May 31, 2007

சிவாஜி முழுப்படம் டவுன்லோடு லின்க்

இந்தப்பதிவு இன்னும் 1 மணிநேரம் மட்டுமே இருக்கும். அதன்பிறகு தூக்கப்படும். ஏன் அவ்வாறு செய்கிறேன் என்பது உங்களுக்குப்புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
 
சிவாஜி படம் ரிலீஸ் ஆக இன்னும் 15 நாள் உள்ள வேளையில், என் நண்பர் இந்த லின்க்கை எனக்கு அளித்திருக்கிறார். இதில் கொத்தனார் உப்புமா செய்வது பற்றிய பதிவை எழுதியிருக்கிறார் :-)))))))))))))))))))))))))))))
 
வெள்ளை எழுத்துக்களாலும், 160ஐக்கடந்த பின்னூட்டங்களாலும், அதில் நான் கொடுத்த உப்புமாக்குறிப்புகள் அடியில் போய்விடக்கூடாதே என்று தனிப்பதிவாக ஆக்கியிருக்கிறேன்.
 
**********************************************************************************************
இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!!
 
தேவையான பொருள்கள்:
 
 1. கணினி -1
 2. மானிட்டர்- 1
 3. கீபோர்டு - 1
 4. இ கலப்பை - 1
 5. லதா எழுத்துரு - 1
 6. இணைய இணைப்பு - குறைந்தது 256 KBPs
 7. ப்ரவுஸர் - 1
 8. நையாண்டி - தேவையான அளவு
 9. கிண்டல் - தேவையான அளவு
 10. அறிவுபூர்வமான அணுகல் - 0.000000%
 
செய்முறை:
 
 1. தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்
 2. அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.
 3. திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்
 4. இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்
 5. பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.
 6. பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப்பார்க்கவும்.
 7. பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது!
 8. மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்
 9. இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்
 
ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!
**************************************************************************************** 
 
இப்போ பாருங்க, இந்த இடுகை உப்புமா விதிகளை முழுமையா மதிச்சு எழுதப்பட்டிருக்கு. இன்னிக்கு ஹாட் டாபிக் சிவாஜி, டவுன்லோடு லின்க் எனத் தேடப்போறவங்க ஏராளம். முதல் 255 கேரக்டர்களைப்பாருங்க.. எதாவது கிவ் அவே இருக்கா? ஆனா அத்தனையும் மீறி, பினாத்தல் ன்றதால நம்பிக்கை இல்லாமத்தான் நுழைஞ்சுருப்பீங்க.. அதுக்கு காரணம், இந்த மாதிரி மேட்டர்லே நான் உப்புமா தவிர வேற எதும் கிண்டறதில்லைன்ற எக்ஸ்பீரியன்ஸ்தான்.
 
நம்பகமான உப்புமா செய்யணும்னா, ஒன்னு ரெண்டு முறை நீங்க நம்பகமான பதிவுகளைப் போடணும். உப்புமா நல்ல உணவுதான், ஆனா அதுவே டயட் ஆகிட்டா, விளையாட்டுக்குக்கூட யாரும் உங்க பதிவு பக்கம் ஒதுங்க மாட்டாங்க.
 
எனவே, இப்பவும் வந்தவர்களை ஏமாத்தக்கூடாது என்பதற்காக டவுன்லோடு லின்க் தரேன்.
 
2 தொழில்நுடபக்கலைஞர்களின் 4 மணிநேர உழைப்பில், 5 திர்ஹம்கள் செலவில் தயாரிக்கப்பட்ட ஒளிப்படம் சிவாஜியின் டவுன்லோடு லிங்குகள்:
 
 
 
 

8 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் said...

ஏமாறவே பிறந்தவங்க சரி.
ஒத்துக்கரெண்.
ரெண்டு பேரு சேர்ந்து உப்புமா ஆட்டம் போட்டா என்ன கதியாறது.:-))))))))))

மணியன் said...

ஒரே உப்புமாவை இரண்டுதரம் கிண்டினால் அடர்த்திமிகு கொழுப்பு (saturated fat) உடம்புக்குக் கெடுதல், ஜாக்கிரதை் ;))

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, நல்ல அருமையான ட்ரய்லர். நல்லா ரசிச்சேன். என்னோட விமரிசனம் கூட எல்லாத்திலேயும் சரியாவே வந்தது. எல்லாத்துலேயும் 4-வது தான் என்னோட விமரிசனம். என்னடா இது நேரம் சரியில்லையோனு நினைச்சேன். அப்பாடி, இப்போ திருப்தி!

U.P.Tharsan said...

எப்பிடி இப்பியேய்லாம், இருந்து யோசிப்பாங்களோ?

Anonymous said...

Romba kevalama iruku.

Nalla quality ezhudhavara ungaluku en indha vendatha velai.

1024 feedback konjam sumar.

Idhu romba romba poor job.

People just back scratch you and wantedly boost your ego. Please do something creative.

பினாத்தல் சுரேஷ் said...

வல்லி சிம்ஹன்,

ஏமாத்தறதுன்னு முடிவு பண்ணவுடன் கூட்டு சேந்தாச்சு :)

மணியன்,

மீள்பதிவுகள் உங்களுக்கு அலர்ஜியோ :)

கீதா சாம்பசிவம்,

ட்ரெயிலர் வெளிவந்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆவுது! விமர்சனம்தான் இப்ப லேட்டஸ்ட். பாராட்டுக்கு நன்றி.

நன்றி யு பி தர்சன்.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இந்த மாதிரி கருத்துக்கள்தான் நம்மைச் செதுக்கும்ன்றதால மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

உங்கள் கருத்து - ரொம்ப கேவலமா இருக்கு - உண்மையா இருக்கலாம். ஆனா, இதெல்லாம் எனக்கு ஒரு ப்ரீத்தர் மாதிரி தேவைப்படுது. எல்லா நேரத்திலையும் நல்ல குவாலிட்டி அமையறதும் இல்லை, இப்படித்தான் எழுதணும்ன்ற எந்த சுமையையும் எனக்கு நானே விதிச்சுக்கவும் விரும்பலை.

Scratching ன்ற்து அபாயகரமானதுதான், ஒத்துக்கறேன். உங்களை மாதிரி நேரடியா விமர்சனம் செய்ய நிறைய பேர் வரதில்லை.

எனக்கு பின்னூட்டம் போடற அத்தனை பேரும் எல்லாப்பதிவுக்கும் போடறதில்லை, படிச்சாலும் கூடன்னு புரிஞ்சே வச்சிருக்கேன். பிடிக்கலைன்னா பின்னூட்டம் போடாம போயிடுவாங்க! நிஜமாவே பிடிச்சா மட்டும்தான் ஒரு பின்னூட்டம் போடறாங்க. அதனால, என்னைப்பொறுத்தவரைக்கும் எத்தனை பின்னூட்டம், யார் யார் கிட்டே இருந்து, என்ன மாதிரி வார்த்தைகள்,எத்தனை என்னைத்தவிர்த்துங்கறதை எல்லாத்தையும் சேர்த்த ஒரு அளவுகோலை (என் மனசுக்குள்ள) வச்சுருக்கேன்.

இப்ப பாருங்க, இந்த பதிவுக்கு, என்னைத் தவிர அஞ்சே பேர். ஆனா இதுக்கு முந்தைய பதிவுக்கு ஏறத்தழ 25 பேர், என்னைத்தவிர. எனவே, என்னைப்பொறுத்தவரை இந்தப்பதிவு வேஸ்ட்டு, முன் பதிவு ஓக்கே :-)

ஆனா, இதையெல்லாம் நிறுத்தமாட்டேன், அப்பப்ப இதுவும்தான் வரும். க்ரியேட்டிவிட்டின்றது எப்பவாவது வர மேட்டர்.

ஆனாலும் உங்க விமர்சனம் எனக்கு பிடிச்சிருந்தது. தயவுசெய்து அப்பப்ப இந்த மாதிரி எழுதுங்க.

குட்டிபிசாசு said...

சுரேஷ் அண்ணே,

நீங்க சொன்னது போல, நானும் உங்க இடுகைய படிச்சிட்டு போய் இருப்பேன். நீங்க அனானிக்கு சொன்ன பதில் நல்ல இருந்தது. அதுக்காக வாழ்த்துக்கள்.

நீங்க சிவாஜி வச்சி ஏற்கனவே, 3-4 இடுகை போட்டுடீங்க!! அதனாலகூட வரவேற்பு குறைவா இருக்கலாம்!! நீங்க ஏன் தசாவதாரம் ட்ரை பண்ணகூடாது!அத பத்தி இடுகை ஒன்னு கூட இன்னும் போடல!!

 

blogger templates | Make Money Online