Dec 19, 2007

Wifeology - பைனல் எக்ஸாம்!

இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்க்ர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?

மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.


மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்


நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100


I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5x1 = 5)

1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே. (மனைவி)

2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________ (விளையாட்டு நிகழ்ச்சிகள்)

3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)

4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)

5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)



II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)

1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?

பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு

2. ஏன்?

பதில்: நம்மை மீறி எப்படி?

3. அபாய நண்பர்கள் யார் யார்?

பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்

4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?

பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.

5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?

பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.

III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 15

1. தாய்க்கும் தங்கமணிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?

2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.

3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமே செல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம் இல்லறத்தியல் படிக்க வரக்கூடாது..

4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்ன தொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?

5. ஐந்து நிமிட ரங்கமணி மின்னரட்டை, 3 மணிநேர தங்கமணி போன் அரட்டையை விட அதிக நேர விரயம். சரி. பண்ணிப்பாருங்க சார் தெரியும்.


IV. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். 5 x 4 = 20

தங்கமணி, ரங்கமணிக்கு குட்டி, கெட்டி என்று இரு குழந்தைகள். ஒரு திங்கட்கிழமை மாலை, குட்டியின் பள்ளியிலிருந்து ஆசிரியை அழைத்து, குட்டி ரொம்ப சுட்டித்தனம் செய்வதாகவும், கூட இருக்கும் பிள்ளைகளை வம்புக்கு இழுப்பதாகவும் புகார் கூறினார். அதே நாளில், கெட்டியின் ஆசிரியை, கெட்டி பாடத்தில் முதலாவதாக வந்ததாகக்கூறினார். அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரங்கமணியிடம் தங்கமணி இவற்றை விளக்கினார்.

அவ்வாறு விளக்குகையில்,

1. உங்கள் பிள்ளை என்று கூறப்படுபவர் யார்? (குட்டி)

2. என்னோட தங்கம் என்று அழைக்கப்படுவது யார்? (கெட்டி)

3. யாருக்கு ரங்கமணியின் குடும்ப குணங்கள் வம்சாவழியில் கலந்திருக்கின்றன? (குட்டி)

4. குட்டி செய்த குறும்புகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? (ரங்கமணி)

5. கெட்டி நன்றாகப் படிப்பதற்கு யார் காரணம்? (தங்கமணி)

V விரிவான விடையளி - 5 x 10 = 50

1. ராஜ்கிரண் தங்கமணிகளைப் பற்றி விவரித்தது எங்ஙனம்?

"எல்லா மனுசனும் சந்தோசமா மட்டும் இருந்திரக்கூடாதுன்னுதான் ஆண்டவன் ஆபீஸைப் படைச்சான். ஆபீஸ் பாஸ் பண்ற தொல்லைலே அவன் சந்தோசத்தை மறப்பான்.. ஆனா எல்லா நேரமும் ஆபீஸ்லேயே இருந்திற முடியாதுன்னுதான் தங்கமணியப் படைச்சான்..

பாடல் தொடர்கிறது.. தெய்வம் அது தாய்க்கும் கீழேதான் ரேஞ்சில் ..


"கொடுமை அது ஆபீஸு வேலைதான்..

என், தங்கமணியும் பாஸுக்கு மேலதான்.."

2. இடம் சுட்டி பொருள் விளக்குக : "நீங்க சொல்றதுதாங்க சரி"

இடம்: மனைவி, கணவனிடம் சொல்கிறாள்.

பொருள்: கணவன், மனைவியின் ஆசையை பூடகமாக (நூறு முறை சொன்னதன் பின்) அறிந்து, அவள் ஆசையைத் தன் ஆசை போல வெளியிட்டதால், மனைவி, பெருந்தன்மையுடன் கணவன் முடிவுக்குக் கட்டுப்படுகிறாள்.

3. தங்கமணிக்கள் எப்போது குறை சொல்லாமல் இருப்பார்கள்?

தங்கமணிக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது ஒரு தவறான பொதுமைப்படுத்தலே ஆம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரம் தூங்கும் போதும், 8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை. மீதி உள்ள சிறிது நேரத்தில் பேசுவது, காலத்தால் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதாகத் தோற்றமளிக்கிறது அவ்வளவே.

4. குறள் விளக்கம் கூறுக:

செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.

வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.

5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.

கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள் அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவி பேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால் முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயே மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
*************************************************************

விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன்.

* குறிப்பு = யாரு கண் பட்டுதோ, எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.


53 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

பரீட்சை எழுத வந்தா முதலிலேயே -100 அப்படின்னு மொத்தமா மார்க் போட்டு அப்பீட் ஆக்கிட்டீங்களே!!

// விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன். //

இது!!

//பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது. //

வளர்ச்சி பெறுவதற்கு முன் தற்காப்பு நடவடிக்கை என கடைசி வரி வரை பாடம் சொல்லித்தந்த பெனாத்தலார் வாழ்க!

திவாண்ணா said...

சமீபமாதான் ப்ளாக் பக்கம் வந்து இருக்கேன். முதல்ல பல இடங்கள்ல வெத்து சண்ட பாத்து நொந்து போயிட்டேன். இப்பதான் இந்த மாதிரி ஒன்னு ரெண்டு கிடச்சிருக்கு. வாழ்க!
முதல்ல எக்ஸாம் அட்டென்ட் பண்ணிட்டேன். அப்புறமாதான் பாடங்களை படிக்கணும்.!
ஆமா, இலவச கொத்தனாரும் நீங்களும் ஒரே ஆசாமியா? என்னைப்பத்தி ல ரெண்டுமே இருக்கே?

துளசி கோபால் said...

சிரிச்சுச்சிரிச்ச்சு இப்ப வயித்துவலி:-))))

கோபாலை இந்த வகுப்புக்குக் கட்டாயம் இன்னிக்கு அனுப்பணும்.

முதல்லே நான் வந்து பார்த்துட்டு, எதாவது சகுனி வேலை இருக்கான்னு செக் பண்ணிக்கணும் இல்லையா?

வடுவூர் குமார் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.
அருமையான ஓபன் புக் எக்ஸாம்.

ஜே கே | J K said...

எக்சாம் வர வந்து சிறப்பா பாடம் நடத்தி கொடுத்த பெனத்தல் வாத்திக்கு நன்றீ.

Unknown said...

அப்பிடியே ஒங்க ரீஜன்டு படத்தையும் புடுச்சு போட்டீங்கன்னா, உங்க இந்த பதிவுக்கு உண்மையான 'பின்/முன்' விளைவு எப்பிடி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.. :)

தங்கமணி தோளுக்கு பின்னேருந்து எட்டிப் பாக்கிறதால, இத்தோட அப்பீட் ஆய்க்கிறேன்..

புரட்சி தமிழன் said...

//செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.

வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.//

திருக்குறலுக்கு இப்படி எல்லாம் அர்த்தம் சொல்லமுடியுதுனு நெனைக்கும் போது திருவள்ளுவருக்கு 1330 அடியிலயே சிலை வைக்கலாம்பா

நல்லா படிச்சி பரீட்சையில நல்லா பினாத்தி 100 மதிப்பென் பெற்றதற்க்காக கேம்பஸ் interview ல செலக்ட் ஆகிட்டீங்க

Anonymous said...

பினாத்தல், பூரி கட்டையில் தவறுதலாய் இடித்துக் கொண்டு தலையில் பெரிய காயமாமே?இப்ப வலி எப்படி இருக்கு? உடம்ப பார்த்துக்குங்க.

கோபிநாத் said...

எல்லாம் நோட் பண்ணிட்டேன் தல ;))

நன்றி ;)

திவாண்ணா said...

அச்சச்சோ! கொத்தனார் யூஎஸ். நீங்க கல்ப்.
சரி சரி சாரி. ப்ளாக் ல ஜாயின்ட் போட்டுக்கலாம்னு தெரியாது. ஹிஹிஹி

சிரிச்சு சிரிச்சு வயித்துவலி வந்தாச்சு. மருந்து அனுப்பி வைங்க!

pudugaithendral said...

சிரிச்சுச்சிரிச்ச்சு இப்ப வயித்துவலி:-))))


repeat! repeat! repeat!

முரளிகண்ணன் said...

excellent

நாகை சிவா said...

:))

ரசிகன் said...

ஆஹா.. சூப்பரு.. பரிச்சைன்னா இப்பிடித்தேன் இருக்கனும்...
கலக்கிட்டிங்க...

மங்களூர் சிவா said...

//
J K said...
எக்சாம் வர வந்து சிறப்பா பாடம் நடத்தி கொடுத்த பெனத்தல் வாத்திக்கு நன்றீ.

//
repeateyyyyyyy

மங்களூர் சிவா said...

Kalakkal penaths. Thanks for lessons. Great work done by you.

மங்களூர் சிவா said...

//
தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.
//
Prevention is better than (wound) cure -ன்றது இது தானா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்தனார்..

//வளர்ச்சி பெறுவதற்கு முன் தற்காப்பு நடவடிக்கை என கடைசி வரி வரை பாடம் சொல்லித்தந்த பெனாத்தலார் வாழ்க!//

அது!!!

உங்கள் தொடர்ந்த உதவி இல்லாமல் இருந்திருந்தால் இப்பதிவுகள் பெருவெற்றி அடைந்திருக்காது..

இதை வெற்று வார்த்தையாகக் கூறவில்லை.. இங்கே தங்கமணியிடம் இருந்து தப்பிக்கும் ஒரு உபாயமாகவும் கூறுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க திவா.. ரொம்ப மகிழ்ச்சி, நம்ம ப்ளாக்குல தடுக்கி விழுந்ததுக்கு, அப்பால நல்லா இருக்கும்னு சொன்னதுக்கு,..

கொத்தனாரும் நானும் ஒரு ஆள்னு கழுகும் ஆந்தையும் குருவியும்கூட சொன்னதில்லையே..

ஓ அப்பால தெளிஞ்சுட்டீங்களா :-)

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா, வாங்க..

ஏற்கனவே சொன்னேன், எம் இயக்கம் இத்தகு கருத்தியல் ரீதியான வன்முறையை ஏற்காது என்று.

வன்மையாக மீண்டும் கண்டிக்கிறோம்.

நன்றி வடுவூர் குமார். ஹவுஸ் ஹவுஸ் டோர்ஸ்டெப்தான்.


நன்றி ஜேகே.

பினாத்தல் சுரேஷ் said...

தஞ்சாவூரான்,

விளைவுகளை எதிர்பார்க்கற மாதிரி தெரியுது, இது பின்னால் இருந்து எட்டிப்பார்க்கப்படுவது தெரிந்தபின் எடிட் செய்யப்பட்டதுதானே?

புரட்சி தமிழன்,

1330 அடியிலேயே, வச்சுடலாமே, நன்றி :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க அனானி, நீங்கதானே போன் பண்ண அனானி?

பூரிக்கட்டைக்கு ஒண்ணும் ஆகலை, கவலைப்படாதீங்க!

நன்றி கோபிநாத்.

புதுகைத் தென்றல்.. நல்லா சிரிங்க.. ஆனா ஏனோ, உங்க சிரிப்பு சத்தம் என்னவோ வில்லன் கூடாரச் சிரிப்பு சத்தம் மாதிரி கேக்குது.

திவா, உங்களுக்கு மேலேயே பதில் சொல்லியாச்சு இல்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முரளி கண்ணன், ரெண்டு மூணு எபிசோட்லே உங்களைக்காணோம்?

நன்றி நாகை சிவா.. சுருக்கமான சிரிப்பு??

ரசிகன், நன்றி.. இது மாதிரி வினாத்தாள்தான். நிஜ வினாத்தாள் உங்கள் மனைவி தருவார்.. அதில் பாஸ் பண்ணுங்க..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மங்களூர் சிவா.. இந்தத் தொடரில் உங்கள் தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி..

மதுமிதா said...

பெனாத்தலாரே முடியல‌:-)
எப்படிங்க இப்படி!

நேரம் ஒதுக்கறதையும் சேர்த்து சொல்லறேன்.

அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங்க பதிவைப் பத்தி பேசினோமே தெரிஞ்சதா விஷயம் உங்களுக்கு.

ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு பின்னாடி அம்மா அங்கே இருக்காங்களோ என்னவோ
திட்டுவாங்காம நல்லா இருங்க:-)

Sridhar V said...

//8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை.//

அப்படியா??? இந்த பாடம் நம்பற மாதிரி இல்லையே... ஹ்ம்ம்ம்

//வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்.//

பின்ன?... ஒரு வெற்றி பெற்ற கடும் உழைப்பாளி சொன்னாராம்... 'தோல்வி வரும்போதெல்லாம் நான் எங்கிருந்தாலும் என் மனைவியின் புகைப்படத்தை எடுத்து பாத்துப்பேன்... இத விட பெரிய துன்பம் என்ன வந்துடப் போகுதுன்னு மனசை உற்சாகாபடுத்திகிட்டு மேலே வேலையை தொடர்வேன்'. :-))

குட்டி / கெட்டி கேள்வி சூப்பர். ராஜ்கிரன் பாட்டுதான் ஹைலைட்.

சரி பட்டமெல்லாம் எதுவும் கொடுக்கறதுன்னா ரகசியமா இமெயில்லா encrypt பண்ணி அனுப்புங்க. போஸ்ட்ல கீஸ்ட்ல போட்டு தொலச்சிறப் போறீங்க. :-))

Anonymous said...

நீங்கள் 'இல்லறத்தியல்' என்று கூறிக்கொண்டு "இல்லாளியல்" அல்லவா கற்றுத்தந்துள்ளீர்கள்

Unknown said...

செம காமெடி!!!!!!!!!!
இத படிச்சதக்கு அப்பறம் கல்யாணத்த பத்தி நெனச்சாலே ஒடம்பு நடுங்குது!!!!

Anonymous said...

குருவே சரணம்!!
குருவே சரணம்!!!

இலவசக்கொத்தனார் said...

//நீங்கள் 'இல்லறத்தியல்' என்று கூறிக்கொண்டு "இல்லாளியல்" அல்லவா கற்றுத்தந்துள்ளீர்கள்//

யாருப்பா அனானி, முன்னப்பின்ன இந்தப் பக்கமே வந்தது இல்லையா? நம்ம கிளாஸில் படிச்ச மாணவர்கள் யாருக்கும் வராத / வரக்கூடாத சந்தேகம் வந்திருக்கே. இம்புட்டு கிளாஸ் அட்டெண்ட் பண்ணின பின்னாடி இல்லாளியல் வேற இல்லறத்தியல் வேற அப்படின்னு பிரிச்சுப் பார்த்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நீங்க தேறப் போறது இல்லை. ஐயாம் தி சாரி. நம்ம கிளாஸில் முதல் முதலா பெயில் ஆன மாணவனைப் பாருங்கடே!!

இலவசக்கொத்தனார் said...

////8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை.//

அப்படியா??? இந்த பாடம் நம்பற மாதிரி இல்லையே... ஹ்ம்ம்ம்//

நம்பும்படியா இருந்தா பாடம் எதுக்கு ஸ்ரீதர். இந்த மாதிரி கட்டங்களில்தான் நம்ம அட்வான்ஸ்ட் கிளாஸ் அவசியம். (பெனாத்தல், நீங்க சொன்ன மாதிரியே அடுத்த கிளாஸுக்கு ஆள் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.)

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும். அவங்க அனாவசியமா எனர்ஜி வேஸ்ட் பண்ண மாட்டாங்க. முதலில் ஆபீஸ் போகுது, போனாப் போகுதுன்னு விடுவாங்க. அப்புறம் கொஞ்ச நாள் போன் எல்லாம் பண்ணி என்ன போனே பண்ண மாட்டேங்கறீங்க. இன்னிக்குக் காலையில் ஏன் காபியில் சர்க்கரை குறைச்சல் அப்படின்னு எல்லாம் ஆரம்பிப்பாங்க.

ஆனா அது கொஞ்ச நாளில் போர் அடிச்சுப் போயி இந்தாளுக்கு போன் பண்ணறதை விட சரோஜாவிற்கோ லலிதாவிற்கோ போன் பண்ணி ரெண்டு குடும்பத்தார் தலையையும் உருட்டினாலே பொழுது போகும் அப்படின்னு புரிஞ்சு கிட்டு அதையே செய்வாங்க. நடு நடுவில் இன்னிக்கு காலையில் அது (நீங்கதான்) பாவம்டி ரொம்பவே திட்டிட்டேன் அப்படின்னு உங்களைப் பத்தியும் பேசுவாங்க. நீங்க ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்த உடனேதான் ஏன் இன்னிக்கு ஒண்ணேகால் செகண்ட் லேட் அப்படின்னு ஆரம்பிப்பாங்க.

இது தெரியாம என்னமோ அவங்களுக்கு 24 மணி நேரமும் உம்ம நினைப்பாவே இருக்கும் அப்படின்னு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க. பெனாத்தலார் சொன்னது 100% சரிதான்.

இலவசக்கொத்தனார் said...

//இங்கே தங்கமணியிடம் இருந்து தப்பிக்கும் ஒரு உபாயமாகவும் கூறுகிறேன்.//

அன்னிக்கு நான் போட்டுக்குடுத்ததுக்கு இன்னிக்கு பழி வாங்கலா. இருக்கட்டும். ஆனா ஒண்ணு எனக்குத்தான் First mover advantage!!

அதனால விடு ஜூட்!!

Anonymous said...

Please do continue in future too..!
Great work indeed!

Anbudan, anand

தருமி said...

//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங்க பதிவைப் பத்தி பேசினோமே தெரிஞ்சதா விஷயம் உங்களுக்கு.// - மதுமிதா.

//எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. // - பெனாத்தல்.

இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்னு நினைக்கிறீங்க ..?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மதுமிதா,

//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங்க பதிவைப் பத்தி பேசினோமே தெரிஞ்சதா விஷயம் உங்களுக்கு.// டிபிகல் பெண்ணீயக்குழுவா இருக்கே.. ஸ்பாட்டு வைக்கறதப்பத்தியா பேசினீங்க?

ஸ்ரீதர் வெங்கட், நன்றி. பட்டமா? அது நமக்கு நாமே திட்டத்துல கொடுத்துக்கறது இல்லீங்க. அம்மணி கிட்டே இருந்து வாங்கணும்.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

இல்லறத்தில் வேற யாரை சமாளிக்கறது கஷ்டம்? சொல்லுங்க?

வாங்க கமல், நன்றி.

வெயிலான் சிஷ்யர், நன்றி.

seethag said...

உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.

இதுதான் கலியுகம்...........

புரட்சி தமிழன் said...

//Seetha said...
உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.

இதுதான் கலியுகம்...........//

கலியுகமோ ஐஸ்கிரீம் யுகமோ இது அடிமையாகி அடிபடும் ஆண்களின் சுதந்திர போராட்டம். வெளியில் சொல்ல முடியாமல் வெப் ல யாவது சொல்லிக்கொள்ள எமக்கு கிடைத்த சிரு சுதந்திரத்தையும் பரிக்காதீர்கள். என்றைக்கு யாராவது எதிர் தரப்பு வாத்தை நியாம் என்று சொன்னார்கள். நாங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பூரிக்கட்டையாலும் ஜல்லி கரண்டியாலும் அடிவாங்குவாது இவை இரண்டும் எங்கள் கையில் இருந்தாலும் பிடிங்கி அடிப்பது தங்கமனிதானே.

சே பொலம்ப கூட விட மாட்டேன்றாங்கப்பா.

Anonymous said...

நம்ம வீட்டில் மட்டும்தான் என்று வாழ்க்கைய வாழ தொடங்கிய நேரத்தில், எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது என்று உணரும் பொது, சோகத்திலும் ஒரு சந்தோசம் வருகிறது.
அடி/கஷ்டம்/சங்கடம் எல்லாத்தையும் மீறி எழுதிய உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
நகைச்சுவை அற்புதம். பாராட்டுக்கள்.

நன்றி.

-அரசு

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் எக்ஸாம்....

என்னதான் தங்கமலை ரகசியம் இல்லன்னாலும், வாசகர்களின் பலவித பதிலகள் (இமேஜினேஷன்) கிடைத்திருக்குமே?. :)

புரட்சி தமிழன் said...

//மதுரையம்பதி said...
சூப்பர் எக்ஸாம்....

என்னதான் தங்கமலை ரகசியம் இல்லன்னாலும், வாசகர்களின் பலவித பதிலகள் (இமேஜினேஷன்) கிடைத்திருக்குமே?. :)//

தங்கமலை ரகசியம் இல்லைதான் ஆனால் இது தங்கமணி ரகசியம். இது தெறியாமத்தான எத்தனை பேர் தின்ம் தினம் அடிப்பட்டு கெடக்கானுவ

gulf-tamilan said...

sorry. i am sick!!! :))))

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. சரியாச் சொன்னீர்.
//இது தெரியாம என்னமோ அவங்களுக்கு 24 மணி நேரமும் உம்ம நினைப்பாவே இருக்கும் அப்படின்னு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.// தேவைப்படும்போது மட்டும்தான்!

நன்றி ஆனந்த்.

தருமி, என்ன சொல்ல வரீங்க.. ஸ்பாட்டு வைக்கதான் ப்ளான் போட்டாங்கன்னு நான் நினைச்சதைத்தான் நீங்களும் நினைக்கிறீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

//உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.//

நீங்க எல்லாம் வாயடைத்துப் போறதுதான் உண்மைக்குப் புறம்பான விஷயம் :-)

புரட்சித் தமிழன்,

//இரண்டும் எங்கள் கையில் இருந்தாலும் பிடிங்கி அடிப்பது தங்கமனிதானே.//

No silly feelings.. அழக்கூடாது.. நாங்கள்லாம் அழாம இல்லை?

அரசு,

//சோகத்திலும் ஒரு சந்தோசம் வருகிறது.// :-))(())(())*((

நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

மதுரையம்பதி,

உண்மைதான், நிறைய வேரியேஷன் கிடைத்திருக்கும், ஆனா பார்மட் எப்படின்றதுல ஒரு முடிவுக்கு வர முடியலை:-)

புரட்சித் தமிழன், அடிவாங்கும் இளைஞர் நிலை பொறுக்காமல்தானே இத்தொடர் வடிக்கப்பட்டது :-)

தமிழுக்கு 144 போட்டவரே, என்ன ஆச்சு, ஏன் சிக்?

திவாண்ணா said...

//கொத்தனாரும் நானும் ஒரு ஆள்னு கழுகும் ஆந்தையும் குருவியும்கூட சொன்னதில்லையே..//

அதுக்கெல்லாம் யோசிக்க தெஇரயாது கற்பனையும் கிடையாது. யோசிச்சாதானே குழம்பலாம்? குழம்பினாதானே தப்பா நினைக்கலாம்?
;-)

//ஓ அப்பால தெளிஞ்சுட்டீங்களா :-)//

ஆமாமாம்.

// திவா, உங்களுக்கு மேலேயே பதில் சொல்லியாச்சு இல்லையா?//

ஆச்சே! பரவாயில்லை நம்ம ரெவல்லே ஒத்தரு இருக்காரு. என் ஞாபக சக்தி இரண்டு நாள் தாங்கும். நீங்க நாலு பதில்லேயே....

திவா

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஹா ஹா ஹா
அதுக்குள்ள பதிவுத் தொடர் முடின்சிருச்சின்னு நினைச்சா கஷ்டமா இருக்கு

வடுவூர் குமார் said...

http://madavillagam.blogspot.com/2007/12/blog-post_22.html
மேல் விபரங்கள் இங்கு.

சதங்கா (Sathanga) said...

அனைதது பாடங்களும் மிக அருமை. கொத்தனார் சொன்னது போல அட்வான்ஸ் க்ளாஸ் எப்போது?

Aruna said...

சுரேஷ் ரொம்ப நல்லா பெனாத்தறிங்க....தினமும் சாப்பாடு ஒழுங்கா கிடைக்குதா?இல்ல ஹோட்டல் சாப்பாடா? இத்தனை நாளா இந்த ப்ளோக் பற்றி தெரியாம போச்சேன்னு வருத்தம்தான் போங்க !!!!
அருணா

Natty said...

ஹே பெனாத்ஸ்... வை ப்ளட்... சேம் ப்ளட் ;)

சரவண குமார் said...

ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானோ? ஆணா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும்.. மனசை தேத்திக்கிட்டு சமாளிக்க வேண்டியதுதான்..

சரவண குமார் said...

ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானோ? ஆணா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும்.. மனசை தேத்திக்கிட்டு சமாளிக்க வேண்டியதுதான்..

 

blogger templates | Make Money Online