Jun 3, 2007

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஜூன்15!

யாரு படம்! எங்க தங்கத்தலைவர் நடிச்ச படம்!
 
யாரு படம்! பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்குப் பெயர் வாங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் கிட்டே இருந்து வர்ற படம்!
 
யாரு இசை! நாவில் ஒட்டிக்கொள்ளும் பல பாடல்களை ஏற்கனவே போட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்ட இசை அமைப்பாளர்!
 
பின்ன? எங்க தங்கத்தலைவர் ஏற்கனவே நடிச்ச ரெண்டு படத்திலும் காமெடி என்ன, செண்டிமெண்ட் என்னன்னு கலக்கினவராச்சே! ஒவ்வொரு காட்சியிலயும் மாறும் முகபாவத்துக்காக எத்தனை கலைஞர்கள் வேலை செஞ்சிருக்காங்க! அனிமேஷன்னா என்ன சும்மாவா?
 
இன்னுமா புரியல? ஜூன் 15 ஆம் தேதிதான் ஷ்ரெக் -3 ரிலீஸ் ஆகப்போகுது.
 
தலைவர் ஷ்ரெக், கனவுக்கன்னி பியோனா, நகைச்சுவைப்புயல் டான்க்கி, வில்லன்கள் தவளைராஜா, ப்ரின்ஸ் சார்மிங், புஸ் ஆன் பூட்ஸ் எல்லாரும் இந்தப்படத்திலயும் இருக்காங்களாம்.
 
லிவிடா விடா லோக்காவை மறக்கமுடியுமா? எவ்வளவு அற்புதமான இசை!
 
இந்தப்படத்தின் கதை என்னன்னு சினாப்ஸிஸ் போட்டிருக்காங்க - இங்கே!
 
Far Far Away வின் ராஜா ஆகிவிட்ட ஷ்ரெக்குக்கு தன் ஸ்வாம்புக்குச் செல்லதான் ஆசை. வேறொரு ராஜாவை அம்ர்த்திவிட்டுப்போகலாம் என்றால் ப்ரின்ஸ் சார்மிங் தொந்தரவு. பிரச்சினைகளைத் தீர்க்கக் கிளம்பிவிட்டார் தலைவர் - தன் ஆஸ்தான டாங்கி மற்றும் புஸ் இன் பூட்ஸுடன். இரண்டு மணிநேரக் குதூகலம் உத்தரவாதம்!
 
அவசியம் பார்த்தே ஆகவேண்டிய படம்.
 

11 பின்னூட்டங்கள்:

வெட்டிப்பயல் said...

inga May 18 release aagiduche :-)

Sridhar Narayanan said...

நாந்தான் பர்ஸ்டா?

அடடா.... இது ஒரு தொத்து வியாதி போல இருக்கே!

ஆண்டனி பாண்ட்ராஸ், எடி மர்பியின் குரல்களை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களா இல்லை சொல்ல ஒன்றும் இல்லையா?

Anonymous said...

பெனாத்தல் அய்யா,

தலை நிறைய மூளையும் கை நிறைய திறமையும் வைச்சுக்கிட்டு இப்படி ஹிட்கவுண்ட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் ஏங்கி மொக்கையா போட்டுத் தள்ளறீங்களே. இதுக்கெல்லாம் ஏங்க நீங்க என்ன இப்பத்தான் புதுசா எழுத வந்தவரா?

வரவர உங்க பதிவுக்கு வந்துபோனாலே மன்சுக்குள் ஒரு வெறுமை வந்துருது. அது வெறுப்பா மாறுவதற்குள் பழையபடி இயல்யா எழுதுங்க. உங்க இயல்பு எதுவா? எதையாச்சும் எழுதி உப்புமா கிண்டியே ஆகனும்னு கட்டாயத்துல இல்லாம எழுதுன உங்க பழைய பதிவுகளை நேரம் கிடைச்சா படிச்சுப் பாருங்க.

உங்கள் நீண்டநாள் வாசகன் என்ற உரிமையில் வந்த ஆதங்கம் இது. அவ்வளவே. தவறாக இருப்பின் மன்னியுங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

இங்கே ஜூன் 15தான் வெட்டிப்பயல். பாத்துட்டீங்களா? தூள்தானே?

ஸ்ரீதர் வெங்கட், ஆமாம் - அந்தக்குரல்கள் நிச்சய்மாக வேல்யூ அடிஷன் தான். மைக் மயர்ஸ், கேமரூன் டயஸ்.. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் சும்மா ஜஸ்டு வந்து டப்பிங் கொடுத்துட்டு போயிருப்பாங்க.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//வரவர உங்க பதிவுக்கு வந்துபோனாலே மன்சுக்குள் ஒரு வெறுமை வந்துருது. //

அவ்ளோ மோசம் ஆயிடுச்சா நிலைமை? அப்ப நிச்சயம் எதாச்சும் பண்றேன். கொஞ்சம் ஒரு ஷார்ட் ப்ரேக் எடுத்துகிட்டு வந்தா இந்த ப்ளாக் மாறிடும்னு நெனைக்கிறேன்.

ஆனா, ஹிட்டு கமெண்டுக்காக மட்டும் நான் பண்றதில்லைங்க.. அதை என்னால பெரிய அளவில சாதிக்கவே முடியாதுன்றது மட்டும் இல்லை, எனக்கே ஆசையும் இல்லை. என்ன கொஞ்சம் திருகுதாளமா எழுதிகிட்டு போகலாமே, வேற மேட்டர் கிடைக்கற வரைக்கும் என்ற எண்ணம்தான். சமீபத்திலே இந்த மாதிரிப்பதிவுகள் கொஞ்சம் அதிகமாயிட்டது வாஸ்தவம்தான்.

எனவே, ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திக்கிறேன்.

Prabu Raja said...

Sivaji pathinnu nenachen :-(

Jay said...

ஹா.. ஹா.. நல்ல பகிடி!!!

இலவசக்கொத்தனார் said...

படம் சிவாஜி இல்லைன்னு தலைப்பைப் படித்த உடனே தெரிஞ்சு போச்சு. என்ன படம் அப்படின்னுதான் ஆவல். அவ்வளவுதான். இது எங்க ஊரில் ஏற்கனவே வந்த படமாச்சே....

Anonymous said...

Saw Sivaji.......... Saw Shreck 3 too......... My honest feedback is, Sivaji is some 100 times better than Shreck 3. Me and my friend reached the theater where Shreck 3 was running some 15 min late. FYI we are in the US, not in India. We tht we wud have missed the movie by 15 min, but wait.... we enter the theater which was pretty big and found just 4 ppl there....... Sivaji with hundreds of excited fans came to my mind for a sec. Then the movie was preceeded by n number of trailors, each was them at their worst, felt like I was watching some karan johar movie for a while. Finally Shreck 3 started, and was such a big let down compared to Shreck 1. On the whole, Sivaji turned out to be much more entertaining and fascinating compared to Shreck 3.

ILA (a) இளா said...

வரவர உங்க பதிவுக்கு வந்துபோனாலே மன்சுக்குள் ஒரு வெறுமை வந்துருது

G.Ragavan said...

பாத்துட்டேன் பாத்துட்டேன் ஷ்ரெக் 3 பாத்துட்டேன். ரசிச்சேன். ரசிச்சேன். தவளைராஜாவை போட்டுத்தள்ளீட்டாங்க. ஷ்ரெக்கு அப்பாவாயிட்டாரு. அதுல பாருங்க..டாங்கிக்கும் டிராகனுக்கும் பொறந்த குட்டிகள்..ரொம்ப அழகு. ரொம்பவே.

 

blogger templates | Make Money Online