்களும் அதிகமானவையும் அல்ல.

அடிக்கிற காற்றில் பறக்கிற இலவம் பஞ்சுகள். காற்று அடிக்கும் வரைதான் எல்லாம்.

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 8 லட்சத்தில் ஒரு பிளாட் கிடைக்கும் என்ற நிலையில் கணித்துறையில் சேர்ந்த நான் நான்காண்டுகளில் கஷ்டப்பட்டு நான்கு லட்சத்தை சேர்த்து விட்டு நிமிர்ந்து பாரக்கும் போது அந்த வீட நாற்பது லட்சமாக இருக்கிறது.
:(

"கண்ணா. இந்த உடம்புல உயிரே வாடகைக்குத்தான் இருக்கு. வீடு வாடகையா இருந்தா என்ன" அப்படின்னு மனசைத் தேத்திக்கொண்டேன்.

மாசம் இருபதாயிரம்னு இருபது வருடத்துக்கு கட்டணும்னு தைரியமா வீடு வாங்கி போடற அளவுக்கு சிலருக்கு இருக்கிற நம்பிக்கை எனக்கு இந்த துறைமேல இல்லை.

என்னை பொறுத்த வரைக்கும் இரண்டாவது மாடியில 1200 சதுர அடிவீடுன்றது 40 லட்சம் பொறுமானமான ஒன்றே இல்லை. இதுக்கு 40 லட்சம்ன்றது அக்கிரமம். கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

யாராக இருந்தாலும் சரி தேவையில்லாத அளவுகோள்களின் முன் நின்று தன்னை அளந்து சுயபச்சாதாபம் கொள்வது தவறு.

என்னை பொறுத்தவரை தேவையானது பணம் அல்ல. நிம்மதி.

இந்த சமூகம் (முக்கியமாக உறவினர்கள்) தேவையற்ற ஒப்பீடுகளை தந்து கொண்டுதான் இருப்பார்கள். அசட்டை செய்து நமது வழியை பார்த்து சென்று கொண்டிருப்பதுதான் சிறந்த வழி்.

//நம் கையில் இல்லாத விஷயங்களுக்கு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை :-) // ரொம்ப கரெக்ட்.

வள்ளுவர்தான் நியாபகத்துக்கு வருகிறார்..

வலியார்முன் தம்மை நினைக்கதாம் தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

நாகை சிவா said...

கலவரம்னு உறுதியே பண்ணீட்டிங்களா?

இலவசக்கொத்தனார் said...

இந்தியாவின் விலைவாசியை நிர்ணயிக்கும் சக்தியில் நானும் ஒரு பங்கு என நினைக்கும் பொழுது பெருமையாய் இருக்கிறது. (ஆமாம் இவரு பெரிய அம்பானின்னு பக்கத்தில் ஒரு குரல் கேட்குது)

யோவ் எல்லாம் மேலெழுந்தவாரியா எழுதுங்க. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வரப் போறது இல்லை.

இது அபி அப்பா பதிவில் போட்டது. நீங்க ஐடிக்கு ஆதரவா ரெண்டு வரி சேர்த்து இருக்கீங்க. மத்தபடி ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை.

நமக்கு எவனாவது ஒருத்தனை மட்டம் தட்டிக்கிட்டே இருக்கணும். என்ன கெடுதல் நடந்தாலும் அவங்க பேரில் போடணும். சம்பள மேட்டரில் இந்த் ஐடி பசங்க, சமூக மேட்டரில் அவாள் - இப்படி.

IT Bashing இன்றைய பேஷன். ஊரோடு ஒத்து வாழ் என நீரும் ஜோதியில் ஐக்கியமாகிட்டீரு. வாழ்த்துக்கள்.

Boston Bala said...

அரைபிளேடு,

தங்கள் பின்னூட்டம் யதார்த்தம் + அருமை. பகிர்வுக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

அரைபிளேடு,

தங்கள் பின்னூட்டம் யதார்த்தம் + அருமை. பகிர்வுக்கு நன்றி.//

ரிப்பீட்டே!!!

TBCD said...

இதுல கவனிக்கப்பட வேண்டிய விசயம்...
-சினிமாத் துறையிலே பொதுவா கதைக் களம் மக்களுக்கு அறிமுகமானதாகவே இருக்கும்...காவல்துறை, அரசியல், ஊழல், கிராமம், தொழிற்சாலை (பெரிய இயந்திரங்கள் இருக்கும், அது பெப்சி தயாரிக்கும் தொழிற்சாலையாக காட்டப்பட்டாலும்)..இது போன்ற சூழ்நிலையிலே, இப்பொழுது உள்ள இயக்குனர்கள் வாழ்க்கைக்கு அருகாமையிலே படங்களை எடுக்க நினைக்கும் போது, ஐடியயை சிறப்பாகவோ, கசப்பாகவோ யாரும் இன்னும் பதியவில்லை...ஏன்னா அது கொஞ்சம் புதுசு...

ஒவ்வொரு தொழிலையும் விமர்சிக்கும் போது அதில் சாதகமாகவும், பாதகமாகவும் சொல்ல முடியும்...ஆனா, விக்கிரமன் படங்கள் போல எல்லா படங்களும் இருக்கனுமின்னு நினைக்க முடியும்மா...இந்த படத்திலேயும், பாலா கையாளுகின்றது போலவே, அதிர்ச்சி மதிப்பு தரக்கூடிய காட்சிகளை படைத்திருக்கலாம்..(நான் இன்னும் பார்க்கவில்லை...பாக்கனும்..நிறை சப்-டெக்ஸ்ட் இருக்குன்னு இயக்குனர் முழங்குறாரு..)
அதைப் பார்த்து ஐடி துறையே கலங்க வேண்டியது இல்லை..

ஆனா, இதுல ஏதாவது ஒன்னு உங்களை எழுதவோ, பேசவோ வைக்குதுன்னா, உங்க அடி மனசை இது தொட்டிருக்கு..ஏதோ ஒன்னு இன்னும் கொஞ்சம் சரியா இருக்கலாமின்னு படது...சிலர் அதை சொல்ல தயங்குறாங்க..சிலர் குற்ற உணர்ச்சியோட மறைக்கிறாங்க..அரசியல்வாதி ஊழல் பண்ணியதிலே, அவன் பண்ணாததையா நான் பண்ணிட்டேன்னு கேக்கிறதுக்கும், இவங்க அடுத்த தரப்பினரை இழுப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை..
ஐடியால, கண்ணுக்கு தெரியாம, பல சங்கடங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது..அது ஐடியில் உள்ளவர்களுக்கு தெரியாது...

முரளி கண்ணன் சொல்லிவிட்டார், மற்றவர்கள் சொல்லவில்லை..(நான் உள்பட...)

அதனால, ராசா அது ஐடி தவறு மட்டுமில்லை...அது மொத்த கட்டமைப்பின் கோளாறு...உங்க கையிலே இருப்பதை நீங்கள் திருத்தலாம்..

அது என்னான்னு நீங்களே சுய பரிசோதனை பண்ணிக்கோங்கய்யா...

ஆனா ஒண்ணு நிச்சயம் வரும் காலங்களிலே ஐடியயைப் பற்றிய விமர்சனங்கள் கூடுமே ஒழிய குறையாது...

அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா...?

பினாத்தல் சுரேஷ் said...

வெட்டிப்பயல்,

//இங்கு விலையை ஏற்றி விற்பவன் மேல் குற்றமேயில்லையா?//

ஆம். நிச்சயமாக இருக்கிறது, அவனுக்கும் ஒரு பகுதி!

பினாத்தல் சுரேஷ் said...

அருணா,

அருமையான கட்டுரை. //But we must remember that the marketplace does only one thing—it puts a price on everything. // இதான் சோகம் :-(

Premkumar said...

//இன்னும் கொஞ்சம் சிந்திக்க..... ;-)

http://news-service.stanford.edu/pr/2007/pr-gradtrans-062007.html//

Brilliant article. Thanks Aruna.

na.jothi said...

துட்டு வருதா, வர வரைக்கும் கமுக்கமா வேலை பாத்து துட்டு சேர்த்துட்டுப் போய்ட்டே இருக்கணும்.

துட்டு சேர்த்துட்டு போய்ட்டே இருந்தா
பிரச்சினை இல்லை அதை போட்டி போட்டு கொண்டு செலவு செய்வது தான் பிரச்சினை இருக்கிறது போட்டி என்பது தனக்கு நிகரானவர்களுடன் இருந்தால் தான் ஆரோக்கியம் அதை விட்டுவிட்டு 2000 ம் சம்பளம் 25 ரூபாய் parrys லிருந்து மௌன்ட் ரோடு கொடுக்க முடியும் என்றால் சாப்ட்வேர் / பணம் அதிகம் உள்ளவர்கள் 100 ரூபாய் கொடுத்தால் ஆட்டோ 100 ரூபாய்க்கு தான் கிடைக்கும் இது தான் இன்றைய உண்மை -jothi

பினாத்தல் சுரேஷ் said...

இளா, ரொம்பச்சரி. ஒரு பக்கம் மட்டும் வளர்ந்தா அதை வளர்ச்சின்னு சொல்ல மாட்டோம்.. வீக்கம்னுதான் சொல்லுவோம்!

அப்பா காசோ, சொந்தக்காசோ செலவழிக்கறதிலயோ, மால் போறதிலயோ எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை (இருந்துட்டா மட்டும்? னு கேக்காதீங்க).. அது மத்தவன் மனசுலே ஏற்படுத்தும் மாற்றங்கள்?

பினாத்தல் சுரேஷ் said...

அரை பிலேடு,

//மன அழுத்தம் என்பது சாஃப்ட்வேர் துறையில் இருப்பவரை வரை பார்த்து மற்றவருக்கு வருவதை விட அதே துறையில் ஒருவருக்கு மற்றவரைப் பார்த்து வரும் வாய்ப்பு அதிகம்.//

மறுக்கிறேன். 2000 ரூபாய்ச் சம்பளக்காரனுக்கு 40000 ரூபாய் பற்றி பொறாமை வருமா, 40000 காரனுக்கு 60000 பற்றி அதிகம் வருமா?

சொந்த அனுபவத்தில் ஒரு சிதறல் :-) கம்பெனியின் வருடாந்திர பெர்பார்மன்ஸ் அப்ப்ரெய்சலுக்குப் பிறகு, என் இன்கிரிமெண்ட், கூட வேலை செய்யும் சிலரை விட குறைந்துவிட, பெரிய அளவில் மூட் அவுட் ஆனேன். யாரைக்கண்டாலும் புலம்பித்தள்ளினேன், நீதி நியாயம் கேட்டேன் - ஒரு ஆளிடம் கேட்கும் வரை - அவனுக்கு அந்த வருடம் இன்க்ரிமெண்டே இல்லை எனத் தெரிந்தவுடன், என் வலி இவனுக்கு கோபம்தான் கிளப்பும் என அறிந்தேன். நீங்கள் சொல்வது இது போன்றதொன்றுதான்.

//இந்த சம்பளங்கள் அளவுகோள்கள் ஒரு அதிர்ஷ்டத்தை பொறுத்தது என்று தோன்றுவதுண்டு// நிச்சயமாக! வேறெந்த அளவுகோலும் என் கண்ணுக்கும் படவில்லை.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அரை பிளேடு, அதில் விவாதத்திற்கோ, மாறுபடவோ ஒன்றும் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது தன்னிலை விளக்கம் - உங்கள் பார்வையில் இருந்து. மற்றவன் பார்வைக்கு அந்தத் தன்னிலை விளக்கம் அர்த்தமற்றுப் போகலாம் அல்லவா?

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா.. அது தலைப்பு கலவரம் :-)

கொத்தனார்.. விலைவாசிய நிர்ணயிக்கிற சக்தி இல்லாம என்னவாம்?

//நமக்கு எவனாவது ஒருத்தனை மட்டம் தட்டிக்கிட்டே இருக்கணும். என்ன கெடுதல் நடந்தாலும் அவங்க பேரில் போடணும். சம்பள மேட்டரில் இந்த் ஐடி பசங்க, சமூக மேட்டரில் அவாள் - இப்படி.//

இப்படி ஒரே அடியில எல்லாத்தையும் ஒரே மூட்டையில போட்டுக் கட்டினா எப்படி? அதுக்கும் மேல பேஷிங்னு சொல்லிட்டு நோ விவாதம்னு ஓடிப்போறீரு. ஐடி பசங்களை அடிக்கறதா நோக்கம்? பிரச்சினைய முதல்ல ரெகக்னைஸ் பண்ணனும். அதைச் சொல்லத்தான் இந்தப்பதிவு.

பினாத்தல் சுரேஷ் said...

பாபா, மீண்டும் வெட்டிப்பயல், நன்றி.

TBCD, //ஐடியால, கண்ணுக்கு தெரியாம, பல சங்கடங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது..அது ஐடியில் உள்ளவர்களுக்கு தெரியாது...// இதைத்தான் நானும் சொல்லவருகிறேன். நன்றி,

பினாத்தல் சுரேஷ் said...

valar / jothi,

//25 ரூபாய் parrys லிருந்து மௌன்ட் ரோடு கொடுக்க முடியும் என்றால் சாப்ட்வேர் / பணம் அதிகம் உள்ளவர்கள் 100 ரூபாய் கொடுத்தால் ஆட்டோ 100 ரூபாய்க்கு தான் கிடைக்கும் இது தான் இன்றைய உண்மை//

சரியாச் சொன்னீங்க. ஐடின்னு மட்டும் இல்லாம, பணம் இருக்கவங்க எல்லாரும் இப்படி வளர்த்து விடுறாங்க.. ஆனா, விலைவாசிய நிர்ணயம் பண்றதுல தானும் ஒரு காரணின்னு ஒத்துக்க மாட்டாங்க :-))

இவன்....இளையவன் said...

//இவர்களில் பலருக்கும் பெற்றோர் என்றல் 55 வயதில் பதினைந்தாயிரம் சம்பளத்தை எட்டிப் பிடிக்காதவர்தானே என்ற இளக்காரமான எண்ணம் இருக்கிறது. வீட்டில் காபியைக் கூட போட்டுக்கொள்ளத் தெரியாமல் முப்பது வயதை எட்டியவர்கள் இருக்கிறார்கள் ("அம்மா சும்மாதானே இருக்கிறார்கள் செய்யட்டுமே")//

//விழித்திருக்கும் வேளையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் அலுவலகத்தில் இப்படி பல வயதில் வெவ்வேறுவிதமான பொறுப்புகளைக் கொண்டவர்களுடன் நெருங்கப் பழகும் வாய்ப்பு இருக்கும். இந்த சூழல் வாழ்வில் நமக்குப் பொறுப்பை நமக்கறியாமலேயே பாடமாக நடத்தும். ஆனால் மென்பொருள் நிறுவனங்கள் இளைஞர்களின் கூடாரமாக இருக்கின்றன.
கல்லூரி வளாகத்தின் நீட்சியாக அதைக் காட்ட வேண்டும் என்று உயரதிகாரிகளும் நினைக்கிறார்கள். //


சத்தியமான உன்மை!

20-21 வயசுல காலேஜ் முடிச்ச உடனே 40,000 ரூபா சம்பளம்.
நான் பார்த்த வரைக்கும் பல பேர் காலேஜ் வாழ்க்கையை அப்படியே தொடர்ராங்க

இவன்....இளையவன் said...

//இருபது வருடத்திற்குப் பிறகு இந்த தலைமுறை அந்த வயதிற்குத் தேவைப்படும் எதையாவது கற்றிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது//

Mechanical Engineering முடிச்சிட்டு துறை சார்ந்த வேலைக்கு தான் போகனும்னு பிடிவாதமா தேடிப்பாத்ததுல அதிகபட்சமா கிடைச்சது 2,300 ரூபா(2004-ல) பேரு மட்டும் Production Engineer.
ஒரு வருஷம் அதுலயும் இருந்தாச்சு (என்ன பன்ன Mechanical related job எதுவா இருந்தாலும் குறைந்தபட்சம் 2 வருஷ அனுபவாமாவது கேட்கிறான்). இதுல தீபவாளி பொங்கல்னு ஊரு பக்கம் போனா, கூட படிச்சவனெல்லாம் ரெண்டு மூனு computer course-அ படிச்சுபுட்டு 20-25 ஆயிரம்ன்னு பீட்டர போடுவானுங்க. நமக்கு வேற அட்வைச அள்ளி உடுவாங்க "நீயும் ஒன்னு ரெண்டு computer course-அ படி மாப்ள இல்லனா இதே 2,500 மீறி போனா 5,000 தான் வாழ்கை பூரா வாங்குவ"ன்னு. மனசுக்குள்ள "நீ மூடிகிட்டு உவ்வேலைய பாரு, எந்த வேலைக்கு போறதுன்னு எங்களுக்கு தெரியும்" னு கோபம் தான் வரும். கோபம் வந்து என்ன பன்ன, பணம் வரனுமே?
மாச கடைசில வர்ற சனி, ஞாயிறுல பிகர் "பாத்து ரொம்ப நாள் ஆவுது, வெளிய போலாமா, சினிமாக்கு போலாமா-ன்னு கேட்கும்போது "அய்யோ! மாச கடைசி, ஓவர் லோடு, டன்னேஜ் காட்டனும்னு" ஓவரா சீன்போட்டுட்டு ரூம்ல படுத்து தூங்கியிருக்கேன். பின்ன மாசத்துல கடைசி வாரம் அம்பது ரூவா பாக்கட்ல இருந்தாலே பெரிய விசயம்.
ஒரு வருஷம் column, beam, monorail, duct-னு ஓரளவுக்கு கத்துகிட்ட பிறகு குஜராத்ல Site Engineer - இங்க பரவால்ல 9,000 ரூபா சம்பளம், இதுக்கு காலைல ஒன்பது மணில இருந்து நைட் பத்து மணி வரைக்கும் சைட்-ல நிக்கனும். ஆறு மாசம் இருந்ததும், எங்கயோ எப்போவோ குடுத்த பயோ டேட்டா-வ பாத்து, 2-telephonic interview க்கு அப்புறம் அதுவரைக்கும் பாஸ்போர்ட்டே இல்லாத எனக்கு பாரின்ல Sales Engineer வேலை. ஓகோன்னு இல்லனாலும் நம்ம சாப்ட்வேர் சகோதரர்களை ஓவர்டேக் பன்னும் அளவிற்க்கு இப்போ சம்பளம்.

ஏழு மணியானா கட்டிங் சாப்பிட்டாத்தான் ப்லோ ஹோல்ஸ் இல்லாம வெல்டு அடிக்க முடியும்னு பிலாசபி பேசின வெல்டர், நீயெல்லாம் நேத்து வந்த பையன் எனக்கே வேலை சொல்றியா?-ன்னு கேட்ட காண்ட்ராக்டர், எடுத்துகிட்ட ஜாப்ல நடுவுல எதுவும் பிரச்சனைன்னா முகம் சுளிக்காம ஐடியா குடுத்து முடிச்சு கொடுத்த collegue, வெல்டிங் சரியில்ல, கிரைன்டிங் சரியில்லை, டைமன்சன் குறையுதுன்னு எல்லாத்துலயும் குறை சொல்ற 3rd party inspectors, படிச்சு முடிச்சுட்டு மூனு மாசம் வீட்டுல இருக்கும்போது ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி வேண்டாம்னு சொன்னாலும் கையிலயோ பாக்கட்லயோ நாற்பது ஐம்பது ரூபாய தினிச்சுட்டு போற அப்பா(நம்ம தம்மடிகிறது தான் ஊருக்கே தெரியுமே அவருக்கு மட்டும் தெரியாதா என்ன) , இப்படி ஒரு வேலைக்கு போகனுமா நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் வீட்டுலயே இரேன்னு வாரவாரம் புலம்பும் அம்மா, இவங்கிட்ட இனிமே எல்லாரும் ஹிந்தில தான் பேசனும் அப்பதான் சீக்கிரம் ஹிந்தி கத்துக்குவான்னு கன்டிஷன் போட்ட Site Incharge, உன்ன விட எனக்கு சம்பளம் அதிகம்னு எப்பவும் கின்டல் பன்னும் கிரேன் ஆப்ரேட்டர், தம் அடிக்கிறதுக்கு கம்பனி குடுத்துட்டே கொஞ்சம் ஹிந்தி கத்துகுடுத்த ஜீப் டிரைவர்(அப்பவும் முழுசா கத்துக்கல), தற்போதய பாஸ், ஜி.எம், கஸ்டமர்ஸ், கிளையன்ட்ஸ் ன்னு நான் பார்த்த பழகின எல்லாரும் ஒரு நூறு மார்க் இஞ்சினியரிங் சப்ஜெக்ட்.

‘கற்றது தமிழ்‘ படம் மாதிரி "கற்றது இயந்திரவியல்"னு படமே எடுக்கலாம்(சுரேஷ் இத பத்தியெல்லாம் எழுதமாட்டீங்களா?)

ஆனா சாப்ட்வேர் சகோதரர்களை பார்க்கும் போது கொஞ்சம் கவலையா இருக்கு. நான் பார்த்த வரைக்கும் இவங்க அனுபவமெல்லாம் டிஸ்கொத்தே, பப், டேட்டிங், வீக் என்டு, லாப்டாப், ஆர்குட், ஐ-பாட், ஆறு மாதத்திற்கு ஒரு செல்போன், ஆம்னி பஸ், ஐ-மேக்ஸ், கிரிடிட் கார்ட் இதை தாண்டி போகலையோன்னு தோனுது.
//நான் துபாயில் கை நிறைய் சம்பளம் வாங்குகிறேன் என்ற திமிரில் சென்னையில் உலா வந்தால் இந்த சாப்ட்வேர் பசங்க நம்க்கும் மேலே செலவு செய்கிறாங்க! கழுத்திலே ஓர் அட்டையை தொங்க விட்டுக்கொண்டு பக்கத்திலே அட்டை மாதிரி ஒரு பெண் ஓட்டிக் கொண்டு பணக்கார உணவு விடுதி, மல்டிப்ளக்ஸ் தியேட்டர், உற்சாக பானம், பறக்கும் வண்டி, தூள் கெளப்புறாங்க//

கரெக்ட்!

அதுலயும் இந்த பொன்னுங்க ஏதாவது ஒரு சின்ன பிரச்சனைன்னா கூட சூசைட் பன்னிக்கிறது நிறைய நடக்குது. வாங்குற 40,000 ரூபால 20,000 வீட்டுக்கு அனுப்பினா மட்டும் வாழ்க்கைக்கு தேவையான அனுபவமோ பக்குவமோ வராதுங்றது என்னோட கருத்து.

இலவசக்கொத்தனார் said...

//வீட்டில் காபியைக் கூட போட்டுக்கொள்ளத் தெரியாமல் முப்பது வயதை எட்டியவர்கள் இருக்கிறார்கள்//

ஐடி பசங்கதான் ஊர் ஊரா போக வேண்டியதா இருக்குன்னு நல்லா சமைக்கக் கத்துக்கறாங்க.

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலாரே,

என்னாத்த விவாதிக்கிறது. நான் எதாவது சொன்னா அது உம்ம மனநிலையில் இருந்து சொல்ல வந்தது. அடுத்தவனுக்கு எப்படி இருக்கும் அப்படின்னு யோசிச்சுப் பாரும்பீங்க. நாங்க அடுத்தவங்க எங்க நிலமையை யோசிச்சுப் பாருங்கன்னு சொல்லுவோம்.

இதெல்லாம் ஒரு ஸ்டீரியோ டைப்பிங் ஆகிப் போச்சு. அதான் நான் சொல்ல வந்தது.

அடுத்தவனுக்கு சம்பளம் குறைச்சல் அதனால நீ சம்பளத்தைக் குறைச்சுக்கோ என்பதோ அல்லது உனக்கான சம்பளம் அதிகம் என்பதோ என்னைப் பொறுத்தவரை ஒரு பதில்தான். அது அப்படியே வெளியில் சொல்ல முடியாது. அதன் நாகரீகமான வெர்ஷன் - தயவு செய்து போய்விடுங்கள்! ;-)

அப்புறம் அடுத்தவனுக்கு இன்கிரிமெண்ட் கிடைக்கலை ஆனா எனக்கு கொஞ்சமாவது கிடைச்சுதே எனச் சொல்லி இருந்தீங்க. என்னைப் பொறுத்த வரை எனக்கு 15% கிடைக்கணும் என நான் எதிர்பார்த்தேன் என்றால் நான் அதற்குத்தான் சண்டை போடுவேனே தவிர அடுத்தவனுக்கு 8%தான் கிடைத்தது எனக்கு 10% கிடைத்ததேன்னு சமாதானம் ஆக மாட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

அப்படி இப்படி வந்து 50 அடிச்சுட்டோமில்ல!

rv said...

என்னய்யா.. கலவரம் அதுக்குள்ள ஓய்ஞ்சிடுச்சா?

குசும்பன் said...

நல்ல விவாதம் பினாத்தலாரே!

மாதம் 40,000 சம்பளம் வாங்கி சென்னையில் எப்படி டா இருக்க முடியும் கல்யாணம் வேற ஆயிட்டா ரொம்ப கஷ்டமா போய்விடும். அதனால் துபாய்க்கு நான் வந்தா என்ன சம்பளம் கிடைக்கும்? என்னா விவரம் என்று கேட்டு சொல் என்று சொல்லும் நண்பனை நினைச்சு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை?

இல்லை அவன் இலக்கு என்னவென்று புரியவும் இல்லை.

சந்தனம் மிஞ்சினா... என்று ஒரு பழமொழி இருக்கு அதுபோல் தான்.

என்னை பெருத்தவரை விலைவாசி, வாடகை, இடம் விலை உயர்ந்ததுக்கு நாம் தான் காரணம்.

ACE !! said...

நல்ல அலசல்..வாழ்த்துக்கள்

Anonymous said...

Friends, Sorry for writing in English...

I am too from a software field...

I guess its not much changed from what it was in 1980's

In 1975 - 1995 its the people with goverment jobs who enjoyed such privillages as IT people do enjoy it now.

Dont ask me did people with goverment jobs went for Imax and Coffee day shops?. They didnt go coz it was not there by that time.
They enjoied all the privillages which was available by that time, coz they are the people who had money by that time.

Similar to that software industry people are enjoying some privilages which is available for us...
So i dont find any issues with it...

You will find some people always cribbing...In 1980's it was the non-goverment workers who were cribbing about Goverment workers earning lot of money...
In 2007 its the non-it workres who are doing that...
In 2020 somebody else might do that...Even I might join the list :)

Sanjai Gandhi said...

குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள் மாமோய்.. :))

( கொத்தனார் உங்களுக்கு முன்னாடியே பதில் எல்லாம் சொல்லிட்டாருனு சொல்றாங்களே.. மெய்யாலுமா?.. . யாரு சொன்னாங்கனு எல்லாம் கேக்கப்படாது.. :P ஏன்னா நீங்க தான் பஸ்ட் ஜெய்ச்சிருக்கிங்க.:P)

சிவபார்கவி said...

Yes... As we are also software people who were lodged with in government jobs. (Min Salary 8000 to Max Salary 14000 or 18000). And we unable to move from here.. since poor updation in industry.

சீனு said...

//சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள் - நான் தப்பு என்றுதான் சொல்வேன். இவர்கள் ஒரு ஊதுபொறிக்காகக் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் எதுடா சாக்கு என்று கலவரம் கிளம்புவதைக் கவனித்திருக்கலாம். உங்கள் பகட்டு இதற்குக் காரணமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.//

மிகச் சரி! ஐ.டி.யின் மிகப்பெரிய சாபமே இந்திய சமூகத்தில் தற்சமயம் நிலவும் அப்பர் மிடில் கிளாஸ் - லோயர் மிடில் கிளாஸ் இடைவெளி தான். இது தீர்க்கப்படவேண்டும்.

//இவர்களில் பலருக்கும் பெற்றோர் என்றல் 55 வயதில் பதினைந்தாயிரம் சம்பளத்தை எட்டிப் பிடிக்காதவர்தானே என்ற இளக்காரமான எண்ணம் இருக்கிறது. வீட்டில் காபியைக் கூட போட்டுக்கொள்ளத் தெரியாமல் முப்பது வயதை எட்டியவர்கள் இருக்கிறார்கள்//

நீங்க சொல்லுற மாதிரியெல்லாம் இல்லை அனானி. இது ஒரு கேவலமான கற்பனை.

//நான் துபாயில் கை நிறைய் சம்பளம் வாங்குகிறேன் என்ற திமிரில் சென்னையில் உலா வந்தால் இந்த சாப்ட்வேர் பசங்க நம்க்கும் மேலே செலவு செய்கிறாங்க ! கழுத்திலே ஓர் அட்டையை தொங்க விட்டுக்கொண்டு பக்கத்திலே அட்டை மாதிரி ஒரு பெண் ஓட்டிக் கொண்டு பணக்கார உணவு விடுதி, மல்டிப்ளக்ஸ் தியேட்டர், உற்சாக பானம், பறக்கும் வண்டி, தூள் கெளப்புறாங்க//

வயிற்றெரிச்சல்??? பெரும்பாலும் இப்படி தான். நமக்கு கூட ஊர் சுத்த பெண் இல்லையென்றால் இப்படித்தான் யோசிக்க தோணும்.

//"கண்ணா. இந்த உடம்புல உயிரே வாடகைக்குத்தான் இருக்கு. வீடு வாடகையா இருந்தா என்ன" அப்படின்னு மனசைத் தேத்திக்கொண்டேன்.//

:))))

பினாத்தல் சுரேஷ் said...

கணேஷ் பாபு,

உங்கள் இயந்திரவியல் அனுபவங்கள் பெருமளவு என்னுடையதை ஒத்தே இருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல!

//‘கற்றது தமிழ்‘ படம் மாதிரி "கற்றது இயந்திரவியல்"னு படமே எடுக்கலாம்(சுரேஷ் இத பத்தியெல்லாம் எழுதமாட்டீங்களா?)//

எழுதலாமே.. மூடு வரணும்..

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

ஆரம்பத்தில் இருந்தே ராங் சைடில வரீங்க :-)

சாப்ட்வேர்தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணம்னு நான் சொன்னனா? அப்படி நினைக்கிற ஒரு கூட்டம் இருக்கு, அவனுடைய பக்கம்தான் நியாயம்னு அவன் நினைக்கிறான், இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை ரெகக்னைஸ் பண்ணனும்னு மட்டும்தான் சொல்றேன்.

//என்னைப் பொறுத்த வரை எனக்கு 15% கிடைக்கணும் என நான் எதிர்பார்த்தேன் என்றால் நான் அதற்குத்தான் சண்டை போடுவேனே தவிர அடுத்தவனுக்கு 8%தான் கிடைத்தது எனக்கு 10% கிடைத்ததேன்னு சமாதானம் ஆக மாட்டேன்.//

என்னைப்பொறுத்தவரையும் அதேதான். நானும் சண்டைதான் போடுவேன் (போட்டுகிட்டுதான் இருக்கேன்) நான் சொல்லவந்த விஷயம் என் எழுத்துக்கோளாறா தெரியலை. என் பக்கம் நியாயம் இருக்கு.. ஆனா அது 8% வாங்கனவனுக்கு புரியாது, அவன் கிட்ட புலம்பினா அவனுக்குக் கோபம் வரக்கூட வாய்ப்பிருக்குன்னுதான் சொல்றேன்.

பினாத்தல் சுரேஷ் said...

ராமநாதன்.. தோடா. வந்துட்டாரு வேடிக்கை பாக்க.. கலவர் பூமியில காத்து வாங்கவா நினைக்கிறே?

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன்,

துபாய்க்கனவுகள் வேறு ரகம். அவற்றைப்பற்றி தனியாகவே எழுதலாம்..

இலக்கு என்னவென்று புரியாமல்தான் நிறையப்பேர், உங்கள் நண்பரையும் சேர்த்து, இருக்கிறோம்..

பினாத்தல் சுரேஷ் said...

அருண்,

//1980's it was the non-goverment workers who were cribbing about Goverment workers earning lot of money...
In 2007 its the non-it workres who are doing that...
In 2020 somebody else might do that...Even I might join the list :)
//

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள பிரச்சினையின் பரிமாணம், முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகம், மற்ற மாற்றங்களை விட அதிக வேகம்.

பினாத்தல் சுரேஷ் said...

பொடியன்..

அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க? ஒரு க்ளூ கூட கொடுக்காம மறைச்சு வச்சுகிட்டாரு சாமி..

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை.

சீனு,

//மிகச் சரி! ஐ.டி.யின் மிகப்பெரிய சாபமே இந்திய சமூகத்தில் தற்சமயம் நிலவும் அப்பர் மிடில் கிளாஸ் - லோயர் மிடில் கிளாஸ் இடைவெளி தான். இது தீர்க்கப்படவேண்டும்.// ஓவர்நைட்டில் முடியாது.. ஆனால், இதுபற்றிய சிந்தனை தொடங்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

Hariharan # 03985177737685368452 said...

சென்னையின் மாம்பலம் மாதிரியான மிடில்கிளாஸ் ஏரியாவிலே ஒரு சதுர அடி ரூ.5000 அளவுக்கு எகிறியிருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளில்.


ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் ஒரு கிரவுண்ட் நிலம் முப்பது லட்சம்!

ஐடியில் சென்னையில் மாதம் ஒன்றரை -இரண்டு லட்சம் சம்பளம் பத்து ஆண்டு பணி அனுபவம் உள்ளவருக்குக் கிடைக்கிறது.

பல்வேறு இதர துறையிலிருக்கும் பெரும்பான்மையினருக்கு இதில் பத்தில் ஒரு பங்கே கிடைக்கிறது.

ஐடி வேலைவாய்ப்பு Vs இதர வேலைவாய்ப்பு என்று பார்த்தால் 20:80 என்ற அளவில்.

சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் சொந்தவீடு வாங்கும் விகிதம் 50% .

மொத்த வேலைவாய்ப்பில் 20% ஐடியில் வேலை செய்வோர் 80% ரியல் எஸ்டேட் நுகர்வர்களாக இருப்பதால் இம்பாக்ட் நிறையவே இந்த மூன்று ஆண்டுகளில் தெரிகிறது.



காய்கறி விற்பவர்கள் கூட கழுத்தில் தொங்கும் ஐடி கம்பெனி பேட்ஜ் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் ரங்கநாதன் தெருவில் ஐடி அல்லாதவர் "ஸ்பெகுலேடிவ் விலையேற்றத்தை" எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது!

இதர ஐடி அல்லாத வேலை செய்வோர் தமது விதியை நம்பாவிட்டாலும் நியூட்டனின் மூன்றாவது விதியை நம்பத்தான் வேண்டும். What goes up will come down!

I wish the IT sector to prosper further but not at the cost of other sector.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அரை பிளேடு சைட்...
மன அழுத்தம் என்பது சாஃப்ட்வேர் துறையில் இருப்பவரை வரை பார்த்து மற்றவருக்கு வருவதை
==>
ரிப்பீட்டே...

நல்ல பதிவு.

அதிகம் சம்பளம் வாங்குபவன் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்வான்.
1980-களில் திருச்சி திருவெறும்பூரில், கடையில்,மீன் வாங்குபவர் பாரத மிகுமின் தொழிற்சாலைப் பணியாளராயிருந்தால்தான்,கடைக்காரர் மீனையே காண்பிப்பாராம்.

இப்போது மென்பொருள் துறையில் இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால்தான் இந்தக் "கலவரம்."

இப்பொதே மென்பொருள் துறையை "பழைய பொருளாதார(Old Economy)"த் துறைக்கு தள்ளிவிட்டு சில்லரை விற்பனைத்துறை,கட்டுமானத்துறைகள் "புதிய பொருளாதாரத்துறைக்கு(New Economy)" வந்துவிட்டதாம்.

இன்னும் சிறிது காலம் கழித்து,இதேபோல் அவர்களையும் சொல்லுவோம்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஹரன், சிவா.

tekvijay said...

i have only one question. i know quite a lot of IT guys who had come up from rural, not-so-rich backgrounds whose familes are now happy becos of their son\daughter earning multiple times than thier family income and a sudden rise in their economy. why no such single souls came up and said good things about the IT and its lucrative ness??? ithanaikkum avanga thaan inthula romba advantage\santhoshapattavanga, they were too needy and IT fulfilled thier dreams.

ஜமாலன் said...

பதிவும் பின்னோட்டங்களும் அருமை. நல்ல விவாதம். இந்த விவாதங்கள நுட்பமாக ஆய்வு செய்தால் நீங்கள் பேசும் இப்பிரச்சனையின் மையத்தை தொட்டு விடலாம் என நினைக்கிறேன்.

பொறுப்புடன் முன்வைக்கப்பட்டு அதே பொறப்புடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள பதிவு. தரவுகளை உள்ளடக்கிய பதிவு.

பாராட்டுக்கள்.

pudugaithendral said...

Read your article. It express my feelings also. The young guys r getting hand full of money in their early (beginning)stage itself, which leds them to spend lavishly making their life miserable.

kelvi ketapar illama thaalam mari pogum pengalum aangalum niranthullathu than indraya nam samuthayathin nilamai.

யோசிப்பவர் said...

// "கற்றது தமிழ்" போன்ற படங்கள் (படம் பார்க்கவில்லை), பலர் மனதுக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு தூபம் போட்டு பணம் பார்க்கும் முயற்சியாகவே கருதுகிறேன். அரைகுறை சைக்கோவாக இருப்பவர்களில் ஒருவர் இது போன்ற படங்களால் தூண்டப்பட்டாலும் அந்த இயக்குநர் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கருதுகிறேன்.
//

அந்த இயக்குநரின் மனநலம் பற்றியே, படம் பார்க்கும் பொழுது எனக்கு சந்தேகம் வந்தது

Anonymous said...

எனக்கு தெரிந்து வீட்டு விலை ஏற்றத்திற்கு சாப்ட்வேர் காரணம் இல்லை, அது உலக பொருளாதாரம் சம்பந்த பட்டது, அரபு நாடுகளின் பணம் வழக்கமாக அமெரிக்காவில் முதலீடு செய்யப்படும், ஆனால் இப்போது யுத்தம் காரணமாக மொத்த பெட்டுரோல் பணமும் பாதுகாப்பாக முதலேடு செய்ய அமெரிக்காவோ ஐரோப்பவோ சிறப்பானதாக இல்லை, இப்போது இந்தியா வளர்வது மட்டும் அல்லாமல் எதிர் காலம் சிறப்பாக இருப்பதால் மொத்த கோடியும் நம் நாட்டில் முதலீடு செய்யபடுகிறது, பொதுவாய் பா. ராகவன் படித்தால் தெளிவாக எழுதியிருப்பார். இது யாரும் பேச மாட்டார்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள், இதற்க்கு நாம் செய்யகூடியதும் ஒன்றும் இல்லை.

Anonymous said...

Hi,

Sorry for writing in English. Am a commerce graduate, currently working a Software company's Financial side.

I worked in a Finance company as accountant for 9 years and then moved to software company and is here for 5 years.

Some confession, my reason for shifting to this industry but same profession is because of the money involved and thanks to oppurtunity i got.

Some facts
1. after looking at the salary paid for Software people (which is actually paid from income earned not in Indian Rupee ) now the average paylevel have increased by everycompany because they too want quality workers and dont want to lose em. My company which paid earlier for my role as Assistant manager Rs.9000 is paying Rs.30000 plus annual bonus runs to 1.5 lakh I know this because my friend is still continuing.

2. People are confused between Software and BPO jobs, they are very different while the first one in simple term involves working on computers and give solutions and the BPO jobs are basically high cost countries transfering back office jobs (like data entry) to low cost countries for cheap labour. Since both have posh offices people just use the word software for everything.

3. Intersting point that many have observed it when the Rich class (Tata, Birla, money spinning politicians) are not taken here for consideration becasue they are very less in % terms. But when we want a country to grow and be a rich one that percentage will not be sufficient at all. Now with the advent of new generation technology workers when this percentage moving up many are unhappy itseems. It seems we are happy to be having a rich people very few and ordinary the maximum and not the otherway around.

4. When i started my career my fisrt job fetched me Rs.750 (in 1995) as salary for accounts assistant. Today after completing same BCom degree my neighbour son got an opening for 9K same role. She was saying she didnt crack walkin (which is unheard of in my time) and her friends who did crack got 12k to 15K. It shows that oppurtunities have increased a lot. I am not talking here the facts on GDP but simple facts.

5. The indirect jobs like securities, cab drivers , hotel cooks and other employments that these people spending habits created is plenty. When i was returning back from a year-end close work by 2 PM midnight last month, the cab driver who dropped me was telling that this development has helped him and his driver friends in bigway. Because despite the odd hours work, hez making 10K permonth which was never the case 5 years before.

Since I have seen both sides of life for a decent amount of time, it has certainly helped India as a country to propel. Its understandable to get negative feeling because as someone rightly said its hard to stomach when a person next going up where am standing still.

But getting that negative thinking to develop a societal animosity can only drag whole society down.
if people are stock market they all will already know that these negative effects are already very clear. As Technology company stocks are battered out now and the companies which are investing in building india are doing far better. Given that all the experts feeling there is a recession in US economy the days are not far that people are thrown out of these so called software companies in bulk and receive Pay cuts.

So there is enough to be happy about for both opposing and supporting.

So I added my two(????) may be 200 cents.

Thanks
Mani

 

blogger templates | Make Money Online