கருத்துக்கணிப்புகளுக்கு பெரிய ஆதரவில்லை என்பது ஏற்கனவே தெரிந்த
விஷயம்தான். Lies, Bigger Lies and Statistics என்பதும் பெரும்பாலான
படித்தவர்களுக்கு புதிய விஷயமும் அல்ல.
எத்தனை பேர், எந்தச் சூழலில் எந்த இடத்தில் யாரால் கேள்வி
கேட்கப்பட்டார்கள்,கேள்வி கேட்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும்
கட்சிகளிலும் உள்ளவர்களா? கேள்வித்தாள் எத்தகையது, leading & loaded
கேள்விகள் நிறைந்தனவா? என்பதைப்பற்றி இந்த கருத்துக்கணிப்புகள் மூச்சு
விடவில்லை. பிறகு அது உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாய் இருந்தால்தான் என்ன,
பினாத்தலார் ஸ்டைல் கருத்துக்கணிப்பாக இருந்தால்தான் என்ன?
நம்பத்தகுந்தது கிடையாது - அவ்வளவுதான்.
ஆனால் சன் குழுமம் தொடங்கிவைத்துள்ள மக்கள் மனசு, இப்படிப்பட்ட
விஷயங்களெல்லாம் தெரிந்தவர்களைக் குறிவைத்து அல்ல, gullible பொதுமக்களை
நோக்கித்தான் எனும்போது, குறைந்தபட்சம் சில மனங்களையாவது மாற்றக்கூடிய
சக்தி வாய்ந்ததே.
வெற்றி பெற்றிருக்கும், கொஞ்சம் .. ஏன், நிறையவே அவசரப்பட்டுவிட்டதால்
கருத்துக்கணிப்பு சொ செ சூ வாக முடிந்திருக்கிறது.
மத்திய மந்திரிகளில் சிறந்தவர் என்ற கருத்துக் கட்டமைப்பை இன்னும்
கொஞ்சநாள் கழித்து, பாமக வெளிப்படையாக முறைத்துக்கொண்டு போனபிறகு,
செய்திருக்கலாம். அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் தயாநிதியைக் காட்ட
விரும்பியதால் அன்புமணியைக் குறைகூற வேண்டி வந்திருந்தாலும் அப்போது
பிரச்சினையாக ஆகியிருக்காது. திமுக கூட்டணியிலேயே ராஜா, வேலு போன்ற
மந்திரிகளை யாருக்கும் தெரியாது என்று நிரூபித்தாவது சுயபிரதாபம் தேவையா?
இப்போது டாக்டர் முறைத்துக்கொண்டு நிற்கிறார். ஏற்கனவே இருக்கும்
பிரச்சினைகளுக்கு நடுவில் இந்த எரியும் தீயில் எண்ணெய் தேவைதானா?
அதைவிட சூப்பர் சொ செ சூ இன்றைய கலைஞருக்குப் பிறகு யார்!
மு க ஸ்டாலின் 70%, மற்றவர்கள் - 20%, கருத்தில்லை -6%, கனிமொழி - 2%,
அழகிரி -2% ஆம்! அதிலும் சென்னை மக்களில் கருத்தில்லாதவர்களே இல்லை,
ஆனால் மு க ஸ்டாலின் 68%, மற்றவர்கள் -இங்கே டிவி பார்ப்பவர்கள்
அதிகமாச்சே 31%, கனிமொழிக்கு போனா போகுது 2% அழகிரியைச் சுழிச்சாச்சு!
இந்த மற்றவர்கள் -- யாராக இருக்கும் என்பதை ஊகிப்பவர்க்ளுக்கு
எந்தப்பரிசும் கிடையாது :-)
இதைவிட சிறந்த சொ செ சூ இருக்கவே முடியாது. இந்தக் கணிப்பை நமது எம்ஜிஆர்
செய்திருந்தால் (ஒருவேளை அதை மக்கள் படித்தும் இருந்தால் :-), இதைச்
சிறந்த பிரித்தாளும் சூழ்ச்சி எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சன் குழுமமே
செய்ததால் இதை சொ செ சூ தவிர வேறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
மருந்துக்குக் கூட குடும்பம் சாராதவர்கள் யாரும் இல்லை என்பதை திமுக
தொண்டன் கவனிக்க மாட்டானா?
வேறு யாரையும் தேர்ந்தெடுக்க உதவுமாறு கேள்விகளே இல்லையா - மல்டிப்பிள்
சாய்ஸ் தேர்ந்தெடு ரேஞ்சில் வைத்துவிட்டார்களா?
குடும்ப அரசியலைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்ட ஆட்சி மைனாரிட்டியாக
இருக்கும் நேரமா பார்க்கவேண்டும்?
இதைவிடப் பெரிய கூத்து மதுரையில் நடப்பது! இதை இக்னோர் செய்துவிட்டு,
அல்லது கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுக்கவைத்து இக்கணிப்பை மக்கள்
மறந்துபோகும்படி செய்யாமல், பெரிய விஷயம் ஆக்கி, குண்டு எறிதல், கண்ணாடி
உடைப்பு, கொலை என்றெல்லாம் செய்வது கட்சிக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை
உண்டுசெய்யும் என்பது அழகிரிக்குதான் தெரியாதா? அல்லது ஆத்திரம் கண்ணை
மறைக்கிறதா?
பாமக இதை டீல் செய்த விதம் எளிமையாகவே இருந்தது -
"இந்தக்கருத்துக்கணிப்பை நம்பமுடியாது, உள்நோக்கம் கொண்டது,
பத்திரிக்கையைக் கிழிக்கிறோம் ஆனால் ஆட்சிக்கு ஆதரவு நிச்சயம் தருவோம்" -
இந்த அணுகுமுறையில் பாமகவுக்கு ஆதரவும் கிடைத்தது, எந்த நஷ்டமும்
இல்லாமல், அதே நேரத்தில் கணிப்புக்கும் பெரிய விளம்பரம் கிடைக்கவில்லை!
இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)
23 பின்னூட்டங்கள்:
பினாத்தலாரே மாறன் பிரதர்ஸ் அவசரப் பட்டு விட்டார்கள் என்றா கருதுகிறீர்கள்...LET US WAIT AND SEE
ம்ம் சன் டிவியில் என்ன வரும் என்று சொல்லிவிட்டீர்கள்? ஜெயா மற்றும் மக்கள் டிவியில் என்னச் செய்திகள் வரும்? எப்படி இருக்கும்? தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது
எது எப்படியோ இவர்கள் குடும்பச் சண்டையில் சிக்கி உயிரிழந்த அந்த இரண்டு கணிணி வல்லுனர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை தன் குடும்பத்திற்கே பட்டா போட்டு எழுதிக் கொடுத்துவிட்டத் தோரணையில் இருக்கும் கருணாநிதிக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.. சன் டிவியே அடக்கித்தான் வாசிக்கிறார்கள். யாருக்கோ எங்கயோ அடிபட்டு இறந்தது போன்ற பீலிங்தான் அவர்களுக்கு.. பாவம் அவர்களது குடும்பத்தார்.. இரண்டு அரசியல் பொறுக்கிகளின் சண்டையில் தமிழ்நாடு மாட்டிக் கொண்டு முழிக்கிறது.. கேடு கெட்ட அரசியல்வாதிகள்.. வெட்கம் கெட்ட ஜனநாயகம்.. வேறென்ன சொல்வது?
"மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!"
அதான் தலைப்பிலேயே போட்டுவிட்டீர்களே!! அது அவர்களுக்கு கேட்கவில்லை போல.
:-))
தேவ்,
ஜெயா டிவியிலே என்ன வரப்போவுது? சன் டிவியே நேரடியா பேர் சொல்லி கோதவுல இறங்கினப்புறம் அவங்களுக்கு பால்பாயசம்தான்:-)
மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவங்க எப்படி இதை ப்ளே பண்றாங்கன்னு தெரியலையே :-(
அரசியல்வாதிகள் மிச்சம் வைத்த நபர்களுக்கு மட்டும்தான் வாழும் உரிமையா இந்த நாட்டில்?
பாவம் அந்த மூன்று உயிர்கள் !
உண்மைத்தமிழன்..
எழுத்துப்பிழை இருக்கே உங்க பின்னூட்டத்துல..
ஜனநாயகம் இல்லை சார்.
ஜ க்கு பதிலா ப
ன க்கு பதிலா ண!
நாயகம் க்கு பதிலா அராஜகம்.
கோவம் ஏறிகிட்டே போகுது!
வடுவூர்..
யார் யாரோ சொல்லிக் கேக்காதவங்க பினாத்தலார் சொல்லியா கேட்டுடப்போறாங்க? ;-)
இந்தக்கருத்துக்கணிப்பை நம்பமுடியாது, உள்நோக்கம் கொண்டது,
பத்திரிக்கையைக் கிழிக்கிறோம் ஆனால் ஆட்சிக்கு ஆதரவு நிச்சயம் தருவோம்" -
இந்த அணுகுமுறையில் பாமகவுக்கு ஆதரவும் கிடைத்தது, எந்த நஷ்டமும்
இல்லாமல், அதே நேரத்தில் கணிப்புக்கும் பெரிய விளம்பரம் கிடைக்கவில்லை!
:-)
கொஞ்ச நாளைக்கு அப்புறம் எப்படியிருந்தாலும் வெடிக்கப் போற குண்டுதான். புஸ்-ன்னு எத்தன நாளைக்குதான் புகைஞ்சுட்டே இருக்கும். அவங்க பத்த வச்ச தீ திரியிலிருந்து கை எடுக்கறதுக்குள்ளேயே வெடிச்சிருச்சு.
அக்னி நட்சத்திரம் கதை மாதிரி இருக்கு. 50 வருசம் பழம் தின்னு கொட்டை போட்ட மனிதருக்கு ஒரு நல்ல சவால். என்ன பண்ணப் போறார்.
அந்தம்மா என்ன பண்றாங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்.
Suresh,
I don't think Maran's have done a mistake. In my opinion, it is all part of the grand strategy, with projecting Stalin as the successor and planning to put an end to Azhagiri. The way the sun TV named him in the news saying he sent rowdies to attack the office clearly shows which way the wind is blowing. I think they named all of Azhagiri's supporters including the mayor of Madurai for the violence.
I don't think that the polls were published without the knowledge of Mr. MK, may be all of them want to see what would be the reaction if one is projected as successor. in a way it is good for their party in the future because now itslef they will know the trouble makers and send them out, unlike what happened to ADMK which split into two after MGR's demise. Marans have shown clearly which side they are in, and if only MK had the power like kings he would have split the state in to two allowing the two to rule.
//இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)//
ஆகா...
பினாத்தலார் சன் செய்திகள் பிரிவில் "உதவி" ஆசிரியரா இருந்திருக்காரோ? :-)
ச்சே...வேணாம்பா,
இனி சன் அலுவலகங்களில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்! காலை பணிக்குச் செல்லும் முன் மனநிலை எப்படி இருக்கும்!
பாவம் அந்த மூன்று உயிர்கள்!
பஸ் எரிப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு...அதே மூர்க்கத்தனம் தானே!
http://holyox.blogspot.com/2007/05/285.html
அன்றைக்கு கருணாநிதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் கேட்டுப் பெற்ற டாக்டர் பட்டத்தை ஒரு மாணவனின் பிணத்தின் மீது நின்று வாங்கினார். அன்று தகுதியில்லாத ஒரு கபோதிக்கு டாக்டர் பட்டமா என்று எதிர்த்த மாணவர்கள் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் ஒருவன் கொல்லப் பட்டான், அந்த உதயகுமாரனின் பெற்றோர்களிடம் அது தன் மகனே இல்லையென்று எழுதி வாங்கினர் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள். கொஞ்சம் கூட வெட்கம் மானம் இன்றி பிணத்தின் மீது அன்று பட்டம் வாங்கிய கருணாநிதி, இன்று மீண்டும் வரலாற்றை அரங்கேற்றுகிறார்.
ஆம் இன்றும் இவருக்கு 50 ஆண்டு கொண்டாட்டங்கள் பிணத்தின் மீது நடக்கின்றன, ஒன்றல்ல இரண்டல்ல 4 பிணங்கள், பிணங்கள் ஏற்பாடு இவரது உத்தம புத்திரன். இந்த அயோக்கியர்கள் கோர வெறியாட்டம் என்று அடங்கும், இனியும் எத்தனை பிணங்கள் பலி கேட்க்கப் போகிறது இந்த அரக்கர் கூட்டம்?
தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்
ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்
சன் டி வி யை தடை செய்து அதன் சொத்து பொது மக்களுக்குப் பிரித்து வழங்கப் பட வேண்டும்
//தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்
ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்
சன் டி வி யை தடை செய்து அதன் சொத்து பொது மக்களுக்குப் பிரித்து வழங்கப் பட வேண்டும்//
மக்கள் இலவச டிவிக்கு விட்டில் பூச்சி ஆகிட்டாங்க..அதுனால ஒன்னும் பண்ண முடியாது...அன்னைக்கு சசிகலா இன்னைக்கு ஸ்டாலின்,மாறன் & பிரதர்ஸ்,அழகிரி....
உயிர் இழந்த சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....
அழகரே அழகிரியிடமிருந்தும் திராவிட குஞ்சுகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள் - இப்படிக்கு தமிழ் மக்கள் **Thanks idlyvadai!!!
With wet eyes and heavy heart, I pray for the victims of violence!!!!
அனானி, நன்றி.
யாழினி அத்தன், அய்யாவுக்கு விஷப்பரீட்சை, அம்மாவுக்கு பொழுதுபோக்கு, மூணு குடும்பத்தில மட்டும் எழவு! வருத்தமா இருக்கு!
பதிவை படிக்காமலேயே சொல்லிக்கிறேன்:
மாறன்கள் செய்தது சரியே.. தலைவர் உயிரோடு இருக்கும்போதே நூல்விட்டாத்தான் வாய்ப்பு.. எப்படியும் அழகிரி ரொம்ப துள்ளாம அடக்கிடுவாரு தலிவரு..
அவர் இல்லாதபோது இவங்களுக்கு இறங்கி ஆட பிட்ச் கூட கிடைக்காது..
பதிவப் படிச்சப்புறமும் என் முந்தைய பின்னூட்டத்த மாத்தவேணாம்னுதான் நினைக்கிறேன்..
ஒரேயடியா கருத்துக்கணிப்புதான் வன்முறைக்கு காரணம்னு பூசி மொழுகறது நல்ல காரியமானு தெரியல...
அனானி 2,
க்ரேண்ட் ஸ்ட்ராட்டஜி எல்லாம் சரிதான். ஆனாக்கா கம்ப்ளீட்டா பேக்பயர்டு :(
கண்ணபிரான்,
//பாவம் அந்த மூன்று உயிர்கள்!
பஸ் எரிப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு...அதே மூர்க்கத்தனம் தானே!//
அதேதான்!
அனானி (செல்வன் பதிவை கோட் செய்த),
உங்கள் உடோப்பியக் கனவுகள் பலிக்கட்டும் :) ஆமென்.
ஸ்யாம்,
ஆழ்ந்த இரங்கல்களில் நானும் இணைகிறேன்.
அனானி (இட்லிவடைக்கு நன்றீ சொன்ன)
ஆமென்.
ராம்ஸு,
//ஒரேயடியா கருத்துக்கணிப்புதான் வன்முறைக்கு காரணம்னு பூசி மொழுகறது நல்ல காரியமானு தெரியல... //
நான் அப்படிப் பண்ணலை. எல்லாப்பக்கமும் குழந்தைத்தனமும் அவசரமும் இருக்குன்னுதான் சொல்றேன்.
அடப்போக்கத்த பய மக்கா.. தமிழ்நாட்ட திமுக, அதிமுக என்ற சனியன் புடிச்சி ஆட்டிட்டுருக்குலே.. ஒரு கால்நடைக்கும் மக்களுக்கு நல்லது செய்யனும்ங்கிற எண்ணம் அறவே இல்லைலே. அப்பப்ப நடக்குற விசயங்களை அப்பப்ப அப்படியே மக்களும் மறந்துர்றாங்க.. இன்னை தேதிக்கு சுயநல நோக்கமில்லாத ஒரு அரசியல்வாதி கூட தமிழ்நாட்டுல இல்லடே.. எல்லாம் நாசமா போயி கெடக்குலே.. எவனுமே சரியில்லலே.. இத்துன பேரு என்னன்னவோ எழுதுறிங்கள்ல அதையெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கு ஃபேக்ஸ் பண்ணுங்கலே..
அடேய்.. அறிவுகெட்ட பயமக்கா எதுனா எழுதி உங்க தெறமைய காட்டுனதா பினாத்துறத விட புரட்சி பண்ணுங்கலே... அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுங்கலே.. குடும்ப சண்டைக்காக அப்பாவிகள் 3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டிச்சி கட்டுரை எழுதுங்கலே..
செருப்பால அடிச்சா வலி கம்மியாதான் இருக்கும், ஆனா மானம் போயிடும்.
சாட்டையால அடிச்சா மானமும் போகும், வலியும் அதிகமாக இருக்கும்.
இதுல எதையாவது ஒன்ன தோந்தெடுங்கலே.. போக்கத்த பய மக்கா....
என்னது நீங்க யாரா? எதுக்கு தேடி வந்து பெட்ரோல் ஊத்தி கொழுத்தவா? ஆள விடுங்கலே..
Post a Comment