Oct 23, 2004

வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்

எல்லாரும் வீரப்பனை கொன்றது பற்றி ப்ளாக்கித் தள்ளிவிட்டார்கள். என் பங்குக்கு சில பிரபல கவிஞர்களிடமிருந்து இரங்கல் கவிதைகளை வாங்கி இங்கே பிரசுரிக்கிறேன்.

முன்னாள் அ(று)ரசவைக் கவிஞர் கோலி:

அடைந்திருக்கலாமே நீ சரண்-
உன் மேல் இருந்த வழக்கு எல்லாம்
ஏறி இருக்குமேபரண்.

சுடப்பட்டதாலே நீ
வீணப்பன்..பிழைத்திருந்தால் தின்றிருக்கலாமே
மைசூர் கார பன்.

நீ செய்ததோ நூறே கொலை-
உன் உயிரா அதற்கு விலை?

கொன்றவரும் அடித்தார் மொட்டை--
விட்டிருந்தால் காடே மொட்டை!

நீ நிறுத்திவிட்டாய் உன் ஆட்டத்தை--
நானும் நிறுத்துகிறேன் என் பாட்டத்தை.

கவிச் சர்வாதிகாரி தங்கப் பவழம்:

நீ கண் திறந்தால் ஆனைகள் அதிரும் -
பொறை உன் கண் மூடியதால் அன்றோ
பூனைகளும் புது வீரம் கண்டன?

உன் ராஜராஜாங்கத்தில் சிறு நரிகளையும்
உலவ விட்டதனால் அன்றோ
எலிகளும் இன்று ஏரியல்-வ்யூ பார்க்கின்றன?

நீ கைமுஷ்டிக்குள் புயலை அடக்குபவன்..
வெறும் தென்றலா உன்னை புரட்டிப் போட்டது?

நீ காட்டையே கட்கத்தில் அடக்கியவன் -
சிறு செடியா உன்னை இடறி விட்டது?

யாரும் அடிக்க வர்றதுக்கு முன்னாடி வுடு ஜூட்!

3 பின்னூட்டங்கள்:

rajkumar said...

suresh,

excellent posts. first piece is very good

Rajkumar

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Rajkumar

Mahamaya said...

உங்கள் கவிதை மழையைப் படித்து அதனால் உண்டான inspiration பொங்கிப் பெருகி மெட்ராஸ் ரோடெல்லாம் ஒடுவதற்கும் அதன் விளைவாக நான் கிறுக்கப் போகும் கவிதைக்கும் (நெலைமை) நீங்கள்தான் பொறுப்பு!

இதோ:-

கட்கத்துக்கு முடி அழகு
வீரன் மீசைக்கு "டை"யழகு
அவன் நெற்றிக்கு குண்டழகு
படைக்கு பிரியாணி அழகு
மக்களுக்கு என்ன அழகு
ஓட்டுப்போட்டு அழும் அழகு!

எஸ்.கே
http://kichu.cyberbrahma.com/

 

blogger templates | Make Money Online