Jan 26, 2006

போலி எழுத்தாளருக்கு நன்றி (26 Jan 2005)

உலகின் முதல் voyeur-ஆல்தான் கதவு என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் முதல் திருடனால்தான் பூட்டும் சாவியும் கண்டுபிடிக்கப்பட்டன.

அடுத்தவர் அஞ்சலை எட்டிப்பார்த்து வம்புக்கு அலைபவர்களால்தான் அஞ்சலை மூடி சீலிடும் வழக்கம் ஆரம்பித்தது.

இவ்வளவு ஏன்? வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் எனக்குத் தெரியாமல் இருந்த எவ்வளவு விஷயங்கள் ஒரு தனி நபரின் பெர்வர்ஷன்கள் தெரிய வைத்திருக்கின்றன?

1. பிளாக்கர் வலைத்தளங்களில் பிளாக்கர் கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது, என் அறிவுக்கண்ணைத் திறந்தது இவரே.

2. வெள்ளைக்காரர்கள் நம் தமிழ்க்கவிதைகளைப் படித்துப் புல்லரித்து, தன்னிச்சையாக பின்னூட்டம் இடுவதை Word Verification செயல்படுத்தி நிறுத்த முடியும் என்பதும் இவர் ஆட்டத்துக்குப் பின்னால்தான் தெரிய வந்தது.

3. எழுதியவர் யார் என்று பார்க்காமல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கே அதிக கவனம் செலுத்த வேண்டிய - எல்லா விமர்சனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய உத்தமமான வழியை - இவர்தான் வலுக்கட்டாயமாக அனைவரையும் பின்பற்ற வைத்தார்.

4. ஐ பி, பொய் பி போன்ற கணினி சார்ந்த விஷயங்களில் என் சூன்ய ஞானத்தை அபிவிருத்தி செய்யக் கட்டாயப்படுத்தியவரும் இவரே.

5. பிளாக்கரில் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு இவர் செய்து வரும் பிரசாரம் மிகவும் வலுவானது. நேற்று வரை இதற்கு எதிராக இருந்த என்னையும் இதை உபயோகப்படுத்தும்படி செய்துவிட்டார்.

இப்படிப்பட்ட ஒரு "ஞானகுரு"வின் சில செயல்பாடுகள் மட்டும் எனக்குப் புரிவதில்லை.

1. ஜாதி இல்லை இல்லை என்றே "போராடினாலும்", குரிப்பிட்ட சிலரை மட்டுமே குறிவைத்துத் தாக்கி, வேரு ஜாதிகளை வெளிப்படையாகக் கூறுபவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது தன் துவேஷங்களை வெளிச்சமிடும் என்று உணராதது ஏன்?

2. தமிழ்மணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவு நீக்கப்பட்ட மறு நாளில் இருந்து தமிழ்மண நிர்வாகிகள் பெயரிலும் வந்து சேறு பூசும் செயல் தன்னைக்காட்டிக்கொடுத்துவ்டும் என்று இவர் அறிவுக்குப் புலப்படாதது ஏன்?

3. மட்டுறுத்தப்படும் பதிவுகளில் சும்மாவேனும் கூட தன் தூய தமிழ் பின்னூட்டங்களைப் போட்டு "போரட்டத்தை"த் தொடராதது ஏன்?

4. ஆரம்பத்தில் நான் பிளாக்கரை ஹேக் செய்வேன், ஈமெயிலில் உள்ளே புகுவேன் என்று ஆடிய ஆட்டம் எல்லம் இப்போது எங்கே போனது?

5. ஐ பி சேகரிக்கப்படும் வலைத்தளங்களில் இவர் நடமாட்டமே இல்லாதது ஏன்?

6. கே வி ஆர் விடுத்த Open Challenge-ஐக் எதிர்நோக்காமல் ஓடியது ஏன்?

இப்படிப்பல கேள்விகள்...

இன்று காலையில் விழித்த கொஞ்ச நேரத்தில், வேலைக்குக் கிளம்பும் முன் பின்னூட்டங்களைப்பார்க்கலாம் என்றால் முழித்ததே இந்த ஆபாசத்தில்! இதைப்பார்த்து பயப்படுவதும், நாமும் ஒரு போராட்டத்தைத் தொடங்குவதும் சேற்றில் கல்லடிப்பது போன்ற வீண் செயல்தான் என்றாலும் 30 - 40 பின்னூட்டங்களைப் பார்க்காமல் அழிக்க முடியாததால் காலை வேளை எரிச்சல் நாளையே கெடுத்துவிடுகிறது.

pervert, psycho, sadist போன்ற அத்தனை வார்த்தைகளும் இந்தக் கேடுகெட்ட ஜென்மத்தின் முன்னால் மென்மையான வார்த்தைகள் ஆகிவிடுகின்றன. இவர் யார் என்பது ஊரறிந்த ரகசியம். தண்டிக்கப்படப்போவதும் உறுதி என்றாலும், எப்போது, யாரால் தண்டிக்கப்படுவார் என்பது மட்டுமே தெரியாமல் இருக்கிறது.

பி கு:

Just in Case!!

என் பெயரில் வரும் எந்தப்பின்னூட்டமும் இதுவரையோ இனியுமோ

1. தனிநபர் தாக்குதலாக இருந்ததில்லை, இருக்காது.

2. ஜாதி, மத விஷயங்களில் நான் பட்டுக்கொன்டதும் கிடையாது, இனியும் அந்த எண்ணம் இல்லை

3. ஆபாசமான, உடல் உறவு சார்ந்த எந்த வார்த்தையயும் என் எந்தப்பதிவிலுமோ நான் இட்ட பின்னுட்டங்களிலுமோ பயன்படுத்தியது கிடையாது, பயன்படுத்தௌம் எண்ணமும் கிடையாது

4. என் பிளாக்கர் Profile என்:4928811 , என் ஒரே வலைத்தளம் பினாத்தல்கள். வேறு எண்ணோ, வலைத்தளமோ உருவாக்கும் திட்டம் இல்லை.

Jan 24, 2006

பெனாத்தல் - back with a bang!

கொஞ்ச நாளாய் யாருடைய திருஷ்டியோ பட்டு தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிவிட்டேன். ஒரு இடைவெளிக்குப்பிறகு எழுதுவதால், இப்போதைய டிரெண்ட் பார்த்து எழுத ஆசைப்பட்டேன்.பழக்கம் டச் விட்டுப்போனதாலும், ஒரே நேரத்தில் பல பதிவுகளைப் படித்ததாலும், இப்படி எழுதிவிட்டேன்.

மேலும் பயங்கரப்பசி நேரத்திலும் எழுதியதின் எபெக்டும் தெரியலாம்!

யாரும் கோவிச்சுக்கக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்!

இங்கே தேவைப்பட்ட அளவுக்கு ஸ்மைலீக்களைப் போட்டுக்கோங்க! :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

1. நான்கெழுத்தில் என் நாக்கிருக்கும்

நாக்கை ஊற வைக்கும் அனைத்துப் பதார்த்தங்களும் நான்கெழுத்திலேயே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

சாம்பார்
உப்புமா
பொங்கல்
ஆப்பம்
ஜாங்கிரி
புளிசோறு
கருவாடு
சிக்கன்
மட்டன்
கறிகாய்

இந்தப்பதிவுக்கு குறைந்த பட்சம் 400 பின்னூட்டம் வேண்டும்!

2. மேலும் சில கேள்விகள்

நான் ஏற்கனவே கேட்டிருந்த சில கேள்விகள் கேட்டிருந்தேன், அவற்றுக்கே இன்னும் பதிலைக்காணோம், இருந்தாலும் அடுத்த சில கெள்விகளைக்கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

1. பெனாத்தல் சுரேஷுக்கு பயங்கரப்பசி, இருந்தாலும் எதிரே இருந்த உணவு வகைகள் எதையுமே தொடவில்லை- ஏன்? (பதில் - எதிரே இருந்த உணவு போட்டோவில் இருந்தது)

2. வீட்டில் முட்டையே இல்லை.. இருந்தாலும் மிஸ்டர் எக்ஸுடன் இருந்த மிஸ்டர் ஒய் ஆம்லெட் போட்டார். எப்படி? (பதில் - மிஸ்டர் எக்ஸ் ஒரு கூ"முட்டை")

3. சமயல்கார மாமாப்பயலுவ

துபாய் கராமாவில் இருக்கும் ஹோட்டல்களில் சமையல் செய்யும் ஒருவன் நான் வருகையில் என்னைப்பார்த்துக் கண்ணசைத்தான் - அதற்கு அர்த்தம் - என் ஹோட்டலில் எல்லா வகை உணவும் இருக்கிறது, வருகிறாயா? - என்பதுதான்.

எனக்கு உடம்பெல்லாம் கூசியது.. இப்படி குளிக்காத ஒருவன் என்னைப்பார்த்து இப்படிக்கூப்பிட்டுவிட்டானே என்று.

அவனை அப்படியே பிடித்து உலுக்கி 'ஏண்டா குளிக்காம இருக்கீங்க? இப்படிச் சமைச்சதை வாடிக்கையாளருக்குக்கொடுக்கற கேவலமான தொழிலைச் செய்யறீங்க"ன்னு கேட்க வேண்டும் போல் இருந்தது.

இப்படி சுகாதாரமே இல்லாத சமையல்காரரைப் புகைப்படம் எடுக்க முயன்றேன், இருட்டிலேயே அவர்கள் வாழ்வதால், புகைப்படம் பதிவாகவில்லை.

4. ஏழும் ஏழும் பதினாலு

பாரதியார் தன் வீட்டில் சாப்பாடு இல்லாதபோதும் கவிதை எழுதினார். சாப்பாட்டுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. (அவ்வளவுதான் பதிவு)

5. இஸ்தான்புல்லும் இஞ்சியும்

முன்பு இஸ்தான்புல்லைப்பற்றி எனக்கு ஒரு பெரிய அபிப்பிராயம், பிம்பம் விழுமியங்கள் எல்லாக் கண்றாவியும் இருந்தன.அங்கு கிடைக்காததே இல்லை என்ற ஒரு பிம்பம். இன்று அது என்னிடம் இல்லை.

இஞ்சி சார்ந்து சமைப்பவர்களுக்கு இஸ்தான்புல்லில் எந்த உதவியும் கிட்டப்போவது இல்லை. இதை இத்தாலிக்குச் சென்றபோது உறுதிப்படுத்திக்கொண்டேன்.

தங்கள் சுயநலம் சார்ந்த பூண்டு, மிளகாய்ப்பொடி சார்ந்த சமையல்களையே கஷ்டப்பட்டேனும் அனைவரும் முன்னிறுத்துகிறார்கள். அது சரி, மிளகாய்க்காரத்துக்கு விக்காதவர் யார்?

இஞ்சியின் இனிமை அறியாமல் கிடைத்ததை உண்பவர்களாலேயே நிரம்பி உள்ளது இஸ்தான்புல். காரம் கிடைக்காத வாழ்க்கைச்சூழல் அவர்களுடையது.

சிலர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு இஞ்சியுடன் சமையல் செய்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் இஞ்சி தின்னாத குரங்குகள்தான், கோமாளிகள்தான்!

சைவம் அசைவம் என எந்த சாப்பாட்டு வகையானாலும், இஞ்சி இல்லாத சமையல் குப்பைக்குப் போக வேண்டியதுதான்! இஞ்சிக்காரம் பிடிக்காதவர்கள் அனைவரும் புண்ணாக்கையே காரம் எனச்சொல்லக்கூடிய புண்ணாக்குகள்தான்!

மீண்டும் ஸ்மைலி:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Jan 15, 2006

நவீன கவிதை 15 Jan 2006

நவீன கவிதை எழுதும் ஆசை என்றுமே பினாத்தலாருக்கு உண்டு. நவீன கவிதைக்கான இலக்கணங்கள்(நன்றி: ஆஸீப் மீரான்) கவிதையைவிட, கவிஞனைப்பற்றியே அதிகம் இருக்கிறது. கவிதை செய்யப்படக்கூடாது, அது தன்னைத்தானே எழுதிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து, கவிதைக்கு அர்த்தம் சொல்லக்கூடாது, யார் என்ன கவிதை எழுதலாம் என்று ஆயிரத்தெட்டு விதிகள்.

என்றாலும், இன்றைய விதிமீறல்கள்தான் நாளைய விதிகளை உருவாக்கும் என்பதால், தமிழுக்கு மேலும் ஒரு கவி அலங்காரத்தை சமர்ப்பிக்கிறார் பினாத்தலார்!


கவிதையும் காப்பியும் ஒன்றுதான்

அதிகாலை பொடி அழுத்தி
கறந்தபாலுக்காய்க் காத்திருந்து
இலக்கணம் மாறாமல் அசை பிரித்து சீர் பிடித்து
அம்மாவின் கை மரபுக்காப்பி

அவசரம் ஆட்டுவிக்க
பாலின் மேல் பொடி தூவி
இலக்கணங்களைக் கட்டுடைக்கும்
புதுக்காப்பி

சிக்கனம் கருதி சிக்கரி போட்டு
ஜனத்தை மயக்க மணத்தை சேர்த்து
சினிமாப்பாடல் போல ஓட்டல் காப்பி..

இருந்தாலும்..
தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதையைப்போல
காபி தன்னைத்தானே போட்டுக்கொண்டதில்லை எந்நாளும்..

Jan 14, 2006

பாசக்கிளிகள் promo (14 Jan 06)

பொங்கல் ரிலீஸ் படங்களில் ஆதிக்கும் பரமசிவனுக்கும் போட்டியாம்.. விகடனில் இருந்து தினமலர், வலைப்பதிவுகள் வரை அனைவரும் இந்தப்படங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர்.

பாசக்கிளிகள் என்று ஒரு காவியம் திரைக்கு வருவதை இவர்கள் எல்லாரும் எப்படி மறக்கத் துணிந்தனர்? சற்று முன்வரை (ஐந்து பத்து ஆண்டுகள் முன்னால்) கொடிகட்டிப்பறந்த அனைத்து மூத்த ஓய்வுபெற்ற கலைஞர்களும் தங்கள் உறக்கம் கலைந்து புத்துணர்ச்சியோடு எதிர்பார்க்கும் திரைப்பாடம் (எழுத்துப்பிழை அல்ல) இது. சன் தொலைக்காட்சியே பெரும் ஆதரவு தராததால்தானே இந்தப் பாராமுகம்? சன் தொலைக்காட்சி மட்டும் தங்கள் அனைத்து விற்பனைத்தந்திரங்களையும் பிரயோகித்திருந்தால்??

சன் செய்திகள்..

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழகமே பேராவலுடன் எதிர்பார்த்துள்ளது. அதற்குக்காரணம் பொங்கல் பண்டிகை மட்டுமல்ல, கலைஞரின் பாசக்கிளிகள் படம் திரைக்கு வருவதும்தான், இது குறித்து ஒரு சிறப்புக்கண்ணோட்டம்..

திரை அரங்கு வாசலில் நிற்பவர்களைக்காட்டியவாறு..

பெரும் எதிர்பார்ப்புகள், கனவுகள்- இவற்றோடு தமிழ்த்திரை உலகமே புத்துயிர் பெற்றுக்காணப்படுகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் வருகிறது, இந்த ஆண்டில் என்ன சிறப்பு என்று மக்களைக் கேட்டபோது -

கே கோவிந்தன், திரை ரசிகர் - இந்த வருஷம் பொங்கல்தான் சார் எங்களுக்கு தீபாவளி. கலைஞர் அன்னிக்கு ஒரு மனோகரா கொடுத்தார், அதுக்கப்புறம் இன்னிக்குதான் பொங்கல் மீண்டும் களை கட்டுது.

பின் குரல் - மகிழ்ச்சியில் இவர்கள் ஆனந்தக்கூத்தாடினாலும், இவர்களுக்கும் சில குறைகள் இல்லாமல் இல்லை..

பழனியப்பன், பாதிக்கப்பட்டவர் - இங்கே 5000 பேரு நிக்கரோம், ஒரே ஒரு போலிஸ்காரர்தான் சார் இருக்காரு. இவ்வளவு ஜன வெள்ளத்தை எப்படி சார் ஒரு ஆளாலே கட்டுப்படுத்த முடியும்?

பின் குரல் - திரை உலகுக்கோ இது ஒரு இனிப்பான பொங்கல் என்பதில் சந்தேகம் இல்லை..

குமாரசாமி, தியேட்டர் உரிமையாளர் - ஏறத்தாழ இருபது வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் என் ஹவுஸ்புல் போர்டு தொங்குது, பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு..

பெரியகருப்பர், நடிகர் - தமிழ்லே வசனம் பேசி நடிக்கணும்னு எனக்கு இருந்த ஆசை, இந்த 25 ஆண்டு திரை வாழ்க்கையிலே இப்போதான் நிறைவேறி இருக்கு.

பின்குரல், இப்போது முகத்துடன் - ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் இப்படியே மலர்ந்தால் அனைவரின் முகத்திலும் ஆனந்தம் பெருகும், நாடு சிறக்கும், சன் செய்திகளுக்காக, திரை அரங்கிலிருந்து நா பெரிய சாமி.

பொங்கல் சிறப்பு பட்டி மன்றம், கிளிப்பிங்

ராஜா, பேச்சாளர் - நம்ம சம்சாரம் எப்பவும் அவிக வீட்டு மனுசங்கன்னா ஒரு தனி உரிமையோடதான் பாப்பாங்க, இப்போ என்னடான்னு கேட்ட அவிக அண்ணனுக்கு நான் பத்து சவரன் மோதிரம் போடணுமாம் - ஏன்னு கேட்டாக்க இது "பாசக்கிளிகள் ஸ்டையில்"னு கழுத்தை வெட்டறாங்க..

பலத்த கரகோஷம்.

திரை விமர்சனம்

வணக்கம் நேயர்களே, இந்த வார திரை விமர்சனத்தில் நாம் பார்க்கப்போகும் படம் , கலைஞரின் "பாசக்கிளிகள்".

கிளிப்பிங்

வசனம் என்பது விசனமாக இருந்த தமிழ் திரைப்படங்களில், வசனம் என் வசம் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் கலைஞர்.

கிளிப்பிங்

கதை என்பது சதையோ உதையோ அல்ல, அது திரைப்படத்துக்கு விதை என்பதை பாசக்கிளிகள் காண்பித்திருக்கின்றது.

கிளிப்பிங்

ரசிகர்கள் குரல்

வசனம் சூப்பர்!
827 முறை பார்க்கலாம்
பிரபு ஆக்டிங் சூப்பர்

கிளிப்பிங்

மொத்தத்தில், வேஷக்கிளிகளின் முகத்திரையைக் கிழித்து அவை மோசக்கிளிகள் என்று நிறுவுகிறது இந்த பாசக்கிளிகள்.. மீண்டும் திரை விமர்சனத்தில் சந்திப்போம், நன்றி.

எல்லா நிகழ்ச்சிகளின் நடுவிலும் விளம்பரம்..

பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..

கவர்ச்சியா ஆபாசமா - விளக்குகிறார், நவ்யா நாயர்

நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடிச்ச படம் இதுதானுங்கோ - கூவுகிறார், பிரபு

கதை, திரைக்கதை எழுதி வசனத்தில் குளிப்பாட்டுகிறார் கலைஞர்..

தியேட்டரில் படம் பார்க்க வரும் அனைவருக்கும், அவர்கள் டிக்கட் விலைக்கு சமமான அளவில், சக்தி மசாலா வழங்கும் எலிக்கறி மசாலா, சிக் வழங்கும் சிக் எண்ணை, ரீகல் வழங்கும் கறுப்புத்துணிகளுக்கான சொட்டு நீலம் அனைத்தும், இலவசம்!!

இது தவிர, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, ஒரு மாதத்துக்குத் தேவையான எலிப்பாஷாணம்!

பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..

டாப் டென் மூவீஸ்

இந்த வாரமும் சிறப்பான முதல் இடத்துலே இருக்கு, பாசக்கிளிகள்.

அண்ணனா, பெரிய அண்ணனான்னு கேட்டு தங்கை பண்ற வாக்குவாதம், முதல் முறையா விதவைத் தாயார் வேஷத்துலே மனோரமா, பல படங்களின் வாய்ப்பை நிராகரித்து விட்டு இதில் நடிக்க வந்த முரளி என்று அனைவரும் தங்கள் பங்கை சிறப்பா செஞிருக்காங்க என்றாலும், கலைஞரின் வசனத்தை கேட்பதற்காக்வே தியேட்டருக்கு எத்தனை முறை வேணும்னாலும் போகலாம் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்..

பாசக்க்ளிகள், இது மோசக்கிளிகள் அல்ல, நேசக்கிளிகள்.
-------------------------------------------------------------
எதோ சன் டிவி இந்தப்படத்தை சீரியஸ்ஸா எடுத்துக்கலையோ, நாம பொழைச்சோம்.

Jan 12, 2006

இதனால் சகலமானவர்களுக்கும் 12 Jan 06

மற்ற ஊடகங்களாலும் வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்தியா டுடே - சில தவறான தகவல்கள் இருப்பினும் வலைப்பதிவுகளுக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்து ஆரம்பித்து வைத்தது.

தினமலர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தினம் ஒரு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்தி வருகிறது; (இன்னும் பினாத்தல்கள் அதன் கண்ணில் படாமல் இருக்கிறது:-()

கல்கியும் அவ்வப்போது வலைப்பூக்களில் இருந்து சில துளிகளைத் தெளிக்கிறது.

விகடன் குழுமம் அறிமுகம் என்று செய்யாவிட்டாலும், வலைப்பதிவுகளைப் படிக்கிறது என்பதற்கு அவன் விகடன் ஒரு சான்று. (இன்னமும் விகடனுக்கு யார் இந்தப்பதிவைப் பற்றி சொல்லி இருப்பார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை)

இதன் அடுத்த கட்டமாக, நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான சிதம்பர ரகசியம் தொடரில், கதாபாத்திரம் ஒருவர் வலைப்பதிவு வைத்திருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அவருடைய (கதாபாத்திரத்துடைய) வலைப்பதிவின் பெயர் அறைகூவல்-ஆம்
குறிப்பு - சென்னைவாசியின் அனுபவச்சிதறல்கள் (அடங்குடா மவனேன்னு உள்ளே குரல் கேக்கலை போலும்)

பதிவுக்கு உள்ளே இந்த விமர்சனத்தில் இருந்து சில வரிகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவென்றால், அவரும் கவனம் பெற்ற பதிவுகளாக - நம்பிக்கை (கவிதை), இரு சம்பவங்கள் (சிறுகதை) மற்றும் அவன் விகடன் - ஐக்குறிப்பிட்டிருக்கிறார்..

அந்தப்பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களில் என்றென்றும் அன்புடன் பாலா, தருமி, படித்துறை மற்றும் சுரேஷ் (Suresh - பினாத்தல் இல்லை!) ஆகியோரும் அடக்கம்..

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் --

1. வலைப்பதிவுகள் பல்வேறு தளங்களாலும் கவனிக்கப்படுகின்றன - எனவே, சற்றுப் பொறுப்புடன் எழுதுவது அவசியமாகிறது.

2. தங்கள் தள எழுத்துக்கள் வேறு ஊடகங்களால் எடுத்தாளப்படுவதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் (நான் இல்லை!) காபிரைட் உரிமைகள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவசியம், creative commons license பற்றி பத்ரி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் (சுட்டி கிடைக்கவில்லை).

3. (குசும்பு) சுரேஷ் பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு விளம்பரம் இலவசம்!

Jan 9, 2006

உள் நோக்கம் இல்லாத வசனங்கள் 09Jan06

பினாத்தலார் தன் பங்குக்கு சில உள்நோக்கம் இல்லாத வசனங்களை அளிக்கிறார். இந்த வசனங்கள் அவர் வீட்டு அரபி வாட்ச்மேன் எழுதியது, எனவே, உள்நோக்கம் சற்றும் இல்லாதது என உறுதியும் அளிக்கிறார்.

1. டேய் எங்கேடா போயி சுத்திட்டு வரே? அந்த கருணா கூட சேராதேன்னா கேட்கறயா? இதுலே விஞ்ஞான முறைப்படி பொய் வேற சொல்லறே.

2. உன் பிரெண்டு ஜெயா பணக்காரிடீ, அவளுக்கு ஒரு ரூபா சம்பளம் கட்டுபடியாகும்.. நமக்கு ஆகுமா?

3. சொன்ன பேச்சை கேக்கறயாடா நீ? சீனிவாசன் உன் நண்பன் தானே? என்னிக்காவது அவன் அன்னையோட பேச்சை தட்டி இருக்கானாடா?

4. யாரு முருகதாஸா பிளாட் செகரட்டரி? அவர்தான் தன் குடும்பமே பதவிக்கு வராதுன்னு சொன்னாரே?

5. பெரியண்ணன் தான் நாட்டாமையா வரனுமுன்னு பஞ்சாயத்துலே "ஓ"ன்னு அழுதாரே கோபால் - அவர் வீடு இங்கே எங்கே இருக்குங்க?

6. அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு அண்ணன் கூட தகறாரு பண்ணாதே.. திருபுவனம் ராமமூர்த்தி மாதிரி.

7. தங்கச்சி மேல பாசமே கிடையாதா அண்ணா உனக்கு? பக்கத்துத் தெரு திருமாவைப்பாரு.. அவன் தங்கச்சி தமிழரசிய எப்படி பாதுகாக்கிறான்னு!

8. ஆபீஸர் மோகன் ரொம்ப நல்லவருங்க.. என்ன, அவங்க உறவுக்கார அம்மா - அதான் ஒல்லியா அவங்க வீட்டுலே இருப்பாங்களே - அவங்க சொல்லறதை மட்டும்தான் கேப்பாரு ..

9. ஆமாம்.. அம்மாவுக்கு கோயிலுக்குப்போக கஷ்டமா இருக்குன்னு பக்கத்து வீட்டையே இடிச்சு கோயில் கட்டிட்டுதாம் தம்பி அஷோக்கு!

10. வகுப்புக்குள்ளே அமைதியா இல்லாம எல்லாரும் கூச்சல் போட்டுகிட்டே இருந்தா வாத்தியார் சோம நாதன் என்னதான் பண்ணுவாரு பாவம்!

பி கு: குஷ்பூ மேட்டர் ஓய்ந்துவிட்டு, அரசியல் ரகளைகளுக்கு இன்னும் கொஞ்சம் காத்துக்கொண்டிருக்க வேண்டிய வேளையிலே நமக்கும் பொழுது போக வேண்டாமா?

Jan 6, 2006

சிவாஜி2.0 revised Premier show (flash)

ப்ளாஷ் சற்றே திருத்தப்பட்டிருக்கிறது. வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சந்திரமுகியின் அபார வெற்றி, அன்னியனின் அபார வெற்றி இரண்டுக்கும் காரணமானவர்கள் இணைந்து கொடுக்கும் படம் என்பதால் ஆர்வம் அதிகரித்துவிட்டாலும், பயமும் அதிகமாகிவிட்டது.

நிஜமா பொய்யா எனத்தெரியாத ஒரு கேள்விப்பட்ட கதை. பிஷன் சிங் பேடி தன் மகனுக்கு கவாஸ்பேடி எனப் பெயர் வைக்க முனைந்தாராம். ஏன் எனக்கேட்டதற்கு அப்போதுதான் அவன் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேனாகவும் பேடி போன்ற பௌலராகவும் வருவான் என்றாராம். நடந்தது என்ன? மகன் வளர்ந்தான், பேடி போன்ற பேட்ஸ்மேனாகவும் கவாஸ்கர் போன்ற பவுலராகவும்!

இதில் படத்தைப் பற்றி வெளிவரும் தகவல்கள் இன்னுமே பயமுறுத்துகின்றன. பல பழைய படங்களின் பிரபல கெட்-அப்களில் ரஜினி தோன்றுவாராம். கெட்-அப் மட்டும்தானா, கதையுமா என்று தெரியவில்லை!

எனவே, ரஜினியின் பழைய பட ஃபார்முலாவையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டுக்குலுக்கியதில், இந்தக்கதை(?!) கிடைத்தது!

ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக!

சற்றுப் பெரிய கோப்பாக அமைந்துவிட்டதால் இரண்டு பாகங்களாகக் கொடுக்கிறேன். அதற்கும் மன்னிக்கவும்.

இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு கருத்து சொல்லாம போயிடக்கூடாது! ஆமாம்.






இரண்டாம் பாகம் இங்கே துவங்குகிறது:





அனைவரின் வசதிக்காக மொத்த வசனங்களும் இங்கே:

காட்சி 1 - பாடல்:

இந்தியா என்னாலே எழுந்து நிக்கும் பாருடா
இமயத்துக்கு என்னைப்பார்த்தா வேர்த்திருக்கும் பாருடா
ஆந்திரா என் முன்னாலே அடங்கி நிக்கும் பாருடா
ஒரிஸ்ஸா என் சொல்லாலே ஒடுங்கி நிக்கும் பாருடா!

காட்சி 2 - ஜோதிட நிலையம்:

னதியா: ஜோசியர் ஐயா, இது என் மகன் சிவாஜியோட ஜாதகம்.. கொஞ்சம் பாத்து சொல்லறீங்களா?

ஜோசியர்: ஆஹா இதுதாம்மா ஜாதாகம்..

ஆயிரம் கோடி அதிசயம், அமைந்தது சிவாஜி ஜாதகம்!

இந்தக் குழந்தை எப்படியும் இன்னும் 20 வருஷத்துல பெரியவனா மாறிடுவான்

ஆனா எவ்வளவு பெரியவனா ஆவான்னு என்னாலே உறுதியா சொல்ல முடியலே

ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு துறையிலே பெரிய ஆளா வருவான்..

காட்சி 3: கல்லூரி

பிரகாஷ்: ஹாய் செல்லம்.. சீனியர மதிக்காம கிளாஸுக்குல்லே எல்லாம் போகக்கூடாது.. நில்லு நில்லு நில்லு

ரஜினி: தோ பார் கண்ணா.. என் வழி தனி வழி.. மோதப்பார்த்தே காணாமப்போயிடுவே..

பிரகாஷ்: அதெல்லாம் நீ எப்படி சொல்லலாம்? தப்பு தப்பு தப்பு.. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது..

இப்போ நீதான் சைன் தீட்டா, எதிர்லே வராளே.. அவதான் காஸ் தீட்டா.. ரெண்டு பேரும் செர்ந்து டேன் தீட்டா பண்ணுங்க பாக்கலாம்..

ரஜினி: டேய் டேய் டேய் டேய்.. ஆண்டவன் கெட்டவங்களுக்கு பிட் பிட்டா அள்ளிக்கொடுப்பான்.. ஆனா பரீட்சையிலே பெயில் பண்ணி வுட்டுடுவான்.
நல்லவங்களுக்கு.. பிட்டே கொடுக்க மாட்டான்.. ஆனா கொஸ்டின் பேப்பரையே அவுட் ஆக்கிடுவான்டா..

இந்தா வாங்கிக்கா..

காட்சி 4 :
ஷ்ரேயா: என்னங்க இந்தட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?
ரஜினி: தோ பாரும்ம.. பொம்பளை பொம்பளையா இருக்கனும்.. ஆம்பளை ஆம்பளையா இருக்கனும்..

கடனை வாங்காதவன் ஆம்பளையும் இல்லே,
புடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே..

ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும்
பொம்பளைன்ன பொறுப்பா இருக்கணூம்..

ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..

பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!

காட்சி 5:

புஷ் அலுவலகத்துள் நுழையும் ரஜினி: இதோ பார் பிரச்சினை எனக்கும் உனக்கும் நடுவுலே.. அனாவசியமா பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது..ஈராக்லே இருந்து உன்படையெல்லாம் வாபஸ் வாங்கு.. அரிசிய இடிச்சா மாவு.. இந்த சிவாஜி அடிச்சா.. சாவு!! சிவாஜி கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. ஒன் டூ த்ரீ..

காட்சி 6:

னாசா தலைவர்: Mr.Sivaji, only you can help us!

ரஜினி: இப்போ என்ன ஸ்டேடஸ் சார்..

னா த: செவ்வாய் கிரகத்துலே இருந்து கிளம்பிய எரிகல் எப்போ வெணும்னாலும் உலகத்தை தாக்கலாம்.. அது மட்டும் நடந்தா.. வெல்.. தட் வில் பீ த என்ட் ஒஃப் அவர் வேர்ல்ட்..

ரஜினி: இப்ப என்ன பண்ணறது சார்?

னா த: நீங்கதான் எதாவது பண்ணனும் சிவாஜி

ரஜினி: ஒரே ஒரு வழிதான் சார் இருக்கு.. இங்கே பக்கத்துலே லைட் ஹவுஸ் எங்கே இருக்கு?

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்!

Jan 5, 2006

சிவாஜி திரை முன்னோட்டம் 04 Jan 06

சந்திரமுகியின் அபார வெற்றி, அன்னியனின் அப்பார வெற்றி இரண்டுக்கும் காரணமானவர்கள் இணைந்து கொடுக்கும் படம் என்பதால் ஆர்வம் அதிகரித்துவிட்டாலும், பயமும் அதிகமாகிவிட்டது.

நிஜமா பொய்யா எனத்தெரியாத ஒரு கேள்விப்பட்ட கதை. பிஷன் சிங் பேடி தன் மகனுக்கு கவாஸ்பேடி எனப் பெயர் வைக்க முனைந்தாராம். ஏன் எனக்கேட்டதற்கு அப்போதுதான் அவன் கவாஸ்கர் போன்ற பேட்ஸ்மேனாகவும் பேடி போன்ற பௌலராகவும் வருவான் என்றாராம். நடந்தது என்ன? மகன் வளர்ந்தான், பேடி போன்ற பேட்ஸ்மேனாகவும் கவாஸ்கர் போன்ற பவுலராகவும்!

இதில் படத்தைப் பற்றி வெளிவரும் தகவல்கள் இன்னுமே பயமுறுத்துகின்றன. பல பழைய படங்களின் பிரபல கெட்-அப்களில் ரஜினி தோன்றுவாராம். கெட்-அப் மட்டும்தானா, கதையுமா என்று தெரியவில்லை!

எனவே, ரஜினியின் பழைய பட ஃபார்முலாவையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டுக்குலுக்கியதில், இந்தக்கதை(?!) கிடைத்தது!

ரஜினி ரசிகர்கள் மன்னிப்பார்களாக!

சற்றுப் பெரிய கோப்பாக அமைந்துவிட்டதால் இரண்டு பாகங்களாகக் கொடுக்கிறேன். அதற்கும் மன்னிக்கவும்.

இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு கருத்து சொல்லாம போயிடக்கூடாது! ஆமாம்.






இரண்டாம் பாகம் இங்கே துவங்குகிறது:





அனைவரின் வசதிக்காக மொத்த வசனங்களும் இங்கே:

காட்சி 1 - பாடல்:

இந்தியா என்னாலே எழுந்து நிக்கும் பாருடா
இமயத்துக்கு என்னைப்பார்த்தா வேர்த்திருக்கும் பாருடா
ஆந்திரா என் முன்னாலே அடங்கி நிக்கும் பாருடா
ஒரிஸ்ஸா என் சொல்லாலே ஒடுங்கி நிக்கும் பாருடா!

காட்சி 2 - ஜோதிட நிலையம்:

னதியா: ஜோசியர் ஐயா, இது என் மகன் சிவாஜியோட ஜாதகம்.. கொஞ்சம் பாத்து சொல்லறீங்களா?

ஜோசியர்: ஆஹா இதுதாம்மா ஜாதாகம்..

ஆயிரம் கோடி அதிசயம், அமைந்தது சிவாஜி ஜாதகம்!

இந்தக் குழந்தை எப்படியும் இன்னும் 20 வருஷத்துல பெரியவனா மாறிடுவான்

ஆனா எவ்வளவு பெரியவனா ஆவான்னு என்னாலே உறுதியா சொல்ல முடியலே

ஆனா நிச்சயம் ஏதாவது ஒரு துறையிலே பெரிய ஆளா வருவான்..

காட்சி 3: கல்லூரி

பிரகாஷ்: ஹாய் செல்லம்.. சீனியர மதிக்காம கிளாஸுக்குல்லே எல்லாம் போகக்கூடாது.. நில்லு நில்லு நில்லு

ரஜினி: தோ பார் கண்ணா.. என் வழி தனி வழி.. மோதப்பார்த்தே காணாமப்போயிடுவே..

பிரகாஷ்: அதெல்லாம் நீ எப்படி சொல்லலாம்? தப்பு தப்பு தப்பு.. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது..

இப்போ நீதான் சைன் தீட்டா, எதிர்லே வராளே.. அவதான் காஸ் தீட்டா.. ரெண்டு பேரும் செர்ந்து டேன் தீட்டா பண்ணுங்க பாக்கலாம்..

ரஜினி: டேய் டேய் டேய் டேய்.. ஆண்டவன் கெட்டவங்களுக்கு பிட் பிட்டா அள்ளிக்கொடுப்பான்.. ஆனா பரீட்சையிலே பெயில் பண்ணி வுட்டுடுவான்.
நல்லவங்களுக்கு.. பிட்டே கொடுக்க மாட்டான்.. ஆனா கொஸ்டின் பேப்பரையே அவுட் ஆக்கிடுவான்டா..

இந்தா வாங்கிக்கா..

காட்சி 4 :
ஷ்ரேயா: என்னங்க இந்தட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?
ரஜினி: தோ பாரும்ம.. பொம்பளை பொம்பளையா இருக்கனும்.. ஆம்பளை ஆம்பளையா இருக்கனும்..

கடனை வாங்காதவன் ஆம்பளையும் இல்லே,
புடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே..

ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும்
பொம்பளைன்ன பொறுப்பா இருக்கணூம்..

ரஜினி: பார்.. முழுசா பொம்பளையா மாறியிருக்கிற என்னோட ஆளைப்பார்..

பிரபு: என்ன கொடுமை சார் இது?!!!!

காட்சி 5:

புஷ் அலுவலகத்துள் நுழையும் ரஜினி: இதோ பார் பிரச்சினை எனக்கும் உனக்கும் நடுவுலே.. அனாவசியமா பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது..ஈராக்லே இருந்து உன்படையெல்லாம் வாபஸ் வாங்கு.. அரிசிய இடிச்சா மாவு.. இந்த சிவாஜி அடிச்சா.. சாவு!! சிவாஜி கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. ஒன் டூ த்ரீ..

காட்சி 6:

னாசா தலைவர்:

ரஜினி: இப்போ என்ன ஸ்டேடஸ் சார்..

னா த: செவ்வாய் கிரகத்துலே இருந்து கிளம்பிய எரிகல் எப்போ வெணும்னாலும் உலகத்தை தாக்கலாம்.. அது மட்டும் நடந்தா.. வெல்.. தட் வில் பீ த என்ட் ஒஃப் அவர் வேர்ல்ட்..

ரஜினி: இப்ப என்ன பண்ணறது சார்?

னா த: நீங்கதான் எதாவது பண்ணனும் சிவாஜி

ரஜினி: ஒரே ஒரு வழிதான் சார் இருக்கு.. இங்கே பக்கத்துலே லைட் ஹவுஸ் எங்கே இருக்கு?

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்கம் -- உங்கள் பினாத்தல்!

 

blogger templates | Make Money Online