லக்கிலுக் என்ற பதிவரின் பாசிச வெறி வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவரை
விமர்சித்து நான் போட்ட பின்னூட்டத்தை இன்னும் அனுமதிக்காமல் இருப்பதன்
மூலம் தன் பாசிச வெறியைக் காட்டிவிட்டார்.
அனானி ஆட்டம் போடும் பதிவுகள் என்ன, வாரிசு, ஆட்சி செயல்பாட்டிலிருந்து
எல்லாவற்றையும் விவாதிக்கும் களம் என்ன என்று பதிவுகள் பக்கமேதான்
இருக்கிறார் - இருந்தாலும் என் பின்னூட்டம் மட்டும் வெளியிடப்படவில்லை!
அப்படி நான் போட்ட பின்னூட்டம்தான் என்ன?
அவருடைய சிவாஜி விமர்சனத்தில்தான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்:
**************
தம்பி லக்கிலுக்,
நல்ல முயற்சி.
ஆனால் 1 பெரிதா 1024 பெரிதா என்ற கேள்வியைக் கேட்க பினாத்தலார் தயாராகிவிட்டார்.
1024 என்பது என்ன?
2 பவர் 10-ஆ
4 பவர் 5 ஆ
ஒரு கிலோபைட்டில் உள்ள பைட்டுகளா?
பொறுத்திருங்கள் - இன்னும் மூன்று நாட்கள்.
(விளம்பரத்துறையில் பணிபுரிவதால் இந்த டீஸரை அனுமதிக்கத் தயங்கமாட்டாய்
என்றே நம்புகிறேன்.
*************
ஆனால் நடந்தது என்ன?
பின்னூட்டம் எழுதி சுமார் 10 மணிநேரத்துக்கு மேலாகியும் இன்னும்
அனுமதிக்கப்படவில்லை.இது தூங்கும் நேரம், வார இறுதி, கணினிக்கு அருகில்
செல்லவில்லை என்ற சப்பைக்கட்டுகளை பினாத்தல் குழு ஏற்காது!
ஏன் இந்தப் பாசிச வெறி?
எனக்கும் ஒரு வலைப்பூ உண்டு, அதில் இந்த விளம்பரத்தைப் போட்டுக்கொள்வேன்
- அடக்கிவிடமுடியாது என்பது தெரியாதா?
உப்புமா கிண்டியது போதும், இப்ப யோசிங்க!
1024 என்றால் என்ன? இங்கே பாருங்கள்!
24 பின்னூட்டங்கள்:
எதோ காமெடியான விஷயம்னு வந்தேன். ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கூற இயலுமா? லக்கிலூக்-ன் விமர்சனம் பார்த்தால், தட்ஸ்தமில்.காம்-ல் வந்த கதையை வைத்து ஒரு பில்டப் கொடுத்து இருக்கிறார். விளக்கவும்.
கன்னைக் கட்டுதே சாமி
அந்த 1024 னா என்னதாங்க?
அய்யா ஆளாளுக்கு பாசிசம் பாசிசம் னு பேசுறிங்களே மொதல்ல பாசிசம் னா என்னனு சொல்லிட்டு போங்கப்பா
//1024 என்றால் என்ன?//
என்ன?
என்ன?
என்ன?
enna elavu vilaiyatu ithu????????:)))))
//1024 என்றால் என்ன?//
1024 கடிகள், ஏனெனில் கடி = பைட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் பாவம் இல்லையா? :-(
என்னை பாத்தா பரிதாபமா இல்லையா?
இருக்கிற ஆணி பத்தாதுன்னு இது வேறே யோசிக்கணுமா? நீங்க பதிவாப் போடுங்க. நிதானமா வந்து பார்த்துக்கிறேன். வரேன்.
பதிவைக்காலையில் போட்டு, பின்னூட்டங்களை மாலையில் மட்டுறுத்தும் நான் லக்கிலுக்கைத் திட்டுகிறேன் என்று இந்தப்பதிவை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு பின்னூட்டத்தையும், எல்லாவற்றிலும் ஜாதியை நுழைத்தே தீரவேண்டும் என்ற தீராத ஆர்வம் கொண்ட இன்னொரு பின்னூட்டத்தையும் நிராகரித்திருக்கிறேன்.
குட்டிபிசாசு, இது டீஸர் விளம்பரம். யோசிங்க - 1024ன்னா என்ன?
அனானி 1 - யோசிங்க
அனானி 2 - பாசிசம்னா எதோ சாப்பிடற ஐட்டம்னு நெனைக்கிறேன் :-)
கல்ப் தமிழன் - 3 நாள் பொறுங்க ;-)
டோண்டு, உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் -
தவறான விடை டோண்டு அவர்களே. சரியான விடையை மேலே யாரும் கூறவில்லை என்பதால் 3 நாள் கேரி ஓவர் ஆகும்.
லக்கிலுக்:
இல்லை - உங்களைப் பார்த்தால் பாவமாகவோ பரிதாபமாகவோ இல்லாததால்தான் உங்கள் பெயரை உபயோகித்தேன்.
கீதா.. யோசிக்கறதுல இருந்து நழுவக்கூடாது :-)
"லக்கிலுக்கின் பாசிசவெறியும் ஒரு எம்பி யும் (1024ம்)."
///
இப்படியும் இருக்குமோ
//
இல்லை - உங்களைப் பார்த்தால் பாவமாகவோ பரிதாபமாகவோ இல்லாததால்தான் உங்கள் பெயரை உபயோகித்தேன்.
//
அடபாவி நீங்க காமெடி பண்ண எங்க லக்கி லுக் தான் கெடச்சாரா?
மின்னல்,
எம் பி யா - இல்லை :-)
அனானி.. நாம கடமைக்கு நடுவில பாசத்துக்கு இடம் கொடுக்கறதே கிடையாது.
Very Funny :)))
1024 = Mega Bite ? So Shivaji Vimarsanam is a Mega Mokka ? Is that Right ?
Even I felt So...hehehehe !!!!
செந்தழல்,
லக்கியோட விமர்சனத்தையா மொக்கைன்றீங்க?
அதைச் சொல்லற்துக்கு உங்களுக்கும் எனக்கும் தகுதி இருக்கா (வல்லவன், வீராச்சாமி):-)
Enna nadakkuthu inga?
:-)
நம்ம தகுதியை விடுங்க :)) இருந்தாலும் விடையை சொல்ல இவ்வளவு நாள் இழுக்கறீங்களே ?
ஹிந்தியில் ஏமாத்துபேர்வழிகளை 420 என்பார்கள். அதுபோல மெகா(கிலோ?) கடியர்களை 1024 என்கிறீரா?
Enna idhu Moopanaar badhil sollaramadhiri thaneh irukudhu...
பிரபு ராஜா:
என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க இங்கே பாருங்க!
http://penathal.blogspot.com/2007/05/1024-19-may-2007.html
செந்தழல்..
அதான் சொல்லிட்டேனே திங்கக்கிழமையிலேயே..
மேலே லின்க் அப்டேட் பண்ணியிருக்கேன். பாருங்க :-)
நாகு,
இது 420 மேட்டர் இல்லை. லின்க்கிலே பாருங்க.
மூப்பனார்,
அவ்ளோ குழப்பமெல்லாம் என்னால முடியாது சாமி!
Post a Comment