ஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.
இப்போது தலைப்பில் உள்ளது போல சூடான இருகைகளைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாமா?
கைகள் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு வலதுகைச் சுண்டுவிரலோடு இடதுகைச் சுண்டுவிரலை இணையுங்கள்.
அதேபோல் வலதுகைப்பெருவிரலோடு இடதுகைப் பெருவிரலையும் இணையுங்கள்.
மற்ற விரல்களையும் இணையுங்கள்.
இப்போது பரபரவென்று தேயுங்கள்.
சிறிது நேரம் அவ்வாறு தேய்த்தவுடன் இரு கைகள் சூடாகி இருப்பதைக் காணலாம்.
********************
பி கு 1: இந்த தட்டச்சுப்பலகையில் Rஉம் Tயும் அருகருகே இருப்பதால் நேர்ந்த எழுத்துப்பிழைதான் தலைப்பு. கொத்தனார் ஏற்கனவே புலம்பிட்டார் இதைப்பற்றி.
பி கு 2: கஷ்டப்பட்டு போட்டு ரெண்டே நாளிலே சிவாஜி விமர்சன சாப்ட்வேர் பார்ப்பவர் இன்றி தூங்குகிறது. அதைப்பார்த்து கருத்து சொல்லுங்கள்.
பி கு 3: மேட்டர் இல்லாதவனுக்கு உப்புமாவே கைகண்ட மருந்து.
17 பின்னூட்டங்கள்:
சுரேஷ்,
ரொம்ப கவலையா இருக்கீங்க போல!!எனக்கு சீனியர் நீங்க இப்படி சொல்லலாமா? 1024 விமர்சனத்த ஒரே பதிவுல போட்டு அசத்தி இருக்கீங்க, என்ன..அதிக எதிர்பார்ப்பு!! அனேகமா, சிவாஜி படமும் அப்படித்தான் அகிடுமோ?
நம்ம இட்லிவடை "ஷ்ரேயாவின் தொப்புள் சீன்கள் கட்"னு போட்டார்!!இதையே!! "ஷ்ரேயாவின் தொப்புளால் மின்சாரம் மிச்சம்"னு ஒரு பதிவு!!பார்த்திங்களா தமிழ்மணத்தில் ஆராய்ச்சிய!!
நம்ம 'ட்' 'ர்' கன்புயூஷன் வந்து காப்புரிமை பெற்றது. அதற்குண்டான சுட்டியை குடுத்ததாலும் நம்ம உகு என்பதாலும் சும்மா விடறேன்.
ஆனா உப்புமா பதிவில் சிகரங்களை தொடும் ஆள் நீர்தான் என்பதை ஒவ்வொரு பதிவிலும் சந்தேகமற நிரூபிக்கின்றீரய்யா.
ஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.
//
மிக சரி
டிஸ்கி 1
உம்புமா கிண்ட மட்டும் இது பொருந்தாது
இந்தப் பதிவு சூடாகும் என்பது நிச்சயம்.:)
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்கனே தெரியல :-))
குட்டி பிசாசு -
கவலையெல்லாம் இல்லை. என் ரெகுலர் ஆவரேஜை ரொம்பவே தாண்டி சூப்பர் ஹிட் ஆன பதிவுதான் அது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் விளம்பரம்....
சிவாஜியின் ஒத்திப்போடல்கள் என் ஆசையை நிறைவேற்றும்போலத்தான் தெரிகிறது..
நன்றி உசீ. காப்புரிமை பயத்திலதான் சுட்டியே..
இப்பவாவது தெரிஞ்சிக்குங்க, நான் பயந்த சுபாவம்!
உசீன்னா என்ன?
மின்னுது மின்னல் -
என்ன சாதாரணமா சொல்லிட்டீங்க! உப்புமா போடத்தான் அதிக எக்ஸ்பீரியன்ஸும் ப்ராக்டிஸும் வேணும்!
தீவு,
ஆசிக்கு நன்றி - ஆயிடுச்சி :-)
வெட்டிப்பயல்,
எப்படி யோசிக்கிறேன்னு ஒரு உப்புமா போட ஐடியா கொடுத்துட்டீங்களே ;-)
ஐயோ தாங்கமுடியலை, வேணாம் விட்டுடுங்க..இனிமே இந்தப்பக்கம் வரமாட்டேன் :(
தலையிலே அடிச்சுக்கறதைத் தவிர வேறே வழியே இல்லை! எல்லாம் தலை எழுத்து! :D
மணிகண்டன்,
அப்படியெல்லாம் விட்டுடுவோமா..
எப்பயாச்சும் ஒரு நல்ல போஸ்டும் போட்டாதான் உப்புமாக்கு மரியாதை, எப்பவாச்சும் ஒரு உப்புமா போட்டாதான் நல்ல போஸ்டுக்கு மரியாதை!
கீதா,
தலையில் அடித்துக்கொள்வது எப்படின்னு ஒரு உப்புமா போடணுமா?
வேல ஸெயிடு
ஏங்க சுரேஷ், அந்த " intelligent' கேள்விக்கு சொந்தகாரி நான்னு எல்லாருக்கும் சொல்லிருதீங்கன்ன என் மனசு எப்படி குதூகலிச்சிருக்கும்?? ஒரு பொண்ணோட மனச இப்படி கஷ்டபடுத்தரீங்களே?? என்னவோ போங்க...
அனானி,
வேலை செய்யிதுன்னு சொல்ல வந்தீங்களா?
ராதா ஸ்ரீராம்,
ஆமாம், நீங்கதான் அந்த Intelligent ஐடியாவுக்கு சொந்தக்காரி.
மக்களே.. நல்லா பாத்துக்கங்க, என் தப்பில்லை :-)
Post a Comment