Jan 14, 2006

பாசக்கிளிகள் promo (14 Jan 06)

பொங்கல் ரிலீஸ் படங்களில் ஆதிக்கும் பரமசிவனுக்கும் போட்டியாம்.. விகடனில் இருந்து தினமலர், வலைப்பதிவுகள் வரை அனைவரும் இந்தப்படங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர்.

பாசக்கிளிகள் என்று ஒரு காவியம் திரைக்கு வருவதை இவர்கள் எல்லாரும் எப்படி மறக்கத் துணிந்தனர்? சற்று முன்வரை (ஐந்து பத்து ஆண்டுகள் முன்னால்) கொடிகட்டிப்பறந்த அனைத்து மூத்த ஓய்வுபெற்ற கலைஞர்களும் தங்கள் உறக்கம் கலைந்து புத்துணர்ச்சியோடு எதிர்பார்க்கும் திரைப்பாடம் (எழுத்துப்பிழை அல்ல) இது. சன் தொலைக்காட்சியே பெரும் ஆதரவு தராததால்தானே இந்தப் பாராமுகம்? சன் தொலைக்காட்சி மட்டும் தங்கள் அனைத்து விற்பனைத்தந்திரங்களையும் பிரயோகித்திருந்தால்??

சன் செய்திகள்..

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழகமே பேராவலுடன் எதிர்பார்த்துள்ளது. அதற்குக்காரணம் பொங்கல் பண்டிகை மட்டுமல்ல, கலைஞரின் பாசக்கிளிகள் படம் திரைக்கு வருவதும்தான், இது குறித்து ஒரு சிறப்புக்கண்ணோட்டம்..

திரை அரங்கு வாசலில் நிற்பவர்களைக்காட்டியவாறு..

பெரும் எதிர்பார்ப்புகள், கனவுகள்- இவற்றோடு தமிழ்த்திரை உலகமே புத்துயிர் பெற்றுக்காணப்படுகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் வருகிறது, இந்த ஆண்டில் என்ன சிறப்பு என்று மக்களைக் கேட்டபோது -

கே கோவிந்தன், திரை ரசிகர் - இந்த வருஷம் பொங்கல்தான் சார் எங்களுக்கு தீபாவளி. கலைஞர் அன்னிக்கு ஒரு மனோகரா கொடுத்தார், அதுக்கப்புறம் இன்னிக்குதான் பொங்கல் மீண்டும் களை கட்டுது.

பின் குரல் - மகிழ்ச்சியில் இவர்கள் ஆனந்தக்கூத்தாடினாலும், இவர்களுக்கும் சில குறைகள் இல்லாமல் இல்லை..

பழனியப்பன், பாதிக்கப்பட்டவர் - இங்கே 5000 பேரு நிக்கரோம், ஒரே ஒரு போலிஸ்காரர்தான் சார் இருக்காரு. இவ்வளவு ஜன வெள்ளத்தை எப்படி சார் ஒரு ஆளாலே கட்டுப்படுத்த முடியும்?

பின் குரல் - திரை உலகுக்கோ இது ஒரு இனிப்பான பொங்கல் என்பதில் சந்தேகம் இல்லை..

குமாரசாமி, தியேட்டர் உரிமையாளர் - ஏறத்தாழ இருபது வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் என் ஹவுஸ்புல் போர்டு தொங்குது, பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு..

பெரியகருப்பர், நடிகர் - தமிழ்லே வசனம் பேசி நடிக்கணும்னு எனக்கு இருந்த ஆசை, இந்த 25 ஆண்டு திரை வாழ்க்கையிலே இப்போதான் நிறைவேறி இருக்கு.

பின்குரல், இப்போது முகத்துடன் - ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் இப்படியே மலர்ந்தால் அனைவரின் முகத்திலும் ஆனந்தம் பெருகும், நாடு சிறக்கும், சன் செய்திகளுக்காக, திரை அரங்கிலிருந்து நா பெரிய சாமி.

பொங்கல் சிறப்பு பட்டி மன்றம், கிளிப்பிங்

ராஜா, பேச்சாளர் - நம்ம சம்சாரம் எப்பவும் அவிக வீட்டு மனுசங்கன்னா ஒரு தனி உரிமையோடதான் பாப்பாங்க, இப்போ என்னடான்னு கேட்ட அவிக அண்ணனுக்கு நான் பத்து சவரன் மோதிரம் போடணுமாம் - ஏன்னு கேட்டாக்க இது "பாசக்கிளிகள் ஸ்டையில்"னு கழுத்தை வெட்டறாங்க..

பலத்த கரகோஷம்.

திரை விமர்சனம்

வணக்கம் நேயர்களே, இந்த வார திரை விமர்சனத்தில் நாம் பார்க்கப்போகும் படம் , கலைஞரின் "பாசக்கிளிகள்".

கிளிப்பிங்

வசனம் என்பது விசனமாக இருந்த தமிழ் திரைப்படங்களில், வசனம் என் வசம் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் கலைஞர்.

கிளிப்பிங்

கதை என்பது சதையோ உதையோ அல்ல, அது திரைப்படத்துக்கு விதை என்பதை பாசக்கிளிகள் காண்பித்திருக்கின்றது.

கிளிப்பிங்

ரசிகர்கள் குரல்

வசனம் சூப்பர்!
827 முறை பார்க்கலாம்
பிரபு ஆக்டிங் சூப்பர்

கிளிப்பிங்

மொத்தத்தில், வேஷக்கிளிகளின் முகத்திரையைக் கிழித்து அவை மோசக்கிளிகள் என்று நிறுவுகிறது இந்த பாசக்கிளிகள்.. மீண்டும் திரை விமர்சனத்தில் சந்திப்போம், நன்றி.

எல்லா நிகழ்ச்சிகளின் நடுவிலும் விளம்பரம்..

பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..

கவர்ச்சியா ஆபாசமா - விளக்குகிறார், நவ்யா நாயர்

நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடிச்ச படம் இதுதானுங்கோ - கூவுகிறார், பிரபு

கதை, திரைக்கதை எழுதி வசனத்தில் குளிப்பாட்டுகிறார் கலைஞர்..

தியேட்டரில் படம் பார்க்க வரும் அனைவருக்கும், அவர்கள் டிக்கட் விலைக்கு சமமான அளவில், சக்தி மசாலா வழங்கும் எலிக்கறி மசாலா, சிக் வழங்கும் சிக் எண்ணை, ரீகல் வழங்கும் கறுப்புத்துணிகளுக்கான சொட்டு நீலம் அனைத்தும், இலவசம்!!

இது தவிர, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, ஒரு மாதத்துக்குத் தேவையான எலிப்பாஷாணம்!

பார்த்து விட்டீர்களாஆஆஆஆஆஆஅ.. பாசக்கிளிகள்..

டாப் டென் மூவீஸ்

இந்த வாரமும் சிறப்பான முதல் இடத்துலே இருக்கு, பாசக்கிளிகள்.

அண்ணனா, பெரிய அண்ணனான்னு கேட்டு தங்கை பண்ற வாக்குவாதம், முதல் முறையா விதவைத் தாயார் வேஷத்துலே மனோரமா, பல படங்களின் வாய்ப்பை நிராகரித்து விட்டு இதில் நடிக்க வந்த முரளி என்று அனைவரும் தங்கள் பங்கை சிறப்பா செஞிருக்காங்க என்றாலும், கலைஞரின் வசனத்தை கேட்பதற்காக்வே தியேட்டருக்கு எத்தனை முறை வேணும்னாலும் போகலாம் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்..

பாசக்க்ளிகள், இது மோசக்கிளிகள் அல்ல, நேசக்கிளிகள்.
-------------------------------------------------------------
எதோ சன் டிவி இந்தப்படத்தை சீரியஸ்ஸா எடுத்துக்கலையோ, நாம பொழைச்சோம்.

11 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

TEST !!

yaaraachum paartheengala illa illaya?

ramachandranusha(உஷா) said...

சுரேஷ், எனக்கென்னவோ சன் டீவில இதையே ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துப்பாங்கன்னு நெனைக்கிறேன் :-), இந்தளவு
ஆழா (!) யாரால சிந்திக்க முடியும்?

இலவசக்கொத்தனார் said...

சன் டீவிக்காரங்க அதில்லெல்லாம் ரொம்ப கெட்டி. ஜெயிக்கிற குதிரை மேலத்தான் பணம் கட்டுவாங்க. என்ன, இன்னும் கொஞ்ச நாள் கழித்து 'வெளிவந்து சில நாட்களேயான புத்தம் புதிய திரைக்காவியம்' என்று கேட்டாலும் கேட்போம். அவ்வளவுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனைவருக்கும்.

உஷா - ஆழமாக சிந்திப்பது என்றால் என்ன? அது U A E-இல் எங்கு கிடைக்கும், கிலோ என்ன விலை?

இலவசக்கொத்தனார் - அப்போ குங்குமம், தமிழ் முரசு எல்லாம் ஓடுகிற குதிரைன்னு சொல்லறீங்களா?

காகாபிரியன் - அப்படிப்போடுங்க!

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

யாருக்கும் கவலை வேண்டாம்.

இதோ அந்தக் கிளிகள் வந்தவுடன், விளக்கமான விமரிசனம் போட்டுருவேன்.

இப்படிக்குத் தியேட்டரில் வெளியாகாத படங்களைத் சொந்தமா ரிலீஸ் செய்கின்ற
நியூஸி துளசி. யூ சீ

பினாத்தல் சுரேஷ் said...

உங்களை நம்பியே வீரண்ணா, வீரன், உணர்ச்சிகள்னு பல படம் ரிலீஸ் ஆகியும் இன்னும் கவனிக்கவெ இல்லையே யூ ஸீ - நியூஸி, யோசி(ங்க)!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

சன் டிவி எந்த அளவுக்கு நுட்பமாக யோசிக்கிறது என்பதற்கு இன்றைய தங்க வேட்டை நிகழ்ச்சி ஒரு உதாரணம் ..

கேள்வி முதுமலைக்காடுகள் எந்த மாநிலத்தில் உள்ளது?

பதிலுக்கான க்ளூ - கலைஞர்!

இலவசக்கொத்தனார் said...

தமிழ்நாடு = கலைஞர். அப்படீன்னு அர்த்தமுங்களா? அது சரி.

குங்குமம், தமிழ்முரசு - எதையாவது இலவசமாய் கொடுத்து நம்பர் 1 இதழ் ஆக்கிடுவாங்அ இல்லை.

நவீன் ப்ரகாஷ் said...

சுரேஷ் gaaru !
பிண்ணிப் பெடலெடுக்குறீங்களே ! சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாயிடுச்சு போங்க !

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Ilavasakkoththanaar and Naveen Prakash

 

blogger templates | Make Money Online