தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்கியது தவறு என்பதே என் கருத்து.
கருத்துக்கணிப்பில் ஆரம்பித்து, இன்று வரை நடந்துள்ள அனைத்துச்
சம்பவங்களுமே அள்ளித் தெளித்த அவசரக்கோலமாகவே நடந்து வந்திருக்கிறது.
முதிர்ச்சி என்பதை எங்கேயும் பார்க்கமுடியவில்லை.
அவசர அவசரமாக இப்படி ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டு, ஆட்டத்திலேயே
இல்லாத கனிமொழியையும் அழகிரியையும் வெறுப்பேற்றியது முதல்
முதிர்ச்சியின்மை.
அடுத்தது மதுரை வெறியாட்டம் - கட்சி ரீதியாக முடிவெடுத்து,
அமுக்கப்பட்டிருக்கவேண்டிய விஷயத்தை பெட்ரோல் பாம் வரை கொண்டு சென்று
பிரம்மாண்டமான விஷயமாக்கி, திரும்பப்பெறமுடியாத விளைவுகளை உண்டாக்கியது -
இரண்டாவது முதிர்ச்சியின்மை. நாளையோ மறுநாளோ மாறன் குடும்பமும் கலைஞர்
குடும்பமும் சமாதானமாகிவிடலாம் - அரசியலில் இது நடக்காது என்று சொல்ல
யாரால் முடியும்? ஆனால் அந்த மூன்று உயிர்கள்? சேதமான பொது,
தனிச்சொத்துக்கள்? யார் பொறுப்பு அதற்கு? ஏற்கனவே இந்த விவகாரத்தில் சன்
அடக்கி வாசிக்க ஆரம்பித்து அவர்களுக்கு நீதி முக்கியமில்லை, அரசியல்
நிலைதான் முக்கியம் என்று தெளிவாக்கிவிட்டது.
மூன்றாவது சிறுபிள்ளைத்தனம் தயாநிதி மாறனுடையது - பிரச்சினைகள் வரும்
போகும். கட்சியின், அரசின், தலைவரின் ஒரு முக்கியமான விழாவுக்கு அண்ணனைத்
திட்டியதால் போகாமல் இருந்தது. இன்னும் அதிகமாக இதில் பிரச்சினையைக்
கிளறிவிட்டது விமான நிலைய வரவேற்பு. அமைச்சர் என்ற ஹோதாவில் விமானநிலையம்
சென்று பிரதம மந்திரியை வரவேற்பாராம், ஆனால் கட்சி / அரசு விழாவில்
பங்கேற்க அழைப்பு எதிர்பார்ப்பாராம்!
அடுத்தது 50 ஆண்டு சட்டசபை அனுபவம் வாய்ந்த தலைவரின் குழந்தைத்தனம் -
தயாநிதி மாறனை மந்திரியாக்க நினைத்தபோது எண்ணித் துணியாததால், இப்போது
விளைவுகள் ஏற்பட்டு துணிந்தபின் எண்ணி, உடன்பிறப்புக்களின், மகன்களின்
சொல்கேட்டு தயாநிதியை நீக்க முடிவு செய்த மூடத்தனம். வேறெந்தப்
பிரச்சினையின்போதும் இல்லாத அளவுக்கு மதுரையில் வெறியாட்டம் நடக்கும்போதே
யார் காரணம் என்பது பொதுமக்களுக்குத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்ட
நிலையில், சன் டிவிமீதும் தயாநிதி மாறன்மீதும் நடவடிக்கை எடுப்பது அவரின்
பிள்ளைப்பாசத்தைத் தெள்ளெனக்காட்டும், மடிந்த மூன்று உயிர்கள் மீது
அவருக்குத் துளியும் அக்கறையில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் என்பதெல்லாம்
அவருக்குத் தெரியாதா? இருந்தாலும், முதிர்ச்சியற்ற முடிவை கேட்பார்
பேச்சைக் கேட்டு எடுக்கிறார்.
இப்படிப்போனால், தயாநிதி அதிமுகவில் இணையும் அடுத்த சிறுபிள்ளைத்தனமான
நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை எனச் சொல்லமுடியுமா? ஷார்ட் டெர்ம்
கெயினுக்காக அதையும் செய்யக்கூடியவர்கள்தான் நம் அரசியல்வாதிகள்.
அதிமுகவில் இணைகிறார் தயாநிதி?
இதை ஒரு பெரிய அதிர்ச்சித் தலைப்பாகத்தான் யோசித்தேன். இந்தப்பதிவுக்கு
இதைத் தலைப்பாக வைத்து, வழக்கமான ஏமாற்றுவேலை செய்து மக்களை வரவைக்கலாம்
என்றும் யோசித்தேன்.
பிறகு சில நண்பர்களிடம் பேசும்போதுதான் தயாநிதியின் ஊட்டி பயணத்தையும்,
ஊட்டியில் அதிமுக தலைமை இருப்பது பற்றியும் அறிந்தேன். நடக்கவே
சாத்தியமற்ற ஒன்று என நான் நினைத்தது நடக்க எல்லா சாத்தியக்கூறுகளும்
இருக்கிறது என்று தெரிந்ததால்..
நெஞ்சு பொறுக்குதில்லையே--இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்!!!!!!!!!!!!!!!!!!!!!
21 பின்னூட்டங்கள்:
என்னெனமோ நடக்குது வோய்.
மூணு பேர் செத்ததுக்கு ஒரு பயலும் ஒன்னுத்தயும் செய்யக் காணும். FIR போட்டு உள்ள போட்டு, தூக்கு வாங்கிக் கொடுக்கணும் எருமைகளுக்கு.
சுடச் சுட பதிவு இட்டமைக்கு நன்றி,சுரேஷ்.
ஆரம்பம் முதல் தயாநிதிமாறனின் செயல்கள் தன்
சுய வளர்ச்சிக்குத் தான் பயன் பட்டன.அதற்கு கலைஞர் கூட
ஒன்றும் செய்யவில்லை.
கட்சியினால் தான்,ஒரு பெரும் மீடீயா சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது.
இப்போது சன் டிவி -க்கு ஏற்பட்டுள்ளது....பெரும் பின்னடைவே.
இனிமேல் அமுக்கி.......வாசிப்பார்கள்...செய்திகளை மட்டுமல்ல...தங்கள்
குரல்களையும்.......
அன்புடன்,
முகு
எனக்கு புரிந்தவரை தயாநிதி சொ.செ.சூ வைத்துக்கொண்டார் என்றுதான் சொல்வேன். தன் சக்தியை அளவுக்கு அதிகமாக எடை போட்டுக்கொண்டு பின்னாளில் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க அஸ்திவாரம் போடப்பார்த்தார். அது அவரின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது.
திமுகாவின் இந்த முடிவு சரியானதுதான். தனக்காக கூட்டணியிலும் கட்சியிலும் குழப்பம் விளைவிக்க நினைப்பதை தடுத்தாக வேண்டும். கலைஞர் முரசொலி மாறன் மேல் பற்று கொண்டவர்தான்.அதன் காரணமாகத்தான் தயாநிதியை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.. அதனை மறந்துவிட்டு நடக்கப்பார்க்கும் அவருக்கு இந்த கொட்டு தேவைதான்.ஆனால் மதுரை நிகழ்வுக்கு எந்த தீர்மானமும் போடாதது வருத்தமளிப்பதே..கண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். CBI என்கொயரி கோரியது சரியானதாக இருந்தாலும் அது ஒழுங்காக நடக்குமா என்பது கேள்விக்குறியே.. ஆனால் சட்டப்படி மேற்கொண்டு ஒன்றும் செய்வதர்கில்லை எனவே கருதுகிறேன்.
எது எப்படியோ நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்வு இரு தரப்புக்குமே நன்மை தரகூடியதுதான்.
1.சன் டிவி/தினகரன் தன் கட்சி சார்பை இமேஜை உடைக்கலாம். இதனால் அவற்றின் ரீச் இன்னும் அதிகமாகலாம்.
2.ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்பது தெள்ளத்தெளிவாக புரியவைத்தாகி விட்டது.
3.சமீப காலங்களில் திமுக மீது வைக்கப்படும் விமரிசனங்களில் அதிகம் சன் டீவி/தயாநிதி மாறம் சம்பந்தப்பட்டவையே. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
4.ஓரளவு குடும்ப கட்சி என்ற பிம்பத்தை உடைக்க முடியும்.
எது எப்படியோ ஒரு நல்ல அமைச்சரை நாடு தற்காலிகமாக இழந்துவிட்டது :-(
சாமான்யர்களோட உயிர் ரொம்ப மலிந்து போயிட்டது சுரேஷ்.அரசியல் குள்ளநரி விளையாட்டுக்களில் பலிகளாக்குப்படும் இந்த உயிர்களுக்காக எத்தனை பேர் குரல் கொடுத்தாங்க..ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள் என்பதைத் தவிர அந்த மூன்று உயிர்கள் செய்த குற்றம் என்ன? இவங்க குடும்ப விளையாட்டுக்கு பலி கொடுக்க சாமான்யர்களோட உயிரும் பொது சொத்துக்களும் ..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். கோபமும் ஆத்திரமும் தான் மிஞ்சுது நம் தமிழ்நாட்டு அரசியலை நினைக்கும்போது.நம் போன்ற தொலைவில் இருக்கும் மக்கள் எல்லாம் ஒரு வகையில புண்ணியம் பண்ணவங்கன்னு சொல்லலாம்..இந்த கொடுமய எல்லாம் பக்கத்திலிருந்து பார்க்கும்போது அதன் வீர்யம் அதிகமா இருந்திருக்கும்.ஒவ்வொரு ஆட்சியிலும் தங்களின் சொந்த லாபத்திற்க்காக குறைந்தது மூன்று உயிர்களை யாவது கொன்று குவிப்பதென கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்களா நம் ஜனநாயக காவலர்கள்? யார் யார்கூட வேணும்னா சேர்ந்துட்டு போகட்டும் இவிங்களோட அதிகபட்ச இலக்கென்ன தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்பதுதானே.?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா(-:
திர்க்கமான பார்வை !
தினகரனில் முடிவுகள் வந்த போதே இது போன்ற விபரீதம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்தது தான். ஆனால் இது இந்த அளவுக்கு போகும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு விளங்குகிறது.
வாரிசு பிரச்சினை தான் இவ்வளவு நாள் புகைந்து இப்பொழுது வெடித்துவிட்டது. இந்த வாரிசு பிரச்சினையில் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி என நான்கு பேர் இருப்பது வெட்டவெளிச்சமாகிய நிலையில் கட்சிக்குள் இருக்கும் வேறு முக்கிய தலைகளும் விரைவில் பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசியல் பிதாமகர் கலைஞர் இவ்வாறு செய்வது அவசரகோலம் தான். ஆனால் அவரை பிள்ளைப்பாசம் வாட்டுகிறது போலும்.தயாநிதி செய்தது, வளர்த்தகடா மார்பில் பாய்ந்த வேலை தான்.தயாநிதி மத்தியாமைச்சராக பல்வேறு தி.மு.க. ஜம்பவான்கள் ஓரம்கட்டப்பட்டனர்.சன் டிவி-தி.மு.க பிரிவும் அப்படித்தான்.
மிக அருமையான பதிவு.....
கழகத்திற்கும் கருணாநிதிக்கும், குடும்பத்திற்கும் இந்தமாதிரியான அதிர்ச்சிகள் தேவைதான்...இல்லையென்றால் இவர்கள் ஆட்டம் ரொம்பவே அதிகமாகிவிடும்...மேலும், கழக தோடர்பில்லாத சன், உண்மையாலுமே நல்ல நடுநிலை நிறுவனமாகும் சாத்தியம் அதிகம்.
தயாநிதி, கலாநிதி படித்தவர்கள், ஒரளவு பண்பை எதிர்பார்க்கலாம்.
அவர்களால் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்த முடியும்.
அழகிரி, ஸ்டாலினிடமும், அவர்களது தந்தையிடமும் ரவுடியிசமும் கழகமும் மட்டும் தான் எதிர்பார்க்கலாம், பார்க்கிறோம். இதில் கழகமும் அண்ணா கண்டது, க/கொ லைஞர் உருவாக்கியதல்ல
என்னத்தைச் சொல்றது! அரசன் எவ்வழி, அவ்வழி மக்கள்! அரசன் எவ்வழி?
I accept with you that immaturity was there everywhere. What i think is that the Maran brothers were planning to use the 'divide and rule' policy which actually backfired. Without the support of DMK and the government the Sun media now cannot use it to their means, let us wait and see for the developments in the following week, someone would really want to patch it up.
சர்வேசா! கரீக்டு!
முகு,
//இனிமேல் அமுக்கி.......வாசிப்பார்கள்...செய்திகளை மட்டுமல்ல...தங்கள்
குரல்களையும்.......//
நான் இதை ஏற்கவில்லை. அவர்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.
மனதின் ஓசை,
உங்கள் முடிவுகள் மொத்தத்தோடும் ஒத்துப்போகமுடியவில்லை.
//1.சன் டிவி/தினகரன் தன் கட்சி சார்பை இமேஜை உடைக்கலாம். இதனால் அவற்றின் ரீச் இன்னும் அதிகமாகலாம்.//
வாய்ப்பிருக்கிறது, செய்வார்களா என்பது கேள்விக்குறி. அவர்களுடைய வியூவர்ஷிப்பும் பாதிக்கப்படும்.
//2.ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்பது தெள்ளத்தெளிவாக புரியவைத்தாகி விட்டது.//
அதில் முதலில் இருந்தே எந்த சந்தேகமும் இல்லையே
//3.சமீப காலங்களில் திமுக மீது வைக்கப்படும் விமரிசனங்களில் அதிகம் சன் டீவி/தயாநிதி மாறம் சம்பந்தப்பட்டவையே. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.//
உண்மை.
//4.ஓரளவு குடும்ப கட்சி என்ற பிம்பத்தை உடைக்க முடியும்.//
உடைக்கலாம். ஓரளவு என்ற பிம்பத்தை :-)
அய்யனார்:
//கோபமும் ஆத்திரமும் தான் மிஞ்சுது நம் தமிழ்நாட்டு அரசியலை நினைக்கும்போது//
உண்மை. உண்மையோ உண்மை.
அக்கா..
சகஜம் சகஜம்னு எவ்வள்வுதான் போகச்சொல்றீங்க! என்னமோ போங்க!
நன்றி சுந்தர்.
மஞ்சூர் ராஜா,
//கட்சிக்குள் இருக்கும் வேறு முக்கிய தலைகளும் விரைவில் பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை//
எனக்கு நம்பிக்கையில்லை :-(
குட்டிபிசாசு,
//அரசியல் பிதாமகர் கலைஞர் இவ்வாறு செய்வது அவசரகோலம் தான்//
அவசரம் மட்டுமல்ல, அரைவேக்காட்டுத்தனமும்.
அனான்,
//கழக தோடர்பில்லாத சன், உண்மையாலுமே நல்ல நடுநிலை நிறுவனமாகும் சாத்தியம் அதிகம். //
எனக்கு நம்பிக்கையில்லை. சாத்தியம் ஓக்கே, செய்வார்களா?
கீதா,
//என்னத்தைச் சொல்றது! அரசன் எவ்வழி, அவ்வழி மக்கள்! அரசன் எவ்வழி? //
அதானே தெரியலை!
அனானி,
பேட்ச் அப் பண்ணிடுவாங்கன்றீங்க.. நடக்கலாம்-- ஆனா முழுசா ஒட்டுமான்றது சந்தேகம்.
இந்த நாய்கள் பொருக்கி திங்க, 3 அப்பாவி உயிர்கள்தான் கிடைத்ததா?, இந்த பொழப்புக்கு, அவன் வீட்டில் உள்ள பொம்பளைகளுக்கு மாமா வேலை பார்க்கலாம்
Post a Comment