கொஞ்ச நாளாய் யாருடைய திருஷ்டியோ பட்டு தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிவிட்டேன். ஒரு இடைவெளிக்குப்பிறகு எழுதுவதால், இப்போதைய டிரெண்ட் பார்த்து எழுத ஆசைப்பட்டேன்.பழக்கம் டச் விட்டுப்போனதாலும், ஒரே நேரத்தில் பல பதிவுகளைப் படித்ததாலும், இப்படி எழுதிவிட்டேன்.
மேலும் பயங்கரப்பசி நேரத்திலும் எழுதியதின் எபெக்டும் தெரியலாம்!
யாரும் கோவிச்சுக்கக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்!
இங்கே தேவைப்பட்ட அளவுக்கு ஸ்மைலீக்களைப் போட்டுக்கோங்க! :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
1. நான்கெழுத்தில் என் நாக்கிருக்கும்
நாக்கை ஊற வைக்கும் அனைத்துப் பதார்த்தங்களும் நான்கெழுத்திலேயே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
சாம்பார்
உப்புமா
பொங்கல்
ஆப்பம்
ஜாங்கிரி
புளிசோறு
கருவாடு
சிக்கன்
மட்டன்
கறிகாய்
இந்தப்பதிவுக்கு குறைந்த பட்சம் 400 பின்னூட்டம் வேண்டும்!
2. மேலும் சில கேள்விகள்
நான் ஏற்கனவே கேட்டிருந்த சில கேள்விகள் கேட்டிருந்தேன், அவற்றுக்கே இன்னும் பதிலைக்காணோம், இருந்தாலும் அடுத்த சில கெள்விகளைக்கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
1. பெனாத்தல் சுரேஷுக்கு பயங்கரப்பசி, இருந்தாலும் எதிரே இருந்த உணவு வகைகள் எதையுமே தொடவில்லை- ஏன்? (பதில் - எதிரே இருந்த உணவு போட்டோவில் இருந்தது)
2. வீட்டில் முட்டையே இல்லை.. இருந்தாலும் மிஸ்டர் எக்ஸுடன் இருந்த மிஸ்டர் ஒய் ஆம்லெட் போட்டார். எப்படி? (பதில் - மிஸ்டர் எக்ஸ் ஒரு கூ"முட்டை")
3. சமயல்கார மாமாப்பயலுவ
துபாய் கராமாவில் இருக்கும் ஹோட்டல்களில் சமையல் செய்யும் ஒருவன் நான் வருகையில் என்னைப்பார்த்துக் கண்ணசைத்தான் - அதற்கு அர்த்தம் - என் ஹோட்டலில் எல்லா வகை உணவும் இருக்கிறது, வருகிறாயா? - என்பதுதான்.
எனக்கு உடம்பெல்லாம் கூசியது.. இப்படி குளிக்காத ஒருவன் என்னைப்பார்த்து இப்படிக்கூப்பிட்டுவிட்டானே என்று.
அவனை அப்படியே பிடித்து உலுக்கி 'ஏண்டா குளிக்காம இருக்கீங்க? இப்படிச் சமைச்சதை வாடிக்கையாளருக்குக்கொடுக்கற கேவலமான தொழிலைச் செய்யறீங்க"ன்னு கேட்க வேண்டும் போல் இருந்தது.
இப்படி சுகாதாரமே இல்லாத சமையல்காரரைப் புகைப்படம் எடுக்க முயன்றேன், இருட்டிலேயே அவர்கள் வாழ்வதால், புகைப்படம் பதிவாகவில்லை.
4. ஏழும் ஏழும் பதினாலு
பாரதியார் தன் வீட்டில் சாப்பாடு இல்லாதபோதும் கவிதை எழுதினார். சாப்பாட்டுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. (அவ்வளவுதான் பதிவு)
5. இஸ்தான்புல்லும் இஞ்சியும்
முன்பு இஸ்தான்புல்லைப்பற்றி எனக்கு ஒரு பெரிய அபிப்பிராயம், பிம்பம் விழுமியங்கள் எல்லாக் கண்றாவியும் இருந்தன.அங்கு கிடைக்காததே இல்லை என்ற ஒரு பிம்பம். இன்று அது என்னிடம் இல்லை.
இஞ்சி சார்ந்து சமைப்பவர்களுக்கு இஸ்தான்புல்லில் எந்த உதவியும் கிட்டப்போவது இல்லை. இதை இத்தாலிக்குச் சென்றபோது உறுதிப்படுத்திக்கொண்டேன்.
தங்கள் சுயநலம் சார்ந்த பூண்டு, மிளகாய்ப்பொடி சார்ந்த சமையல்களையே கஷ்டப்பட்டேனும் அனைவரும் முன்னிறுத்துகிறார்கள். அது சரி, மிளகாய்க்காரத்துக்கு விக்காதவர் யார்?
இஞ்சியின் இனிமை அறியாமல் கிடைத்ததை உண்பவர்களாலேயே நிரம்பி உள்ளது இஸ்தான்புல். காரம் கிடைக்காத வாழ்க்கைச்சூழல் அவர்களுடையது.
சிலர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு இஞ்சியுடன் சமையல் செய்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் இஞ்சி தின்னாத குரங்குகள்தான், கோமாளிகள்தான்!
சைவம் அசைவம் என எந்த சாப்பாட்டு வகையானாலும், இஞ்சி இல்லாத சமையல் குப்பைக்குப் போக வேண்டியதுதான்! இஞ்சிக்காரம் பிடிக்காதவர்கள் அனைவரும் புண்ணாக்கையே காரம் எனச்சொல்லக்கூடிய புண்ணாக்குகள்தான்!
மீண்டும் ஸ்மைலி:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Jan 24, 2006
பெனாத்தல் - back with a bang!
Subscribe to:
Post Comments (Atom)
144 பின்னூட்டங்கள்:
யப்பாடி நாந் தப்பிச்சேன். நான்கெழுத்தில் என் நாக்கிருக்குமுன்னு நீங்க தொடங்கும் போதே எனக்கு தெரிஞ்சி போச்சு. சரி சுரேஷ் எத்தன பதிவைப் பத்திச் சொல்லப் போறாருன்னு பாத்தேன். ஏதாவது முனியப்பன் முனியம்மா-ன்னு எழுதீருக்கீங்களான்னு பாத்து....நல்லவேளை இதெல்லாம் ரொம்ப பின்னூட்டம் வாங்குற பதிவுகளைப் பத்தீன்னு புரிஞ்சிக்கிட்டு நிம்மதியாயிட்டேன்.
சரி. விசயத்துக்கு வர்ரேன். ரொம்ப நல்லா இருக்கு பதிவு. இதுக்கெல்லாம் மூளை முனியாண்டி விலாஸ்லயா வாங்குறீங்க? (ஹி ஹி ஹி இது சோக்கு. சீரியசா எடுத்துக்காதீங்க)
suresh enna sollardhu.....marupadyum oru kalakkal padhivu.....endha maadjiri sindhikkardhukku oru thani moolai than venum.....eppo enga LA la kaarthaala 8.40 am kaila oru tea cup oda onga padhiva padichen.....have started my day with a smile...thanks a lot
Radha
கொ.ப.செ,
நடக்கட்டும் நடக்கட்டும்...
// பயங்கரப்பசி நேரத்திலும் எழுதியதின் எபெக்டும் தெரியலாம்!
//
பசி தந்த எதனால் இப்பதிவு வந்தது என்பது 1. இல் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை பார்த்தவுடனே புரிஞ்சிடுச்சே! இருந்தாலும், நானூறு வேணுமின்னு கன்பர்ம்டா சொன்னீங்கனா, நடத்திக்கொடுக்க தயாரா இருக்கோம்!
இஸ்தான்புல்லும் இஞ்சியும் - ஆஹா பொருத்தமான தலைப்பு. நம்ம பீடம் கூட அங்கே உக்காந்துகிட்டுதான் ரீஜண்டா கிறுக்குறாரு.
நாக்கே மூணெழுத்து என்பதிலிருந்து தலைப்பில பொருட்குற்றம் இருக்கிறது என்று புரிகிறது.
மொத்தத்தில் கலக்கல். புல் பார்மில் அடிச்சு ஆடியிருக்கீங்க. ஒரு விஷயம் கவனிச்சீங்களா .. நம்ம பா(ர்)டு சின்னவர் வந்தாலும் வந்தாரு. அல்லாரும் ரவுண்டு கட்டி நக்கல் நையாண்டி செய்யறத பாக்கயில பழைய தமிழ்மணத்த பாக்குற மாதிரி சந்தோஷமா இருக்க்து. தொடரட்டும் நற்பணி.
இன்னொரு வே. வெ. இ. ப
என்னால் 400 போட முடியாது.
4 தான் போடுவேன். :-)
சரி, கேட்டுப்புட்டீரு...
அதனால் நமக்குநாமே பமக கொள்கை படி
குழம்பு
ரவாலாடு
நன்றாய் பட்டியல் போட்டிருக்கிறீர்கள்.
தொகையல்
பாயசம்
சைவத்தில் கொஞ்சம். அசைவத்தில் கொஞ்சம். :-)
தேங்காய்
ஒங்க நக்கல் இருக்கே :)))))
Superlative Suresh !!!!
அப்பம்
மேலும் சில கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லை. அதனால ஒண்ணும் சொல்லல.
பீட்ரூட்
மெதுவடை
ஆமைவடை
ரவாதோசை
பட்டாணி
ஊறுகாய்
இப்போதைக்கு போறும்னு நினைக்கிறேன். :)))
ஏழும் ஏழும் பதினாலு பதிவு உங்களுக்குத் திருப்தியா இருந்ததா இல்லையா? அது தான் மேட்டர். ஒரு தூண்டுதல்ல நீங்க பதிவு போடறீங்க. அதைப் படிக்கிறவங்களுக்கு (என்னை மாதிரி மாங்கா ம க்களுக்கு) ஒரு தூண்டுதல் வந்து பின்னூட்டம் போடறாங்க. அது பதிவு அளவுக்கு இருந்தா நான் பொறுப்புல்லை. சொல்லிட்டேன்.
என்ன பினாத்தலாரே. நாங்க எல்லாம் உங்க பார்வையில இன்னும் படலையா? இல்லை பாவம் பொழச்சிக்கிட்டு போகட்டும்ன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்களா? இல்லை அடுத்த வாரம் 'திருநாள்'ன்னு முடியுற ஒரு பதிவோ 'முன்னிற்கும்'ன்னு முடியுற ஒரு பதிவோ வரும்ன்னு எதிர்பார்க்கலாமா? :-)
இணையத் தமிழ் உலகின் இணையில்லா போர்வாள்களை உமது இஷ்டத்திற்கு எடுத்துச் சுழற்றீயிருக்கிறீர், பெனாத்தலாரே!
வாலும் வேலும் நீளம்
பாலும் மோரும் வெள்ளை
லட்டும் ஜிலேபியும் இனிப்பு
மாறும் காலங்களின்
மாறாத கோலங்களாய்
தூறும் சாரல்கள்
ஆறாய்ப் பெருகும்!
-----------------
comment by - Agent NJ ஞானபீடம்
நம்மள ஏன் விட்டீங்கன்றது மட்டும் புதிராவே இருக்குங்க. :D
பினாத்தலு,
வழக்கம்போல சூப்பர்!
'அக்கா எட்டடி பாஞ்சால் தம்பி எண்ணூறு அடி பாய்வார்ன்ற '
புது மொழி இருக்கே அதன்படி,
என் தங்கத்தம்பிகள் 400 என்ன 4000 பின்னூட்டம் போட்டுருவாங்க. கவலையை விடுங்க:-)
நன்றி ராகவன்; முனியப்பன் முனிம்மாவெல்லாம் அப்பாலே பாத்துக்கலாம், எங்கே போறாங்க!
நன்றி radha sriram
//நம்ம பா(ர்)டு சின்னவர்
//வந்தாலும் வந்தாரு
நன்றி இரேசு
தலைப்பை பார்த்த்தும் நம்மளப் பத்திதான் பெனாத்தராங்களோன்னு நினைச்சுட்டேன்.
அப்படியே
மோசக்கழுகள் ஒரு பின்னோட்டம், வேட்டையாடு விளையாடு ட் ரைலர் எல்லாம் போட வேண்டியதுதான்
ராமநாதன், கோவிச்சுக்காம இருந்ததுக்கு நன்றி. கொள்கையிலே துடியா இருக்கிற உங்களைப்போன்ற இளைஞர்கள்தான் ப ம க வின் பலம் என்று பொதுச்செயலாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டது சரியாகி விட்டது.
சரி தடைகளை நீக்கிவிட்டேன் - எத்தனை எழுத்து உணவு வகையயும் எழுதலாம். அப்போதானே நானூறு வரும்!
என்ன உஷா? நீங்க சொல்ல வந்தது வேகமும் வெற்றியும் இணையும் பதிவு என்றுதானே? இப்படி சுருக்கமா எழுதினா யாராவது விரோதிங்க வேலை வெட்டி இல்லாத பதிவுன்னு நெனைச்சுடப்போறாங்க!
குமரன், நீங்களே நானூறு போடணும்னு எல்லாம் இல்லை, ஒரு 350 நீங்க போட்டா போதும், மத்ததை நானே பாத்துக்கறேன்.
நன்றி பாலா மற்றும் துளசி அக்கா! நீங்கள் இருவரும் இல்லாமல் நான் முதல் பதிவுகளுக்கே பின்னூட்டம் பார்த்திருக்க முடியாது என்ற நன்றி உணர்வை இந்தச் சமயத்திலே கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினால் அது மிகை ஆகாது!
ஏஜெண்ட்டு,
கவிதை அருமை! ஒருவேளை கருத்து ஏதேனும் இருந்துவிடுமோ என்ற ஆழ்ந்த சிந்தனையைத்தூண்டும் கவிதை. நன்றி
குமரன் - கீழே சின்னவன் கமெண்டு பார்த்தீங்களா? யாரையும் யாரும் விட்டுவைக்கப்போறதில்லை.. நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா?
சின்னவன் -
விடாதீங்க - யாருங்க அந்த மோசக்கழுகள், வேட்டையாடு விளையாடு எல்லாம் ஒரிஜினலா எழுதினது? நோண்டி நுங்கெடுத்துடுங்க.. விடாதீங்க - நம்ம வேலூர்க் காலேஜ் பெருமைய விட்டுக்கொடுத்துடாதீங்க!
இலவசக்கொத்தனார்
நீங்களே புதிர் போடற ஆசாமி.. அப்ப நான் வைரமுத்து ரேஞ்சுக்குப்போயி ஒரு புதிருக்கே புதிர் போடுவிட்டேனா?
//சரி தடைகளை நீக்கிவிட்டேன் //
எடுத்தாசுல்ல,
அடுத்த ரவுண்டு
அவியல்
பொரியல்
சுண்டல்
பரோட்டா
பக்கோடா
பாஸந்தி
பேல்பூரி
பாவ்பாஜி
(தேங்காய்த்) துருவல்
49க்கு காரமா
மிளகாய்
ஐம்பதுக்கு இனிப்பா
சக்கரை
51-க்கு புளிப்பு -ஆ
மாங்காய்
இப்போதைக்கு விளம்பர இடைவேளை. சிறிது நேரத்தில் ஆங்கிலத்தில் சந்திப்போம்! நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!!
---
தன்மானத் தமிழர்களே!!!
அலைகடலென திரண்டு வாரீர்!!
இங்கே
நல்ல பதிவு. சூப்பர் பெனாத்தல்கள். தூக்கத்தில் பெனாதுபவர்களைக் கேட்டிருக்கிறேன், பசியில்??? இதுதான் முதல் முரை.
தொடருங்கள்.
இதுக்கு முன்னாடி நான் போட்ட பின்னூட்டம் எங்கப்பா...
போட்டு ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சி. இங்க பாருங்க ஆதாரம் வர வர நிறுவனத்தலைவர பாத்து பயமே இருக்கிறதில்ல...
ஒன்றுக்கும் லேற்பட்ட பின்னூட்டம் கொடுக்கணுமாமே... கொடுத்திட்டா போச்சு.
பாருங்கள் :: இலக்கியவாதிகளின் சொர்க்கம்
என்ன பெனாத்தலாரே,
வேற யாரும் ஆட்டத்துக்கு வர மாட்டேங்கறாங்களேப்பா.. தனியாளா எவ்வளவு தான் சமாளிக்கிறது. இருந்தும், கட்சி பேர இழுத்ததால
veal
beef
rice
Ragi
Atta
தனியா வெளையாடி போரடிக்குதயா... வேற யாரும் வரலேன்னா உம்ம துரதிருஷ்டம்னு சொல்லி இத்தோட நிறுத்திக்கறேன்! :((((((
மாமிசம்!
இதுவே நான் இங்கு இடும் கடைசி பின்னூட்டம். இன்னும் இரண்டு வாரத்துக்கு இந்தப் பக்கம் வரமாட்டேன்!
இதுக்கு கூட "-" ஓட்டா ???
வாழ்க ! வளர்க !!
"2. வீட்டில் முட்டையே இல்லை.. இருந்தாலும் மிஸ்டர் எக்ஸுடன் இருந்த மிஸ்டர் ஒய் ஆம்லெட் போட்டார். எப்படி? (பதில் - மிஸ்டர் எக்ஸ் ஒரு கூ"முட்டை")"
அபாரம். அது சரி, இன்னும் 6 கேள்விகள் பாக்கி உள்ளன. இப்பத்தான் சதீஷ் என்னுடைய பல க்ளூக்களுக்குப் பிறகு கமலைப் பற்றிய பதிலை ஒரு வழியாகப் போட்டார்.
அது இருக்கட்டும், மேலே உள்ள போலி டோண்டு செந்தமிழில் இட்டப் பின்னூட்டத்தைப் பற்றி எனக்கு மின்னஞ்சலில் ஒரு நண்பர் தெரிவிக்க இங்கு வந்தேன்.
தயவு செய்து நாட்டாமையின் பதிவுக்கு பின்னூட்டமிட்டு அவர் போலி டோண்டுவிற்கெதிராக நடத்தும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும். பார்க்க அவரது கடைசி 4 பதிவுகள்: http://peddarayudu.blogspot.com/
பின்னூட்டங்களை எனக்குப் போடுங்கள் என்று கேட்காத நானே கூறுகிறேன். அடாவடிக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என்று. போலி டோண்டுவால் ஒன்றும் கழட்ட முடியாது என்பது நிஜம்.
இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஸ்மைலி:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மீண்டும் :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மீண்டும் மீண்டும் :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
வடாபாவ்
பூயாசம்(பூந்தி+பாயாசம்)
கச்சோரி
செட்தோசா
காலாகண்ட்
ஸ்ரீகண்ட்
இப்போதைக்கு இம்புட்டுதேன்.
5*Smiley
ராமநாதன்! அதுக்குள்ளே கை வலிச்சுடுச்சா?
ரெண்டு வாரம் இணையப்பக்கம் வரமாட்டென் - காபிரைட் மீறல் இல்லையே?
இனி, ரஷ்ய மொழியில் உள்ள நாலு எழுத்து உணவு வகைகளை எழுதலாமே?
சின்னவன் - மைனஸ் குத்து வாங்கினாதான் வாழ்க்கையிலே ஜெயிக்க முடியும்.. இதெல்லாம் சகஜமப்பா!
தலைவா! உங்க பின்னூட்டம் என் அஞ்சல்பெட்டியிலேயும் இல்லையே! மறுபடியும் ஒரு அஞ்சு முறை போட்டுடுங்க! தொகுதி உடன்பாட்டு நேரம், ஞாபகம் இருக்கட்டும்.
நன்றி சதீஷ்.
டோண்டு, நீங்களும் கோபிக்காமல் இருந்தது கண்டு மகிழ்ச்சி.
மாடரேஷன் முறை சிறந்த முறையே என்றாலும், போட்ட உடன் பதிவில் வராத பின்னூட்டம் அலுப்பையே தருவதால் இப்போதைக்கு வேண்டாம்.
மாடரேஷன் இல்லாத பதிவுகளில் மட்டுமே சென்று தன் வீரத்தை(?!)க் காட்டிவருபவர்கள், பின்னூட்டம் தூக்கப்பட்டுவிடும் ஐந்தோ பத்தோ நிமிட மகிழ்ச்சிக்காக செய்யும் காரியங்களுக்காக பதட்டப்படுவதாய் இல்லை.
கோபி - என்னைக்கண்டெடுத்த முதல் நட்சத்திரமே.. உங்கள் வரவு நல்வரவாகுக!
மேலும் ஸ்மைலிக்களைப்பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
சுதர்சன்.கோபால், நன்றி.. அது என்ன 5*Smiley? 5 முறையா அல்லது 5வது ஐட்டத்துக்கா??
Mukamoodi retrieved:!!
எப்பிடி இருந்த ஆளுன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா இஞ்சி பத்தி நீங்க காரஞ்சாரமா பேசுனதும் ஒருவேளை அடிப்படையில கரடி வித்தை காட்டுறவராவோ இல்ல கவிஞராவோ இருந்து ப்ளாக்ல கூட கவிதை படைக்காத சமுதாயம் என்னத்துக்கு இருக்கணும் தீ தின்னட்டும்னு கண்டபடி திட்டி நான் சலூன்ல சவரம் பண்றத போட்டோ எடுத்து போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டா என்ன பண்றதுன்னு ஆ·ப் ஆயிட்டேன்
தலை தலைதான்..
நான் ஒரு பதிவுலே சொன்ன விஷயங்களை எல்லாம் கேப்ஸ்யூலா சுருக்கி ஒரு பின்னூட்டத்துலே போட்டுட்டாரு பாருங்க! (ஆனாக்கா பப்ளிஷ் பண்ண மட்டும் மறந்துடுவாரு!)
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
சுரேசா, செய் நன்றி மறந்துடாதேபா
101வது மொய்ப் பின்னோட்டம் என்னோடது. :-)
எனக்கு உய்வுண்டு உஷா..
என்ன செய்யணும் சொல்லுங்க?
இன்னும் கொஞ்ச நேரத்துலே ராமநாதர்@ரஷ்யா.காம் வந்துடுவாரு.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கொடுப்பாரு.. (பின்னூட்ட மேட்டரு சொன்னேங்க)
மொய் வெச்சவரே நன்னி. இப்படியே நின்னுடக்கூடாது.. 201, 301, 401..ன்னு 1001 வரை போராடணும்.
டார்டியா (சிப்ஸ்)
மற்றும்... TACO ;-}
அப்புறம்..., ப்ரீட்டோ
இருக்கவே இருக்கு... கேஸடியா
மறந்திட்டேனே... பஹிட்டா
க்ரீக் உணவு... பலா(ஃ)பல்
பெத்த ராயுடு............... நன்னி.
பெத்த ராயுடு............... நன்னி.
வந்தாச்சு,
хлеб - Bread
блин - pancake
соль - உப்பு
кофе - காபி
фарш - Ground beef
кура - சிக்கன்
рыба - மீன்
яицо - முட்டை
борщ - (Borscht) உக்ரைனிலிருந்து வந்தாலும், மிகப் பிரபலமான பீட்ரூட் சூப் இது.
суши - Sushi
соус - sauce
хрен (Hren) - பூண்டு, மயனேஸ் இன்னபிற கலந்த கார ஐட்டம். ஊறுகா மாதிரி.
கெட்ட வார்த்தையும் ஆகும். அதனால் ரஷ்யர்கள் இருக்குமிடத்தில் ஜாக்கிரதையா பேசவும். அதேபோல блин! (Bleen)
soup
kiwi
Feta (cheese) - 150!!!
I was mood out since morning...
Sorry guys for not replying to your comments.
Thanks Ramanathan.. 300 - 400 ellam chance - e illainnu naan solren.. niingga enna bet veikkariinga?
Post a Comment