Mar 24, 2007

கிரிக்கெட்!

ஏன் இந்த ஒப்பாரி? பெர்முடாஸ் பங்களாதேஷைத் தோக்கடிச்சு ரன்ரேட்ல இந்தியா சூப்பர் 8க்குள்ளே வர முடியாதா? அப்புறம் டெண்டுல்கர் கங்குலி ட்ராவிட் சேவக் தோனி போன்ற நம் வீரர்கள் முனைப்பா இருந்து வேர்ல்டு கப்பு கொண்டுதான் வரமுடியாதா? வேர்ல்டு கப் ஜெயிக்கறதுக்கு இந்த டீமை விட்டா வேற எந்த டீமால முடியும்?
 
ஆனா, இந்த டீம் சூப்பர் 8 போனா, ரஜினி சொன்னா மாதிரி ஆண்டவனாலகூட கிரிக்கெட்ட காப்பாத்த முடியாது!
 
வேர்ல்டு க்ளாஸ் பேட்டிங், 9ஆம் நம்பர் வரைக்கும் லைன் - அப், சாதகமான ஆடுகளம் எல்லா எழவும் இருந்து இப்படிக் கேவலமா தோத்ததைப் பார்க்கும்போது என் மேலேயே எனக்குக் கோபம் வருது!
 
மாஸ்டர் ப்ளாஸ்டர், யாராலயும் தாண்டமுடியாத ரெக்கார்டுகளுக்குச் சொந்தக்காரர், காமிக் ஹீரோ, ப்ராண்டு அம்பாஸடர்!!! ஸ்ட்ரெய்ட்டா வர பாலை டிபண்ட் பண்ண முடியாம க்ளீன் போல்டு ஆவறாருன்னா யாரைத் திட்டறது? கொண்டாடின நம்மையா? குழிபறிச்ச அவரையா?
 
பங்களாதேஷ்கிட்டயும் பெர்முடாகிட்டயும் வெறுத்துப்போற அளவுக்கு கட்டைபோட்ட கங்குலிக்கு 24ஆவது பால்லேயே ப்ரஸ்ட்ரேஷன் - 5 க்கு பக்கத்தில ஆஸ்கிங் ரேட் இருக்கும்போது - ஏன் வருது? ரெண்டு பிப்டி அடிச்சா டீம்லே இடம் உத்தரவாதம்ன்ற தெனாவட்டுதானே?
 
ஸ்லிப்புலே ஆள்வைக்கிறேன், பாத்துக்கப்பான்னு சொல்லிட்டு அரவுண்ட் த விக்கெட் வந்து முரளி போட்டா, உன் ஆசையக் கெடுப்பானேன்னு அழகா அவர் ஆசைக்கு ஏத்த மாதிரி லாலிபாப் கேட்ச் கொடுத்து அவுட் ஆனவருக்கு கேப்டன் சிபாரிசாம்!
 
4 விக்கட் போயிடுச்சு, ரன் முக்கியமில்ல, விக்கட்டைக் காப்பாத்தறதுதான் முக்கியம்ன்ற நேரத்துல ரெண்டு வயசுக்குழந்தைக்குக் கூட தெரியும் ரன் அவுட் ஆகக்கூடாதுன்றது. அப்படி ரன் ஆவறவரு இன் ஃபார்ம் பேட்ஸ்மேனாம்!
 
எதிராளிங்க பயப்படுவானுங்களாம், பீல்டு செட் பண்ணவே முடியாதாம்.. முதல் பால்லே எல்பிடபிள்யூ ஆவறவருக்கு இவ்ளோ பில்ட் அப்பு!
 
மட்டமா ஆடினாங்கன்றது அண்டர் ஸ்டேட்மண்டு! வண்டை வண்டையா வாயில வருது. எழுத்துன்றதால கஷ்டப்பட்டு அடக்கிகிட்டு இருக்கேன்!
 
இந்தியாவின் இத்தனை வருஷ பர்பார்மன்ஸோட ஒரு க்ராஸ் செக்ஷன் இந்த வேர்ல்டு கப் மேட்சுங்க!
 
மூணு மேட்ச் ஆடி ரெண்டுல கேவலமா தோத்தாலும், மிச்சம் ஒரு மேட்சில டோட்டல் ரெக்கார்டு என்ன, சிக்ஸர் ரெக்கார்டு என்ன, தனிப்பட்ட ரெக்கார்டு என்ன!! இதையேதான் இத்தனை வருஷமா பண்ணி பேப்பர் புலிங்களா உலாவிகிட்டு ஊரை ஏமாத்திகிட்டு திரியறானுங்க!
 
ஆனா, பல நல்லது நடந்திருக்கு!
 
பல ஸ்பான்ஸர்களுக்கு கோடிக்கணக்குல நஷ்டம்! இனி இவனுங்க கிட்ட வரதுக்கு யோசிப்பானுங்க..
 
படிக்கற புள்ளைங்க ஒழுங்கா படிப்பைப்பாக்க போவாங்க!
 
டிவிகாரன், பெட்டிங் பார்ட்டிங்க எல்லாருக்கும் பெரிய அடி! தேவைதான்.
 
கிரிக்கெட் எங்க ரிலிஜன், டெண்டுல்கர் எங்க கடவுள்னு பேனர் காமிச்ச முட்டாள் இப்ப நாஸ்திகனாயிருப்பான்!
 
 
 
 
 

30 பின்னூட்டங்கள்:

மணிகண்டன் said...

பெர்முடா கிட்ட 413 அடிச்சப்பவே அணையப்போற விளக்கு பிரகாசமா எரியுதுன்னு புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டோம் இவனுங்களை நம்பி :(

podakkudian said...

இவனுங்கள என்ன சொன்னாலும் தகும்,நிச்சயமாக பேப்பர் புலிகளதான் என்பது நிருபணம் ஆகி விட்டது.எவ்வளவு சோகமாக பெவிலினில் நடிச்சாங்க பார்தீங்களா.கேவலம்

Prabu Raja said...

next match la bangaladesh win panni india va veliya anuppanum.

bermuda kooda bangladesh thothu, india super 8 ponaa atha vida kevalam ethuvum illai.

Anonymous said...

//பல ஸ்பான்ஸர்களுக்கு கோடிக்கணக்குல நஷ்டம்! இனி இவனுங்க கிட்ட வரதுக்கு யோசிப்பானுங்க.. //
ஆமாங்க சுமார் 5000 கோடி வரை நஷ்டம் இருக்கலாமுன்னு ஒரு தகவல். அதுல ஒரு 200 கோடியை பங்களாதேஷ் நாட்டின் வளர்ச்சிக்குன்னு கொடுத்து அதை தோற்று போகும்படி செய்யலாமே(எப்படி எல்லாம் யோசிக்க வச்சுட்டாங்க பாருங்கண்ணே)

குமார்

அபி அப்பா said...

சரி விவசாயம் பாக்க போறேன். கடலை போடவா? நல்ல லாபம் வருமா? ஜொல்லுங்க பினாத்தலாரே:-))

இராமநாதன் said...

பெனாத்தலார் பெப்ஸி அட்வர்டைஸ்மெண்ட்லேயே சொல்லிக்காமிச்சுட்டாங்களே. புலிஸ் தான் மேல போவும்னுட்டு?

//இந்தியாவின் இத்தனை வருஷ பர்பார்மன்ஸோட ஒரு க்ராஸ் செக்ஷன் இந்த வேர்ல்டு கப் மேட்சுங்க! //

தோத்த நேரத்துல அவங்கள நோகடிக்கக்கூடாதுன்னாலும், நீங்க சொல்றது கரெக்ட் தான். மேட்ச்ல தோத்த இழப்புதவிர மானிடரி இழப்பும் அதிகமா இருக்கும். பாவம் விட்றுவோம். :)

-L-L-D-a-s-u said...

//ஸ்பான்ஸர்களுக்கு கோடிக்கணக்குல நஷ்டம்! இனி இவனுங்க கிட்ட வரதுக்கு யோசிப்பானுங்க..

படிக்கற புள்ளைங்க ஒழுங்கா படிப்பைப்பாக்க போவாங்க!

டிவிகாரன், பெட்டிங் பார்ட்டிங்க எல்லாருக்கும் பெரிய அடி!//

இது நடந்தது ரொம்ப நல்லது..

Fast Bowler said...

:)

மணியன் said...

ஸ்காட்லாந்து, அயர்லாந்து போல ஏன் தமிழ்நாடோ, திராவிடநாடோ தனியாக பங்கேற்க கூடாது ? ஒன்று தோற்றாலும் மற்றொன்று ஜெயிக்குமே !இப்போது இங்கிலாந்து வெளியே போனாலும் அயர்லாந்து சூப்பர் 8 இல் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள முடியும் :)

இலவசக்கொத்தனார் said...

யோவ் வியர்டு பதிவு போடச் சொன்னா இது என்ன வியர்டுங்க பத்திப் பதிவு? முதலில் அதைச் செய்யுமய்யா...

பினாத்தல் சுரேஷ் said...

மணிகண்டன் ..

ஜோதியா? எரிஞ்சுதா? எப்ப?

பினாத்தல் சுரேஷ் said...

பொதக்குடியான்..

நடிக்கறதுக்குதான் அட்வர்டைஸ்மெண்ட் டைரக்டருங்க உயிர விட்டுருக்காங்க! அவங்க முயற்சி வீண்போகுமா என்ன?

பினாத்தல் சுரேஷ் said...

பிரபு ராஜா,

bermuda kooda bangladesh thothu, india super 8 ponaa atha vida kevalam ethuvum illai.

அப்படி எதாவது நடந்தா இந்தியன் டீம் பேசாம போர்பெயிட் பண்ணிட்டு வந்துடணும்.

பினாத்தல் சுரேஷ் said...

குமார்,

ஆக, நீங்களும் பணத்தால அடிக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டீங்க! பேட்டால அடிங்கடான்னா பாவிங்க இப்படி பண்ணிபுட்டானுங்களே!

பினாத்தல் சுரேஷ் said...

கடலை போடறது விவசாயமா? வாலிப விருந்தா? சொல்லுங்க அபி அப்பா!

பினாத்தல் சுரேஷ் said...

ராமநாதன்,

//மேட்ச்ல தோத்த இழப்புதவிர மானிடரி இழப்பும் அதிகமா இருக்கும். //

கென்யாகிட்டயும் பெர்முடா கிட்டயும் ஜெயிச்சு வந்த மானிடரிதான் இழப்பு ஆகும்.. போகட்டும்.. விடறதாவது?

பினாத்தல் சுரேஷ் said...

l-l-Dasu

எதிலயும் நல்லதைக் கண்டுபிடிச்சுடுவோமில்ல ;)

பினாத்தல் சுரேஷ் said...

என்ன பாஸ்ட் பவுலர்.. துன்பம் வரும் வேளையிலே ஸ்மைலி?

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸ்,

என்னோட ஒரு வியர்டு குணம்.. இப்படி எதாச்சும் நடந்த ரெண்டு நாள் மூட் அவுட் ஆவறது ;(

எனவே, ரெண்டு நாள் கழித்து போடறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

மணியன்,

நல்ல ஐடியாதான்.

ஆனாலும் நம்ம விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு ஈடாகுமா?

கோபிநாத் said...

திருந்த மாட்டானுங்க தல......
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க ;-(((

அபி அப்பா said...

//கடலை போடறது விவசாயமா? வாலிப விருந்தா? சொல்லுங்க அபி அப்பா! //

நா ஒரு வியர்டுங்க! சொல்ல வந்ததை சரியா சொல்ல தெரியலை:-)

நீங்க ஒரு வியர்டுங்க! சொன்னத சரியா புரிஞ்சுக்கலை:-)

நில கடலை பயிரிட்டால் நல்ல மகசூல் கிடைக்குமா?

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் கோபி..

சரி இன்னிக்கு யாகம் எல்லாம் ரெடியா?

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா, அப்படித் தெளிவா கேளுங்க!
*
*
*
*
*
*
*
*
எனக்கு தெரியாதுன்னு பதில் சொல்றேன் :-)

சந்தோஷ் aka Santhosh said...

//பெர்முடாஸ் பங்களாதேஷைத் தோக்கடிச்சு ரன்ரேட்ல இந்தியா சூப்பர் 8க்குள்ளே வர முடியாதா?//
இந்த பொழப்புக்கு ஏதையாவது மேய்க்க போகலாம். அப்படியே super 8 போனாலும் முதல் மேட்சு ஆஸி அல்லது தெ.ஆ வோட டின்னு தான்டி. அவனுங்க ரெண்டு பேரும் கொலை வெறியோட சுத்திகிட்டு இருக்காங்க எவன் கிடைச்சாலும் துவைச்சி எடுப்பது என்று. இந்த லட்சனத்துல அகர்கர் பவுலிங் போட்டா என்ன ஆகும் சொல்லுங்க.

Anonymous said...

கலக்கல் காமெடி பண்ணும் பெனா சுனாடோய்
கிரிக்கெட்ட பாத்து பாத்து வீணாப் போனான்டோய்
விடிய விடிய மாச்சு பாக்க விழித்திருந்தான் டோய்
விடிஞ்சபின்னே தோத்ததுக்கு வயிரெரிஞ்சான்டோய்
பாத்ததுக்கு பரிதவிச்சு பதிவு போட்டான்டோய்.....

தல..இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பு

கி.அ.அ.அனானி

பினாத்தல் சுரேஷ் said...

சந்தோஷ்..

நீங்க சொல்றது உண்மைதான். நேத்து மேட்ச் (ஆஸி -- தெ ஆ) பாத்து மகிழ்ச்சிதான் ஆச்சு! இந்த மரண அடி நம்ம மக்கள் அழுதுருவாங்க.

பாண்டிங் ஸ்மித்துகிட்ட போன் பேசுகிறார்.

"மச்சி ப்ரீயா இருக்கியாடா .. ஒண்ணும் இல்லை, ஒரு அல்லக்கை வந்து மாட்டிகிட்டு இருக்கு, எவ்ளோ அடி வேணும்னாலும் தாங்கும் போல இருக்கு..என்ன பிஸியா இருக்கியா, சரி நான் அடிச்சுட்டு அனுப்பி வைக்கிறேன்"

இதுல இருந்து தப்பிச்சானுங்க :-)

தருமி said...

படிக்கற புள்ளைங்க ஒழுங்கா படிப்பைப்பாக்க போவாங்க!//

அட நீங்க ஒண்ணு ... எங்க தெருப் பசங்க இப்பதான் கூடக் கொஞ்சம் தீவிரமா ஆயிட்டாய்ங்க .. கேட்டா இனிம இவங்களுக்குத்தான் அடுத்த சான்ஸாம் இந்திய டீமில சேர்ரதுக்கு ..

பினாத்தல் சுரேஷ் said...

கி அ அ..

உனக்கும் கீழே உள்ளது பல டீம்..
நினைத்து பார்த்து நிம்மதி தேடுன்னு ஆயிட்டேன் :(

பினாத்தல் சுரேஷ் said...

தருமி!

இப்படி பசங்களுக்கே தோணாததையெல்லாம் சொல்றது ஒரு ப்ரொபஸருக்கு அழகா சொல்லுங்க :)

 

blogger templates | Make Money Online