Jan 12, 2006

இதனால் சகலமானவர்களுக்கும் 12 Jan 06

மற்ற ஊடகங்களாலும் வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்தியா டுடே - சில தவறான தகவல்கள் இருப்பினும் வலைப்பதிவுகளுக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்து ஆரம்பித்து வைத்தது.

தினமலர் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தினம் ஒரு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்தி வருகிறது; (இன்னும் பினாத்தல்கள் அதன் கண்ணில் படாமல் இருக்கிறது:-()

கல்கியும் அவ்வப்போது வலைப்பூக்களில் இருந்து சில துளிகளைத் தெளிக்கிறது.

விகடன் குழுமம் அறிமுகம் என்று செய்யாவிட்டாலும், வலைப்பதிவுகளைப் படிக்கிறது என்பதற்கு அவன் விகடன் ஒரு சான்று. (இன்னமும் விகடனுக்கு யார் இந்தப்பதிவைப் பற்றி சொல்லி இருப்பார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை)

இதன் அடுத்த கட்டமாக, நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான சிதம்பர ரகசியம் தொடரில், கதாபாத்திரம் ஒருவர் வலைப்பதிவு வைத்திருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அவருடைய (கதாபாத்திரத்துடைய) வலைப்பதிவின் பெயர் அறைகூவல்-ஆம்
குறிப்பு - சென்னைவாசியின் அனுபவச்சிதறல்கள் (அடங்குடா மவனேன்னு உள்ளே குரல் கேக்கலை போலும்)

பதிவுக்கு உள்ளே இந்த விமர்சனத்தில் இருந்து சில வரிகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவென்றால், அவரும் கவனம் பெற்ற பதிவுகளாக - நம்பிக்கை (கவிதை), இரு சம்பவங்கள் (சிறுகதை) மற்றும் அவன் விகடன் - ஐக்குறிப்பிட்டிருக்கிறார்..

அந்தப்பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களில் என்றென்றும் அன்புடன் பாலா, தருமி, படித்துறை மற்றும் சுரேஷ் (Suresh - பினாத்தல் இல்லை!) ஆகியோரும் அடக்கம்..

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் --

1. வலைப்பதிவுகள் பல்வேறு தளங்களாலும் கவனிக்கப்படுகின்றன - எனவே, சற்றுப் பொறுப்புடன் எழுதுவது அவசியமாகிறது.

2. தங்கள் தள எழுத்துக்கள் வேறு ஊடகங்களால் எடுத்தாளப்படுவதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் (நான் இல்லை!) காபிரைட் உரிமைகள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவசியம், creative commons license பற்றி பத்ரி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் (சுட்டி கிடைக்கவில்லை).

3. (குசும்பு) சுரேஷ் பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு விளம்பரம் இலவசம்!

6 பின்னூட்டங்கள்:

பழூர் கார்த்தி said...

தாங்கள் சொல்வது உண்மை(யா).

*****

கலக்குங்க சுரேஷ், ஆனந்த விகடனிலிருந்து சன் டீவி வரைக்கும் போய்ட்டீங்க.. வாழ்த்துக்கள் !!!

*****

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !!

G.Ragavan said...

வலைப்பதிவுகள் புகழ் பெறுவது ஒரு அங்கீகாரமே ஆகும். அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் விஷயமும் கூட. என்னுடைய வாழ்த்துகள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி போலியன். (உங்கள் புனை பெயர் உங்கள் விருப்பம், எனினும், போலியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வட்டத்தில், உங்கள் பெயர் ஒரு பயத்தைக் கிளப்புவது என்னவோ உண்மை - இப்போது தெளிந்துவிட்டேன்)

நன்றி சோம்பேறிப்பையன். வாழ்த்துக்கள்.

நன்றி ஜிரா!

பினாத்தல் சுரேஷ் said...

(உங்கள் பெயர் ஒரு பயத்தைக் கிளப்புவது என்னவோ உண்மை - இப்போது தெளிந்துவிட்டேன்) This was what i wrote before போலியன்'s vulgur comment on my other post on sivaji. I have verified the blogger profile, is their any other way போலியன் could have been duped as well??

kuzappama irukku!

Naga said...

சுரேஷ்...தங்களின் வலைப்பதிவை அப்படியே எனது தொடரில் உபயோகிப்பதற்கு தங்களிடம் அனுமதி பெறாமைக்கு மன்னிக்கவும். அந்த கதாபாத்திரத்தின் வலைப்பதிவு குறித்து யோசித்து கொண்டிருந்த போதுதான்...எனது தொடர் குறித்த உங்கள் விமரிசனமும்...அதற்கு எனது பின்னூட்டமும் ஏற்பட்டது...

உங்களது வலைப்பதிவை, அப்படியே உபயோகித்து கொள்ளும் எண்ணமும் தோன்றியது.

பினாத்தல் சுரேஷ் said...

நாகா,

வருகைக்கு நன்றி, எனக்கு இத விளம்பரம் குறித்து பெருமைதானே அன்றி எந்த ஆட்சேபமும் இல்லை,

நன்றி.

 

blogger templates | Make Money Online