Nov 2, 2009

பினாத்தல் வரலாற்றில் முதல் முறையாக!

முதல் முறையாக அச்சில் ஒரு சிறுகதை.



என் கதை அச்சாகவேண்டும் என்று வெறியாய் நான் என்றும் செயல்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதி, பலமைல்தூர அஞ்சலில் போட்டு மறந்து, ஆரம்ப ஆர்வங்கள் எல்லாம் காணாமல் போய், வரவில்லையா சரி என்று சமாதானப்படுத்திக்கொண்டதும் பலமுறை அல்ல - இரண்டோ மூன்றோதான் எழுதினேன்.

பின் வலைப்பதிவுக்கு வந்தபின் பதிவின் உடனடிப் பதிப்பும் அதைவிட உடனடி விமர்சனமும் அச்சிற்கான காத்திருத்தலை தேவையற்றதாக்கியது.

இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஏக்கம் ஒரு மூலையில் தொக்கிக் கொண்டே இருந்தது.

அச்சுக்கு கதை அனுப்புவது என்பது வேறு ஒரு வகை. அதற்காகச் செய்யப்படவேண்டிய ஜிகினாக்கள் வேறு என்று சொல்லிக் கொடுத்து அதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.

குங்குமம் 02-11-2009 தேதியிட்ட இதழில் “கைவண்ணம்” என்ற பெயரில் அச்சாகியுள்ளது. அதன் நகலை இங்கே குங்குமத்துக்கு நன்றியுடன் கொடுத்துள்ளேன்.

35 பின்னூட்டங்கள்:

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள் தல.. அச்சில் பார்ப்பது சுகமான விசயம்.. நீங்கள் இதழைப் பார்த்தீர்களா.. அல்லது பிடிஎப் தானா?

சென்ஷி said...

அச்சுப் பிரதிக்கேற்ற கதை சொல்லல் :)

வாழ்த்துக்கள் சுரேஷ்! (பெனாத்தலை காணோம்)

சென்ஷி said...

வா(வ்)ழ்த்துக்கள் சொல்ல போன கமெண்ட்ல விட்டுப் போச்சு :)

சென்ஷி said...

என்ன இருந்தாலும் நீங்க உங்க தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்திருக்க கூடாது. சுரேஷ்ன்னா தமிழ்நாட்டுல மாத்திரம் மூன்றரை லட்சத்துக்கு மேல இருப்பாங்க. ஆனா பெனாத்தல் நீங்க மாத்திரம்தான் :)

அனாதி said...

சுரேஷ், இது தான் எழுத்து என்பது... வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் பினாத்தலாரே!!

Anonymous said...

கதை புரியலே. இருந்தாலும் கை வெட்டினவன் தங்கையை கல்யாணம் செய்து கொடுப்பது, அந்த ஊரில் சகஜம் என்பதால் இந்த கதை பிரசுரம் ஆகி இருக்கலாம்! நிறைய திசை திருப்பும் பினாத்தல்கல்ஸ்!

எப்படி கதையை இமெயில் மூலம் அனுப்புனீர்களா?

- விஜய்

என். சொக்கன் said...

வாழ்த்துகள் சுரேஷ் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Unknown said...

கைவண்ணம் அச்சா(வா)க இருக்கிறது.வாழ்த்துகள் !!

மங்களூர் சிவா said...

nice.
congrats.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் பினாத்தலாரே :)

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள்ண்ணே..

உயரே.. உயரே செல்வீர்கள்..! தொடருங்கள்..!

ஆயில்யன் said...

/சென்ஷி said...

என்ன இருந்தாலும் நீங்க உங்க தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்திருக்க கூடாது. சுரேஷ்ன்னா தமிழ்நாட்டுல மாத்திரம் மூன்றரை லட்சத்துக்கு மேல இருப்பாங்க. ஆனா பெனாத்தல் நீங்க மாத்திரம்தான் :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!:)

Unknown said...

வாழ்த்துக்கள் சுரேஷ். பொருத்தமான தலைப்பு, பாங்கான சிறுகதை. தொடருங்கள்.

Anonymous said...

The Indian Anomie சார்பில் வாழ்த்துகிறோம்.

தகடூர் கோபி(Gopi) said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!

அச்சுக்கேற்ற கதை... உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதும் கதையை விட வேறு விதமாகத் தான் இருக்கு...

//சென்ஷி said...

என்ன இருந்தாலும் நீங்க உங்க தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்திருக்க கூடாது. சுரேஷ்ன்னா தமிழ்நாட்டுல மாத்திரம் மூன்றரை லட்சத்துக்கு மேல இருப்பாங்க. ஆனா பெனாத்தல் நீங்க மாத்திரம்தான் :)
//

வழிமொழிகிறேன்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சுரேஷ்

சத்யராஜ்குமார் said...

உங்களுக்கு என் மகிழ்ச்சியும், வாழ்த்தும்!

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள் தல

அத்திரி said...

வாழ்த்துக்கள் சுரேஷ்

கோபிநாத் said...

கலக்குங்க தல ;)) வாழ்த்துக்கள் ;)

CVR said...

சூப்பரா இருக்கு கதை..

வாழ்த்துக்கள் :)

ச.சங்கர் said...

வாழ்த்துக்கள்..சுரேஷ் அப்படீங்குறது நீங்கதானா :)

seethag said...

கதை நல்லா இருக்கு. ஜே படம் வரைன்ச்சிருக்காரே.

ஆநால் ஏன் பெண் குடுத்தத்தா எழுதினீங்க?woman has been objectified ,just like tradional attitude?may be i am to much of a penniiyam!!!!!

சென்ஷி said...

// seetha said...

கதை நல்லா இருக்கு. ஜே படம் வரைன்ச்சிருக்காரே.

ஆநால் ஏன் பெண் குடுத்தத்தா எழுதினீங்க?woman has been objectified ,just like tradional attitude?may be i am to much of a penniiyam!!!!!//

:)

நல்ல பின்னூட்டம்!

Vanchinathan said...

நல்ல கருத்து. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
கைவெட்டியவரின் வீட்டில் திருமணத்துக்கு சம்மதித்தார் என்பதெல்லாம் அதிகமாகத் தோன்றுகிறது. (அரிவாள் குறி தவறி சரியாக விழாமல் முகத்தில் அசிங்கமான சிறிய தழும்புன்னா போறாதா?)

ஆரம்பத்தில் சட்டென்று மழை நின்று வானம்
சமர்த்தாகிவிட்டு "நானா?" என்று கேட்பதிலுள்ள கவித்துவத்தை ரசித்தேன். (இதை அபேஸ் பண்ணி எதாவது வெண்பாவில் போட்டுவிட வேண்டியதுதான்.)

எந்தவித போதனை தொனியுமின்றி வாசகர்கள் வாழ்க்கையின் ஓர் அம்சத்தைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறீர்கள். பெரிய பெரிய ஆளுங்க எழுதுற குழப்பமான கதைகள் படிக்கும்போது நமக்கு ஒண்ணுமே வந்து சேரமாட்டேங்குது. உங்கள் கதை சிறப்பாக இருக்கிறது. நன்றி.

Jawahar said...

பினாத்தலுக்கு பேத்தலின் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க...

http://kgjawarlal.wordpress.com

கதிரவன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ் !!

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Congratulations! Well Done !
Your narrating style is excellent.
But somehow i feel that the stories in your blog were far better than this published one, especially the one on Credit card. After reading that story,i was sweating.

Wish you all the very best!

pudugaithendral said...

என்ன இருந்தாலும் நீங்க உங்க தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்திருக்க கூடாது. சுரேஷ்ன்னா தமிழ்நாட்டுல மாத்திரம் மூன்றரை லட்சத்துக்கு மேல இருப்பாங்க. ஆனா பெனாத்தல் நீங்க மாத்திரம்தான் :)//

கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.

என்னோட வாழ்த்தையும் சொல்லிக்கறேன்

Vijay said...

நல்ல கதை. வாழ்த்துக்கள் சுரேஷ். மேலே இருவர் சொன்னதை நானும் ரிபீட்டிக்கிறேன் - பெயரில் பெனாத்தல் சேர்த்திருக்கணும்.

சிறில் அலெக்ஸ் said...

it should have been 'Penathal Suresh'.

The story is nice. lacks crispiness in some places.. meaning it is a bit slow.

Prabu Raja said...

Congrats Suresh.
The story is nice and deserves to be published.

சுவாசிகா said...

கதை நல்லா இருக்கு..

ஆனா ‘பெனாத்தல்’ ஐ விட்டுடீங்களே..அடைமொழி முக்கியம் அமைச்சரே :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

துளசி கோபால் said...

அச்சச்ச்சோ......... ட்ரேடு மார்க்கை இப்படிக் கோட்டை விடலாமா?

கதை நல்லா(த்தான்) இருக்கு.

பாராட்டுகள்.

 

blogger templates | Make Money Online